Friday, December 30, 2011

காலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் வந்தாள்.

“டாடா ஸ்கை ஷோ கேஸ்ல ரா-ஒன் போட்டிருக்காங்க. ஆர்டர் பண்ணீட்டு போங்க. நாங்க பார்க்கணும்”

தெரியாதவர்களுக்கு: டாடா ஸ்கை டிஷ் இணைப்பில், ஷோ கேஸ் என்று புதிய படங்கள் காண்பிப்பார்கள். ஒரு படம் 50ரூ, 75 ரூ என்று நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். நாம் பதிவு செய்திருக்கும் அலைபேசியிலிருந்து, அந்த ஷோ கேஸ் திரையில் காண்பிக்கப்படும் குறியீட்டு எண்ணை, அவர்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால், அது சேர்ந்த அடுத்த நொடி, நம் தொலைக்காட்சித் திரையில் அந்தப் படம் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கும் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நமக்கு வசதிப்பட்ட நேரம் பார்த்துக் கொள்ளலாம். என் இணைப்பிற்கு வருடத்திற்கு 12 படங்கள் இலவசம். பெரும்பாலும் இந்திப் படங்கள்தான்.

நான் டாடா ஸ்கையில் அந்த சேனலை ஆன் செய்து, அதில் குறிப்பிட்டிருந்த குறியீட்டு எண்ணை, டாடா ஸ்கைக்கு எஸ்ஸெம்மெஸினேன். அப்படி அனுப்பும்போதே, கொஞ்சம் பெருமையாக “பாரு.. இந்த மெசேஜ் டெலிவரி ஆச்சுங்கறதுக்கு அடையாளமா என் மொபைல்ல டொய்ங் சவுண்ட் வர்றதுக்கு முந்தி, சேனல்ல படம் வரும்பாரு” என்றேன்.

ம்ஹும். என்னமோ வரவில்லை.

வழக்கமாக அடுத்த நொடியே வரும்.. இதென்ன இப்படின்னு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு காத்திருந்தேன். அலுவலகத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது.

என் மகள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். ‘என்னமோ சொன்னீங்க?’ என்றது அவள் கண்.

அவ்வளவுதான். நாமதான் ஏற்கனவே இந்த கஸ்டமர் கேர் ஆளுகன்னாலே ஆய் ஊய்னு திட்டுவோமே… இதென்ன இப்படிப் பண்றாங்க’ன்னு எனக்கு கோவம் வேற வந்துச்சு.

அடிச்சேன் டாடா ஸ்கை கஸ்டமர் கேர்-க்கு.

“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.

“வாட் குட்மார்னிங்? ஐ’ம் டோட்டலி டிஸ் அப்பாய்ண்ட் வித் யுவர் சர்வீஸ்” – நான். கோவமா இருக்கேனாம்.

“ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் சார்” அப்படி ஒரு குழைவு குரல்ல. பாவமாத்தான் இருந்துச்சு. என்னன்னே சொல்லாம இப்படி எகிறுனா என்னதான் பண்ணுவாங்க பாவம்.. அதுக்காக சும்மா விடமுடியுமா? கஸ்டமர்!!!

சொன்னேன்: “ஷோ கேஸ்ல ஒரு படம் ஆர்டர் பண்ணினேன். வழக்கமா எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்ச அடுத்த நொடி சேனல்ல படம் வந்துடும். இப்ப ஆர்டர் பண்ணி கால் மணி நேரமாச்சு. இதுவரைக்கும் வர்ல”

மறுபடியும் அந்தப் பொண்ணு மன்னிக்கச் சொன்னாங்க. சில விபரங்கள் வேணும்னாங்க. “யெஸ் டெல் மீ”ன்னேன் கடுமையான குரல்ல. கோவமா இருக்கோம்ல!

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டு கிருஷ்ணகுமார்?”

“ஆமா”

“யுவர் டாடா ஸ்கை ஐடி ஈஸ் 104142……….?”

