Wednesday, November 17, 2010

சவால் சிறுகதைப் போட்டி - முடிவுகள்

அன்புக்குரிய 'சவால் சிறுகதைப் போட்டி' பங்கேற்பாளர்களே,

இப்படியானதொரு போட்டியின் நடுவர்களாக இருக்க வாய்ப்பளித்து சுவாரசியமான அனுபவத்தைத் தந்தமைக்கு பரிசல்காரன் மற்றும் ஆதிமூலகிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் முதல் நன்றி. அனுபவம் நிறைய சிரமங்களையும் கொண்டிருந்தது என்பதே உண்மை. போட்டி குறித்த போதுமான தகவல்கள் நேற்றே இந்தத் தளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவிட்ட நிலையில் சில குறிப்புகளுடன் முடிவை இங்கே அறிவிக்கிறோம்.

பங்கு பெற்ற கதைகளில் நிறைய எழுத்துப்பிழைகள் காணப்பட்டன. இருக்கும் ஏராள விதிமுறைகளில் இன்னும் இறுக்கம் செய்வது தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் அவை பெரும்பாலும் பொருட்படுத்தப்படவில்லை. புதிய தளங்களை முயன்றவர்கள்/ நல்ல சிறுகதை அனுபவத்தை தந்தவர்கள் கொடுக்கப்பட்ட 'வரிகளை' வலிந்து திணித்திருப்பதாய் எங்களுக்குத் தோன்றியது. இங்கே கதையைப் பார்ப்பதா, விதிகளைப் பார்ப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.

கொஞ்சம் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் - க‌தையில் வ‌ர‌வேண்டும் என்று போட்டி விதிக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ மூன்று வ‌ரிக‌ளையும் க‌தையும் மெயின் ஃப்ளோவில் இல்லாம‌ல் "பார்த்துக் கொண்டிருக்கும் டிவி சீரிய‌லில் வ‌ருவ‌து", "சினிமாவில் வ‌ருவ‌து", "துண்டு சீட்டில் வருவ‌து" என்று ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌. க‌தையில் வ‌ர‌வேண்டும் என்ப‌துதானே விதி, க‌தையின் மெயின் ஃப்ளோவில் வ‌ர‌வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று கேட்க‌லாம்.

அப்ப‌டி பார்த்தால் இதுவ‌ரை அனைத்து மொழிக‌ளிலும் எழுத‌ப்ப‌ட்ட‌ + எழுத‌ப்ப‌ட‌ப்போகும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ அனைத்து க‌தைக‌ளிலும் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளை சேர்க்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ "என் இனிய‌ இய‌ந்திரா" நாவ‌லில்
"ஜீவாவைப் பார்க்க‌ முண்டிய‌டித்துக் கொண்டு சென்ற‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் அருகே இருந்த‌ லேச‌ர் விள‌ம்ப‌ர‌ போர்டில் இருந்த‌ க‌தைப்போட்டியை க‌ண்டு கொள்ள‌வே இல்லை. அதில்

கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளுட‌ன் க‌தை எழுதுங்க‌ள், ஒரு கோடி ப‌ரிசை வெல்லுங்க‌ள்.

1......................
2...............................
3.......................................


என்றிருந்தது.” என்று எழுத‌ முடியும். எந்த‌ ஆங்கில‌ நாவ‌லிலும் "Something was written on the piece of paper in some indian language.....

1...........................

2...............................

3......................................."

என்றும் எழுத‌ முடியும். அப்ப‌டி விதிமுறைக‌ள் புரிந்து கொள்ள‌ப்ப‌ட்டால் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளும் இருக்க‌ வேண்டும் என்ற‌ விதியே தேவை இல்லை. அந்த‌ வ‌ரிக‌ளை அக‌ற்றினாலும் க‌தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றால் எத‌ற்காக‌ இந்த‌ போட்டிக்கு அந்த‌ க‌தைக‌ள்?

ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது.

