Friday, April 29, 2011

மொக்கை மினிட்ஸ்...

ல்லா வீட்டு ஓனர்களைப் போலவே, எங்க வீட்டு ஓனரும் கொஞ்சம் முசுடு. அவங்க இருக்கறது மேல் மாடி. நாங்க இருக்கறது கீழ. ஒரு தடவை மோட்டார் போட்டு விட்டு, டாங்க்ல தண்ணி நிறைஞ்சு, கீழ கொட்டி படி வழியா மாடில இருக்கர அவர் வீடு வரைக்கும் வந்துடுச்சு. அவ்ளோதான். அங்கிருந்து கத்த ஆரம்பிச்சாரு..

“குமார்.. குமார்..”

நான் என்னவோ நடந்துச்சுடா மாதவான்னு நெனைச்சுட்டே, ஐ.பி.எல்-லை ம்யூட்ல போட்டுட்டு ‘என்ன மாமா..’ன்னுட்டே போனேன்.
“இங்க பாருங்கோ.. இத மாதிரி பொறுப்பில்லாம இருக்கறதுன்னா நீங்க வீடைக் காலி பண்ணிக்கலாம். என்ன ஆச்சுன்னு பாருங்கோ”ன்னார். மேல போய்ப் பார்த்தேன். அவர் வீட்டு வாசல் வரைக்கும் தண்ணி. அப்பவும் என் மரமண்டைக்கு புரியல.

“இன்னைக்கு ஏதாவது விசேஷமா மாமா? இந்நேரத்துக்கு வாசல் தெளிச்சிருக்கீங்க?”ன்னு கேட்டேன். அவருக்கு இன்னும் சுர்ர்ர்ர்ன்னு ஏறிடுச்சு.

“உங்க விளையாட்டை உங்க பொண்ணுங்களோட வெச்சுக்கோங்க..”

“கரெக்ட்தான் மாமா. உங்க பொண்ணுகள்கிட்ட வெச்சுட்டா தப்பாய்டுமே…”ன்னு மனசுல நெனைச்சுட்டே சுதாரிச்சுட்டேன். “ஓ.. மோட்டார் ஆஃப் பண்ணலியா”ன்னு தலைல தட்டிகிட்டே போய் ஆஃப் பண்ணீட்டேன். மறுபடி அவர்கிட்ட வந்து “ஸாரி மாமா.. இனிமே இப்படி நடக்காது”ன்னுட்டு போய்ட்டேன்.

ரெண்டு வாரம் முன்னாடி உமாவும் குட்டீஸும் ஊருக்குப் போயிருந்தப்போ, மோட்டார் போட்டேன். உமா ஆயிரம் வாட்டி, “போட்டீங்கன்னா 15 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுங்க. பாட்டு வாங்கிக்காதீங்க”ன்னு சொல்லிட்டுதான் போனாங்க. நானும் சுவிட்ச் ஆன் பண்ணீட்டு 15 நிமிஷம் என் மொபைல்ல அலாரம் செட் பண்ணீட்டு உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு பீரும், யுவன் ஷங்கர் ராஜாவும் என்னை எழுந்திருக்க விடாம பண்ணீட்டாங்க. கொஞ்ச நேரம் டியா டியா டோலு முடிஞ்சப்ப பாக்கறேன். 40 நிமிஷமாயிருந்தது. ஆஹா… விடமாட்டானே வெள்ளையத்தேவன்னு அவசர அவசரமா மோட்டரை ஆஃப் பண்ணீட்டு மாடிக்கு ஓடினேன்.

தண்ணி வழிஞ்சு மொட்டை மாடிபூரா பரவி, படிக்கட்டுக்கு பக்கத்துல வந்து நின்னுட்டிருந்தது. கொஞ்சம் இல்லைன்னா கீழ அப்டியே போயிருக்கும். அங்கயே நின்னுட்டு தண்ணி கீழ வராம தள்ளி விட்டுட்டு இருந்தேன். ஆறு மணியானா அவங்க எதுக்காவது மொட்டைமாடி வந்து, இதப் பார்த்தாலும் சண்டை போடுவாங்களேன்னு நெனைச்சுட்டிருந்தேன். ஒரு கட்டத்துல ‘போங்கடா.. என்னமோ ஆகட்டும்’ன்னு கீழ வந்துட்டேன்.

ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந்து நிறுத்தறாரு. மேல போகப் போறாரு.. ஒரு சண்டை இருக்குன்னு நான் நெனைக்கறப்ப, இடிச்சது இடி. அடிச்சது மின்னல். கொட்டிச்சு மழை!

தப்பிச்சேன்டா நான்!

--------------

வீட்ல எல்லாருமா உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கோம். தண்ணி குடிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஸ்ப்ரைட் பாட்டிலை மூடியைத் திறந்து வாய்க்குள்ள கொட்டினேன். நல்லெண்ணை!

அடச்சேன்னு ஆய்டுச்சு. அதுக்கப்பறம் தண்ணிக்குன்னு டப்பர்வேர் பாட்டில்ஸை ஸ்பெஷலா வாங்கினது தனி கதை.

இப்ப எல்லாரும் ஊருக்குப் போயிருந்தாங்கள்ல.. அப்பத்தான் கவனிச்சேன்.. எண்ணெய் பாட்டில்கள் வைக்கற ட்ரேல ஒவ்வொண்ணுலயும் பெரிசா வெள்ளை பேப்பர்ல குட்டீஸோட கையெழுத்துல ‘இது விளக்கெண்ணெய்’, இது நல்லெண்ணெய், ’இது தேங்காய் எண்ணெய்’-ன்னு எழுதப்பட்டிருந்தது.

அந்த பயம் இருக்கட்டும்!

-----------------


இதையெல்லாம் நீங்க செஞ்சிருக்கீங்களா?

என் ஃப்ரெண்டு ஒருத்தன். அவனோட மகன் பர்த்டே அன்னைக்கு அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப அவன் ஃபேமலியோட புறப்பட்டுட்டு இருந்தான். ‘கோவிலுக்காடா’ன்னு கேட்டேன்.

“இல்ல மச்சி”-ன்னவன் ஒரு நர்சிங் ஹோம் பேரைச் சொல்லி “அங்க போறேன். இவனுக்கு அந்த டாக்டர்தான் பிரசவம் பார்த்தாங்க. இவனோட ஒவ்வொரு பர்த்டேக்கும் அந்த டாக்டரைப் பார்த்துட்டு சாக்லெட் குடுத்துட்டு வருவோம்”ன்னான்.

அட! நல்லா இருக்கே.. நாமளும் பண்லாமேன்னு நெனைச்சேன். நெனைச்சதோட சரி.. இதுவரைக்கும் பண்ல!

----------------


ஹாலிவுட் நடிகர் ஒருத்தர். பேர் நினைவில இல்ல. தன்னோட ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவரோட அப்பா அம்மாவைக் கூப்ட்டு வாழ்த்துச் சொல்லுவாராம்.

‘அது ஏன் அப்டி’ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னது: “யோசிச்சுப் பாருங்க.. என்னோட மொத பிறந்த நாளைக்கு எனக்கு யாராவது வாழ்த்துச் சொன்னாங்களா? அவங்களுக்குத்தானே சொல்லிருப்பாங்க எல்லாரும்? அதுக்கப்பறம் அவங்களுக்கு யாரும் சொல்றதில்ல.. எல்லாரும் எனக்குத்தான் சொல்றாங்க. அதுனாலதான் அவங்களுக்கு நான் சொல்றேன்”

நல்லாருக்கு இல்ல?.

