Tuesday, November 15, 2011

சவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்

பரிசல்+ஆதி, மற்றும் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கிய ‘சவால் சிறுகதைப்போட்டி –2011’க்கான முடிவுகள்.

அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே,

“இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்”

சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் நாங்கள் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டாக உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஓர் இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.

சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.

ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த ’யுடான்ஸ்’ திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

கீழே நடுவர்களின் மடல்..

-அன்புடன்

ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.

*

அன்பு நண்பர்களே,

பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

முதல் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சிலை ஆட்டம் -ஆர்விஎஸ்
http://www.rvsm.in/2011/10/2011.html


விண்டேஜ் -பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

இரண்டாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சட்டென நனைந்தது ரத்தம் -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html


கனவில் எழுதப்படும் கதை -நந்தாகுமாரன்
http://nundhaa.blogspot.com/2011/10/2011.html


மூன்றாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சவால் சிறுகதை -இளா
http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html


கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு -சி.பி.செந்தில்குமார்
http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html


--- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- --- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ----

றுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.

நகல் -கோமாளி செல்வா
http://koomaali.blogspot.com/2011/10/2011.html


போர்க்களத்தில் சாய்ந்தால் கூட -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011.html


கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் -சரவணவடிவேல்.வே
http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html


உதயசூரியன் -கார்த்திக் பாலா
http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html


அர்த்தமுள்ள குறியீடு -ஸ்ரீ மாதவன்
http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html


ரங்கு குரங்கு ஆன கதை -வெண்புரவி
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html


பீமனின் பராக்ரமம் -இராஜராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/2011/10/2011.html


குறிப்பறிதல் -நவநீதன்
http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html


மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும் -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011_31.html


இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -

அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்.எம்.அப்துல்லா.

*

போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.


.

38 comments:

பரிசல்காரன் said...

ஐயா.. ஆன்லைன்காரரே..

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

Madhavan Srinivasagopalan said...

முதல் 15 இடத்தில் எனது கதையும் வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.
முதலிடத்தை பெற்ற எனது நண்பர் ஆர்.வீ.எஸ். மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த சக பதிவர்களுக்கும், ஆறுதல் பரிசு பெரும் மற்ற எட்டு பேருக்கும் (நான் எப்படி என்னையே வாழ்த்துவது) வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

நான் முதன் முதலில், சொந்தமாக கதை எழுதியது 2010ம் வருட சவால் சிறுகதை போட்டிக்காக.
இரண்டாவதாக எழுதியது 2011ம் வருட சவால் சிறுகதை போட்டிக்காக.

இனியாவது மேலும் பல கதைகள் எழுதி(!) நல்ல கருத்து, பொழுது போக்கு அம்சமாக படைக்க முயற்சி செய்கிறேன். ஊக்கத்திற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

கடினமான போட்டியை நடத்தி... பொறுமையோட கதையை படித்து மதிப்பெண் தந்து சிறப்பித்த ஆசிரியர், மற்றும் பரிசல், ஆதி உங்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்

R. Gopi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

raji said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் :-))

ஆமினா said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட சகோக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இன்னும் இன்னும் அதிகமாக முயற்சி எடுத்து அடுத்த முறை வெற்றிகனி பறித்திட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


போட்டிகளை சிறப்பாக நடத்திய பரிசல்+ஆதி+யுடான்ஸ் மற்றும் நடுவர்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

ILA (a) இளா said...

போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பரிசல், தாமிரா ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள்!

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

பரிசல், தாமிரா, அப்துல்லா, அனுஜன்யா, ஸ்ரீதர் ஆகியோருக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

selventhiran said...

பரிசல், ஆதியை வைத்துக்கொண்டு ஒரு காரியத்தை கச்சிதமாக செய்து விட முடியாது என்பது ஆன்றோர் வாக்கு. இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்வை அவரது துணையோடு நடத்தி முடித்த நீர் உண்மையில் ஒரு செயல்வீரன்!

அடுத்த ஆண்டு இவ்வளவு சிக்கலாக போட்டியை வைக்கமாட்டீர்களென நம்புகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
vgk

சுசி said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்.

Asiya Omar said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

நம்பிக்கைபாண்டியன் said...

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

RVS said...
This comment has been removed by the author.
RVS said...
This comment has been removed by the author.
RVS said...

