Friday, August 8, 2008

அவியல் – 08.08.08


ஒரு வாரமாக மீராவும்(10 வயது - ஆறாவது படிக்கிறாள்) மேகாவும் (7 வயது – மூன்றாவது படிக்கிறாள்) கம்ப்யூட்டரில் அமர்ந்து பெய்ண்ட்டில் என்னென்னமோ வரைந்து தள்ளுகிறார்கள். (ஒரு சில பிரமிப்பாகவும் இருக்கிறது!) `இதை உங்க ப்ளாக்ல போடுங்க' என்று கட்டளை வேறு..

இது மேகா வரைந்தது.




இது மீரா..





----------------

நண்பர் புதுகை.எம்.என்.அப்துல்லாவிற்கு விபத்து என்றறிந்து துடித்துப் போனேன்! ஆனால் ஒரு மெயில் அனுப்பியோ, அவரது பின்னூட்டத்தில் போய் விசாரிக்கவோ இல்லை! இது குறித்து அவரே ஒரு பதிவும் போட்டு “ஏன் பரிசல் என்னை மறந்துட்டீங்க?” என்று கேட்டேவிட்டார். அதற்கு விளக்கமாக ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ, அதை மட்டுறுத்திவிட்டார்!


இதோ அந்தப் பின்னூட்டம்:


அன்புள்ள அப்துல்லா..


மன்னியுங்கள்.


தமிழ் பிரியனின் பதிவில் படித்து `என்னாச்சு’ என்று பதறியது உண்மை! ஒரு மெய்ல் போட்டு கேக்கலாம் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்! அதையும் செய்யவில்லை! இந்த மாதிரி விஷயங்களில் என்னைவிடக் கேவலமான ஒருத்தரை நீங்கள் பார்க்கவே முடியாது! கிண்டலாகச் சொல்லவில்லை. நிஜம்!


சமீபத்தில் என் நண்பர் கனலிக்கு குழந்தை பிறந்ததை குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அவர் முதன் முதலில் அழைத்துச் சொன்னது என்னிடம்தான். பிறகு நான் சில நணப்ர்களுக்கு அழைத்துச் சொன்னபோது அவர்கள் கேட்ட ‘சுகப்பிரசவமா?, குழந்தை என்ன எடை? அம்மா நலமா?’ போன்ற கேள்விகளுக்கு பெப்பே என்று முழித்தேன். `என்னடா, இதையெல்லாம் கேக்கணும்-ங்கற அடிப்படை கூடத் தெரியலயேடா உனக்கு என்று திட்டித் தீர்த்தார்கள்! அவ்வளவுதான் நான். என்னைப் பற்றி எந்த உயர்வான அபிப்பிராயங்களும் வேண்டாம்!


நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு... என்ன சொல்ல? `ச்சே, இப்படிப் பண்ணீட்டேனே, இனி அவன் முகத்துல எப்படி முழிக்கறது’ என்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்!



இதற்கு வேறு எந்தக் காரணமும் சொல்லி என்னை இன்னும் கேவலப்படுத்திக் கொள்ள விரும்பாததால், இந்த உண்மைகளைச் சொல்ல வேண்டியதாயிற்று. அதுதான் நான் உங்கள் நட்பிற்குக் கொடுக்கும் மரியாதையாக இருக்கும்!


கடைசியாக, நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குறிப்பிடவென்றே வைத்திருக்கும் ரமேஷ் வைத்யா-வின் ஒரு கவிதை..


சந்தோஷத்தை முகம்முழுக்கப்
பரத்திக் கொண்டு
கண்களில் ஒளிமின்ன-
முகமன் கூறாதீர் எனக்கு.


தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உற்சாகமாய் ஆர்ப்பரிக்காதீர்-
வரவேற்கும் விதமாய்.


தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
`எத்தனை காலமாச்சு பார்த்து’
என்று ஏங்காதீர்.


இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை


என்றும் உங்கள் நட்பை நாடும்...
-கிருஷ்ணா


அதற்குப் பிறகு, இதை ஏன் வெளியிடவில்லை என்று தொலைபேசியில் அழைத்துக் கடிந்து கொண்டபோது, அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்டாக இருந்தது.