வரிகளுக்குப் பொருத்தமாக இருந்த கதைகள் புதுமையாக இல்லாமலிருந்தன. அப்படியும் இருந்தால் நடை மிகவும் சோர்வடையச் செய்வதாய் இருந்தன. ஆனால் - ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருந்தன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆகவே மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் இந்தக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாங்களும் உங்களில் மூவர்தான் என்பதால் எங்களின் முடிவு இறுதியானதாக இருக்கமுடியாது. எங்களின் அளவுகோல்கள் உங்களின் இந்தக்கதையை மதிப்பிடத்தானே தவிர உங்களின் திறனை மதிப்பிடத் தகுந்தவை அல்ல. ஆகவே வெற்றியைத் தவறவிட்டவர்கள் தொடர்ந்து கதைகள் புனைந்து பதிவுலகில் பயணிக்க எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். அனைத்து கதைகளுக்கும் முடிந்தவரை சுருக்கி எழுதப்பட்ட விமர்சனங்களை இந்த (ஒன்று, இரண்டு, மூன்று) பதிவுகளில் காணலாம்.

கலந்துகொண்ட 84 கதைகளிலிருந்து முதல் கட்டத் தேர்வில் இறுதிக்கட்டத்துக்கு வந்த 15 கதைகள் :

(அகர வரிசைப்படி... )

1. அதே நாள் அதே இடம் - சத்யா

2. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

3. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா

4. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

5. கம் ஆன், காமினி - அனு (இவருக்கு வலைப்பூ இல்லாததால், கதை பரிசல்காரனின் வலையில் வெளியிடப்பட்டது. கதாசிரியரின் ப்ரொஃபைலைக் காண அவரது பெயரைக் க்ளிக்கவும்)

6. கமான்.. கமான்.. காமினி - வித்யா

7.
காமினி இருக்க பயமேன் - கலாநேசன்

8. காட்சிப்பிழை - செல்வகுமார்

9. சவால் - புதுவை பிரபா

10. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்

11. டைமண்ட் - முகிலன்

12. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

13. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி

14. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

15. வைர விழா - R V S


இதிலிருந்து பரிசுகளை வென்றவை :-

முதல் இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தாமல் மூன்று சிறப்பான கதைகளைத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சமமான மதிப்பெண்களைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி தேர்வாகி தலா ரூ.400/- மதிப்புள்ள புத்தகப் பரிசைப் பெறும் மூன்று சிறப்புக் கதைகள் - (தலைப்பின் அகர வரிசைப்படி....)


முதலிடத்துக்கான போட்டியை இறுக்கம் செய்த, ஆறுதல் பரிசுகளைப் பெறும் 2 கதைகள் (ரூ. 250 மதிப்புள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுக்கும்)


மீண்டும் ஒரு முறை பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.! பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.!

அன்புடன் -
வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, ஜீவ்ஸ்
--------------------------------------------------------------


போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.

பி.கு : போட்டியில் கலந்துகொண்ட கதைகள் 84. இதுவரை 83 எனக் குறிப்பிடப்பட்டது தவறு. எனது கதைத் தொகுப்பு இணைப்பில் கடைசி இரண்டு கதைகளுக்கு 83 என ஒரே எண் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. விமர்சனப்பதிவுகளில் நீங்கள் 85 கதைகளைக் காணமுடியும். 53ம் எண் கொண்ட ஒரு கதை போட்டிக்குரியதல்ல, தவறுதலாக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதாகும்.

.

(Thanks For the Image to: http://www.designniac.com)

71 comments:

வெட்டிப்பயல் said...

My best wishes to the winners :)

வெட்டிப்பயல் said...

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

அடுத்த முறை (நடத்தினால்) இவ்வளவு ரெஸ்ட்ரிக்‌ஷன் இல்லாமல் (வேண்டுமென்றால் தலைப்பு மட்டும் கொடுத்து) போட்டி நடத்துமாறு பரிசலையும், ஆதியையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)

Joseph said...

