Tuesday, November 2, 2010

இணைய ஜோக்காளி - ஹ்யூமர் க்ளப்

சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தபோது நகைச்சுவைக்கு அதிக இடம் கொடுத்தார். நகைச்சுவை என்றால் காலாவதியான ஜோக்ஸ் அல்ல. சிந்தனையை தூண்டும் ஜோக்ஸ், க்ரியேட்டிவான ஜோக்ஸ் இப்படி... கேட்டவையாகத்தான் இருக்கும். ஆனாலும் அதைச் சொல்லும் விதத்தில் வித்தியாசப்படுத்தியிருப்பார்கள்.

அதில் ஹ்யூமர் க்ளப் என்றொரு பகுதி வரும். ஒரு க்ளப்புக்கு வந்து எல்லாரும் ஜோக்ஸ் சொல்வார்கள். இளையஜோக்காளி என்றொரு கதாபாத்திரம் எல்லாரையும் கலாய்ப்பார். (நிஜமாகவே வாராவாரம் அந்த க்ளப் நடந்தது என்று கேள்வி)

அதே போல நாமும் ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தி, இளைய ஜோக்காளிக்கு பதிலாக இணைய ஜோக்காளி என்றொரு கதாபாத்திரத்தைக் கொண்டு வந்து ஒரு ஹ்யூமர் க்ளப் நடத்தினால் என்ன என்று நேற்றிரவு 12.18க்கு ஒரு சிந்தனை பிறந்ததன் விளைவே இந்தப் பதிவு.

இது ஒரு சோதனை முயற்சி. யாருக்குச் சோதனை என்பது இன்றிரவுக்குள் தெரிந்துவிடும்!


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







க்ளப் ஆரம்பிக்கிறது... வந்த எல்லாரையும் ‘வாங்க.. வாங்க’ என்று வரவேற்கிறான் இணைய ஜோக்காளி.

“சரி யாரு மொதல்ல ஜோக் சொல்றது?”

ஒருத்தர் கைதூக்குகிறார். “நான் சொல்றேன்”

“உடனே ஜோக்’ன்னு சொல்லீட்டு ஜோக் சொல்லீட்டேன்னு சொன்னீங்கன்னா அப்படியே தூக்கிக் கொண்டு போய் கூவத்துல போட்டுடுவேன்” என்று மிரட்டுகிறான் இ.ஜோ.

“அந்த மாதிரி உங்க அளவுக்கெல்லாம் கடிக்க மாட்டேன் இஜோ. நிஜமாவே ஒரு ஜோக் சொல்றேன்.. ஒரு பஸ்ஸூல உட்கார்ந்துட்டிருந்த ஸ்கூல் பையன் ஸ்கூல் பேக், ஜாமெட்ரி பாக்ஸ்ன்னு திறந்து ஏதோ தேடிகிட்டிருந்தான். கண்டக்டர் என்னான்னு கேட்க, “டிக்கெட் எடுக்க பத்து ரூவா வெச்சிருந்தேன் சார்.. காணோம்”ன்னான். சரி எங்க போவணும்ன்னு கேட்ட கண்டக்டர் அவன் போற ஸ்டாப்புக்கு அஞ்சரை ரூவா டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துட்டு நகர்ந்தாராம். உடனே அந்தப் பையன் கேட்டான். “பாக்கி நாலரை ரூவா?”

கூட்டத்துக்கு வந்ததில் பாதிபேர் ஐந்து செண்டிமீட்டரும், பாக்கி பேர் ரெண்டு செண்டிமீட்டரும் சிரித்தார்கள். இ.ஜோ, “பதிவுல மொத ஜோக்.. கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்” என்றுவிட்டு, “சரி.. அடுத்த டாபிக் கணவன் மனைவி” என்கிறான்.

“நான் சொல்றேன்” என்று கூட்டத்திற்கு வந்த ஒரு முப்பது வயதுக்காரர் எழுந்தார். இணைய ஜோக்காளி கேட்டான்: “உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?”

“ஆமா ஆய்டுச்சு..”

“சரி சரி.. என் ஆறுதல்கள்.. இப்ப ஜோக்கைச் சொல்லும்”

“ஒரு திருவிழாவுக்குப் போயிருந்த கணவன் மனைவில மனைவியைக் கூட்டத்துல காணலை. ரொம்ப வருத்தப்பட்ட அவன், பக்கத்தில் இருந்த ராமன் கோயிலுக்குப் போய் வேண்டினானாம். ‘ராமா.. எப்படியாச்சும் என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுக் குடு’ன்னு. ராமர் டகார்ன்னு அவன் முன்னாடி வந்து சொன்னாராம்: ‘நேராப் போய் லெஃப்டுல திரும்பினின்னா ஒரு ஆஞ்சநேயர் கோயில் வரும். அங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணு. ஏன்னா என் பொண்டாட்டி தொலைஞ்சப்பவே அவருதான் கண்டுபிடிச்சார்’ன்னு!”

