Tuesday, October 7, 2008

அபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை

‘அபியும் நானும்’ படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கறேன். கண்டிப்பா அது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்ங்கறதுல சந்தேகமே இல்ல. மொழி டீம். ராதாமோகன் அழகிய தீயே-விலிருந்தே என்னைக் கவர்ந்துட்டார். அபியும் நானும் மகள்-தந்தை உறவைச் சொல்லும் படம். எனக்கும் மகள்கள் இருக்கறதால, எப்படா படம் வரும்ன்னு காத்துகிட்டிருக்கேன்.


இந்தப் படத்தோட பாடல்கள் வெளியிட்டாயிற்றுன்னு கேள்விப்பட்டேன். ஆனா ரெண்டு வாரமா வர்ல. போனவாரம் ப்ரகாஷ்ராஜைக் கூப்பிட்டு கேட்டப்போ, கண்டிப்பா அடுத்த வாரம் வரும்ன்னாரு. ராதா மோகன் வேற வைரமுத்து வரிகள்ல பின்னியிருக்கரு கிருஷ்ணா. கண்டிப்பா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னாரு, அதுனால காத்திருந்து, காத்திருந்து ஞாயிறன்னைக்கு வாங்கீட்டேன்.





குடுத்த 99 ரூபாய் சி.டி-யோட வடிவமைப்புக்கே போயிடுச்சு!


தொறந்தா இடது பக்கம் ஒரு ஸ்கூல் பேக், வலது பக்கம் ஒரு ஸ்கூல் பேக் டைப்ல இருந்தது. கூட மொழி டி.வி.டி.இலவசம் வேற!


உள்ளுக்குள்ள குழந்தைகள் கலர் அடிக்க ஒரு பேப்பர் இருந்துச்சு. அப்புறம் ரெண்டு லேபிள்.., ஒரு போட்டிக்காக அபி நமக்கு எழுதின லெட்டர் எல்லாம் இருந்துச்சு.


பாடல்களை நீங்க கேளுங்க. நான் சொல்லவந்தது வேற...


ப்ரகாஷ்ராஜ் ஒவ்வொரு பாடலுக்கும் நடுவில் பேசியிருக்கும் வசனங்களுக்காகவே கேசட் வாங்கவேண்டும். உறவுகளைக் கொண்டாட ஒரு படம் எடுத்திருக்கோம் என்று ஆரம்பிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

“நாம எப்பவாவாது பஸ்ல பயணம் செய்யும்போது சில பேர் நம்ம பக்கத்துல உக்கார்ந்து, தோள்ல தூங்கி விழுந்து அடிக்கடி பொசிஷனை மாத்தி இம்சை பண்ணுவாங்க. இப்படி அரை மணிநேரம், ஒரு மணிநேரப் பயணத்துலயே சக மனிதனைச் சகிச்சுக்க முடியாத நாம வாழ்க்கைப் பயணத்துல உறவு சொல்லும் மனிதர்களை எப்படிச் சகிச்சுக்கறோம்? ஒரே வார்த்தை.. குடும்பம்.”


“உங்களை நீங்க ஃபோட்டோவுல பார்த்திருப்பீங்க. கண்ணாடில பார்த்திருப்பீங்க. உறவினர் வீட்டு கல்யாண வீடியோவுல பார்த்திருப்பீங்க. சினிமாவுல பார்த்திருக்கீங்களா? பார்க்கப் போறீங்க.”


“ஒரு அப்பாவுக்கும், மகளுக்குமான கதையில நமக்கு என்ன சம்பந்தம்ன்னு நெனைக்கறீங்களா? உங்க அம்மா, தோழி, காதலி, மனைவி-ன்னு உங்க வாழ்க்கையில வர்ற பெண்களெல்லாம் யாரோ ஒருத்தரோட மகள்தானே?”


