Friday, April 15, 2011
அவியல் 15.04.2011
இந்த விஷயத்தை ஏற்கனவே அவியலில் எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை. எழுதி, நீங்கள் படித்திருந்தால் டக்கென்று ஸ்க்ரோல் செய்து அடுத்த பத்திக்குப் போகலாம். (!!!)
ஒருமுறை என் பைக்கை ட்ராஃபிக் போலீஸ் பிடித்துவிட்டார்கள். நான் தவறு செய்திருந்தேன். ஆகவே வண்டியை ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு அடுத்த நாள் எடுக்கச் சென்றேன். தீபாவளி நேரம். கோர்ட்டுக்கு அலையவிட முயற்சி செய்தார்கள். அவரை இவரைப் பிடித்து 2000 ரூ தருவது என்று பேரம் பேசி முடிவாகி கொடுக்கும்போது ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தேன்.
‘எதுக்கு தம்பி 2001 தர்றீங்க?’ என்றார் அவர்.
‘அது என் வண்டி நம்பர். நீங்க மறக்காம இருக்க’ என்றேன் நான்.
------------------------
இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. யானை தும்பிக்கை வைக்கும்போது பயப்படுகிற குழந்தை, யானையை டிவியில் பார்த்தால்கூட தன்னிச்சையாக நடுங்குமல்லவா.. அப்படி ஒவ்வொரு முறை இந்தப் பட ட்ரெய்லர் டிவியில் போடப்படும்போதும் கை நடுங்க, வீட்டில் எல்லாருமே ரிமோட்டை அவசர கதியில் தேடி ம்யூட் போடவும், சேனல் மாற்றவும் செய்துகொண்டிருக்கிறோம். எந்தவித சுவாரஸ்யத்துக்காகவும் இப்படி எழுதவில்லை. சத்தியமான உண்மை. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?)
ஒருநாள் சாட்டில் வந்த ஃப்ரெண்ட் ஒருவர், இன்றைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போகிறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல். சரி பார்த்துவிட்டு என் விமர்சனம் சரியா என்று உண்மையாகச் சொல்லுங்கள் என்றேன். இரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் இல்லை.
படம் பார்க்குமுன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்திருந்தபோது சாட்டில் வந்தார். 30 நிமிடங்கள் பார்த்துவிட்டு மூடிவிட்டாராம் லேப்டாப்பை. (டவுன்லோடிப் பார்த்திருக்கிறார். அதற்கும்கூட தகுதியில்லாத படம்) HORRIBLE என்றார் ஒரே வார்த்தையில். குசேலன் ,குருவியைக் கூட மன்னிக்கலாம் என்றார்.
இந்திய உலகக் கோப்பை வெற்றி, அன்னா ஹசாரே, ஓட்டளிப்பது ஜனநாயகக் கடமை - இதிலெல்லாம் காட்டிய அதே ஒற்றுமையை தமிழர்கள் மாப்பிள்ளையை எதிர்ப்பதிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் சந்தித்ததில் ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை.
ரஜினியைப் பார்த்து கமல் கற்றுக் கொள்ளவேண்டும். கமலின் மகளை கைபிடிக்கப் போகிறவரிடம் கமல் வாங்கும் வாக்குறுதி ‘என் எந்தப் படத்தையும் ரீமேக்கக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும்.
------------------------------
திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.
அடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது!)
-----------------------------
கடவுள் என்றொருவர் இருக்கிறாரா என்று கேள்வி பலமுறை நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு வரும். பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் மகள் இறப்பைக் கேள்விப்பட்டதும் இந்தக் கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு சித்ரா தம்பதியினருக்கு ஜனித்த அந்தக் குழந்தை, நேற்று UAEல் ஒரு நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாம்.
கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் பாடவேண்டுமென்றால் கூட வெட்கப்படுபவர் சித்ரா. அவ்வளவு அமைதியான சுபாவம் கொண்டவருக்கு இப்படி ஒரு நிகழ்வா என்று வருத்தமாகவே இருக்கிறது.
:-(
குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
--------------
சில மாதங்களுக்கு முன் ஒரு வெப்சைட் நிறுவனம் தன் வெப்சைட்டின் PROMOவுக்காக தோனியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் தோனியின் ஒரு புத்தகம் வெளியிட்டது. ஒரு புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். லட்ச / கோடிக் கணக்கில் விற்பனையாகும் என்பது திட்டம். விற்றதோ ஆயிரத்துச் சொச்சம் மட்டுமே.
பிறகு காரணத்தை அலசியபோது அவர்களுக்கு கிடைத்த விடை: அணியின் வெற்றியை தோனி என்கிற தனிமனிதனின் சாதனையாக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அணியின் வெற்றியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று புரிந்ததாம். தனிப்பட்ட சாதனையாளர்களின் சுயசரிதையைத்தான் மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.