இந்த ஜோக்குக்கு நாலு பேர் விசிலடித்தார்கள். இணைய ஜோக்காளிக்கு கொஞ்சம் உற்சாகம் வந்துவிட்டது. “சரி.. இன்னொரு கணவன் மனைவி ஜோக் பார்சல்...” என்று ஆர்டர் செய்தான் இஜோ.

கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தொந்தி பெருத்த ஆசாமி, தொண்டையைச் செருமிக் கொண்டு, “அவைக்கு வந்திருக்கும் இணைய ஜோக்காளிக்கு என் முதற்கண் வணக்கத்தை..” என்று ஆரம்பிக்க இஜோ அவசர அவசரமாக இடைமறித்து.. “அந்த ஈரவெங்காயம் எதுவுமே இந்தக் கூட்டத்துக்கு வேணாம். ஒழுங்கா ஜோக்கை மட்டும் சொல்லீட்டு அப்படிக்கா போய் குந்திக்கணும்” என்று சொன்னான்.

சரி என்ற அவர் சொன்னார்: “ஒரு பொண்ணு அவளோட ஜாதகத்தை ஜோசியக்காரர்கிட்ட காட்டினா. ஜோசியக்காரர் பார்த்துட்டு ‘உங்க ராசிப்படி உங்களுக்குப் பெரிய இடத்திலேர்ந்து நிறைய சொத்து சொகத்தொட ஒரு புருஷன் கிடைப்பான்’ன்னு சொன்னாரு. இவ கேட்டாளாம்: “அப்ப இப்ப இருக்கற புருஷனை என்ன பண்றது?”

ஒரே ஒருத்தர் கைதட்ட, இஜோ தொந்தியாசாமியை முறைத்தபடி “ஜோக்கு சொல்றேன்னு எந்திரிச்சா ஜோக்கு சொல்லணும்.. இப்படிக் கொல்லப்படாது.. சரியா?” என்றுவிட்டு திரும்ப ஓர் இளைஞன் சொன்னான். “சார் நான் ஒரு
ஜோக்....”

“சொல்லு” என்றான் இஜோ.

‘ஒருத்தன் கார் வெச்சிருந்தான். அவன் ஃப்ரெண்டுகிட்ட சொன்னான். “டேய்.. நான் கார் வாங்கினதிலேர்ந்து இப்ப வரைக்கும் ரிப்பேருக்குன்னு ஒரு காசுகூட குடுத்ததில்லை”ன்னு. அதுக்கு அவன் ஃப்ரெண்ட் சொன்னான்.. “ஆமாமா மெக்கானிக் கூடச் சொன்னாரு”

இஜோ மட்டும் சிரிக்க, மற்றவர்கள் ஐந்து நிமிடம் கழிந்து, சிரிக்கத் தொடங்கினார்கள்.

‘சரி கடைசியா ஒரு ஜோக் சொல்றேன்’ என்றான் இஜோ. க்ளப்புக்கு வந்திருந்தவர்கள் ஓடத் தயாரானார்கள்.

“என் ஃப்ரெண்ட் ராஜான்னு ஒருத்தன் ஆஃபீஸ் பார்ட்டி முடிஞ்சு, கொஞ்சம் போதையோட அவன் காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போய்ட்டிருந்தான். வழில போலீஸ் புடிச்சிடுச்சு. இறங்கி, அவனை ஸ்மெல் டெஸ்ட் பண்ணிகிட்டிருக்கறப்ப, கொஞ்ச தூரத்துல ஒரு திருடனை அஞ்சாறு பேர் தொரத்தறைப் பார்த்தாங்க போலீஸ்காரங்க”

“ஆஆஆவ்வ்வ்..” என்று ஒரு கொட்டாவி சத்தம் வரவே, இஜோ கடுப்பாகி ‘நடுவுல தூங்கறவங்களுக்கு காஃபி கட்’என்றுவிட்டு தொடர்ந்தான்.