“வாழ்க்கை இன்னைக்கு இயந்திரத்தனமா, அவசரமா ஓடிகிட்டிருக்கு. நின்னு மனசொன்றொ ரெண்டு நிமிஷம் சாமியைக் கும்பிட நேரமில்லாம, வண்டிய ஓட்டிகிட்டே சாமிக்கு ஹலோ சொல்றோம். டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டே எஸ்.எம்.எஸ். அனுப்பறோம். கல்யாணத்தன்னைக்குக் கூட சென்ஃபோன் ஹேண்ட்ஸ்ஃப்ரீயைக் கழட்ட முடியல. திரும்பிப் பார்த்தா முதல் காதல், முதல் முத்தம், முதல் வெற்றி இப்படி முப்பது வருஷ வாழ்க்கைல மொத்தமா முப்பது நிமிஷம் மட்டும்தான் வாழ்ந்ததா சொல்லலாம். அதுல முக்கியமான நிமிஷம் தந்தையாகவோ, தாயாகவோ மாறுகிற தருணம். பிறந்த குழந்தையை மொத மொதல்ல கையில ஏந்தின அந்த நிமிஷம், இதுவா என் குழந்தைன்னு நம்பமுடியாம பார்த்த அந்த நிமிஷம். கல்யாணம் ஆகாதவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட உங்களைப் பார்த்த அந்த மொத நிமிஷத்துல அவங்களுக்குள்ள ஓடின சிலிர்ப்பு எப்ப்டி இருந்துச்சுன்னு கேட்டுப் பாருங்களேன். வார்த்தை கிடைக்காம அல்லாடுவாங்க”


“நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான பருவம் பால்ய பருவம். ஏன் தெரியுமா? நீங்க மழையில நனைஞ்சு எவ்ளோ நாளாச்சு, நிமிர்ந்து நிலாவை எப்ப பார்த்தீங்க, கடலலைல கால் நனைச்சது கடைசியா எப்ப? எல்லாரும் சின்ன வயசுலன்னு சொல்லுவீங்க. ஏன்? இன்னைக்கும் அதே மழைதானே? நாம இப்ப ஓடினாலும் கூடவே ஓடிவரும் நிலா. தொட்டு விளையாட்டுல தோத்துப் போன அதே கடல்தானே இன்னைக்கும் இருக்கு? எல்லாக் காலத்துலயும் இயற்கை இயற்கையாத்தான் இருக்கு. நாமதான் மாறிக்கிட்டிருக்கோம். இயற்கைதான் பெஸ்ட் டீச்சர். இந்த உலகத்தையும், நம்மையும் படைச்ச இயற்கைகிட்ட கத்துக்காம இண்டர்நெட்ல என்னத்த கத்துக்கப் போறோம்?”

“நம்ம வாழ்க்கைல விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ இருக்கு... வார்த்தை பழகாத குழந்தையும் குழந்தையும் ஏதோ சிரிச்சுப் பேசிப்பாங்களே... என்ன பேசிக்குவாங்க? ப்ளாட்ஃபார்ம்ல வாழற குழந்தைக்கு வீடுன்னு சொன்னதும் என்ன விஷுவல் வரும்? அவசரமா எங்கியோ போகும்போது மட்டும் ஏன் வண்டி பஞ்சராகுது? தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு தரும்போது கடவுள் என்ன நினைப்பாரு? ஒரு ரூபாய்க்கு கடலை வாங்கும்போது கூட கடைசி கடலை மட்டும் ஏன் சொத்தையா இருக்கு? இப்படி சின்னதும் பெரிசுமா நம்ம வாழ்க்கை முழுக்க கேள்வியா இருகு. அப்ப விடை என்னாங்கறீங்களா? வாழ்ந்து பார்க்கறதுதான்!”