எப்போதுமே ப்ளாட் கொடுத்து எழுத வைப்பது கொஞ்சம் சிக்கலான ஒன்று தான். கற்பனைக் குதிரையை கடிவாளம் பூட்டி ஓட்டவேண்டும்.

என்னைப் பொருத்தவரையில் படம் கொடுத்து கதையை அதற்கு ஒட்டவைப்பது சென்ற ஆண்டு நடத்திய பல “கூடாது” விதிமுறைகளுக்கு சுலபம்தான்.

போனவருடம் போல மற்றுமொரு அருமையான போட்டி. :-)

எனது கதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி!

பரிசல்+ஆதி+அனுஜன்யா+எம்.எம்.அப்துல்லா+ஸ்ரீதர் நாராயணன் மற்றும் யுடான்ஸ் குழுமம் என அனைவருக்கும் ஒரு நன்றி!

(போன ரெண்டு முறையும் ஒவ்வொரு வார்த்தையை விட்டுவிட்டு அழிக்க வேண்டியதாயிற்று!)

RVS said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். :-)

Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாத்துக்கள்.

நீச்சல்காரன் said...

அமைப்பாளர்களுக்கும்,போட்டியாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்

பினாத்தல் சுரேஷ் said...

அமைத்தவர்கள், நடுவர்கள், வாழ்த்தியவர்கள், வாழ்த்தப்போகிறவர்கள் - அனைவருக்கும் நன்றி ஹை!

Astrologer sathishkumar Erode said...

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

RVS & ஸ்ரீ மாதவன் இருவரும் எங்க ஊர்காரர்கள். நம்ம தோஸ்த்கள். அவர்களுக்கும் பரிசு பெற்ற மற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டி நடத்திய உங்களுக்கும் ஆதிக்கும் வாழ்த்துகள்

இரசிகை said...

yellorukkum vaazhthukal.......:)

middleclassmadhavi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

KSGOA said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
போட்டி அமைப்பாளர்களுக்கும் நடுவர்களுக்கும் பாராட்டுகள்.

குடந்தை அன்புமணி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
(ஆசிரியர், பதிவர் தென்றல் - பதிவர்களுக்காக பதிவர்களால் வெளியிடப்படும் மாத இதழ்)

சக்தி கல்வி மையம் said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்.

Thamira said...

பின்னூட்டங்களைப் பெற..

செல்வா said...

போட்டியில் பங்குபெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

நடுவர்களுக்கும் , போட்டி அமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்!

ஜேகே said...

எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை.. இப்படி ஒரு போட்டி வைத்து, இத்தனை கதைகளை ஒருங்கிணைத்து, வாசித்து தரம் பிரித்து ஒரு முனுமுனுப்பு கூட இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறீர்கள். எனக்கெல்லாம் ஒரு திருவிழா போல இருந்தது.. இதற்கென தனி பதிவே போட்டாச்சு

http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_16.html

maithriim said...

Congratulations on a wonderful achievement to both the participants, winners and the organizers!மேலும் மேலும் சிறப்போடு வளர்ந்து இணையதள புலிட்சர் ப்ரைஸ் போல் பெருமையுடன் விளங்க வாழ்த்துகள்!
amas32

ஸ்ரீராம். said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இப்படியொரு போட்டியை நடத்தி, பொறுமையாய் அலசி பரிசு அறிவித்த நடுவர்களுக்கும் பாராட்டுகள்.

நந்தாகுமாரன் said...

என் கதையை பரிசுக்குரியதாகத் தேர்தெடுத்ததற்கு உங்களுக்கும் நடிவர் குழுவின் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அப்துல்லாவிற்கும் udanz மூலம் இதை திரட்டிய கேபிள் ஷங்கருக்கும் என் நன்றி.

ஏறக்குறைய ஆறு மாதங்களாக ப்ளாகில் எதுவும் எழுதாமல் இருந்த என்னை எழுதத் தூண்டியது போட்டியிலுள்ள சவாலின் சிக்கல் தான். I enjoyed playing this game.

Unknown said...

நல்ல விளையாட்டு..
அனுபவித்து ரசித்தேன்.
மீண்டும் எப்போ வரும் என்று ஆவல் அதிகரிக்கிறது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வடை போச்சே!!

இரசிகை said...

ithey pola kavithai pottiyum nadathalaame??