Thursday, November 20, 2008

ஒரு ஃபுல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்




என்கிட்ட சிலபேர் பலதடவை ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றதுண்டு. அதாவது என் பதிவுகள்ல ‘அவர் இதைச் சொன்னார்... இவர் இதைச் சொன்னார்’ன்னு அடுத்தவங்க சொல்றதை ஏன் எழுதறேன்னு கேப்பாங்க. சில நல்ல விஷயங்களை, சுவாரஸ்யமானவற்றைப் பகிர்ந்துக்கணும்ன்னுதான். வேற ஒண்ணும் பெரிய காரணமெல்லாம் இல்லை. கல்யாண்ஜி கேப்பாரு.. ‘என்னுடையதை என்னுடையாதாகப் பார்ப்பதில் என்ன இருக்கிறது?’ என்று. அதனால் பல/சில சமயங்கள்ல அடுத்தவங்களோடதையும் என்னுடையதாகப் பார்க்கிறேன். அவ்வளவே...
***********************





இரண்டாம் தளத்தில் உள்ள அப்துல்லா அறைக்குச் செல்ல கீழே லிஃப்டிற்காகக் காத்திருக்கிறோம். ‘என்னா.. யூத் மாதிரி இருந்துகிட்டு, லிஃப்டுக்கு வெய்ட் பண்றீங்க? படியேற முடியாதா’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். உடனே சட்டென்று சொல்கிறான் சகா கார்க்கி..

“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”

*************************

இது தன்னைக் கிழம் என்று சொல்லிக்கொள்ளும், இளமை எண்ணக்காரர் சொன்னது...

“நீ பாரு பரிசல்.. தமிழ்நாட்ல உன்னிகிருஷ்ணன்னு பேர் இருக்கற யாரோட அப்பா பேரும் ‘S’ ல ஆரம்பிக்காது. ‘S’-ல ஆரம்பிக்கற பேர் இருக்கற எந்த அப்பனும் தன் மகனுக்கு உன்னிகிருஷ்ணன்னு பேர் வைக்கமாட்டான்”

‘ஏண்ணா?’ என்று வெள்ளந்தியாய்க் கேட்டு திட்டுவாங்கிக் கட்டிக்கொண்டேன்!

************************

விவேக், வடிவேலு பற்றிப் பேச்சு வந்தது.

“என்ன இருந்தாலும் விவேக் இண்டலெக்ச்சுவல்தானே?”

“மக்களோட மனசைப் படிக்கணும்டா. இல்லாம சும்மா அறிவுரையே சொல்லிகிட்டிருந்தா அது மெண்டலெக்ச்சுவல்!”

***************************

நாங்கள் போன ஆட்டோக்காரன், பஸ்ஸுக்கும், காருக்கும் இடையில் புகமுடியாத ஒரு இடைவெளியில் தன் ஆட்டோவைச் செலுத்தியபோது..

“அமிதாப்பச்சன் சென்னைல இருந்தா அவன் காலுக்கடில கூட ஓட்டீட்டுப் போவானுக”

***************************

ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.

பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’

ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”


முக்கியக்குறிப்பு: இந்த மொக்கையை நானும் பலதடவை சொல்லியிருக்கிறேன். ‘ஏங்க.. பார்சல்னாலும் சாப்பிடத்தானே’ என்றோ ‘பார்சல்ன்னா சாப்பிடக்கூடாதா?’ என்றோ கேட்பேன். இவர் அவன் கேட்டதையே திருப்பிச் சொல்வதுபோல் இரண்டே வார்த்தையில் நச்சென்று சொல்லியதில்தான் சூட்சுமம் இருக்கிறது. சிறுகதை எழுத இந்தச் சொற்பிரயோகம் மிகமுக்கியம்!
***************************
அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார். அவரது குரல் எங்கள் பாராட்டுக்கிடையே சரியாகக் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உரத்தகுரலில்.. ‘உன் காலைக் கேட்கறேன்.. காமிக்க மாட்டீங்கற?’ என்கிறார்.

உடனே அங்கிருந்த நண்பர்-குறும்பட இயக்குனர்- சாரதாகுமார் சொல்கிறார்..