“உடனே போலீஸ் ராஜாகிட்ட ‘இங்கயே இரு.. இப்ப வந்துடறோம்’ன்னு சொல்லீட்டு அந்த்த் திருடனைப் பிடிக்க ஓடறாங்க. அரைமணி நேரம் நின்னு பார்த்த ராஜா, போங்கடான்னு காரை எடுத்துட்டு வீட்டுக்கு வந்து ஷெட்ல நிறுத்தி அம்மாகிட்ட “யாராவது வந்து கேட்டா எனக்கு உடம்பு சரியில்ல.. நாலு நாளா பெட்ல இருக்கேன்னு சொல்லு” அப்டீன்னு சொல்லீட்டு மப்போட போய் பெட்ரூம்ல போய்த் தூங்கிடறான்”

“ஜோக் சொல்லச் சொன்னா சிறுகதை சொல்றீங்களே..” என்று வந்த குரலை அதட்டிவிட்டுத் தொடர்கிறான் இஜோ.

“கொஞ்ச நேரத்தில் போலீஸ் அவன் வீட்டுக்கு வருது. அம்மாவும் அவன் சொன்ன மாதிரியே சொல்றாங்க. அதுக்கு போலீஸ்.. ‘அதெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல கார்ஷெட்டைத் திறந்து காமிங்க’ன்னு சொல்றாங்க. திறந்து பார்த்தா.. அங்க பளபளன்னு சிகப்பு சைரனோட நின்னுகிட்டிருந்துச்சு போலீஸ் கார்!”

சொல்லிமுடித்து, ‘கைதட்டுபவர்களுக்கு தீபாவளிக்குப் பட்டாசு பாக்ஸ் ஃப்ரீ’ என்று இஜோ சொல்ல அனைவரும் படபடவென கைதட்டினர்.


.

43 comments:

கார்க்கிபவா said...

:))))

இன்னும் 4 பிட்டு சேர்த்து போட்டிருந்தா நங்கூரம் போல நச்சுன்னு பொருந்தியிருக்கும்

பரிசல்காரன் said...

@ சகா

எடுபடுமா இல்லையான்னு தெரியாததால அளவா ஆரம்பிச்சேன்...

Guru said...

பிரதர் ஏதோ ஜோக் க்ளப்னு சொன்னீங்க, ஜோக் இன்னும் வரல.

சும்மா சொன்னேன் பரிசல், நல்லா இருக்கு ஜோக் க்ளப் ஆரம்பமே அமர்க்களம்.கொஞ்சம் நடுவுல தொய்வு தெரியுது. ஸ்பீட கூட்டுங்க. கலக்கலா இருக்கும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜோக்காளி//

இந்தாத்தா கோவில் எங்க இருக்கு?

-----

ஆரம்பமே அசத்தல்

கார் மெக்கானிக் ,

ஆஞ்சனேயர் ஜோக் ஒகே!

தெய்வசுகந்தி said...

super!!!

nellai அண்ணாச்சி said...

அண்ணா அப்படியே தினமும் ஜோக்காளிய வர சொல்லுங்க

Anisha Yunus said...

சில ஜோக் ஏற்கனவே படிச்ச ஜோக். பேசாம இதையும் தொடர் பதிவாக்கிடுங்க. எல்லாரும் மண்டைய பிச்சிகிட்டு எழுத ஆரம்பிச்சிடுவாங்க. பதிவர்கள் டாபிக்ல ஒன்னுமே வரலை??? கண்டிப்பாக R.கோபி அண்ணனுக்கு இது போலவே எழுதும் ஒரு வாய்ப்பையும் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...ஹி ஹி ஹி

நாகராஜ் said...

நல்ல தொடக்கம் ...செம காமெடி போங்க (சார் டேக் இட் சீரியஸ் )
நேற்றிரவு 12.18க்கு ஒரு சிந்தனை ! நைட் ஷிப்ட் ஆ ?

HVL said...

//பேசாம இதையும் தொடர்
பதிவாக்கிடுங்க. எல்லாரும் மண்டைய பிச்சிகிட்டு எழுத ஆரம்பிச்சிடுவாங்க. //

நல்ல ஐடியா!

Sridhar Narayanan said...

நல்லாருக்கு :)

cheena (சீனா) said...

ஆகா வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்க - நல்ல ஆரம்பம் - சூப்பர் ஜோக்குகள் - இஜோ யாரு பரிசலா ? நல்லாவே மாடரேட் பண்றாரு - வாழ்க - நல்வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

@ Guru

தாங்க்ஸூ!

