அவர் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கு புதிதாக ஒரு பெண், அலுவலகத்துக்கு வரவே அனைவரும் 'ஹாய் ப்ரியா… ஹாய் ப்ரியா’ என்று வரவேற்றிருக்கிறார்கள். நம்மவரும், பழைய ரிப்போர்டர் போல என்று நினைத்துக் கொண்டு ‘பிரியா நீ.. வாங்கித்தருவியா பிரியாணி’ என்று மொக்கையாகச் சொல்லிவிட்டு இவர் சொன்னதுக்கு இவரே சிரித்து ரசித்திருக்கிறார்.
அந்தப் பெண் சட்டை செய்யாமல் நேராக மேனேஜர் சீட்டுக்குப் போக அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் கொடுத்திருக்கிறார்.
நம்மவர் பயந்தவாறே பக்கத்து சீட்டில் விசாரிக்க ‘அவங்கதான் ஓனர் பொண்ணு’ என்றார்களாம்.
‘நாளைக்கு வேலை இருக்கான்னு தெரியல.. என்னடா பண்றது நான்?’ என்று கேட்டார்.
”நேராப்போய் சொல்லுங்க. ‘மொத்தமா மூணு தப்பு நடந்திருக்கு. நீங்க மொதலாளி பொண்ணா பொறந்தது மொத தப்பு. உங்க பேரை ப்ரியான்னு வெச்சுகிட்டது ரெண்டாவது தப்பு. வேற பேரா இருந்திருந்தா எனக்கு அந்த ரைமிங் வந்திருக்காது. மூணாவது தப்பு நான் உங்களை அப்படிக் கலாய்ச்சது. ரெண்டு தப்ப உங்க மேல வெச்சுட்டு ஒரு தப்புக்காக என்னைத் தண்டிக்கப்போறீங்களா?’ன்னு கேளுங்கன்னேன்.
என்ன ஆச்சோ! ஒரு வாரமா ஃபோனையும் காணோம். கூப்டாலும் எடுக்கலை.
--
எப்போதோ அவியலில் ம்யூசிக் சேனல்களில் பாடலைக் குறிப்பிடுவதோடு, பாடல் எழுதியவரையும், இசையமைப்பாளரையும் குறிப்பிட்டால் என்ன என்று கேட்டதாக ஞாபகம். சில சேனல்களில் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இப்போது வேணாம்டா என்று சொல்லத் தோன்றுகிறது. அதுவும் சன் ம்யூசிக் செய்கிற கொடுமை தாங்கமாட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.
காதலின் தீபமொன்று பாடல் வைரமுத்து எழுதியதாகக் காட்டுகிறார்கள். அது பஞ்சு அருணாசலம் எழுதியது. இதைக் கூட மன்னித்துவிடலாம். நல்ல வரிகள் – ஆகவே ஒரு பிரபல கவிஞர் ஞாபகத்துக்கு வரலாம். இன்னொன்றைப் பார்த்துதான் நான் ஆடிப்போனேன். ஒரு முறை அல்ல, ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் இப்படித்தான் போடுகிறார்கள்.
அது:
பாடல்:மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: சுந்தர் சி பாபு.
ங்கொய்யால.. கோர்ட்ல இருக்கற கேஸ்கூட கேஸா, இதுக்கும் ஒண்ணு போடலாம்னான்னு பார்க்கறேன்.
** **
நண்பன் ஒருத்தன் அவன் அப்பாவைப் பற்றி எப்போதுமே - ‘எனக்கு அவர் எந்த கஷ்டமும் வெச்சதே இல்ல' என்பதாய் - பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.
“எனக்கு தேதிகளை ஞாபகம் வெச்சுக்கற சிரமம் கூட இல்லைப்பா-ன்னு எங்கப்பாகிட்ட சொல்லீட்டே இருப்பேன். அவர் பொறந்தது ஜனவரி 1, நான் பொறந்தது ஆகஸ்ட் 15. இந்த மாதிரி ஸ்பெஷல் தேதிகளா அமைஞ்சிருக்கு பாரு” என்பான்.