“நீங்க உங்களைப் பத்தி எழுதியிருந்ததைப் படிச்சதும்தான் தெரிஞ்சது, நானும் அப்படித்தான்னு! என்னைப் பத்தி நானே எழுதினமாதிரி இருந்தது. அதான் போடல. நீங்களாவது உங்க நண்பரோட குழந்தையைப் பத்தி கேக்கலன்னு எழுதியிருக்கீங்க. நான் எனக்கு குழைந்தை பிறந்தப்பவே இதையெல்லாம் கேக்கல. அப்படீன்னா பாத்துக்கோங்க!” என்றார்.


அட! இவரு நம்மாளு என்று தோன்ற, பல முறை அவர் என் மொக்கையைத் தாங்கமுடியாமல் ஃபோனை ஆஃப் செய்தாலும், விடாமல் மிகவும் கம்மியாக ஒன்றரை மணிநேரம் பேசினேன்!

-------------------------

நேற்று ஜெயா டி.வி.யில் ஹாசினி பேசும் படத்தில் ‘குசேலன்’. பி.வாசுவைப் பார்த்து சுகாசினி சொன்ன ஒரு பாராட்டைக் கேட்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பாதியிலேயே எழுந்துவிட்டேன்.


“இதுவரைக்கும் நீங்க டைரக்ட் பண்ணினதுலயே ‘தி பெஸ்ட்’ இதுதான்” ன்னு சொல்லீட்டாங்க. கொடுமைடா சாமி!


எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!


-------------------------------

இரண்டு நாள் முன் இரவு சாப்பிடும்போது `எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் உமா. பிறகுதான் தெரிந்தது, இரவு சமையல் நேற்று முழுவதும் OVEN-ல் செய்தாராம்! எல்லாம் OVEN செயல்!
---------------------------------

நேற்று புத்தகக் கடைக்கு முன் வண்டியை நிறுத்தி, ”இரு `கடன்’ வாங்கீட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுப் போய் வி-கடன் வாங்கினேன். விகடனில் வரும் இணைப்பில், எப்படித்தான் இப்போதைய நிலவரத்துக்குத் தகுந்த மாதிரியேயான பழைய செய்திகளை எடுத்துப் போடுகிறார்கள் என்று பிரமிப்பாய் இருக்கிறது. போன வாரம் 12.05.1985ல் வெளியான மின்வெட்டு பற்றிய தலையங்கமும், இந்த வாரம் 11.1.1997ல் வெளியான வெடிகுண்டு பீதி பற்றிய தலையங்கமும் சூப்பர். அதுவும், இந்தவாரத் தலையங்கத்தில் மதன் கார்ட்டூன் கலக்கலாக இருந்தது.

விகடனின் வடிவம் பிடிக்கவில்லை என்றாலும், நம் மகள் மார்டன் ட்ரெஸ் போட்டால் பிடிக்காவிட்டாலும், அவ சுதந்திரம், சரி, விடு என்று ரசிக்கறோமில்லையா அப்படித்தான் ஆகிவிட்டது!

---------------------------------

நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்! அசின், த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா என்று சொல்லிப்பாருங்கள். உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...


சரி.. யாராவது அடிக்கவருமுன் ஓடிவிடுகிறேன்.....

56 comments:

சரவணகுமரன் said...

படங்கள் சூப்பரா இருக்கு... நல்லா இருக்குன்னு சொன்னதா அவர்களிடம் சொல்லி விடவும்... :-)

//சுகாசினி சொன்ன ஒரு பாராட்டைக் கேட்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பாதியிலேயே எழுந்துவிட்டேன்.//

இதுக்காக நீங்க ஏன் உங்க சாப்பாட்டை பாதியில் விட்டுடீங்க?

விஜய் ஆனந்த் said...

:-)))...

தமிழன்-கறுப்பி... said...

நல்லா இருக்கு படங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

அப்துல்லாவுக்கு விபத்தா..!

நேற்று நான் நெட்பக்கம் வரவே இல்ல அதுக்குள்ள இவ்வளவு விசயமா...?

தமிழன்-கறுப்பி... said...

ஆனா பரிசல் அண்ணே நானும் உங்க ஆளுதான்...

இந்த கவிதை எனக்கும் தேவைப்பபடலாம்...

விஜய் ஆனந்த் said...

உங்க பொண்ணுங்க ரொம்ப திங்க்க்கெல்லாம் பண்ணுவாங்க போல!!! நம்பவே முடியல!!!

