சென்ற வருடம் போலவே பார்சலில் அவரவர் முகவரிக்கு அனுப்பலாம் என்று உத்தேசித்திருந்த போது, யுடான்ஸ் -லிருந்து கேபிள் சங்கர் அழைத்து ஒரு விழாவாக ஏற்பாடு செய்து அதில் பரிசளிக்கலாம் என்று சொன்னார்.
அதன்படி, வருகிற டிசம்பர் 18ம்தேதி (ஞாயிறு) மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் சிறுகதைப் போட்டி குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அழைப்பை விடுக்கும் நேரத்தில், நடுவர்களாகப் பங்காற்றிய ஸ்ரீதர் நாராயணன் - அனுஜன்யா - எம்.எம்.அப்துல்லா மூன்று பேருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இவர்கள் முடிவைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் முன்னிருந்து எடுத்துக் கொண்ட சிரத்தையான விஷயங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே எனக்கு ஒரு பாடமாக இருந்தன. முடிவைப் பொறுத்தவரை நானோ - ஆதியோ தலையிடவில்லை. ஆனால் ஒரு பார்வையாளர்களாக இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வியந்து கொண்டே இருந்தோம். மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றியை அவர்களுக்கு பார்சல் செய்து கொள்கிறேன்!
சவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா
நாள்: 18.12.2011
நேரம்: மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா)
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விழாவில் கலந்து கொண்டு ஊக்குவிக்க பதிவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஆதி: 97890 66498
கேபிள் சங்கர்:98403 32666
.
9 comments:
// மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா) //
செம காமெடி பண்றீங்க... நீங்க 4 மணின்னு போட்டா தான் அஞ்சரை மணிக்கு நம்மாளுங்க மெதுவா டீக்கடையில கூடுவாங்க...
Erode, Chennai meets on same day. unexpected date clash.
பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
vaazhthukal...
:)
தகவல் மற்றும் அழைப்பிற்கு மிக்க நன்றி.
விழா நன்றாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்..
என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. :-(
விழா இனிதே நடைபெற வாழ்த்துகள் :)
பரிசல் : வரும்போது எனக்கும் சேத்து ஊக்கு வாங்கிட்டு வாங்க....
Post a Comment