------------------------

ந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும் முண்டியடிச்சுட்டுதான் நிப்பாங்க. வரிசையா நின்னாலும் தள்ளு முள்ளு பண்ணீட்டுதான் நிப்பாங்க. அதுவும் பலபேரு நார்த் இண்டியாலேர்ந்து வந்து வேலை பார்க்கறவங்க. எவ்ளோ சொன்னாலும் கேட்கறதில்ல. பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர். அவங்க க்யூவா நிக்கற இடத்துக்கு வலதுபக்கம் அருகாமைல சுவரு இருந்துச்சு. அதுல புதுசா வர்ற ஹிந்திப்படம் பத்தின நியூஸு, ஸ்டார்ஸோட படங்கள், க்ரிக்கெட் நியூஸ்ன்னு ஒட்டி வெச்சாரு. அதை ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மாத்தினாரு.

செம மாற்றம். க்யூவுல நிக்கறவங்களை ‘முன்னாடி தள்ளி நில்லு, க்யூ நகர்ந்துடுச்சு பாரு’ன்னு சொல்ற அளவுக்கு நிக்கறப்ப எல்லாரும் வலதுபக்கமா கழுத்தைச் சாச்சு படிச்சுட்டே இருந்தாங்க.

நல்லாருக்குல்ல?


-------------------

28 comments:

செல்வா said...

அண்ணா எனக்கு உங்க நண்பர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு :-) மருத்துவரைக் கூட மறக்காம வச்சிருக்காரு பாருங்க :-))

நாகை சங்கர் said...

"நர்சிம் ஹோம் பேரைச்" - தல, இது தெரிஞ்சே டைப்படிச்சதா?

பொன்கார்த்திக் said...

:))

ஈரோடு கதிர் said...

||நர்சிம் ஹோம்||

என்னா ஒரு வில்லத்தனம் :))

iniyavan said...

நல்லாத்தானே இருக்கு. ஏன் மொக்கைங்கறீங்க.

கொல்லான் said...

பாஸ்... முதல் மொக்கை அல்ல. நல்ல சிறுகதை போலவே இருந்தது.

கொல்லான் said...

//பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர்.//
நீங்க தானே அந்த ஹெச். ஆர். மேனேஜர்.?

இராஜராஜேஸ்வரி said...

நல்லாருக்கு இல்ல?.//
எல்லாமே நல்லா சுவாரஷயமாக இருக்கிறது.

நாகராஜ் said...

கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப ?!

அப்பவும் நீங்க கெளம்பாம கேள்வி கேட்டுகிட்டு இருந்திருக்கிங்க

என்னா ஒரு வில்லத்தனம் ?

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் மழை.

இளங்கோ said...

SUPER :)

விக்னேஷ்வரி said...

முதல் விஷயம் ரசனையான, சுவாரஸ்ய நடை.

கடைசில, நீங்க தானே அந்த HR?

சுசி said...

செம மொக்கை.. :)

இன்னைக்கு என் அண்ணா பையன் பர்த்டே.. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் விஷ் பண்ணேன்..

நல்லாத்தான் இருந்திச்சு :)

தராசு said...

நல்லெண்ணெய் குடித்த எங்கள் அண்ணன் வாழ்க.

இப்ப வீட்ல யாரும் இல்லையா, ரொம்ப ஃபிரீயா இருக்கீங்க போல.... ரைட்டு

ரோஸ்விக் said...

உண்மைய சொல்லுங்க...

விளக்கெண்ணெய் - இது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இது தேங்காய் எண்ணெய்’-ன்னு தானே எழுதியிருந்தாங்க. ஏன்னா இப்போ உள்ள பிள்ளைங்க அப்படி.

:-)))

Ramjee said...

நீங்க விளக்கெண்ணை தாங்கறது உங்க குழந்தைக்கும் தெரிஞ்சு போச்சா?

Kumky said...

ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந்து நிறுத்தறாரு..

பீருக்கே ஓவரா..?

“நர்சிம் ஹோம்” போல இதையும் திருத்திடாதீங்கோ....:)))

Kumky said...

அடிக்கடி வாட்டர் ஓவராகிடுது....பேசாம ஹாட்டுக்கு மாறிடவேண்டியதுதானே...