ச்ச்சும்மா லுலுலுலூவா...cute-ன்னு சொல்லுங்க....

தமிழன்-கறுப்பி... said...

சமீபத்துல எனக்கும் நிகழ்ந்தது, கலைஞர் ரிவில குருவி படம் பற்றி ஒரு கருத்து சொன்னாங்க பாருங்க கையில வச்சிருந்த றிமோட்டை சுவத்துல விட்டெறிஞ்சுட்டேன்:) அப்புறம் என்ன செய்ய உடைஞ்ச றிமோட்டை றூம்மேட் ஒரு மாதிரி சரி செய்திருக்கான்...

தமிழன்-கறுப்பி... said...

பதிவைப் போட்டுட்டு...

தமிழன்-கறுப்பி... said...

எங்க போயிட்டிங்க பரிசல்காரன்...

விஜய் ஆனந்த் said...

// சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் பாதியிலேயே எழுந்துவிட்டேன். //

இந்த தண்டனை உங்களுக்கு தேவதான்....பின்ன??? எவ்ளோ தெகிரியம் இருந்தா இவ்ளோ ஆனதுக்கப்புறமும் பீவாசுவ டிவில பாப்பீங்க????

தமிழன்-கறுப்பி... said...

///நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது//

யாருக்கு உங்களுக்கா...

விஜய் ஆனந்த் said...

நமீதா மேட்டரு ஜூப்பரு!!!!

தமிழன்-கறுப்பி... said...

///நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்///

நமீதாவைப்பற்றி ஆராய்ச்சில்லாம் பண்றிங்கோ பெரிய ஆளுதான் நீங்க...

தமிழன்-கறுப்பி... said...

///நமீதா மேட்டரு ஜூப்பரு!!!!///

மேட்டரு சூப்பராத்தான்யா இருக்கும்...

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே நீங்க சும்ம, கேமாரவுல ஏற்கனவே இருக்கதத்தான் புகைப்படமா எடுக்குறீங்க, புள்ளைங்க அருமையா வரையுறாங்க. என் வாழ்த்துக்களை சொல்லிருங்க.

Thamiz Priyan said...

பரிசலாரே! நமீதா மேட்டர் தான் சூப்பரா இருந்தது..... :)

தமிழன்-கறுப்பி... said...

\\\நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது\\\

எனக்கு நமீதாவை பிடிப்பதில்லை என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்...

ஜோசப் பால்ராஜ் said...

அந்த கவிதை மிக அருமை.
நீங்க மட்டும் இல்லை, நிறைய பேரு அப்டித்தான், நான் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விசயத்துல நிறைய மறந்துட்டு அடிவாங்கிருக்கேன்.

எல்லார் பிறந்த நாளையும் சரியா நினைவு வைச்சிகிட்டு வாழ்த்துற நான், ஒரு தடவை என் நெருங்கிய நண்பண், அதுவும் அவன் பிறந்தநாள் அன்னைக்கு காலையில இருந்து என் கூடவே இருக்கான், மறந்துட்டேன், ராத்திரி நினைவு வந்து வாழ்த்து சொல்லிட்டு, ரெண்டு அடி வாங்குனேன்.

அப்துல்லா அண்ணே நல்லவரு, அடிக்காம விட்டுட்டாரு...

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\\
பரிசலாரே! நமீதா மேட்டர் தான் சூப்பரா இருந்தது..... :)
\\\

வாங்க தல...
நமீதான்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு எங்களுக்கு தெரியுமுங்க..:)

Syam said...

//எப்படித்தான் இப்போதைய நிலவரத்துக்குத் தகுந்த மாதிரியேயான பழைய செய்திகளை எடுத்துப் போடுகிறார்கள் என்று பிரமிப்பாய் இருக்கிறது. போன வாரம் 12.05.1985ல் வெளியான மின்வெட்டு பற்றிய தலையங்கமும்//

அத படிக்கும் பொது நானும் உங்கள மாதிரியே தான் நினைச்சேன் இன்னும் ஒரு இருபத்து வருடம் கழித்தும் இந்த மாதிரிதான் நிலைமை இருக்கும் போல...

Syam said...

//உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதுக்கு தான் உங்கள மாதிரி நாலு அறிவாளிங்க வேணும்கறது :-)

Anonymous said...

நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்! அசின், த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா என்று சொல்லிப்பாருங்கள். உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...