--------------------
கறை நல்லது என்பதுபோல கரண்ட் கட் நல்லது என்று சொல்ல வைத்து விட்டார்கள் ஒரு சில நாட்களுக்கு முன். மின்சாரத்தைத் துண்டித்து, அந்த நேரத்தில் வீடு வீடாக பணப்பட்டுவாடா நடந்ததாம். எங்கள் பகுதியில் இந்தச் செய்தி வேகமாகப் பரவ கரண்ட் கட்டானபோது பல வீடுகளும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கும் ஒரு கவர் கிடைக்குமென எதிர்பார்த்தேன். கிடைக்காத ஆத்திரத்தில் இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தேன்!
Jokes apart, சில ஊர்களில் கவர் கொடுக்க வந்த கட்சியினரை தேர்தல் கமிஷனிடம் மாட்டிவிட்ட மாற்றுக் கட்சியினர் மீது மக்களே கோவமாக இருந்ததைக் காணமுடிந்ததாம். ‘நமக்கு கொடுக்க வர்றதை தடுக்கறான் பாரு’ என்று காசு கொடுக்காமலே தங்கள் கட்சிக்கு ஓட்டு வாங்கிவிட்டார்களாம் கவரோடு வந்தவர்கள். கில்லாடிகள்தான்! எனக்குத் தெரிந்து ஓர் ஊரில் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு பணப் பட்டுவாடா நடந்ததாம்.
இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நடத்திக் காட்டிய தேர்தல் கமிஷன் பாவம்தான். படித்தவர்களின் மாநிலமாகப் போற்றப்படும் கேரளாவைவிட அதிக சதவிகித வாக்குப் பதிவானதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
----------------
.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.
அடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது!)//
ஏன் திடீரென்று. இதைப் பத்தி நீங்க முன்னமே ஏதாவது எழுதினீங்களா? ஒரு வேளை நான் படிக்கலையோ?? தயவு செய்து தகவல் தரவும். நன்றிண்ணா.
2001 என் பையன் பிறந்த வருஷம்.
//குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.//
மனுஷங்களா அவங்க :((((
//இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.//
என்னாலையும் தான் கிருஷ்ணா.. ஆனா கொஞ்சம் வேற மாதிரி :(((((
கிருஷ்ணா,
சித்ரா மகள் இறந்த விசயத்தை சொல்லி காலையில் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
நேற்று மாப்பிள்ளை பற்றி சன் டிவியில் அவர்கள் செய்த அலும்பு தாங்கலை. ஒரு வேளை உங்க விமர்சனம் படிக்காம இருந்திருந்தேனா, நிகழ்ச்சையை முழுசா பார்த்திருப்பேன்.
கிருஷ்ணா, ஒரு 100 வெள்ளி அதாவது 1450 ரூபாய் எப்ப வாங்கிக்கறீங்க (உங்களால மாப்பிள்ளை படம் பார்க்காத்தால ஏற்பட்ட லாபத்தை சொன்னேன்)
திருப்பூரில் என்ன நடக்கிறது என விரிவாய் எழுதுங்க.
பாடகி சித்ரா குழந்தை இறந்தது பெரும் அதிர்ச்சி தான். பல வருடங்களுக்கு பிறகு பிறந்த ஒரே குழந்தை :((
பெரும்பாலான மல்லுகள் வளைகுடாவில் இருப்பதால் ஓட்டு சதவீதம் குறைவாகத் தான் இருக்கும். அன்றைய தேதியில் ஊரில் இருந்தவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் ஓட்டு சதவீதம் 90 ஐத் தாண்டலாம்.
தலைவா,
சித்ராவின் குழந்தை :(((((( அதிர்ச்சி..., சேச்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
திருப்பூர் : ((((( அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ஆச்சு, தனிப்பதிவு சீக்கிரம் போடவும்.
கவர் வேணுமா - உங்களுக்குமா, அதிர்ச்சி,
//இன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை//
சொ.செ.சூ
திருப்பூரில் என்ன நடகின்றது என்பதை பற்றி கண்டிப்பாக எழுதுங்க.
திருப்பூரில் என்ன நடகின்றது என்பதை பற்றி கண்டிப்பாக எழுதுங்க.
மாப்பிள்ளை - மக்கு பிள்ளை
good one..:)
>படித்தவர்களின் மாநிலமாகப் >போற்றப்படும் கேரளாவைவிட அதிக >சதவிகித வாக்குப் பதிவானதில் >தமிழன் பெருமைப்பட்டுக் >கொள்ளலாம்.
பணப் பட்டுவாடா பெரும்பாலான இடங்களில் நடந்திருக்கிறது. எனது நண்பன் வீட்டில் ஓட்டுக்கு இருநூறு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் ஊரிலும் பணம் கொடுக்கப்படுவதாக பெண்கள் பேசிக்கொண்டார்கள். அதிகமான வாக்கு சதவிகிதத்திற்கு காரணம் மக்களின் விழிப்புணர்வா இல்லை பணமா என்று தெரியவில்லை.