“ஒரு பூ உதிர்வதும் இன்னொரு பூ மலர்வதும் மாதிரி உறவும் பிரிவும் இருக்கு. நாம நேசிச்ச உறவையும் திடீர்னு பங்கு போட யாராவது வரத்தான் செய்வாங்க. பெரிய அதிர்ச்சியா இருந்தாலும் அப்புறம் ஏத்துகக் பழகிடுவோம். நம்மளை விட்டி இவங்க போய்ட்டா என்ன பண்ணுவோம்ன்னு நெனைக்கறப்ப மனசுல வர்ற பயம் இருக்கே.. அப்பப்பா.. அதுதான் நரகம். ஒரே பிள்ளையா இருக்கறப்போ புதுசா தம்பிப் பாப்பா வர்ற போதும், வெரிகுட்ன்னு தட்டிக் குடுத்த டீச்சர் புதுசா வர்றவனையும் தட்டிக் குடுக்கறப்பவும், நம்ம தோழி அவ தோழனை அறிமுகப் படுத்தும்போதும்... ஏன் குழந்தைக கிட்ட அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமான்னு கேக்கும்போதும் நிலவு மாதிரி பயமும் கூடவே வரும்.”


இந்தமாதிரி அவரோட ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு கவிதை!!!

என் ஒரே வேண்டுகோள் தயவுசெஞ்சு இந்த சி.டியை எல்லாரும் காசு கொடுத்து வாங்குங்க...! ப்ளீஸ்!



பி.கு: பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நண்பர்கள் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்.. ஹி..ஹி.. கண்டுக்காதீங்க!

32 comments:

Ramesh said...

இந்த இளவரசிகளு yaaru?

----8-----

"அபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை" very nicely written....

But you missed telling where it was suttufied... Amupam Kher 'Daddy' thaane ithu?

Kaasu koduthu? What are you talking.. High speed Download irukku namma kaiyla!

Net -> PC -> Laptop -> (friends) -> Ipod (small, big)... -> burn a CD for backup.

Ippadi poguthu life!

pudugaithendral said...

அழகியே என்னை மிகவும் கவர்ந்த படம். ராதா மோகனின் இயக்கத்தில் இந்த படத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.

MyFriend said...

super. ;-)

narsim said...

//போனவாரம் ப்ரகாஷ்ராஜைக் கூப்பிட்டு கேட்டப்போ, கண்டிப்பா அடுத்த வாரம் வரும்ன்னாரு//

உங்ககிட்டயும் அதான் சொன்னாரா?!!!!

நல்லா எழுதியிருக்கீங்க பரிசல்..

நர்சிம்

☼ வெயிலான் said...

கவரும் - கவரேஜீம் ரொம்ப அருமையா இருந்தது பரிசல்.

பிரகாஷ்ராஜை சுற்றி நம்மைப் போல :)நல்ல திறமையான நண்பர்கள் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் இது.

பாடல்கள் எப்படி இருக்குது?

☼ வெயிலான் said...

போன பதிவுக்கு டாக்டர். ருத்ரன் பாராட்டிட்டிருக்கார் போல!

வாழ்த்துக்கள்!!!!!!!!

பரிசல்காரன் said...

@ வெயிலான்

டாக்டர். ருத்ரன் என்னோட 150வது பதிவுக்கே வந்துட்டுப் போய்ட்டாரு.

நேற்றைய கதை (மொக்கையோ மொக்கை) ஈ.எஸ்.பி.பத்தி இருந்ததால ஸ்பெஷல் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போயிருக்காரு!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான பதிவு

படம் பார்க்கும் ஆவலை, இந்த பதிவு தூண்டுகிறது.

அந்த வரிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுபவை.

The TEAM will definetely give success.

Bee'morgan said...

ஆகா.. இப்பவே, இதையெல்லாம் படிக்கும் போதே இப்படி இருக்கே, பிரகாஷ்ரஜ் குரலில் கேட்டா எப்படி இருக்கும் னு ஒரு பிரமிப்பு இப்பவே வந்திடுச்சு.. நானும் சீக்கிரம் வாங்கிடறேன்.. தகவலுக்கு நன்றிகள் பரிசல்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பிரகாஷ்ராஜை சுற்றி நம்மைப் போல :)நல்ல திறமையான நண்பர்கள் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் இது.//

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல டீம் ப்ரகாஷ்ராஜோடதும் ராதாமோகனுடையதும் கண்டிப்பா பார்த்துடறோம்..