“அவரே நாங்க பாராட்டற பாராட்டுல ‘தலைகால்’ புரியாம இருக்காரு..”

**************************

ராசி பட இயக்குனர் முரளிஅப்பாஸ் வந்தார். பெயர்க்காரணம் கேட்டோம். அதன் அப்பா பெயரான அப்பாசாமி-யின் சுருக்கம்தான் அப்பாஸ் என்றார். ‘நான் ரம்பாவின் ரசிகன். நீங்க ரம்பாவை வெச்சுப் படம் எடுத்திருக்கீங்க’ என்று கைகொடுத்தேன். கொஞ்ச நேரப் பேச்சின்போது ஒரு கவிதைக்கு தொடைதட்டி ரசிக்க நண்பர் சந்தோஷ் சொன்னார்..

“ரம்பா ரசிகருல்ல, அதான் தொடைல தட்டறீங்க”

(ஆனா நான் என் தொடைலதானே தட்டினேன்....)

***************************

ஒரு நண்பரிடம் கேட்கப்படுகிறது..

“நீங்க பொறந்து வளர்ந்தது எங்க?”

அவர்: “வேலூர்”

உடனே கார்க்கி: “எந்த செல்லுல?”

******************

கார்க்கியை ‘டா’ போட்டு ஒரு நண்பர் அழைத்தபோது, இன்னொருவர் சொன்னார்.

“எனக்கும் கார்க்கியை அப்படிக் கூப்பிடணும்ன்னு தோணுது. ஆனா அவர் தப்பா நெனைப்பாரோன்னு யோசனையா இருக்கு”

“ஒரு ரவுண்டு முடியட்டும். நீங்க எப்படிக் கூப்பிடப் போறீங்கன்னு பாருங்க”

இந்த நேரத்தில் குறும்பட இயக்குனர் (அடடா.. இத எத்தனை தடவைடா சொல்லுவ..) சாரதாகுமார் ஒரு விஷயம் சொன்னார்..

“மதுரைல ஒரு தியேட்டர் இருந்துச்சு. அந்தக்காலத்துல படம் பார்க்க வர்றவங்களை டிக்கெட்டோட மதிப்பை வெச்சுத்தான் கூப்பிடுவாங்க.

‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”

**************************

ஒரு நண்பர் தவறாக ‘இளநி, பீர்ன்னெல்லாம் சொன்னா உதடு ஒட்டாது. ப்ராண்டி, ரம்-னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்’ என்று சொன்னார்.

“அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”

நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..”

இந்த இடத்தில் ஒருத்தர் மேடைப் பேச்சின்போது அ.தி.மு.க-வுக்காக பேசும்போது பேசியதைக் குறிப்பிட்டார்...

“கலைஞர், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், தயாளு, ராஜாத்தி என்ன சொன்னாலும் உதடு ஒட்டாது. ஆனா எம்.ஜி.ஆர், ராமச்சந்திரன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் இப்படி என்ன சொன்னாலும் உதடு ஒட்டும்”

உடனே யாரோ கேட்டார்கள்..

“இதச் சொன்னதுக்கு கைதட்டினாங்களா.. கையால தட்டினாங்களா...”

*************************
கவிதைகள் உட்பட இவைபோல இன்னும் சில உண்டு.
தொடரவா.. வேண்டாமா?
...........

ஒரு வேண்டுகோள்.... என்னவோ தமிழ்மண மகுடமாம். ஓட்டுப் போடணுமாம். மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன்.


.

38 comments:

Udhayakumar said...

mokkai mohan, ithukkellam oottu poda mudiyathu :-D

கப்பி | Kappi said...

:))

Anonymous said...

நல்லாத்தான் எல்லாரும் ஜோக்கடிச்சிருக்கீங்க. குழந்தைகள் படம் புதுசு போட்டதுக்கு நன்றி.

Kumky said...

:--))

Kumky said...

குழந்தைகள் படம் புதுசு போட்டதுக்கு நன்றி.

ILA (a) இளா said...

Super

Anonymous said...

//ஒரு வேண்டுகோள்.... என்னவோ தமிழ்மண மகுடமாம். ஓட்டுப் போடணுமாம். மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன்.//

ok DONE

Mahesh said...