வெற்றியாளர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

சவாலை சமாளித்தவர்கள் தொடர்ந்து மணற்கேணி 2010 போட்டியில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

Cable சங்கர் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சிக்கும், உழைப்பிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகக்ள்.

Unknown said...

வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்..பங்கேற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Thamiz Priyan said...

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
பரிசல், ஆதி, அப்துல்லா, வெண்பூ, ஜீவ்ஸூக்கு எங்களது நன்றிகள்!

பிரதீபா said...

வாழ்த்துக்கள்..
//அதே நாள் அதே இடம் - சத்யா
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்
பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்

கமான்.. கமான்.. காமினி - வித்யா
வைர விழா - R V S//

ரொம்பப் பெரிய்ய்ய்ய விஷயங்க இது !! கலக்கிட்டீங்க !! பரிசல், ஆதி, நடுவர் குழுவுக்கும் பெரிய்ய கைதட்டல் !!

சுசி said...

போட்டி ஏற்பாட்டாளர்கள், பங்குபெற்றவர்கள்,
நடுவர்கள்,
வென்றவர்கள்
அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Sridhar Narayanan said...

பிரளயம் கதையை தேர்ந்தெடுத்ததற்கு நீதிபதிகளுக்கு மிக்க நன்றிகள்.

வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் போட்டியில் பங்கு பெற்றது மிகவும் நல்ல அனுபவம். பொறுமையாக கதைகளை அலசி, நேரத்திற்கு முடிவுகளையும் அறிவித்து விட்டீர்கள். பங்கேற்றவர்கள் சார்பாக போட்டியை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கு நன்றிகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

ILA (a) இளா said...

போட்டியில் பங்கேற்ற/வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

ஸ்ரீதர் நாராயணன், அது எப்படிங்க எல்லாப் போட்டியிலும் கெலிக்கிறீங்க?

Sathish said...

அதே நாள் அதே இடம் --கதையை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி...

இது போன்ற போட்டி மனதுக்கு மகிழ்ச்சியை தருவதுடன், ஆரோக்யமான எழுத்துக்களையும் வெளிக்ொணர்கிறது...
வெற்றிகரமாக இந்த போட்டியை நடத்தி முடித்த போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி...

புதுவைப்பிரபா said...

பங்கேற்றவர்களுக்கும் வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டி அமைப்பாளர்களுக்கும், நடுவர்களுக்கும்
எனது பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்.

aru(su)vai-raj said...

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
பரிசல், ஆதி, அப்துல்லா, வெண்பூ, ஜீவ்ஸூக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

a said...

சவால் போட்டியை போட்டியாளர்களுக்கு சமமாக சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திய பொறுப்பாளர்கள் : பரிசல் , ஆதி.
நடுவர்குழு நண்பர்கள் : வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ்
பங்கு பெற்ற போட்டியாளர்கள்.
பரிசு பெற்ற வெற்றியாளர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.பங்கேற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Romeoboy said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .. இருந்தாலும் வடை போச்சே மகேஷா :))...

ராமலக்ஷ்மி said...

வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும், ஆர்வத்துடன் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள்!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சிக்கும், உழைப்பிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகக்ள்.

RVS said...

வைர விழாவை வெற்றி விழாவாக்கிய நடுவர்களுக்கு நன்றி.

இப்படி ஒரு போட்டியை அறிவித்து வளரும் கதைஞர்களை ஊக்குவித்த பரிசல், ஆதி அண்ட் கோவிற்கு ஒரு ராணுவ சல்யூட்!!

மீண்டும் ஒரு நன்றி. (ஏதோ எழுதறோம் அப்படின்னு புரியுது... )

pichaikaaran said...

எனது ஒரு கதையை ( ஆதலினால் காதல் செய்வீர் ) , சற்றும் தயவு தாட்சண்யம் இன்றி சரி இல்லை என ஒதுக்கியதை தலை வணங்கி ஏற்றேன்..

