Sunday, April 10, 2011

மாப்பிள்ளை - கொலைவெறி..

கீழ இருக்கற ஸ்டில்லைப் பாருங்க...

அங்க கெடக்கறது நான். சுத்தியும் இருக்கறது படத்தோட டைரக்டர், நடிகர்கள், முக்கியமா விவேக்ன்னு கற்பனை பண்ணிக்கோங்க.


ரெண்டு மணிநேரம்.. தெளியத் தெளிய அடிச்சுட்டாங்க... வீட்ல கூட்டீட்டுப் போனதுக்கு, பொண்டாட்டி மகளிர் போலீஸ்ல போய் வன்கொடுமை சட்டத்துல புகார் குடுக்கவான்னு கேட்கறாங்க. குழந்தைங்க ரெண்டு மணிநேரமா என்கிட்ட பேசல.


ஆடுகளம் நல்லாருந்துச்சுன்னா அவருக்கு திருஷ்டி கழியணும்தான். அதுக்காக இப்படியா?


விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். சேர்த்து வெச்ச பேரையெல்லாம் கெடுத்துக்க வேணாம். அவரு மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அநியாயம்.


இந்தப் படத்தை எடுத்தவங்களையும், நடிச்சவங்களையும்கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இந்தப் படத்துக்கு ப்ரிவ்யூன்னு ஒண்ணு போட்டிருப்பாங்கதானே.. அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல? அத நம்பித்தானே இவங்க படத்தை வெளியிடறாங்க? அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.


கொலைமுயற்சில இவங்க மேல கேஸ்போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.


படுபாவிங்க....15 comments:

ghi said...

படிக்கும்போதே எனக்கு மயக்கம் வருது.... நல்ல வேலை.... எங்களை காப்பாத்திட்டீங்க....

மேவி... said...

ஜி .... நான் இடைவேளை வரைக்கும் தான் பார்த்தேன், அதுக்கே இரண்டு சோடா குடிக்க வேண்டியதா போயிருச்சு. பாதி படத்துக்கே மூச்சு முட்டிருச்சு... முழு படத்தையும் பார்த்து இருக்கீங்க ..நீங்க தெய்வம் அண்ணே

CS. Mohan Kumar said...

ஒரிஜினல் மாப்பிளையே அறுவை படம் தான். ரஜினிக்காக மட்டுமே பொறுத்து கொண்டு பார்த்த படம். இதுலே தனுஷ்! கேட்கணுமா? சண் டிவி என்பதால் வித்துட்டாங்க..டிச்டிரிபியூட்டரும் வாங்கிட்டாங்க ..டிரைலரே சகிக்கலையே. பயங்கர ரிஸ்க் எல்லாம் எடுக்குறீங்க பரிசல்

a said...

//
அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல
//
அட போங்க பாஸ்... இந்த மாதிரி சொல்லுறட்துக்கு சன் பிக்சர்ஸ்ல 11 பேர் கொண்ட குழுவே அமைச்சிருக்காங்க..

Unknown said...

//விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம்//
வேற வேலை தெரிஞ்சா போயிருப்பாங்க தானே பரிசல்
ஆடிய காலும்..பாடிய வாயும்______________!!!

பிரபல பதிவர் said...

சரியான விமர்சனம்

சுபா said...

என்னது பாட்டு வரும் போது பொண்ணுங்க எல்லாம் எந்திருச்சு தம் அடிக்க போறாங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா.. நீங்களும் மாட்னீங்களா? நல்லா வேணும்.. ஹி ஹி

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு விமர்சனம்:)))!

R.Gopi said...

கிருஷ்ணா....

என்ன தான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான்... அதுல :

ரஜினியின் அட்டகாச கலவையான நடிப்பு
ஸ்ரீவித்யாவின் உறுமல் நடிப்பு
இளையராஜாவின் இசை துடிப்பு
இயக்குநர் ராஜசேகரின் தேர்ந்த டைரக்‌ஷன்

இப்படி எல்லாம் அமைந்து இருந்தது..

Anonymous said...

தனுஷின் மாப்பிள்ளை பிடிக்காதவனுக்கு சுறா - பிடிச்சு இருக்கு....

சுறா பிடிக்காதவனுக்கு அசல் - பிடிச்சு இருக்கு....

மேல சொன்ன எதுவுமே பிடிக்காதவங்களுக்கும் பிடிச்சவங்களுக்கும் ரொம்ப பிடிச்ச படம் எது? என்று தேசிய அளவில் ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க...

அது நம்ம வீராசாமி தான் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிச்சு இருக்காங்க... # TR rockz... :)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

சுசி said...

சிரிப்பு தாங்கலை கிருஷ்ணா.

எனக்கு பொறுமை ஜாஸ்தி. அதனாலை.. :)

selventhiran said...

ஹீரோயின் ஹெராயின்னு சொன்னாய்ங்களே பாஸூ!

நிழற்குடை said...

படிக்காதவன் படத்திலிருந்தே நான் சுதாரிச்சுட்டன்ல.

Ramjee said...

ஏன் ஒய், உங்க குழந்தைங்கள Rio-3D போன்ற நல்ல படங்கள் வந்திருக்குதே அதுக்கெல்லாம் கூட்டிகிட்டு போகாமல் இந்த மாதிரி மொக்கை படங்களுக்கு அழைச்சிக்கிட்டு போனால் உங்களை ணிக்கை வெச்சு தோல் உரிக்காததற்கு உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு "Thank You" Banner போடுங்க.