பாபு said...

ரொம்பவும் ரசிச்சிருக்கீங்க,எனக்கு பிரகாஷ் ராஜ் குரல் ரொம்ப பிடிக்கும்.நானும் ஆவலாக இருக்கிறேன்.பாடல்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

கூடுதுறை said...

//பாபு said...
ரொம்பவும் ரசிச்சிருக்கீங்க,எனக்கு பிரகாஷ் ராஜ் குரல் ரொம்ப பிடிக்கும்.நானும் ஆவலாக இருக்கிறேன்.பாடல்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே//

இதையேல்லாம் விளக்கமா சொல்வார்களா? பிரகாஷ்ராஜின் வசனம் நல்லாயிருக்கு என்று அதைக்கொடுத்து இருப்பவர்... பாடலை பற்றி ஒன்றும் சொல்லவில்லையென்றால் என்ன அர்த்தம்...

பாட்டு புட்டுகிச்சு தானே ?

வால்பையன் said...

அடாடா, கேசட் வெளியீட்டிர்க்கே ஒரு பதிவா,
வேயீட்டு விழாவில் தமிழின தலைவர் கலந்துகிட்டாராமே,
நண்பர்கள் சொன்னாங்க, பாட்டு கேக்கணும்.

ராதா மோகன் படம்னா எனக்கு கூட உசுரு,
அழகிய தீயே பார்த்திட்டு அழுதுகிட்டே வீட்டுக்கு போனேன்.
உறவுகளின் மெல்லிய இலைகளை கூட நேர்த்தியாக காட்டுவதில் ராதா கெட்டிகாரரு.

Anonymous said...

கிருஷ்ணா,

தரையில் இறங்கும் விமானங்கள் படித்திருக்கிறீர்களா?

சுவரில் காரை பெயர்ந்திருக்கும் இடத்தில் கூட ஒரு உருவத்தைக் கற்பனை செய்யும் மனனிலை வாய்க்கப் பெற்றவன் அந்த கதானாயகன். அது ஒரு வரம்.

அது போல எதையும் ரசிக்கும் அதைப் பகிரவும் நல்ல பாகுவம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ வடகரைவேலன்

அண்ணா, நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்!!) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல! சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன்! (இன்னும் இருக்கு அந்தப் படம்!)

நெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு!

முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-(

Thamira said...

நல்ல ரசனை பரிசல்!

Athisha said...

\\ முடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது! :-( \\

எழுத்தாளர் பரிசல் அவர்களே பதிவை விட இந்த மேட்டர் ஏஏஏஏ ஜீப்பருப்பா

மெய்யாலுமே நீங்கதான்பா எழுத்தாளர்

VB2010 said...

“நாம எப்பவாவாது பஸ்ல பயணம் செய்யும்போது சில பேர் நம்ம பக்கத்துல உக்கார்ந்து, தோள்ல தூங்கி விழுந்து அடிக்கடி பொசிஷனை மாத்தி இம்சை பண்ணுவாங்க. இப்படி அரை மணிநேரம், ஒரு மணிநேரப் பயணத்துலயே சக மனிதனைச் சகிச்சுக்க முடியாத நாம வாழ்க்கைப் பயணத்துல உறவு சொல்லும் மனிதர்களை எப்படிச் சகிச்சுக்கறோம்? ஒரே வார்த்தை.. குடும்பம்.”

இது சம்பந்தமா நான் எழுதியிருக்கும் ஒரு சம்பவம் ... ப்ளீஸ் படிச்சி பாருங்க ....

http://vellainila.blogspot.com/2008/10/blog-post_07.html

Subash said...