இது தான் டாப் மேட்டர் மாம்ஸ்

Athisha said...

குட்டீஸ் வரைஞ்ச படங்கள்ல்லாம்

அற்புதமா இருக்கு

என் வாழ்த்துக்களை சொல்லிருங்கோ

பாபு said...

போன வாரம் விகடன் பார்த்தீர்களா?
பெட்ரோல் செலவை எப்படி மிச்சம் பிடிப்பது என்று 35 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையும, "இப்போ technology வளர்த்திருக்கு ஆனால் கதை அம்சம் உள்ள படங்கள் வருவதில்லை என்று M.R.ராதா 1964 இல் கொடுத்த பேட்டியும் இருந்தது.1964 க்கு மேல் திரைதுறைக்கு வந்தவர்கள் இப்போது உள்ளவர்களை பற்றி இதே மாதிரித்தான் pesuvaargal
இது ஒரு வியாதி, பழைய காலம் தான் எப்பவும் best என்ற பேச்சுக்களை நாம் காலம் காலமாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்

கிரி said...

தற்போதைய காலத்து குழந்தைகளின் ஆர்வத்துக்கு அளவே இல்லை. தெரிகிறதோ இல்லையோ ஏதாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

நமீதா கமெண்ட் சூப்பர் ;-)

Athisha said...

அகில ஓலக நமீதா நற்பணி மன்ற தலைவர் பரிசல்காரன் வாழ்க வாழ்க

VIKNESHWARAN ADAKKALAM said...

இருந்தாலும் ஸ்ரேயாவ உங்க லிஸ்டில் சேர்த்திருக்கக் கூடாது... ஸ்ரேயா என சொல்லி பாருங்கள்... ஸ்ஸ் எனும் ஒரு மந்திர ஒலி கேட்கும்...

கயல்விழி said...

உங்க குழந்தைகள் வரைந்த டிசைன்ஸ் அழகா இருக்கு :)

லதானந்த் said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

ஆறு காய்கறிகளைப் போட்டு அவியல் செய்த நீங்கள் கூடவே இன்னும் இரண்டு காய் வெட்டிப் போட்டிருந்தால் இன்றைய தினத்துக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். முதல் காய் ரொம்ப ருசி. சொல்லுங்கள் குழந்தைகளிடம்.

லதானந்த் said...

குழந்தைகளின் ஓவியங்கள் நல்லா இருக்கு!
பாராட்டுக்கள்! நீங்கள் நன்கு ஊக்குவிக்கவும்!

லதானந்த் னு சொல்லிப் பாருங்க. உதட்டையும் தாண்டி மேலண்ணம் வரை நாக்குப் படும்னு ஆசிரமத்திலே லேசாக் கிசுகிசு உலவுது.

புதுகை.அப்துல்லா said...

மொக்கையைத் தாங்கமுடியாமல் ஃபோனை ஆஃப் செய்தாலும், விடாமல் மிகவும் கம்மியாக ஒன்றரை மணிநேரம் பேசினேன்//

யோவ்! நம்புய்யா! சத்தியமா நான் வேணும்னே கட் பண்ணல. உண்மையிலேயே சிக்னல் பிரச்சனை.

புதுகை.அப்துல்லா said...

தற்போதைய காலத்து குழந்தைகளின் ஆர்வத்துக்கு அளவே இல்லை. தெரிகிறதோ இல்லையோ ஏதாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.//

ஆமாம் கிரி. உண்மைதான்.நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்பையே உங்கள வாட்ச் பண்ணுனேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குழந்தைகளின் ஓவியங்கள் அழகா இருக்கிறது.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் ஒட்டி வைக்கலாம்.. மாடர்ன் ஆர்ட்டுங்க..

ராமலக்ஷ்மி என்னமா கவனிக்கிறாங்க.. அதானே எட்டுக்காய் போட்டிருக்கலாம்ல.. :)

வெண்பூ said...

குழந்தைகளின் மாடர்ன் ஆர்ட் அருமை...

//இதுவரைக்கும் நீங்க டைரக்ட் பண்ணினதுலயே ‘தி பெஸ்ட்’ இதுதான்//

வேற வழியே இல்லை.. சினிமாவை சேர்ந்த ஒருத்தரே தன்னோட வேலை செய்த நண்பர்களின் படைப்புகளை விமர்சித்தால் எப்படி இருக்கும்? உதாரணத்துக்கு உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும் நாங்க சூப்பர், அற்புதம், ஆஹான்னு பின்னூட்டம் போடுறதில்லையா??