இப்போது ”எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ?
என்ற கதையை சிறந்த கதையாக தேர்தெடுத்து இருப்பதை தலை வணங்கி ஏற்கிறேன்..
நன்றி..
வெற்றி பெற்ற சத்யா, ஸ்ரீதர் நாராயணன், வித்யா , R V S ஆகியோருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

போட்டி அமைப்பாளர்களுக்கு நன்றி

Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

கார்க்கிபவா said...

great effort organizers

congrats winners

and hearty wishes to all the participants..

Jackiesekar said...
This comment has been removed by the author.
Jackiesekar said...

வெற்றிபெற்ற சிறுகதை எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

you have done a fantastic job parisal & aadhi.

போட்டியில் பங்குபெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

நர்சிம் said...

பிரமிப்பாய் இருக்கிறது.. மிகுந்த மகிழ்ச்சியாகவும்.

பரிசல் & ஆதி.. தொடருங்கள்.

**

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நிகழ்வு பதிவுலகில் முக்கிய ஒன்று.

வாழ்த்துகள் பரிசல் & ஆதி..

வெண்பூ, அப்துல்லா & ஜீவ்ஸ், மிக்க நன்றி.. இவ்வளவு கதைகளையும் படித்துப் பார்த்து, ஆலோசித்து முடிவு சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது நன்கு தெரியும். வாழ்த்துகள்.

தராசு said...

அருமையான ஒரு போட்டி.

ஒரு போட்டியை நடத்த நினைத்து, அதற்கென விதி முறைகளை வகுத்து, அதை எல்லாரிடத்தும் கொண்டு போய் சேர்த்து, எழுத ஊக்குவித்து, நடுவர்களை பிடித்து, அவர்களிடம் கதைகளை கொண்டு போய் சேர்த்து, விமர்சனங்களுக்கான விமர்சனங்களால் தளர்ந்து விடாமல், போட்டியை நடத்தி முடித்த ஆதி, பரிசல் இருவரையும் வாழ்த்துகிறேன், அவர்களது பொறுப்புணர்விற்கும், நடுநிலை வகித்தமைக்கும் ஒரு ராயல் சல்யூட்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இனியும் நிறைய எழுதுங்கள்.

பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thirumalai Kandasami said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

http://enathupayanangal.blogspot.com

நீச்சல்காரன் said...

வெற்றிப் பெற்ற சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன், வித்யா , R V S ஆகிருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Giri Ramasubramanian said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

என்னையும் கதை எழுதச் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

பரிசல், ஆதி இருவருக்கும் நன்றி.

நடுவர் குழுவிற்கு வணக்கங்கள்!

Unknown said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள்..

அனு said...

ஆத்தா!! நான் ஜஸ்ட் பாஸாயிட்டேன்!!!
-----------------------------
@ சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன், வித்யா, R V S

கலக்கிட்டீங்க!! வாழ்த்துக்கள்!!!
-----------------------------
@ பரிசல், ஆதி & நடுவர்கள்

போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்கு என் பாராட்டுகள்!!

Vidhya Chandrasekaran said...

ஆத்தா நான் ஜெயிச்சிட்டேன்:))

வாழ்த்திய வாழ்த்தப் போகும் அனைவருக்கும் நன்றி:))

போட்டி அமைப்பாளர்களுக்கும் நடுவர்களுக்கும் ஸ்பெசல் தாங்ச்:))

vinu said...

intha kathaikku aaruthal parisu

//////

இங்கப் பார்றா. இது வேறயா? அது சரி. காமினிக்கும் சிவாவுக்கும் என்ன ரிலேஷண்டா?”

“அது வாசகர்களுக்குப் புரியும் பாஸ்”

“யாருக்கு?”

“ரீடர்ஸ்க்கு பாஸ்.”

“ஸ்ஸப்ப்பா. சரி காமினி எப்படிடா சிவாவ ட்ரேஸ் பண்றா?”

“அது வாசகர்களோட யூகத்துக்கு விட்ருக்கேன் பாஸ்.”