// விரைவில் இதுபற்றி எழுதுகிறேன் //
கூடிய விரைவில்.....
இந்த அவியல், கூட்டு, லொட்டு, லொசுக்கு format தரும் எரிச்சல் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஒரே அவியலில் நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள், சினிமா பேசுகிறீர்கள், மேனேஜ்மெண்ட், ஊர் பிரச்சினை எல்லா கருமத்தையும் பேசிவிட்டு இடையில் சித்ரா மகளின் மரணத்தையும் சேர்த்து பேசுவதை மொத்தமாக படிக்கும்போது காண்டு ஆகிறது.
கொஞ்சம் சப்ஜெக்ட் செலக்ட் பண்ணி அடிங்க பாஸ். மாப்பிள்ளையை நக்கலடிக்கும் பதிவில், ஒரு சோகத்தையும் சேர்த்து வாசிக்க முடியவில்லை.
நிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..
உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..
அந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..
1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..
2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது
போல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..)
நேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா ??? பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..
2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..
இரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது
2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..
இதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. !
இந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..
2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் ..
இரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.
திருமதி சித்ராவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைப்பாளர்கள் வற்புறுத்தியிருந்தால், இவர்கள் மனித இனத்தை ஏன் எந்த உயிரினத்தையும் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். உடன் சென்றிருந்த மற்ற பங்களிப்பார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
திருப்பூரின் எழுச்சியும் வீழ்ச்சியும் திருப்பூர் மக்களால் ஏற்பட்டதுதான்.
சுயநலனும், திறமையற்ற போட்டியும்,உட்பகைகளும், பொறாமையும்,
அதிவேக வளர்ச்சியும், நம்பிக்கை துரோகங்களும், பொய்மையும், பித்தலாட்டங்களும்,
போட்டியாளர்களின் திறமை அறியாமையும், அரசியல்வாதிகளின் தலையீடுகளும், முதலீடுகளும் என பல காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆயினும் திருப்பூர் ஒரு சம நிலைக்கு வரும் என நம்புகிறோம். அதுவும் அவர்கள் நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.
'தீதும் நன்றும் பிறர் செய்ய வாரா'. திருப்பூரின் வளம் எனது வளமும் கூட.
//ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை//
ஏன் இப்போது எல்லாம் நீங்க லக்கியிடம் பேசுவதேயில்லை சகா?
அப்புறம், படிச்சவன் தான் ஓட்டுப் போட மாட்டான். தமிழகம் முழுவதும் 79% என்றால் சென்னையில் 68%.
//மாப்பிள்ளையை நக்கலடிக்கும் பதிவில், ஒரு சோகத்தையும் சேர்த்து வாசிக்க முடியவில்லை.//
இது நல்ல பாயின்ட்டா தெரியுது.. ஆனா அதுக்காக அவியல் வேணாம்னு சொல்ல முடியாது. எல்லாமே ஜாலியான விஷயமாக இருந்தால் மேட்டர் சால்வ்டு
அங்கே பணம் கொடுத்தாங்க , அவன் வாங்கினான் இப்படி தான் சொல்றாங்க ஒருத்தர் கூட நான் வாங்கினேன் , எனக்கு தெரிந்து கொடுத்தார்கள் என்று சொல்லவில்லை . எது உண்மையோ ஆண்டவனுக்கே வெளிச்சம் .
சித்ரா நிகழ்ச்சி அமைப்பாளர்களை குறை சொல்லும் அதே வாய் , அவர்கள் ரத்து செய்தால் பணத்தை அமுக்கி விட்டார்கள் என்று சொல்லுவார்கள்
Tommoy தொல்லை தாங்கவில்லை கருத்து சொல்வதாக நினைத்து கட்டுரை எழுதி கழுத்தை அறுக்கிறார் . எலெக்ஷன் தான் முடிஞ்சு போச்சு இல்ல எங்களை 1 மாசத்துக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க
I heard Chithra got her kid after 15years of marriage..please check your info... its too sad btw.
ஆனாலும் அவியலை தொடரவும்
தமிழகத்தின் மிக முக்கிய நகரமான திருப்பூர் பற்றி நீங்கள் சொல்வது வருத்தமளிக்கிறது. அதைப் பற்றி விரிவாக எழுதுங்கள் கிருஷ்ணா.
யுவகிருஷ்ணா சொல்வது வேலிட் பாயிண்ட்.
என்னங்க... திருப்பூர் நிலைமை அவ்வளவு மோசமாவா இருக்கு?? வேதனைதான் :(
எப்படி லஞ்சம் ஒழியும்? வெட்க கேடு...
Post a Comment