//`எல்லாம் அவன் செயல்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் உமா.//

சரி விடுங்க.. சமையல் பண்ணின உங்களை பாராட்டிட்டே இருந்திருப்பாங்க..

முரளிகண்ணன் said...

\\எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்\\

பரிசல், நடிகன் படத்த மறந்துட்டீங்களே என்னை பொருத்தவரை அதுதான் பெஸ்ட்

பரிசல்காரன் said...

@ சரவணகுமரன்

//இதுக்காக நீங்க ஏன் உங்க சாப்பாட்டை பாதியில் விட்டுடீங்க?//

சாப்பாட்டை யாரு விட்டா? மறுபடி உக்கார்ந்து சாப்பிட்டேன்!

@ விஜய் ஆனந்த்

//நமீதா மேட்டரு ஜூப்பரு!!!!//

ஹி..ஹி..

@ தமிழன்

//றிமோட்டை சுவத்துல விட்டெறிஞ்சுட்டேன்:) அப்புறம் என்ன செய்ய உடைஞ்ச றிமோட்டை றூம்மேட் ஒரு மாதிரி சரி செய்திருக்கான்//

என்ன் இவ்ளோ கடுமையா பேசறீங்க? `றி’மோட்டு, `றூ’ம்மேட்டுன்னு..

/////நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது//

யாருக்கு உங்களுக்கா...//

ஆமா! அதுலென்ன சந்தேகம்! அதிஷா பொறுப்பை வேற என்கிட்ட கைமாத்தி விட்டிருக்காரு.. கவனிக்கலியா நீங்க?

பரிசல்காரன் said...

@ ஜோசப் பால்ராஜ்

கொஞ்சம் க்ரியேட்டிவிட்டி இருக்குன்னு நெனைக்கறேன். வளர்த்துவிடணும்!

@ தமிழ் பிரியன்

நமீதாவ பிடிக்கலியா? சரிதான் (எனக்கு ஒரு மெய்ல் அனுப்புங்களேன்.. பேசணும்.. நமீதா விஷயமா இல்ல..)

@ syam

/////உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதுக்கு தான் உங்கள மாதிரி நாலு அறிவாளிங்க வேணும்கறது :/

இது நான் சொல்லலீங்க... யாரோ ஜீனியஸ் சொல்லி, நான் கேள்விப்பட்டது!

பரிசல்காரன் said...

@ செந்தழல் ரவி

தலைவா.. முதல் வருகைக்கு நன்றி! திரும்பத் திரும்ப படித்தேன்.. இது நீங்கதானே என்று! நன்றி!!!

//நமீதாவை ஏன் ரொம்பப் பிடிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள்! அசின், த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா என்று சொல்லிப்பாருங்கள். உதடு ஒட்டாது. நமீதா என்று சொல்லிப் பாருங்கள். ஒட்டுதா? அதான்...

இது தான் டாப் மேட்டர் மாம்ஸ்//

நாங்கதான் ஏதோ பொழப்பத்து மொக்கையா இந்தமாதிரி சொல்றோம்னா... நீங்களுமா தலைவா?

ஆனா, `பாட்டம்'ல எழுதினாலும், நமீதா டாப் மேட்டர் ஆயிடுச்சு பாருங்க!

பரிசல்காரன் said...

@ அதிஷா

//என் வாழ்த்துக்களை சொல்லிருங்கோ//

சொல்லீட்டாப் போச்சு!

//அகில ஓலக நமீதா நற்பணி மன்ற தலைவர் பரிசல்காரன் வாழ்க வாழ்க//

ஏன் பொறுப்பை என்கிட்ட ஒப்படைக்கறீங்க? (ஏன் `ஓ’ போட்டீங்க?)

@ babu

நீங்கள் எழுதிய அத்தனையையும் நான் நினைத்தேன்! பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

@ கிரி

மாளவிகா மன்றத் தலைவரின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி!

@ விக்கி

அடடே! ஸ்ரேயா மன்றத்தலைவரும் வந்துட்டாரே! (நீங்க ப்ளாக் பூரா ஸ்ரேயாவாப் போட்டுத்தாக்கும்போதே நெனைச்சேன்!)