“கடவுளே........”

“பாஸ் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்களேன்.”

“என்னடா?”

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன். இந்த வாக்கியம் வர்றாப்ல கதைக்கு நல்ல ஒரு எண்டிங் சொல்லுங்களேன்.”

”எண்டிங்”

“ஆமா பாஸ்’

“இந்தக் கதைக்கு.”

“ஆமா பாஸ்”

//////////////

கொஞ்சம் புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் - க‌தையில் வ‌ர‌வேண்டும் என்று போட்டி விதிக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ மூன்று வ‌ரிக‌ளையும் க‌தையும் மெயின் ஃப்ளோவில் இல்லாம‌ல் "பார்த்துக் கொண்டிருக்கும் டிவி சீரிய‌லில் வ‌ருவ‌து", "சினிமாவில் வ‌ருவ‌து", "துண்டு சீட்டில் வருவ‌து" என்று ப‌ல‌ க‌தைக‌ள் வ‌ந்திருக்கின்ற‌ன‌. க‌தையில் வ‌ர‌வேண்டும் என்ப‌துதானே விதி, க‌தையின் மெயின் ஃப்ளோவில் வ‌ர‌வேண்டும் என்று தெளிவாகச் சொல்லப்படவில்லையே என்று கேட்க‌லாம்.

அப்ப‌டி பார்த்தால் இதுவ‌ரை அனைத்து மொழிக‌ளிலும் எழுத‌ப்ப‌ட்ட‌ + எழுத‌ப்ப‌ட‌ப்போகும் பில்லிய‌ன் க‌ண‌க்கான‌ அனைத்து க‌தைக‌ளிலும் இந்த‌ மூன்று வ‌ரிக‌ளை சேர்க்க‌ முடியும்.

உதார‌ண‌மாக‌ "என் இனிய‌ இய‌ந்திரா" நாவ‌லில்
"ஜீவாவைப் பார்க்க‌ முண்டிய‌டித்துக் கொண்டு சென்ற‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் அருகே இருந்த‌ லேச‌ர் விள‌ம்ப‌ர‌ போர்டில் இருந்த‌ க‌தைப்போட்டியை க‌ண்டு கொள்ள‌வே இல்லை. அதில்

கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளுட‌ன் க‌தை எழுதுங்க‌ள், ஒரு கோடி ப‌ரிசை வெல்லுங்க‌ள்.


///////mudivu ungal vivaathathitkkuu

மின்னுது மின்னல் said...

கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

vinu said...

ithuvum aduththa aaruthal parisukkathai

////

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா.. உங்கப்பா எப்படி இப்டி ஆனாரு...ஏதாவது அசம்பாவிதமா இருந்த பிளாஷ்பேக்குக்கெல்லாம் போய்டாதீங்க.." என்று கலவரமானார் முத்துப்பாண்டி.
"பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின வைர அட்டிகை திருட்டு போய் அதுவும் சில பொறுக்கி போலீஸ் கைல கிடைச்சு அவங்க அதை அபகரிச்சுட்டதால, கல்யாணம் நின்னு போனா எந்த அப்பாவுக்கு தான் பைத்தியம் பிடிக்காது இன்ஸ்பெக்டர்?" என்று கண்களில் நீர் வழிய ரத்தினச் சுருக்கமாகக் கேட்டாள் காமினி.
"ஓ. ஒரு அதிர்ச்சி கொடுத்த உங்கப்பா தெளிஞ்சுடுவார்ன்னு தான் எங்களை விரட்ட விட்டு நாங்கெல்லாம் பின்னாடி நிற்க அந்த அட்டிகையை உங்க அப்பாகிட்ட காண்பிச்சீங்களா. மேடம். நீங்க ரியலி ப்ரில்லியன்ட்." என்று மீசை விரிய சிரித்து பாராட்டினார் முத்துப்பாண்டி.
/////


perfect escapeism

vinu said...

apart all the hurdles; great work by all creaters;


congrats to the winners;


we will fight/discuss in some other occasion this is not the right stage/time to do that;


bye; with lots and lots of disappointments

Ramesh said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும், நடுவர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...