அருமையான முன்னோட்டம்.
:)

மங்களூர் சிவா said...

இளவரசிகள் கைல வெச்சிருக்கிறது ஜப்பான் விசிறி மாதிரி இல்லையே சைனா மேக் மாதிரி இல்ல இருக்கு!

:)))))))))))

தமிழன்-கறுப்பி... said...

அழகிய தீயே எனக்கும் பிடிச்ச படம்...

தமிழன்-கறுப்பி... said...

பார்க்கலாம் அபியும் நானும் எப்படி வருகிறதென்று....

தமிழன்-கறுப்பி... said...

பிரகாஷ்ராஜின் குரலில் கேட்கையில் அது ஒரு தனி விதமாக இருக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

இளவரசிகள் அழகு...

மீரா, எப்படி இருக்கிறியள்...?

முரளிகண்ணன் said...

super

ISR Selvakumar said...

"காது கேட்காத பெண்ணை இசை கேட்க வைத்த படம்", மொழி!

"அபியும் நானும்", அது போல சிறந்த அனுபவங்களைத் தரும் என்று நம்புகிறேன்.

இன்னும் பாடல்களைக் கேட்கவில்லை, ஆனாலும் இந்தப் பதிவையும், பதிவைத் தொடர்ந்த சில பின்னூட்டங்களையும் படிக்கும்போது . . . Music is on Air!

சென்ஷி said...

பதிவு சூப்பருங்கண்ணா :))

ஜோசப் பால்ராஜ் said...

ராதா மோகன், விஜி, ப்ரகாஷ் ராஜ் ஒரு அருமையான வெற்றிக் குழு. பிரகாஷ் ராஜ் தான் ராதா மோகனையும் விஜியையும் ஒரு காலத்தில் தரணியையும் ஆதரித்து வளர்த்தவர். நல்ல திறமைசாலிகளை ஊக்குவிக்கும் பண்பு பிரகாஷ் ராஜிடம்.

அழகிய தீயே படம் வியாபார அளவில் பெரும் வெற்றிப்படம் அல்ல, அப்ப பிரகாஷ் ( என்கிட்ட) சொன்னது, நாம நல்ல படம் பார்கணும்ணா தியேட்டர்ல ப்ளாக்ல 20 ரூவா டிக்கெட்ட 200 ரூபாய்க்கு வாங்குறோம்ல, அது மாதிரி நான் ராதா மோகனோட நல்ல படத்த 2 கோடிக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்தேன் அப்டின்னாரு. மொழி தான் அவங்க கூட்டணியில வியாபாரரீதியிலும் வெறும் வெற்றியை குவித்தப்படம்.

அபியும் நானும் பாடால்களை குறித்து நீங்கள் எழுதிய பதிவில் தெரியும் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் முத்திரையைவிட இரு அழகிய இளவரசிகளின் தந்தை என்ற பாசத்தை நான் மிகவும் ரசித்தேன். அந்த பாசம் தான் இந்தப் பதிவை மிகவும் அழகாக்கியுள்ளது என்பது என் கருத்து.

Vijay said...

தகவலுக்கு நன்றி. இந்த வாரமே வாங்கிவிடுகிறேன்.

Mahesh said...

ப்ரகாஷ் ராஜோட பேச்சு கவிதை மாதிரி இருந்தா, இந்த பதிவும், பின்னூட்டத்துல இருக்கற அந்த "மேகம்" மேட்டரும் கூட கவிதையா இருக்கு. எங்கயோ போய்கிட்டிருக்கீங்க... சபாஷ் !!

Jaisakthivel said...

இறுவட்டின் வெளித்தோற்றம், பிரகாஸ் ராஜ் வரிகள் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, பாடல்களும் நன்றாக இருக்க வேண்டும்.. ஒரு பாடல் மட்டுமே தேருகிறது...மொழி போல் எதிர்பார்க வேண்டாம்... சக்தி