@ கயல்விழி

நன்றிகள் கயல்..

@ ராமலட்சுமி

க்கா.. ரொம்ப நாளாச்சு?

//இன்னும் இரண்டு காய் வெட்டிப் போட்டிருந்தால் இன்றைய தினத்துக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்//

அட! இத யோசிக்கல பாருங்க நான்!!

@ லதானந்த்

//குழந்தைகளின் ஓவியங்கள் நல்லா இருக்கு!
பாராட்டுக்கள்! நீங்கள் நன்கு ஊக்குவிக்கவும்!//

செய்கிறேன் அங்கிள்!

ஆசிரமத்தில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்!

@ புதுகை அப்துல்லா

//யோவ்! நம்புய்யா! சத்தியமா நான் வேணும்னே கட் பண்ணல. உண்மையிலேயே சிக்னல் பிரச்சனை//

ம்க்கும்! சொல்லிக்கிட்டாலும்.

சிஸ்டத்துல இருந்தா டக்ன்னு ஆஃப் பண்ணிடலாம், ஃபோன் பண்ணி அறுத்தா கட் பண்ணினாலும் கூப்புடறான்னு சொல்லல நீங்க?

@ முத்தக்கா

//குழந்தைகளின் ஓவியங்கள் அழகா இருக்கிறது.. அதை பிரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் ஒட்டி வைக்கலாம்.. மாடர்ன் ஆர்ட்டுங்க..//

நன்றிக்கா!

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//உதாரணத்துக்கு உங்களோட ஒவ்வொரு பதிவுக்கும் நாங்க சூப்பர், அற்புதம், ஆஹான்னு பின்னூட்டம் போடுறதில்லையா?//

நிஜமாவா பார்ட்னர்?

நிஜம்னா சொல்லீடுங்க. பதிவு போடறத நிறுத்தீடறேன்.

@ முரளி கண்ணன்

உண்மைதான் நண்பரே!

நடிகனும் பெஸ்ட்தான்.
மன்னனுக்கு ஈக்வலாக!!!

வெண்பூ said...

//நிஜமாவா பார்ட்னர்?

நிஜம்னா சொல்லீடுங்க. பதிவு போடறத நிறுத்தீடறேன்.//

அச்சச்சோ... இப்படியெல்லாம் வார்த்தை விடக்கூடாது.. நாங்க எல்லாம் "நிஜம்"னு சொல்லிட்டா என்னா பண்ணுவீங்க? சொல்ல மாட்டோம்னு வெச்சிகுங்க... இருந்தாலும்

பரிசல்காரன் said...

//
அச்சச்சோ... இப்படியெல்லாம் வார்த்தை விடக்கூடாது.. நாங்க எல்லாம் "நிஜம்"னு சொல்லிட்டா என்னா பண்ணுவீங்க?//

நிச்சயமா பதிவெழுதறத நிறுத்தீடுவேன்..

ஒரு அரை மணி நேரத்துக்கு!!

வால்பையன் said...

//எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!//

இந்த ஆணாதிக்கத்தை எதிர்கிறேன்

வால்பையன்

ஆயில்யன் said...

குழந்தைகளின் புகைப்படங்களும் அவர்களின் ஒவியங்களும் அருமை! ரெண்டு பேருமே ஒரே மாதிரி யோசிக்கிறாங்க போல...!

:)

// உங்க நண்பரோட குழந்தையைப் பத்தி கேக்கலன்னு எழுதியிருக்கீங்க. நான் எனக்கு குழைந்தை பிறந்தப்பவே இதையெல்லாம் கேக்கல. அப்படீன்னா பாத்துக்கோங்க!” என்றார்.
//

அது சரி அவுரு என்னையெல்லாம் விட ரொம்ப உசரத்துல இருந்துக்கிட்டு என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறார்ர?

ம்ம் இதுக்கு ஒரு கண்டன பதிவு போட்டாத்தான் சரியாயிருக்கும் :)))))

Anonymous said...

ரெண்டு ஓவியர்கள்ட்டயும் ஓவியம் பழகிக்கோங்க.

// இதை உங்க ப்ளாக்ல போடுங்க' என்று கட்டளை வேறு.. //

இளவரசிகள் இட்ட கட்டளையை நிறைவேற்றத் தான் வேண்டும்.