:-) வடை போச்சே...

Unknown said...

நானும் எல்லைக் கோட்டை தொட்டிருக்கிறேன் என்பதில் சந்தோசம்....
பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள்.
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து போட்டியை நடத்திய பரிசலுக்கும் ஆதிக்கும் நன்றிகள்.

எஸ்.கே said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...

வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

கார்க்கிபவா said...

க‌தை என்று வ‌ரும்போது ஆளுக்கொரு அபிப்பிராய‌ம் இருக்கும். யார் சொல்வ‌தும் இறுதி முடிவு கிடையாது. ஆனால் போட்டி என்று வ‌ரும்போது ந‌டுவ‌ர்க‌ள் முடிவே இறுதியான‌து. ந‌டுவ‌ர்க‌ளில் அப்துல்லாவை நான் ந‌ன்கு அறிவேன். அவ‌ரின் ப‌ர‌வலான‌ வாசிப்ப‌னுப‌வ‌ம் நிச்ச‌ய‌ம் முடிவுக‌ளில் தெரிகிரற‌து. வெண்பூவும் ந‌ல்ல‌ வாசிப்பாளி என்று கேட்ட‌துண்டு.

முத‌ல் க‌தை என்ப‌தால் கொஞ்ச‌ம் ப‌ரிவு காட்டியிருக்க‌ வேண்டுமென்ப‌வ‌ர்க‌ள் ஒரு விஷ‌ய‌த்தை நினைவில் கொள்ள‌ வேண்டும். ப‌ரிச‌ல், ஆதிக்கும் போட்டி என்ற‌ வ‌கையில் இது முத‌ல் முய‌ற்சிதான். என‌வே அவ‌ர‌க்ளை குறை சொல்லாம‌ல் விட்டுருக்க‌லாமே? ஏன் எரிச்ச‌லூட்டும் பின்னூட்ட‌ங‌க்ள்? ப‌ரிசு பெற்ற‌ க‌தைகளை விட‌ ம‌ற்ராவ்ர்க‌ள் க‌தைக‌ள் எவ்வ‌கையில் சிற‌ந்த‌து என்ப‌தை அவ‌ர‌வ‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ட்ட‌த்தில் கேட்டால் உண்மை தெரியும்.

சில‌ பேரை த‌விர‌ இப்போட்டி ப‌ல‌ருக்கும் திருப்தி என்ப‌து பொல்தான் தெரிகிற‌து.எழுதிய‌ அனைவ‌ருக்கும், போட்டி ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளுக்கும் பாராட்டுக‌ள். ந‌டுவ‌ர்க‌ளின் உழைப்பும் பாராட்டுக்குரிய‌து.

Thamira said...

நிச்சயம் இதை நிகழ்த்தி முடித்துவிட்ட மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

Thamira said...

மாற்றுக் கருத்துகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பது வீண் விவாதத்தை வளர்க்கும். அத்தகைய நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பும் ஒரே விஷயம். பரிசு பெற்ற கதைகள் மீதும் நிறைய விமர்சனங்கள் நடுவர்களுக்கு இருந்தன. அப்படியும் அவை ஏதோ ஒரு வகையில் நடுவர்களைத் திருப்தி படுத்தியிருக்கலாம். அவ்வளவே.. நன்றி மீண்டும்.

செல்வா said...

என்னோட கதையையும் சிறந்த கதைகளில் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி அண்ணா ., மேலும் நடுவர்களுக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுக்கள் ..!

வினையூக்கி said...

வாழ்த்துகள் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், நடத்தியவர்களுக்கும் மற்றும் நடுவர்களுக்கும்

கௌதமன் said...