@ ப்ரியமுடன் வசந்த்

//இந்தாத்தா கோவில் எங்க இருக்கு?//

அப்படி நேராப்போயி லெஃப்டுல திரும்பி, ரைட்டுல திரும்பி மறுபடி நேரா வந்து ரைட்டுல திரும்பி லெஃப்டுல திரும்பினா வரும்..

:-)

@ தெய்வ சுத்தி

நன்றி.

@ நெல்லை அண்ணாச்சி

தினமும் வந்தா சலிச்சுடும் அண்ணாச்சி.. பத்து நாளைக்கு ஒருக்கா வருவாரு..

@ அன்னு

//கண்டிப்பாக R.கோபி அண்ணனுக்கு இது போலவே எழுதும்//

ஏம்ப்பா? சும்மாவே சாமியாடுவாரு.. சூடம் வேற காமிக்கணுமா? அவரோட பொய் சொல்ல விரும்பவில்லை பதிவைப் படிச்சீங்களா? அருமையா இருந்துச்சு!

@ நாகராஜ்

நைட் ஷிஃப்டெல்லாம் இல்லைங்க.. :-)

@ HVL

ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு ஐடியா ஆரம்பிச்சா, தொடர் பதிவாக்கறதா? அப்பாலிக்கா நான் என்னத்தை எழுத? ஓடிப்போய்டுங்க ஆமா....

:-)

@ ஸ்ரீதர் நாராயணன்

நன்றி பாஸ்!

@ சீனா

நன்றி ஐயா..

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

வேணாம் வலிக்குது .... அழுதுடுவேன் ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema comedy

எம்.எம்.அப்துல்லா said...

// இணைய ஜோக்காளி என்றொரு கதாபாத்திரத்தைக்

//

அதான் நம்ம அண்ணன் பைத்தியக்காரன் தயவுல ஒரு நிஜ இணைய கோமாளி இருக்காரே?? அப்புறம் எதுக்கு புதுசா ஒரு இணைய ஜோக்காளி???

மகேஷ் : ரசிகன் said...

நல்லாயிருக்கு தலைவா.. :)

மொத ஜோக் சொன்னது கார்க்கியா? மூக்கு புடைப்பா இருந்தாத் தான் இப்படியெல்லாம் எகத்தாளம் பண்ணுவாங்க.

சிவராம்குமார் said...

நல்ல ஆரம்பம் தல... கண்டினியூ!!!

Prathap Kumar S. said...

மெக்கானிக் சோக்கு கலக்கல்... இன்னும் ரெண்டு சோக்கு போட்டுருக்கலாம்

கௌதமன் said...

கார் மெக்கானிக் ஜோக் படிக்கும்பொழுது நிஜமாகவே வாய்விட்டுச் சிரித்தேன்.

பாராட்டுக்கள்.

Bharathi said...

the good point is that as far as I am concerned, all jokes seem to be new to me. keep continuing like that.

I particularly liked ramar joke and police joke.

a said...

போலீஸ் வண்டி ஜோக் ரொம்ப சூப்பர்..........

செல்வா said...

//டனே அந்தப் பையன் கேட்டான். “பாக்கி நாலரை ரூவா?”//

இது கலக்கல் அண்ணா ..!!

பொன்கார்த்திக் said...

:)

ny said...

idea - taken! jokes - okay! but format - காலாவதி!

மங்குனி அமைச்சர் said...

முருகா என்னைய மட்டுமாவது இந்த பக்கம் வரவிடாம நீ காப்பாத்தி இருக்கலாம் ???

மங்களூர் சிவா said...

:)

மங்களூர் சிவா said...

:)

நர்சிம் said...

;) சூப்பர்

roomno104 said...

alla jokekum super... enno seripera varla...

Madhavan Srinivasagopalan said...

எல்லா ஜோக்குமே நா கேள்விப்படாதது..
நல்லா இருக்குது..
தீபாவளி வாழ்த்துக்கள்..

சுசி said...

அதெல்லாம் நல்லாவே எடுபடும்.. தாராளமா தொடருங்க.. :)))))))))))))

மணிகண்டன் said...

நல்லா வந்திருக்கு பரிசல். அடிக்கடி எழுதுங்க.

சகாதேவன் said...

//பாக்கி நாலரைரூவா//..
//போலீஸ் கார்//
இரண்டு ஜோக்கும் நல்லா இருக்கு.
சகாதேவன்

sriram said...