லதானந்த் said...

ஒங்க ஃப்ரண்டு கொளந்தைக்குப் பிரசவம் பாத்ததுக்காக டாக்டருக்கு அவரு டேங்க்ஸு சொல்றது சரி. அது நல்ல விஷயம்னு நீங்க நெனைக்கறதும் நெம்பச் சரி. அதுக்காக அந்த டாக்டருக்கு நீங்க ஏன் நன்றி சொல்லோணும்னு நெனைக்கிறீங்கனுதான் புரிலீங்ணா.

லதானந்த் said...

கல்கி ’மெமரி பூஸ்டர்’ தொடரில ஒங்களைக் குறிப்பிட்டிருக்கேன்னு ஏளெட்டு விஸ்கா போன்ல கூப்டுச் சொன்னன். ‘இதெல்லாம் சப்ப மேட்டருனு’ நெனச்சுப் போட்டிங்களாட்ருக்குது. செர்த்தானுங்ணா?

ஹேமா (HVL) said...

நல்லவேளை! பாட்டில்ல நல்லெண்ணை கொட்டி வச்சிருந்தாங்க . . .

Xavier said...

அந்த மேனேஜர் நீங்க தானே. சூப்பர் பாஸ்.

ஞாஞளஙலாழன் said...

-------------------------------
வழக்கம்போல ஒரு பீரும், யுவன் ஷங்கர் ராஜாவும் என்னை எழுந்திருக்க விடாம பண்ணீட்டாங்க.
--------------------------------

பரிசல், நீங்க தண்ணி அடிப்பீங்களா? உங்கள பார்த்தா அப்படி தெரியலியே!!!

கயல் said...

//
அந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும் முண்டியடிச்சுட்டுதான் நிப்பாங்க. வரிசையா நின்னாலும் தள்ளு முள்ளு பண்ணீட்டுதான் நிப்பாங்க. அதுவும் பலபேரு நார்த் இண்டியாலேர்ந்து வந்து வேலை பார்க்கறவங்க. எவ்ளோ சொன்னாலும் கேட்கறதில்ல. பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர். அவங்க க்யூவா நிக்கற இடத்துக்கு வலதுபக்கம் அருகாமைல சுவரு இருந்துச்சு. அதுல புதுசா வர்ற ஹிந்திப்படம் பத்தின நியூஸு, ஸ்டார்ஸோட படங்கள், க்ரிக்கெட் நியூஸ்ன்னு ஒட்டி வெச்சாரு. அதை ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மாத்தினாரு.
//

அவர் பேரு கி....ர். சரியா?

:))

நல்ல தொகுப்பு!!

krish said...

your writing is good. About the house owner, i think he right. Water is important is all of us. So next time dont wait for the house owner to tell you. It is duty for all of us not to waste water.

ஸ்வர்ணரேக்கா said...

பரிசலாரே!!!
தண்ணிய வீண் செஞ்சிட்டேன்னு னு சொல்லி பதிவு போட்ருந்தாலும் பரவாயில்லை..

அதவிட்டுட்டு திட்டுவாங்கறதில இருந்து தப்பிச்சிட்டேன்னு சொல்றீங்களே... இதுக்கு நியாயமா மைனஸ் ஒட்டு தான் போடனும்...

//கரெக்ட்தான் மாமா. உங்க பொண்ணுகள்கிட்ட வெச்சுட்டா தப்பாய்டுமே//

இதுவரை இப்படி எழுதினதில்லையே... --- நீங்களும் ஆரம்பிச்சாச்சா..?

nandhu said...

உங்க வீட்டு ஓனர் போன் நம்பர் தாங்க . ஒரு முக்கியமான தகவல் சொல்லணும் .

நிழற்குடை said...

சுவாரஸ்யமான பதிவுகள். ஆனால் அவையடக்கம்தான் கொஞ்சம் ஓவர். தலைப்பைதான் சொல்கிறேன்.