முதன் முறையாக கதை எழுதிய எனக்கு, 'தங்கையே தனக்குதவி' கதையை, டாப் பதினைந்துக்குள் ஒன்றாகப் பார்ப்பது (12), சந்தோஷமாக உள்ளது.
சிறுகதைப் போட்டி நடத்திய பரிசல்காரனுக்கும், பங்குபெற்ற, பரிசு பெற்ற அனைவருக்கும், எங்கள் வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Vediyappan M said...

பதிவுலகில் ஒரு புறம் தேவையற்ற அரட்டை , மற்றுமொருபுறம் வீண்வம்புகள் என்று போய்கொண்டிருக்கும் காலத்தில் மிக அவசியமான ஒரு உத்வேகத்தை தரக்கூடிய ( 84 பேரை எழுத தூண்டுவது என்பது சாதாரன காரியமா என்ன?) போட்டியை நடத்தி முடித்துள்ளீர்கள், இந்த போட்டியை ஒருங்கிணைத்த குழுவினருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வேழமுகன் said...

ஒரு ஆக்கபூர்வமான பணியை தானே முன்வந்து மிகச் சிறப்பாக செய்துமுடித்துளீர்கள். வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

middleclassmadhavi said...

வாழ்த்துக்கள்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இந்தா வந்திட்டேன். வெளியூர் போய்ட்டதால இப்போ தான் ப்ளாக் பார்க்க முடிந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் வெற்றி பெற்ற கதைகளை பார்க்கவில்லை. பார்த்திட்டு தனிதனியா கமெண்ட் போடுறேன். புதிய வலைபூக்கள் இதன் மூலம் அறிமுகம் செய்த பரிசல் & ஆதி க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். முதல் 15 கதைகளில் சிறந்ததாக பார்வையாளனின் மூன்று கதைகள் வந்ததற்கு மிகச் சிறப்பானவாழ்த்துக்கள்

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நடுவர்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
பங்கேற்பாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் !

அன்பரசன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

நசரேயன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

pichaikaaran said...

முதல் 15 கதைகளில் சிறந்ததாக பார்வையாளனின் மூன்று கதைகள் வந்ததற்கு மிகச் சிறப்பானவாழ்த்துக்கள்

இதயம் கனிந்த நன்றி.. சமீபத்தில் வலைப்பதிவில் நுழைந்த என் போன்றோருக்கு , உங்களைபோன்ற , நர்சிம் போன்ற சீனியர்களின் எழுதுக்கள்தான் , உந்துசக்தியாக இருந்தது என்பதையும், என் போன்ற புதியவர்களையும் அரவணைத்து செல்லும் பரிசல் , ஆதி போன்றோரால்தான் போட்டியில் கலந்து கொள்ளும் தன்னம்பிக்கை ஏற்பட்டது என்பதையும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்

வெட்டிப்பயல் said...

வினு,
//அந்த‌ வ‌ரிக‌ளை அக‌ற்றினாலும் க‌தைக்கு எந்த‌ பாதிப்பும் இல்லை என்றால் எத‌ற்காக‌ இந்த‌ போட்டிக்கு அந்த‌ க‌தைக‌ள்?ஆனால் அந்த அளவுக்கு கடுமையெல்லாம் காட்டக்கூடாது என்று எங்கள் நடுவர் குழுவின் ஆலோசனையில் முடிவானது//

இதையும் நீங்கள் கவனிப்பது நலம். மேலும் நீங்கள் கூறிய முதல் கதையில் அந்த வரிகளை நீக்கினால், கதையில் ஒரு முழுமைத் தெரியாது.

அவர்கள் கொடுத்தள்ள எ.கா, அந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு, ஜீனோவும், நிலாவும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வைத்து கதை சொல்வதைப் போலவும். நிலாவிற்கு சந்தேகம் வந்து, "மனிதர்களை விட ரோபோக்கள் சிந்தனையில் முன்னேறியிருக்கின்றன" என ஏமாற்றத் திட்டமிட்டு இது அனைத்து ரோபோக்களுக்கும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம். அதனால் நான் வாக்கியங்களை மாற்றி அமைக்கிறேன், நீ அதற்கு ஏற்றார் போல கதை சொல், என்றும் போட்டி தொடர்வதைப் போல் அமைத்திருந்தாலும் அதை நடுவர்கள் நிராகரிக்க முடியாது.