நல்லாயிருக்கு கிருஷ்ணா..
பதிவர்களை உங்க மின் மடலுக்கு ஜோக்குகளை அனுப்பச் சொல்லுங்க, அதிலேருந்து நாலு அஞ்சு ஜோக்கை எடுத்து அவங்க பேரோடு போட்டு ஜோக்காளி ரோலை நீங்க எடுத்து ஒவ்வொரு ஜோக்குக்கு அப்புறமும் கமெண்ட் சொன்னா நல்லா இருக்குமே??
கன்சிடர் பண்றீங்களா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சி.பி.செந்தில்குமார் said...

"இணைய ஜோக்காளி

புதிய வார்த்தை,நல்லாருக்கு,வாழ்த்துக்கள்

>>>எடுபடுமா இல்லையான்னு தெரியாததால அளவா ஆரம்பிச்சேன்...>>>

நோ டவுட் , ஹிட் ஆகிடும்

சி.பி.செந்தில்குமார் said...

sriram said...

நல்லாயிருக்கு கிருஷ்ணா..
பதிவர்களை உங்க மின் மடலுக்கு ஜோக்குகளை அனுப்பச் சொல்லுங்க, அதிலேருந்து நாலு அஞ்சு ஜோக்கை எடுத்து அவங்க பேரோடு போட்டு ஜோக்காளி ரோலை நீங்க எடுத்து ஒவ்வொரு ஜோக்குக்கு அப்புறமும் கமெண்ட் சொன்னா நல்லா இருக்குமே??
கன்சிடர் பண்றீங்களா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நானும் இதை வழி மொழிகிறேன்

ராஜன் said...

நல்லாருக்கு :)

நல்வாழ்த்துகள்...

பரிசல்காரன் said...

@ $@+#i$#

சதீஷ்.. கைகுடுங்க!!!

உங்க பேரை ரொம்பவே அழகா புதுமையா எழுதிருக்கீங்க..

@ ரமேஷ்

நன்றி

@ எம் எம் அப்துல்லா

:-)

@ மகேஷ்

நன்றி!

@ சிவா

தேங்க்ஸு!

@நாஞ்சில் பிரதாப்


நெக்ஸ்ட் மீட் பண்றப்ப..

@ கௌதமன்

மத்ததுக்கெல்லாம் மெதுவாவாவது சிரிச்சீங்கள்ல?

@ பாரதி

அட! அப்படியா.. நன்றி!

பரிசல்காரன் said...

@ யோகேஷ்

நன்றிங்க...

@ செல்வா

தேங்க்ஸ்பா!

@ பொன் கார்த்திக்

:-)

@kartin

குறிப்பிட்டதுக்கு நன்றிங்க...! என்ன பண்லாம்ன்னு யோசிக்கறேன்..

@ மங்குனி அமைச்சர்.

என்ன அமைச்சரே.. அடி பலமோ?

:-)

@ மங் சிவா

:-)

@ நர்சிம்

:-))

@ ரூம் நெ 104

அதிருக்கட்டும்.. 104ம் நம்பர் ரூம்ல என்ன நடந்துச்சுங்க?

@ மாதவன்

அப்டியா? நன்றிங்க. உங்களுக்கும் வாழ்த்துகள்!

@ சுசி

அப்டீங்கறீங்களா? சரி.. ஆனா... உங்களை யாராவது திட்டப்போறாங்க..

@ மணிகண்டன்

நிச்சயமா..!

@ சகாதேவன்

நன்றிங்க

@ ஸ்ரீராம்

சான்ஸே இல்ல ஸ்ரீ! எப்படி நான் நெனைச்சதை கரெக்டா சொல்றீங்க!!

நானும் இதை டிஸ்கில எழுதலாம்ன்னு நெனைச்சேன். ’எங்களுக்கே மேட்டர் இல்ல. இதுல உனக்குச் சொல்லி, நீ பதிவா போடுவியா’ன்னு அடிக்க வருவாங்களோன்னு பயந்து விட்டுட்டேன்..

@ சி பி செந்தில்குமார்

யோவ்.. நீரு ஊரு உலகத்துக்கே ஜோக்கு சப்ளை பண்ற ஆளு.. நீங்க ஒருத்தர் சொன்னா போதாதா? மத்தவங்க எதுக்கு!!!

@ ராஜன்

தேங்க்ஸ் பாஸ்!

sriram said...

//சான்ஸே இல்ல ஸ்ரீ! எப்படி நான் நெனைச்சதை கரெக்டா சொல்றீங்க!!//

Wise Men Think Alike.. ஹி ஹி..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

Super!! :)

விக்னேஷ்வரி said...

நல்ல முயற்சி கிருஷ்ணா.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா வந்திருக்கு.