


இந்தப் படத்தில் இருப்பவர்களெல்லாம் யார்?
1) ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள்
2) குருவி படம் பார்த்துவிட்டு, டிக்கெட் காசைத் திருப்பிக் கேட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள்
3) நமீதாவைப் பார்க்க சென்னை சென்று, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருப்பவர்கள்
விடை கடைசி பாராவில்.
**********************************
நண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.
“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”
“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”
“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.
இதிலென்ன இருக்கு?
பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!
*********************
என் தோழி ஒருத்தி தனக்குப் பிறந்த மகளுக்காக ஒரு பெயர் வேண்டுமென்று ரொம்ப நாளாக செலக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு சீரியலில் வந்த (செல்வி?) கேரக்டர் ஒன்றின் மஹிமா என்ற பெயர் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. அதையே தேர்வு செய்திருக்கிறார்கள். பெயர் வைப்பதற்கு சில நாட்களுக்கு முன், அந்த சீரியலில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.
****************************************
நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”
‘கொஞ்சம்’ பேசணுமா? அப்ப அரை மணிநேரம்கறது ‘கொஞ்சம்’கூட அல்லவா உங்களுக்கு?’ என்று நினைத்துக் கொள்வேன்!
*****************************
சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வேந்திரன் ஒரு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார்.
I'm happy to inform that my bike is crossing 10000 kilometers today. I take this opportunity to convey my sincere thanks to Honda company, Ministry of Transport, Road contractors, Indian Oil Corporation, Hindustan Oil Corporation and Mechanic Murugesan.எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...
***************************
கீழே சில கவிதைகள். எழுதியது நானல்ல.. என் வலையில் போட்டுக் கொள்ள பிரபலம் ஒருவர் எழுதியது. யாரென்று கண்டுபிடியுங்களேன்...
ஏறுவரிசை - இறங்குவரிசைஅசோகர்போர்உயிர்பலிபோதனைபுத்தர்ஞானம்புத்தம் சரணம் கச்சாமியாழ்பாணம்சோதனைரச பாணம்மக்கள்ராஜபக்ஷேபுத்தம் ரத்தம் கச்சாமி..!----------------------
கருணைஎளியவர்களுக்கு அன்னதானம்செய்து கொண்டிருந்தேன்.வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!--------------------------
போதனைநான் வேறு உடல் வேறு.இரண்டும் ஒன்றல்ல.ஆனால் அடிபட்டால்எனக்குத்தான் வலிக்கிறது..!--------------------------
அதிகப்பிரசங்கம்இன்று மெளனமாய் இருப்பதுஎப்படி என வகுப்பு எடுத்தேன்.அதில் நான் பேசியது....................................!----------------------------
முரண் முக்திஇறவாநிலை பற்றிபிரசங்கம் செய்த யோகிஇதற்கு முன் ஒருமுறை கூடஇறந்ததில்லை.-----------------------
அவதார புருஷன்கல்கி அவதாரத்தைமக்கள் எதிர் நோக்கினார்கள்வந்ததோ வராகம்...!------------------------
வேதாந்த விவாதம் 2009அஹம் பிரம்மாஸ்மியைபிரித்து மெய்ந்தார்சங்கரானந்தா சரஸ்வதி.மாண்டூக்கிய உபநிஷத்தைமடக்கி பிடித்தார்மந்திராகிரி ஸ்வாமிகள்.நான் விடுவேனா என் பங்குக்குபிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.கடைசியில் அனைவரும்ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.----------------------------
ஐங்கரன்பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.அடுத்தவருடம் எனக்குசிவப்பு வர்ணம் பூசஊர்வலத்தில் சிலர் ரத்தம்சிந்துகிறார்கள்.என்னில் கரையாமல்என்னைகரைத்தென்ன பயன்?----------------------------
மேலே படங்களில் நீங்கள் கண்டதெல்லாம் நான் சொன்ன ஆப்ஷன்களில் ஏதுமில்லை. அவர்களால் ஆதவனையோ, குருவியையோ, நமீதாவையோ பார்க்க முடியாது. அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...
மேலதிக விபரங்களுக்கு
இந்த இணைப்பைப் படியுங்கள்.
(இந்தத் தகவலை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் குமார் சுப்ரமணியனுக்கு நன்றி!)
.