Friday, May 6, 2011

1 - 2 - 3

நாலைஞ்சு ஃப்ரெண்ட்ஸ் ஒரு இடத்துக்குப் போய்ட்டிருந்தோம். ஒருத்தர் வீட்டுக்கு. அட்ரஸ் சரியா தெரியல. வழியில டிப் டாப்பா பைக்ல சாஞ்சு நின்னுட்டு இருந்த ஒரு பெரிய மனுஷன்கிட்ட அட்ரஸ் கேட்டோம்.

“சார்.. இங்க மணியான் தோட்டம் எங்க இருக்கு?”

“அங்க யாரைப் பார்க்கணும்?”

அட்ரஸ் கேட்ட பாவத்துக்கு இவன்கிட்ட நாம எல்லா ஜாதகத்தையும், காரண காரியங்களையும் சொல்லணுமாங்கற மாதிரியே என் ஃப்ரெண்ட் என்னைப் பார்த்தான். சொல்லித் தொலைடான்னு நானும் பார்வையிலேயே சொன்னேன்.
(அதெப்படி பார்வையிலேயே சொல்லுவ?ன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் வேண்டாம்.. ஆமா..)

“அங்க யாரையும் பார்க்கலீங்க.. அதுக்கு பக்கத்து ரோடு வழியா போனா – நாங்க பார்க்கப் போறவர் பேரைச் சொல்லி – அவர் வீடு. அங்கதான் போகணும்”

“ஓ…” அப்படீன்னு ரிலாக்ஸ் பண்ணிட்டார் பைக் ஆசாமி.

கையை பாக்கெட்ல விட்டு சிகரெட் பாக்கெட் எடுக்கறாரு. சிகரெட்டை வாய்ல வைக்கறாரு. தீப்பெட்டியைத் தேடறாரு.. என் ஃப்ரெண்ட் என்னை ஒரு மாதிரி பார்க்கறான். நான் கூல் டவுன்’ன்னு பார்வையிலேயே (மறுபடியுமா?) சொல்லீட்டு அவர் பக்கத்துல போனேன்.

ஒரு வழியா சிகரெட்டையெல்லாம் பத்த வெச்சுட்டு அவர் அட்ரஸ் சொன்னாரு..
“நேராப் போனீங்கன்னா ஒரு ஐயங்கார் பேக்கரி இருக்கும். அதுல லெஃப்ட் எடுங்க..”

“ஐயங்கார் பேக்கரில கேக் இருக்கும், பன் இருக்கும். லெஃப்ட் இருக்குமா?’ன்னு நான் கேட்டதை - நல்ல வேளை - அவரு கவனிக்கல.

“அதே ரோட்ல போனீங்கன்னா ரோடு ரைட்ல திரும்பி மறுபடி லெஃப்ட் திரும்பும். அங்க சின்னதா ரோடு பிரியும். அதுல போய்ட்டே இருங்க. எங்கயும் நிறுத்தாதீங்க. அஞ்சு கிலோ மீட்டர் போனா ஒரு பாலம் வரும்.”

எனக்கு இப்பதான் ஒரு நம்பிக்கை வர்றாப்ல இருந்தது. ஏதோ குறிப்பிடறா மாதிரி அடையாளம் சொல்றாரேன்னு. அப்ப சொன்னாரு பாருங்க அந்தாளு..

“அந்தப் பாலத்துலேர்ந்து அரை கீலோ மீட்டர் முன்னாடிதான் நீங்க சொல்ற தோட்டம் இருக்கு”

“ஏங்க.. பாலம் வரைக்கும் போய்ட்டு அரைக் கிலோ மீட்டர் முன்னாடி வரணுமா? அதுக்கு முன்னாடியே தெரியற மாதிரி அட்ரஸ் சொல்லுங்களேன்”ன்னான் என் ஃப்ரெண்டு.

அதுக்கு அவரு சொல்றாரு: “அந்த தோட்டத்துக்கு அட்ரஸ் கேட்கறவங்களுக்கெல்லாம் நான் இதத்தான் சொல்றேன். எல்லாம் கரெக்டா போறாங்க.. நீங்கதான் இப்படி குறுக்குக் கேள்வி கேட்கறீங்க..”

அது சரி!!

---------------------

ஃபீஸ்ல எட்டு, ஒன்பது பேரு வேன்ல ஒரு கண்டொலென்ஸுக்கு - விசாரிக்கப் போய்ட்டிருந்தோம். வேன்லயே ஆளாளுக்கு - ஃபோன் வந்தப்ப - வித விதமான ரிங் டோன்ஸ். அதுனால இறங்கறப்ப ‘எல்லாரும் தயவு செஞ்சு அவங்கவங்க ஃபோனை சைலண்ட்ல போடுங்கப்பா’ன்னு சொல்லீட்டுதான் இறங்கினேன்.

