Tuesday, November 1, 2011

சவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!

'என்னப்பா.. எவ்ளோ சிக்கலான கான்செப்ட் இது? இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’

- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் ஆதிக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்தச் செய்தியைத்தான் தந்தன.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுபபை எங்களை விட மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (அந்த சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள். விபரங்கள் இங்கே).

எங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை.

இதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் கொள்ளவேண்டும். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவேண்டியதிருப்பதும், புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா? புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே!

இருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்..

78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன!

நடுவர்களும் ‘அட! சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா?’ என்று சந்தோஷப் பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.

ஆகவே நண்பர்களே... நடுவர்குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 அன்று வெளியாகும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

கதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருக்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

78 கதைகளின் தொகுப்பையும் ஆதியின் தளத்திலிருந்தும் வாசிக்கலாம்.

குறிப்பு: உங்களுடைய கதை விடுபட்டிருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். kbkk007@gmail.com & thaamiraa@gmail.com

மகிழ்ச்சியோடு வாழ்த்துகளும்.... நெகிழ்ச்சியோடு நன்றிகளும்!

.

10 comments:

மணிகண்டன் said...

The story that i have submitted is misssing from the links. It has also happenned last time. If you are not interested in collecting my stories, please say so. I will not send any stories then. Kindly redress the situation immediately. Thanks.

P.S - Please do not use my story for any purpose other than the evaluation. Anyways, i permit you, aadhi and udanz to give the link. That is not an issue.

Radhakrishnan said...

எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. முதலில் மந்தமாக இருந்த நிலையில், திடீரென சில நாட்களில் பலர் எழுதி இருந்தார்கள். கதை எழுதும் நாள் முடியும் வரை வாசிக்க வேண்டாம் என விட்டுவிட்டு தற்போது பல கதைகள் வாசித்ததில் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

வாக்குகளில் குளறுபடி ஏற்படுத்தலாம் என்பதை நான் கண்டு கொண்டேன். ;) ஆனால் அதை பரிசித்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. நன்றி பரிசல். கதை எழுத தொடங்கிய பின்னர் மளமளவென மீண்டும் தமிழில் எழுத தொடங்கிவிட்டேன். சரியான நேரம் கிடைத்ததும் ஒரு காரணம்.

Thamira said...

அன்புக்குரிய மணிகண்டன்,

கதைகளை மிகக்கவனமாக சேகரித்திருக்கிறோம். உங்கள் கதை விடுபட்டிருந்தால் தாராளமாக மெயிலுக்கு வரலாம். தாங்கள் எங்கள் முகவரிக்கு ஏற்கனவே அனுப்பிருந்தீர்களானால் அதை மீண்டும் ஃபார்வேர்ட் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

மணிகண்டன் said...

Thanks Aadhi. I have sent it now.

Thamira said...

I have sent//

மெயில் வரவில்லை மணிகண்டன். யுடான்ஸ் இணைப்பைச் சரிபாருங்கள். அனுப்பிய மின்னஞ்சல் முகவரிகளைச் சரிபாருங்கள். போட்டி குறித்த அத்தனை அறிவிப்புகளிலும் இந்த விபரங்கள் இருக்கின்றன.

மணிகண்டன் said...

Aadhi, I am checking now.

கார்க்கிபவா said...

மணிகண்டன், விளையாடுறர்ன்னு நினைக்கிறேன். உங்க கதைக்கான லிங்க் இங்க கொடுங்க சகா பார்ப்போம் :)

aalunga said...

பல மாதங்கள் முன்பு வலைப்பூவினைத் துவங்கியிருந்தாலும், எதை எழுதுவது என்கிற எண்ணத்திலேயே சில மாதங்கள் கழிந்து விட்டன..

பின்பு, (வீட்டில் இருந்தால்) வாரம் ஒரு பதிவு எழுதுவது என்று முடிவு செய்து எழுதலானேன்..

ஆனால், இந்த போட்டியைக் கண்டதும் தான் ஒரு நல்ல கதையைப் படைக்க வேண்டும் என்கிற ஒரு பொறி எழுந்தது..

"போட்டிகளில் வெற்றி பெறுவதை விட பங்கு பெறுவதே மிக முக்கியம்" அல்லவா?
எனவே, சிறிது நாட்கள் யோசித்து என் கதையை இட்டேன்..

போட்டியினை அறிவித்து என் கற்பனைத்திறனையும், எழுதும் ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தியமைக்கு பரிசல், ஆதி மற்றும் யுடான்ஸ் குழு ஆகியோருக்கு என் நன்றிகள்!!

நம்பிக்கைபாண்டியன் said...

பல கதைகளை படித்து விட்டேன் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக சிந்தித்து இருக்கிறார்கள்!

இவ்வளவு கதைகள் என்பது உங்கள் நல்ல முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

கதை எழுதர அளவுக்கு இன்னும் வளரலங்க. கதைகளை படிச்சுட்டு வரேன்