ரொம்ப நாளைக்கப்பறம், ட்ரிப்ளிகேன் மேன்ஷன் ரூம்ல அரட்டை அடிச்ச மாதிரி இருக்கு.... :)))

டிஸ்கி : "மேன்ஷன் மனிதர்கள்"னு ஒரு கதை எழுதி எனக்கே தெரியாம ஒளிச்சு வெச்சுருக்கேன்.. தப்பிச்சீங்க..

பாபு said...

"அந்த" நேரத்துல பேசினது எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க???

பரிசல்காரன் said...

//பாபு said...

"அந்த" நேரத்துல பேசினது எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க???/

ச்சும்மா சொல்லியிருக்கேனே தவிர, எல்லாருமே வெறும் செவன் அப்பும், அக்வாஃபீனாவும்தான் அருந்தினோம் நண்பா...

Cable சங்கர் said...

ஓரே கூத்தும், கும்மாளமுமா இருந்திருக்கீங்க.. என்னைய விட்டிட்டு.. இருக்கட்டும்,இருக்கட்டும்.. அது சரி ஓரு நடை நம்ம பக்கம் வந்து பாத்துட்டு போங்க..

சரவணகுமரன் said...

ஜூனியர் விகடன் டயலாக்ஸ் மாதிரி இருந்தது... எல்லாமே சூப்பர்... எப்படித்தான் இவ்ளோத்தையும் ஞாபகம் வச்சிருந்தீங்களோ?

☼ வெயிலான் said...

// மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன். //

போட்டுட்டு தொலைஞ்சிரணுமா?
கொஞ்சம் அராஜகமாத் தெரியுதே.....

கார்க்கிபவா said...

//அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”

நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..//

பீரடிச்சவனே வாய் குழறும் போது ரம் பிரான்டி அடிச்சவனுக்கு குழறாதா? தலயும் மப்புல சொல்லியிருப்பாரு போல..

/கவிதைகள் உட்பட இவைபோல இன்னும் சில உண்டு.
தொடரவா.. வேண்டாமா?//

என்ன கேள்வி இது? சொல்லுங்க சகா.. நடந்தத உங்க எழுத்துல படிக்கும் போது எனக்கு சுவார‌ஸ்யமா இருக்கு.. பார்க்காதாவங்க படிச்சா!!!

கார்க்கிபவா said...

//ஒரு வேண்டுகோள்.... என்னவோ தமிழ்மண மகுடமாம். ஓட்டுப் போடணுமாம். மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன்.
//

அது இன்னும் சரியா இல்ல சகா.. எனக்கு நானே எதிர் ஓட்டு போடுவேனா? போன பதிவுக்கு நேத்து 3/5 னு காமிச்சது.. இன்னைக்கு 0/2 னு காட்டுது.. இன்னைக்கு போட்ட பதிவுக்கு 0/4 காட்ட்டுது.. 4 தான் ஆதரவான் ஓட்டுனா பரிந்துரையில் வ்ந்திருக்கனும்.. ஒன்னுமே புரியல.

narsim said...

பரிசல்.. இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும்னு நினைக்கிறேன்.. தொடர்ந்து பேசினத எழுதுங்க..ஸாரி.. பேசினத தொடர்ந்து எழுதுங்க.. ம்ம்.. பேசினது தொடர்பா எழுதுங்க.. (பெப்ஸி தான் குடிச்சேன் தல)

anujanya said...

நல்லா இருக்கு பரிசல். தொடரவும்.

அனுஜன்யா

பாசகி said...

//பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’

ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”//

சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது :-) இப்படி கேட்டதுக்கப்பறமும் அவருக்கு பார்சல் கிடச்சுதா? கிடச்சுதுன்னா அந்த பார்சலில் ஏதும் பல்லி கில்லி (விஜய் பட சிடி இல்லீங்க..ஹி ஹி,,) இருந்த்தாதுன்னு கண்டிப்பா தெரியப்படுத்தவும் :-)

rapp said...

எல்லாமே சூப்பர். இன்னும் இப்டி இருந்தா கண்டிப்பா தொடரவும்:):):)

rapp said...

me the 20th:):):)

வால்பையன் said...