சில வருடங்கள் கழித்து சென்ற வாரம் கோவை வரும் வழியில் யார் யாரிடமோ விசாரித்து என் நம்பர் கண்டுபிடித்து என்னை வந்து சந்தித்துச் சென்றான்.
“அப்பா இறந்துட்டார்டா. தெரியுமா?” என்றான். “இல்லைடா.. எப்ப என்றேன்?”
“போன வருஷம் ஃபெப்ரவரி 14 அன்னைக்கு”
எனக்கு என் அப்பா இறந்த தேதி ஞாபகம் வந்தது. 07.07.07
** ** **
சிக்னலின் வாகனத்தை நிறுத்தும் போது சிக்னல் டைமர் 45 செகன்டுக்கு மேல் காண்பித்தால் பெட்ரோல் சேமிக்க, உங்கள் வாகனத்தை அணைத்துவிடுவது உசிதம். 45 செகன்டுக்கு கம்மியாக இருந்து வாகனத்தை அணைத்தால், திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோல், அணைத்தபோது சேமித்த பெட்ரோலைவிட அதிகமாகத்தான் இருக்கும் - என்று எப்போதோ / எதிலோ படித்த ஞாபகம்.
இதுபற்றி ஆட்டோமொபைல் துறையிலிருக்கும் நண்பனிடம் கேட்டபோது ‘அதெல்லாம் அப்ப. இப்ப அட்வான்ஸ் மாடல் இஞ்ஜின்தான். பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.
அப்படியா?
** **
தெய்வத்திருமகள் பார்த்த ஒரு நண்பர் பேசும்போது ‘படத்துல நிலாவைப் பார்க்கறப்ப எல்லாம் மீரா ஞாபகம் வருது. ஏன்னு தெரியல’ என்றார். இன்னொரு நண்பர் மெய்ல் அனுப்பியிருந்தார் ‘நிலாவைப் பார்க்கறப்ப மேகா ஞாபகம் வந்துச்சு’ என்று.
படத்தில் நிலாவின் அப்பா பெயர் கிருஷ்ணா என்றிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதை விடவும் ஆழந்து யோசித்தால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாயகனும் - சாலை விதிகளையெல்லாம் மதித்துக் கொண்டு - என்னைப் போலவே கொஞ்சம் மெண்டலாகத்தான் இருக்கிறான்.
** ** **
.
26 comments:
அப்பிடியா, இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்டா?
@ரமேஷ் வைத்யா
ஃபர்ஸ்ட் நீங்கதான்.
அப்பா மேட்டர் அசத்தல்
உங்கள் நண்பர்களுக்கு Friend, Philosopher, Misguide எல்லாமே நீங்க தான் போலயே
1. அப்பா மேட்டர் உண்மையா??
2. @Petrol Saving அப்படிதான்...இப்போதெல்லாம் Electronic Controlled Fuel Injection வந்துவிட்டது Crank கம்மி...
3. சாலை விதிகளை மதிப்பவர் மென்டல் என்றால், எல்லோரும் மென்ட்டலாக இருப்பதைத்தவிர வேறொன்றும் வேண்டாம் பராபரமே
4. iam @kolaiyali from twitter
அண்ணா அவர் அப்படி கூப்பிட்டதுக்குக் கூட பீல் பண்ணிருக்க மாட்டார். நீங்க சொன்ன ஐடியா கேட்டுத்தான் ரொம்பவே பீல் பண்ணிருப்பார்னு நினைக்கிறேன். ஹி ஹி :-))
அப்பா மேட்டர் டச்சிங்.என் கஸின் வித்யா பிறந்தது 07.07.77 -- time 7Am
பல்சுவை விருந்து.
07. 07. 07 எனக்கும் மறக்க முடியாத நாள். அன்று தான் தமிழ்நாட்டுத் தலைநகரில் இருந்து இந்தியத் தலைநகர் வந்தேன்.
Good
:-))
Super!
Very good Krishna we want more Blog Pages from your end
:) :) :) :) :)
அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-7-77
nice
your lovingly gonzalez
http://funny-indian-pics.blogspot.com
அப்படியா இன்னிக்கு நாந்தான் 17ஆ?
அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் ஃப்ரீயாக கொடுத்திருக்கிறார்.
// பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.//
15 செகண்டுக்கு மேல இருந்தா நா பைக்க ஆஃப் பண்ணிடுவேன்..
நல்லா இருக்கு பரிசல்.
இரு லேட்டரல் கேள்வி -
அ) அவ்ளோ அட்வான்ஸ்ட் எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு இன்ஜின் ஒரு முப்பது செகண்டு ஐடிலிங் கண்டிஷனில் எவ்ளோ பெட்ரோல் குடித்துவிட போகிறது?
ஆ) சிக்னலுக்கு சிக்னல் அணைச்சி அணைச்சி ஸ்டார்ட் பண்ணுவதால் இஞ்சினுக்கு ஏற்படும் பாதிப்பை விட அந்த தம்மாத்தூண்டு கேப்பில் சேமிக்க்கப்டும் பெட்ரோல் விலை ஒர்த்தா?
அப்படீன்னா நான் 21...
அவியல் அருமை...
எங்க அப்பா, அம்மா திருமண நாள்
7-7-77
யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிகை மேட்டர படிச்சிட்டு பத்து பேரு இதுவரைக்கும் எனக்கு போன் பண்ணிட்டானுங்க... நானெல்லாம் கூப்பிட்டா எந்த பொண்ணும் கோபப்படமாட்டாங்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு...
யோவ் கோட்டி, மொட்டை கட்டையா எழுதாதய்யா... பத்திரிகை மேட்டர படிச்சிட்டு பத்து பேரு இதுவரைக்கும் எனக்கு போன் பண்ணிட்டானுங்க... நானெல்லாம் கூப்பிட்டா எந்த பொண்ணும் கோபப்படமாட்டாங்கன்னு ஒவ்வொருத்தர்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு...(நிங்கள் எழுதிய அவியலை விட இது தான் டாப். படித்துவிட்டு ரொம்ப நேரம் சிரித்துகொண்டிருந்தேன்.)
அடேய் செல்வேந்திரா!
அவரென்னை டா என விளித்ததையும், நான் அவரை ’ங்க’போட்டு விளித்ததையும் எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். தவிரவும் பின்னூட்டத்தியே க்ளூ வேறு இருக்கிறது. இதையெல்லாம் மீறி உனக்கு அழைத்துக் கேட்டார்களென்றால் அவர்கள் யூகத்தில் அல்கொய்தாக்காரர்கள் குண்டு வைக்க.
அவியலில் முதல் பதார்த்தம் சூப்பரா இருக்குங்ணா! இப்பிடித்தான் ஒரு தடவை ஆபீஸ்ல கிருபா ஒரு நாள் தன்னை மறந்து ‘இருசம்மா... இரு சும்மா’ன்னு சொல்லியிருக்காரு. இருசம்மாங்கிறது ஆபீஸைக் கூட்டித் தள்ளுற வேலைக்காரம்மா பேரு. யாரு அவங்களை இருசம்மான்னு சத்தம் போட்டுக் கூப்புடவும், வேலையில ஆழ்ந்து இருந்த இவர் மனசுல அந்தப் பேர் பதிஞ்சு, தன்னைப் போல ‘இருசம்மா, இரு சும்மா’ன்னு முணுமுணுத்துக்கிட்டே வேலை பார்த்திருக்காரு. அப்புறம் ஃப்ரெண்டு ஒருத்தருதான் ‘என்னடா சொல்றே?’ன்னு கேட்டு, கவனத்தைக் கலைக்கவும், சுதாரிச்சுக்கிட்டாராம். சொல்லிச் சொல்லிச் சிரிச்சிருக்கார் பலமுறை எங்கிட்டே. ப்ரியா நீ - பிரியாணி படிச்சதும் சட்டுனு ஞாபகம் வந்துச்சு! :)
கிரிஷ், என் சித்தப்பா பேர் கிருஷ்ணன்; அவரது முதல் குழந்தையின் பெயர் நிலா (studying +2)
இரண்டாவது தென்றல்(studying 6th)...
what a coincidence...right
Post a Comment