// நண்பர் புதுகை.எம்.என். அப்துல்லாவிற்கு விபத்து //

மனுசன் மத்ததெல்லாம் பேசுனாரே, இத சொல்லவேயில்லையேனு கோபத்துல படிச்சேன். கீழே உங்களோட தன்னிலை விளக்கத்த படிச்சுட்டுத் தான் என்னிலைக்கு வந்தேன்.

Anonymous said...

அண்ணா,
உங்களோட எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் படித்து ரசித்த பழைய மற்றும் புதிய புத்தகங்களைப் பற்றியும் நீங்கள் எழுதிட விரும்புகிறேன்.

எதிர் நோக்கும்,
சகி. பத்மநாபன்..

சென்ஷி said...

குழந்தைகள் வரைந்த ஓவியம் அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள் அவர்களுக்கு...

(மன்னிக்க நண்பா.. பணிச்சூழல் மற்றும் இணையத்தொந்தரவு இன்னமும் தொடர்கிறபடியால் அடிக்கடி பின்னூட்டத்தில் தொல்லை செய்ய இயலாமல் போகிறது. :( )

Anonymous said...

சுகாசினி கத பறையும் போள் மலையாளப்படம் பாத்திருக்க மாட்டாங்க போல, குழந்தைகள் படம் அருமை. அதை விட கோயிலுக்கு வெளியேயும் தெய்வம் உண்டு அருமை

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

//எனக்கு தெரிஞ்சு `மன்னன்’தான் பி.வாசுவோட பெஸ்டோ பெஸ்ட்!//

இந்த ஆணாதிக்கத்தை எதிர்கிறேன்

வால்பையன்//

இதுல என்ன பாஸ் ஆணாதிக்கத்தைக் கண்டீரு? (ஓ.. ஒரு வேளை அதைச் சொல்றீகளோ? அவ்வ்வ்வ்வ்)

பரிசல்காரன் said...

@ ஆயில்யன்

//அவுரு என்னையெல்லாம் விட ரொம்ப உசரத்துல இருந்துக்கிட்டு என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறார்ர? //

என்னையும் அப்படித்தான் கூப்ட்டாரு. திட்டிவிட்டுட்டேன். அப்புறம் அவரு சொன்ன விளக்கத்தைக் கேட்டுட்டு அமைதியாய்ட்டேன்!

பரிசல்காரன் said...

@ வெயிலான்

அடுத்த பதிவு என்னாச்சு?

@ பத்மநாபன்

//அண்ணா,
உங்களோட எல்லா பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் படித்து ரசித்த பழைய மற்றும் புதிய புத்தகங்களைப் பற்றியும் நீங்கள் எழுதிட விரும்புகிறேன்.//

ஐ! பத்து, நீயா... நல்லாயிருக்கியா? மகிழ்ச்சியாயிருக்கு உன் கமெண்டைப் பார்த்து..

உன் யோசனைக்கு நன்றி!
நான் படித்த புத்தகங்களைப் பத்தி அப்பப்ப எழுதறேன்..

பரிசல்காரன் said...

@ சென்ஷி

பரவாயில்லை நண்பரே.

அபாரமான உங்கள் நடை, கதைகளைப் படித்துவிட்டு இனி உங்களை மொக்கைப் பக்கம் கூப்பிடக்கூடாது என்றுதான் விட்டுவிட்டேன்!

@ சின்ன அம்மணி

//குழந்தைகள் படம் அருமை. அதை விட கோயிலுக்கு வெளியேயும் தெய்வம் உண்டு அருமை//

அதுக்கு நீங்கதான் மொத கமெண்டர்!

குறிப்பிட்டு சொன்னதுக்கு நன்றிங்க!

பாபு said...

photo மாறியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன்.எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்.அருமை.
உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு பார்த்து ரசிப்பதற்கு நிறைய ஆல்பம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

மீரா மேகா பெயிண்டிங் முயற்சி நன்றாக இருக்கிறது, எனது மகள் 3 ஆண்டுகளாக வரைந்ததையெல்லாம் நானும் சேமித்து வைத்திருக்கிறேன்.

பரிசல்காரன் said...

@ babu

உங்கள் உன்னிப்பான கவனத்திற்கு நன்றிகள். என்ன கைமாறு செய்யப் போகிறேன்???

@ கோவி.கண்ணன்

லேட்?