வெட்டிப்பயல் said...

அடுத்து தொ.கா நாடகத்தில் வருவதைப் போல் காட்டுவது, ஒரு கிராமத்து நண்பர்\உறவினர் இல்லத்திற்கு பத்திரிக்கைக் கொடுக்க வருகிறார். தொ.காயில் விறுவிறுப்பான இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டே நண்பருடன் உரையாடுகிறார்கள். வந்தவருக்கு இது ஒருவித ஏமாற்றத்தை தருகிறது. இந்த முக்கியமான நேரத்தில் வந்து தொல்லைக் கொடுக்கிறாரே என்று வீட்டுப் பெண்மணி, குழந்தைகள் எல்லாம் ஒரு வித வெறுப்பையே\தயக்கத்தையே அவரிடம் காட்டுகிறார்கள். யாரும் சிரித்து எதையும் விசாரிக்கவில்லை.

அந்த வீட்டில் ஒரு குழந்தை மட்டும் இவரிடம் ஓரளவு கதையை சொல்கிறது. வைரத்தை கடத்தும் காமினி கெட்டவள் இல்லை. அவள் தான் கதையின் நாயகி என்று. அதுவும் ஒன்று, இரண்டு வரிகளில் மட்டும்.

தொ.கா மனிதர்களிடமிருந்து நம்மை எவ்வளவு அந்நியப்படுத்துகிறது என்பதை இந்தக் களத்தை வைத்து அழகாக சொல்லலாம். இப்படி ஒரு களத்தில் இதை எழுதியிருந்தாலும் நடுவர்களால் நிராகரிக்க முடியாது. இது என் எண்ணம் மட்டுமே. போட்டிக்கான விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருந்ததால், நடுவர்களுக்கு இது மிகவும் சிரமாமன வேலை. அவர்களுக்கு என் பாராட்டை மீண்டும் ஒரு முறை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

Asiya Omar said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

aru(su)vai-raj said...

திரு. கார்க்கியின் கருத்துகளோடு முழுதும் ஒத்துப் போகிறேன். எனது உணர்வை கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இப்போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த ஐவர் கூட்டணிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

எறும்பு said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

:)

விக்னேஷ்வரி said...

மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது உங்களிருவரின் வெற்றி பார்த்து கிருஷ்ணா அண்ட் ஆதி. வெல்டன்.

Sukumar said...

@ஆதி & பரிசல் - அட்டகாசமான பணி பாஸ்.. யோசனை செய்து,, ஒருங்கிணைத்து.. நடத்தி முடித்து... இவ்வளவு பேரை ஊக்கமூட்டி பதிவுலகில் பெரிய விஷயம் செய்திருக்கிறீர்கள்.. ஸோ.. இனி பிரம்மாண்டமான வடிவில்.. இன்னும் பெரியதாக ... ஏதேனும் செய்வீர்கள் அல்லவா.. அதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இதில் பணியாற்றிய நடுவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்..

மணிகண்டன் said...

Thanks for the prize.

Anisha Yunus said...

இனிமேதான் எல்லா கதைகளையும் நான் படிக்க வேண்டும். பரிசுகளை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள். பரிசில் வராமல், ஆனால் அவர்களை பாதித்த கதைகள், எந்த ரேன்க்கில் சேர்த்துவது என்று குழம்பிய கதைகள் என இப்படி பல விஷயங்களை சேர்த்து அவர்களின் அனுபவங்களையும் எழுதியிருக்கலாம். நன்றாக இருக்கும்.. :)

தக்குடு said...

கலந்துகொண்டவர்கள்/வென்றவர்கள் எல்லாருக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!...:)

vinu said...

sagaa aaruthal parisu kammaan kaamini -vidhyaa bloggai kaanavillai

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்