போய், இறந்தவரோட அம்மாகிட்ட பேசிட்டிருந்தோம். ‘உடம்பு சரியானா அதே கம்பெனிக்குதாம்மா போவேன்னு சொல்லீட்டே இருந்தானே’ன்னு அந்தம்மா புலம்பறாங்க. அப்ப டகார்ன்னு என்கூட வந்த ஒருத்தனோட மொபைல் அலறிச்சு. “எங்கேயோ பார்த்த மயக்கம்”ன்னு. நல்ல பாட்டுதான். ஆனா எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்ல. சொல்லலைனாலும் பரவால்ல – சொல்லியும் கேட்காதவங்களை என்ன செய்யறது.. சொல்லுங்க?

------------------

மீபத்துல பஸ்ல போய்ட்டிருந்தேன். செமயான இளையராஜா சாங்க்ஸா போட்டுட்டிருந்தாங்க. பஸ்ல இருக்கற எல்லாருமே ரசிச்சு கேட்டுட்டே வந்தோம். ’கொட்டுக்களி கொட்டு நாயனம் கேட்குது…. ”ங்கற பாட்டு. பக்கத்துல நின்னுட்டிருந்த ஒருத்தர் ‘என்ன படம்க இது?’ன்னு கேட்கறாரு. இன்னொருத்தர் உடனே ‘உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’ன்னாரு. நான் உடனே சும்மா இருக்காம “இல்லைங்க சின்னவர்”-ன்னேன்

உடனே அவருக்கு கோவம் வந்துருச்சு. ’எங்ககிட்டயேவா? இது உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்தான்”ன்னாரு.

“இல்லைங்க.. இதுக்கு முன்னாடி பாடிச்சுல்ல ‘என்னைத் தொட்டு அள்ளிச் சென்ற...’ அதுதான் நீங்க சொன்ன படம்.. இது சின்னவர்-ங்க”ன்னேன்.
அவரு கேட்கவே இல்லை. வேணும்னா கூகுள்ல அடிச்சுக் காட்டவான்னு செல்லை எடுத்தேன். ‘போய்யா.. அதயெல்லாம் நம்ப மாட்டேன். எனக்குத் தெரியும்’ன்னு ஏதோ சொல்ல ஆரம்பிச்சவர் டக்ன்னு பாட்டை கவனிச்சாரு.

அப்பத்தான் பல்லவி முடிஞ்சு சரணம் ஆரம்பிச்சிருந்தது. முதல் சரணத்துல முதல் வரி – ‘சின்னவரைப் பார்க்கும்போது..’ – இதக் கேட்ட உடனே அவரு சொல்றாரு…

“ஸாரி.. ஸாரி.. சின்னவருதான். இந்த வரியைக் கேட்கறப்பதன் ஞாபகம் வருது..’ன்னாரு,. அப்பாடான்னு இருந்தது.

நல்லவேளை..சின்னவரைப் பார்க்கும்போதுங்கறதுக்கு பதிலா கவிஞர் ‘உன்னைதினம் பார்க்கும்போது’ன்னு எழுதிருந்தா – நான் தீர்ந்தேன்.

-------------------


.

7 comments:

சுசி said...

//நான் தீர்ந்தேன்.//

தீராத உங்க ஃபீலிங்க்ஸ் இருக்கும்ல.. :)

சுசி said...

//சொல்லியும் கேட்காதவங்களை என்ன செய்யறது..
சொல்லுங்க?//

சொல்லியும் கேட்காதவங்களை என்ன செய்யறது..
சரியா சொன்னேனாங்க??

சுசி said...

//"1 - 2 - 3"//


எண்ணிக்கொங்க.. 3 கமன்ட் போட்டாச்சு..

Anonymous said...

///அதுக்கு அவரு சொல்றாரு: “அந்த தோட்டத்துக்கு அட்ரஸ் கேட்கறவங்களுக்கெல்லாம் நான் இதத்தான் சொல்றேன். எல்லாம் கரெக்டா போறாங்க.. நீங்கதான் இப்படி குறுக்குக் கேள்வி கேட்கறீங்க..”/// இதையே தொழிலா வச்சுக்கிறார் போல ...)))

rajamelaiyur said...

Muthukkal 3

தராசு said...

//ஐயங்கார் பேக்கரில கேக் இருக்கும், பன் இருக்கும். லெஃப்ட் இருக்குமா?’ன்னு நான் கேட்டதை - நல்ல வேளை - அவரு கவனிக்கல.//

கார்க்கி கூட சேராதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா???

விக்னேஷ்வரி said...

ஏன் இப்படி எழுதிருக்கீங்கன்னு யோசிச்சுட்டே வரும் போது பதில் லேபிள்ல இருந்தது. பொழைச்சுப் போங்க.