“ஆமா”

“யு ஆர் காலிங் ஃப்ரம் யுவர் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர். ஆம் ஐ ரைட்?”
‘ஆமாம்மா ஆமாம்’னு கத்தினேன். கீழ வந்து பார்த்த ஹவுஸ் ஓவர் “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறீங்க’ன்னு கண்லயே கேட்டுட்டுப் போனார்.

அந்தப் பொண்ணு, இந்த விபரமெல்லாம் சொன்னதுக்கு நன்றி சொன்னாங்க. ‘ம்ம்.. சரி சரி.. எனக்கு என்ன நீதி வழங்கப் போறீங்க?’ங்கற பாணில ‘இட்ஸ் ஓகே..”ன்னு முறுக்கீட்டு “மொதல்ல சாதாரண டாடா ஸ்கை வெச்சிருந்தப்ப உடனே படம் வந்துடும். இப்ப டாடா ஸ்கை ப்ளஸ். ஹும்! ஆக்சுவலி இது டாடா ஸ்கை மைனஸ்’ன்னுதான் சொல்லணும்’ன்னேன்.

கலாய்ச்சுட்டேனாம். சொன்னது அந்தப் பொண்ணுக்கு சுருக்னிருக்கும். மறுபடியும் இடைஞ்சலுக்கு வருத்தப்பட்டாங்க. .

சிஸ்டம்ல டீடெய்ல்ஸ் பார்த்திட்டிருந்தாங்கபோல. பார்த்துட்டு கேட்டுச்சு.

“நீங்க ரா-ஒன் படம் ஆர்டர் பண்ணீருக்கீங்க. கரெக்ட்?”

“ஆமாம்”

“உங்க ரெஜிஸ்டர்ட் மொபைல்லேர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்சிருக்கீங்க.. கரெக்ட்?”

‘உஸ்ஸ்…. முடியலடா’ன்னு நினைச்சுட்டே ஆமாம்னேன்.

“டிவி ஆன்ல இருக்கா சார்?”

“ஆமாம். ஆன்லதான் இருக்கு..”

“ஷோ டைம் என்ன போட்டிருக்கு சார் அந்த ஷோ கேஸ் சேனல்ல”

“எத்தனை கேள்விதான் கேட்பீங்க? இண்டர்வ்யூ பண்றீங்களா? இட்ஸ் டூ மச்’ன்னு கடுமையா சொன்னேன். நாம யாரு! கஸ்டமர். இப்படித்தான் நம்ம உரிமைக்காக போராடணும்.

“சாரி சார். கேன் யூ டெல் மி த ஷோ டைம் விச் ஈஸ் ஷோயிங் இன் யுவர் சேனல்?”ன்னாங்க.

மறுபடி கோவமா சொன்னேன்” “9 மணின்னு போட்டிருக்கு”

“நாவ் வாட் ஈஸ் த டைம்சார்?”

“எட்டேகாலாச்சு. அதுக்கென்ன?”ன்னேன்.

“தட்ஸிட் சார். அவர் ஷோ ஸ்டார்ட்ஸ் அட் 9 ஏ.எம் சார். இன்னும் முக்கால் மணி நேரத்துல படம் வரும் சார்”னு சொல்லீட்டே ‘எனிதிங் கேன் ஐ ஹெல்ப் யூ சார்”ன்னுச்சு.




எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வழிஞ்சு ஸாரி சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணீட்டேன்.

அங்க, அந்த கஸ்டமர் கேர் பொண்ணு பக்கத்து சீட்ல இருக்கற ஃப்ரெண்டுகிட்ட சொல்லீட்டிருப்பாங்க:

‘அவ்ளோ தெளிவா சேனல்ல ஷோ ஸ்டார்ட் டைம் 9 மணின்னு போட்டிருக்கோம். அப்றமும் கூப்ட்டு கேட்கறான் கேனைப்பய. இந்த லட்சணத்துல ப்ளஸ், மைனஸுன்னு கலாய்க்க வேற செஞ்சான். இவனுகளையெல்லாம்….”