உன்னிகிருஷ்னன் சூப்பர்

வால்பையன் said...

//என்னவோ தமிழ்மண மகுடமாம். ஓட்டுப் போடணுமாம். மாஞ்சு மாஞ்சு எழுதறேனே... போட்டுத்தான் தொலைங்களேன்.
//

ஓட்டு போட சொன்னாலே எனக்கு அரசியல்வாதிகள் ஞாபகம் தான் வருது.

வால்பையன் said...

பதிவு சூப்பர்,
எல்லா காமெடியும் அருமையா இருக்கு

Busy said...

Nalla Comedy :) :)

ambi said...

பல ஜோக்குகளுக்கு மனம் விட்டு சிரித்தேன். :))

வெண்பூ said...

//
பரிசல்காரன் said...
ச்சும்மா சொல்லியிருக்கேனே தவிர, எல்லாருமே வெறும் செவன் அப்பும், அக்வாஃபீனாவும்தான் அருந்தினோம் நண்பா...
//

//
narsim said...
(பெப்ஸி தான் குடிச்சேன் தல)
//

ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டு அழகா பொய் சொல்றீங்க.. பாராட்டுக்கள்..

உங்க ரெண்டு பேருக்கும் ஒரு உண்மை. அங்க செவன் அப், பெப்ஸி, அக்வா ஃபினா எதுவுமே இல்லை. வாங்கி வெச்சிருந்த மினரல் வாட்டரும் கின்லேதான்.. :))))

SK said...

அருமை

நச் நச் நச்

வெண்பூ said...

75,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்..

கார்க்கிபவா said...

// வெண்பூ said...
75,000 ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்..
//

எனக்கும்தான் 50000 ஹிட்ஸ் ஆச்சு.. அதையெல்லாம் கவனிக்காதீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேசினத கேட்டத படிச்சத நினைச்சதை ன்னு எல்லாத்தையும் எழுததானேங்க ப்ளாக்.. :)

பரிசல்காரன் said...

@ வெண்பூ


போட்டா குடுக்கற..

இருய்யா.. ஆதர்ஷ்கிட்ட சொல்லி தொப்பைலயே ஒதைக்கச் சொல்றேன்..

புதுகை.அப்துல்லா said...

அடப்பாவி மனுசா.... அன்னைக்கு நானும்தான் இருந்தேன் ஆனா எழுத தோணலயே!!!!!

கார்க்கிபவா said...

உங்களுக்கு போய் ஞாபக மறதினு நாங்க எப்படி நம்பறது சகா?

SK said...

அவருக்கு 'பொய்' நியாபக மறதின்னு நம்புங்க சகா :)))

விலெகா said...

கடைசி வரைக்கும் அந்த ராயல் சேலஞ்ச பத்தி சொல்லவே இல்லை:)))))

முரளிகண்ணன் said...

பரிசல்,


கோல்கொண்டா,அஞ்சலி தேவி, செல்- நோகியா, வாலி இதெல்லாம் எப்ப வரும்?

Itsdifferent said...

Can I make a request to this community?
Can we use this energy & team spirit to focus on improving the conditions of our public schools?
My suggestion is, lets adopt one or two schools to start with.
1. Visit those schools, understand the basic necessities like Black Board, chalk, water, toilets, stationary for teachers and students etc.,
2. Create time and money to fulfill the above.
3. Use this medium to collect money from the readers to these blogs all over the globe.
4. Create a team with folks on the ground in TN, to get the necessary work done at schools.
5. I know there are going to be challenges, but a small step is easy with trust in each other and will definitely pave ways for a long term success.
Have been wanting to write these for a long time, I thought the mood in the community is right for us to take this forward.
How do we take this forward?
Once we have a structure, we can do multiple things, most importantly how do we help Ordinary citizens to be successful in whatever they want to do improve their living conditions. Thats the way forward to lift people out of poverty. Govt or banks are not going to do that, we the fortunate ones have to help the unfornate ones with necessary to help to lift them out of their poverty to let them live a decent life.
I am sure, we have lots of energy around, lets see, if we can focus a small percentage of that energy to a cause.

Itsdifferent said...
This comment has been removed by the author.