
ரொம்ப நாள் கழிச்சு பத்து...
மறதி விஷயத்துல நம்மளை அடிச்சுக்க யாரும் கிடையாது. நம்மளைன்னு சொன்னா உங்களையும் சேர்த்துதான். நாம வழக்கமா மறக்கற பல விஷயங்களை பட்டியல் போட்டா டாப்ல வர்ற பத்து மறதிகள்...
1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.
2) வீட்டுக்குப் போறப்ப வழில இருக்கற கடைல இறங்கி ஏதாவது பொருள் வாங்க வேண்டியிருக்கும். அந்தக் கடையைத் தாண்டிப் போனப்பறமோ, வீட்டு காலிங்பெல்லை அடிக்கறப்பவோதான் அது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.
3) விகடனோ, உயிர்மையோ, மணல்வீடோ படிச்சுட்டு இருப்போம். நல்ல கட்டுரையா இருக்கும். ‘இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம். அவ்ளோதான். அடுத்த இஷ்யூ வரும்போதுதான் ‘அட.. போன இஷ்யூல அதப் படிக்கலியே’ன்னு ஞாபகம் வரும். வீட்டைப் புரட்டிப் போட்டு, மனைவிகிட்ட திட்டு வாங்கி... ச்சே...
4) அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...
5) தெரிஞ்சவங்களோட பிறந்தநாள், திருமணநாள்னு குறிச்சு வெச்சிருப்போம். ‘அடுத்த வாரம் வருதா.. ம்ம்.. கூப்பிட்டு வாழ்த்தணும்’னு நெனைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த வாரம்தான் ஞாபகத்துக்கு வரும்.
6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கடன் வாங்கியிருப்போம். பட்ஜெட் போடும்போது அதுமட்டும் எப்படியோ....
7) ‘நாளைக்குக் குளிக்கறப்போ, காலை நல்லா தேய்ச்சுக் குளிக்கணும்’னு நெனைச்சுப்போம். ஆஃபீஸ்ல எப்பவாவது நம்ம காலை நாம பாக்கறப்பதான் அட மறந்துட்டோமேன்னு தோணும்.
8) ஏதாவது குறிப்புகளுக்காக ஆஃபீஸ்ல இணையத்துல உட்கார்ந்து தேடிப் பிடிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுட்டு, குறிப்பிட்ட மீட்டிங்குக்கு எல்லாத்தையும் வெச்சு கரெக்டா நோட்ஸ் எடுத்து வெச்சுட்டுப் போய் அசத்தணும்னு நெனைச்சுட்டே இருப்போம். கரெக்டா அந்த மீட்டிங்குக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்தப் பேப்பர்ஸெல்லாம் எங்க வெச்சோம்னு மறந்து போய்த் தேடிட்டே... இருப்போம்.. அதுக்குள்ள...
9) இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....
.