புறப்படறப்ப பைக் ரிவர்வ்யூ மிர்ரர்ல என்னைப் பார்த்து நானே கேட்டுகிட்டேன்:

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’


.


24 comments:

கடைக்குட்டி said...

parisal touch :)

கடைக்குட்டி said...

neenga Crazy mohan maadiri varuvenga sir pirkaalathula (soli vaipom :) )

குறையொன்றுமில்லை. said...

சூப்பர் பல்புதான் வாங்கினீங்க.

classic k7 said...

supper bulb

chinnapiyan said...

ஹா ஹா :)) யானைக்கும் அடி சறுக்கும்தானே.
என்சாய் கிருஷ்ணகுமார்.எனக்கும் தான் சொல்லிக்கொண்டேன். இந்த கிருஷ்ணா குமாரனு பேர் வச்சிருந்தாலே இப்படித்தான் நிகழுமோ?

selventhiran said...

ஏன்யா... இப்படி மொக்க போடுற...

Thamira said...

செம்மை..

மோ.சி. பாலன் said...

அடடா வாழைப் பழ ஜோக்கு மாதிரி இருக்கே..!

"வாட் இஸ் தி டைம் சார்?"

kk : எட்டே காலு.. i mean 9.45 EST.. US டைம் செட் பண்ணி வச்சிருக்கேன்.. அதான் கொஞ்சம் கன்பியுஷன் சாரி.. !!

Vadivel M said...

காலைலயே கவுந்திடுச்சே!, பரிசல்! ;-)

Madhavan Srinivasagopalan said...

நீங்கள் பல்ப் வாங்கியதால் பதிவுலகத்திற்குத் தெரிந்த ரகசியங்கள்..

1. உங்கள் வீட்டில் டாடா ஸ்கை டிஷ் இருக்கிறது..
2. உங்கள் கஸ்டமர்(அடிக்கடி போன் பண்ணி அவங்கள் கஷ்டபத்துரீங்கலாமே கஸ்டமர்) எண் : 104142
3. நீங்கள் வாடகை வீட்டில் குடி இருக்கிறீர்கள்.
4. உங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள் (ர்)
5. அந்தப் பெண் 'ஷாருக்கான் ரசிகை !'

KSGOA said...

100 watts பல்பு தான்!சூப்பர்!சுறுசுறுப்பா
எழுத ஆரம்பிச்சிடீங்களே!

sanchana said...

நல்லா இருந்தது. என் கணவரும் உங்களைப் போல் தான் பல்ப் வாங்கி கிட்டே இருப்பார். we have so many brands like airtel, dishtv, icici, hdfc, lic etc.

a said...

//
“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.
//
எப்படி????

வெண்பூ said...

அவ்வ்வ்... ஒம்போது ம‌ணி ஷோவுக்கு 8 ம‌ணிக்கே ஃபோன் ப‌ண்ணி கேட்டு ப‌ல்பு வாங்குன‌துன்ற‌ ஒரு வ‌ரி செய்திய‌ தொண்ணூறு லைன்ல‌ எழுதியிருக்கான்யா இந்த‌ ஆளு... பேக் டூ மொக்கை ஃபார்ம் :)))

Thuvarakan said...

super super superb

Bala said...

மறுபடி எப்ப கம்ப்ளைன்ட் பண்ணப்போறீங்க Mr.பரிசல்?

Bala said...

மறுபடி எப்ப கம்ப்ளைன்ட் பண்ணப்போறீங்க Mr.பரிசல்?

இல்யாஸ்.மு said...

பல்பு பிரகாசம்..

நிவாஸ் said...

10000 volts

:-)

Unknown said...

இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா...!

சுரேகா.. said...

ஜூப்பரு!! :))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... பாவம் நீங்க. பொண்ணு பல்பு குடுக்கலையேன்னு சந்தோஷப்படுங்க.

Ba La said...

வானைத் தொடுமளவிற்கு காதல்.
எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

இராஜராஜேஸ்வரி said...

பரிசல் வாங்கிய பல்பு ......