Wednesday, October 27, 2010

நீயா நானா - சில குறிப்புகள்

“சார்.. நல்லா உடம்பு வந்துடுச்சு உங்களுக்கு”

“என்ன போஸ் குடுத்துட்டிருக்க? எப்ப பேசுவ?”

“ஐ.. ஷர்ட் சூப்பர்”

“கிருஷ்ணா.. இது லைவ்வா? நீ சென்னைல இருக்கியா?”

“ஹலோ சார்.... நீங்களா அது? நீங்களா.. நீங்கதானா? ரொம்ப குண்டா இருக்கீங்க சார்..”

ஒரு ஒன்றரை மணிநேர ப்ரோக்லாம்ல மூணு நாலு வாட்டி டிவில மூஞ்சி வந்ததுக்கு எத்தனை ஃபோனு.. எத்தனை எஸ்ஸெம்மெஸ்ஸு.. என்னென்ன க்ரிடிக்ஸு.. பாராட்டு.. கிண்டலு..... அப்ப்பப்பப்பா... ரஜினிகாந்தையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடணும்டா சாமி!

** ** ** **

போன வியாழக்கிழமை செல்வேந்திரன்தான் கூப்ட்டார். விஜய்லேர்ந்து அழைப்பு வரும்ன்னு. கொஞ்ச நேரத்துல வந்துச்சு.. ‘வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு வாங்க. 4 மணிக்கு ஷூட்’னாங்க.. ஏற்கனவே போன நம்ம மக்கள்ஸ்.. ‘மூணு மணின்னா ஆரம்பிக்கவே எட்டாகும்’னாங்க. நான் அன்னைக்கு நைட் கிளம்பியே ஆகணும். அதுனால போவோம்.. 9க்குள்ள ஷூட் முடியும்னா கலந்துப்போம்.. இல்லைன்னா வந்துடலாம்னு போனேன்.

அஞ்சரைக்கு ஷூட் ஆரம்பிச்சு, எட்டேமுக்காலுக்கெல்லாம் முடிச்சுட்டாங்க..

புதிய பண்டிகை நாட்கள் தேவையா இல்லையாங்கறதுதான் தலைப்பு. பண்டிகை நாட்கள்னா ஃப்ரெண்ட்ஷிப் டே, வாலண்டைன் டே, மதர்ஸ் டே... இப்படி...

தேவையில்லைங்கற டாபிக்ல நான்.

இளையராஜாவுக்கு முதல்ல கரண்ட் போச்சாம், சச்சின் ஃபர்ஸ்ட் மேட்ச்ல டக் அவுட்டாம்.. அதே மாதிரி நான் செட்டுக்குள்ள போனதும் இருந்த ஒரு பெரிய இடைவெளில தொபுக்கடீர்ன்னு விழுந்தேன். (நான் உட்கார்ந்திருக்கறதுக்கு முன்னாடி கருப்புல தெரியறது குழி..! தரை இல்ல..)

சரி.. இனி சில கணக்கு. இது தோராயக் கணக்குதான்...

மொத்த ஒளிபரப்பு நேரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். அதுல கோபிநாத் பேசறது அரை மணி நேரம் வரும். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம்.

இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ஒரு 45 பேர் இருப்பாங்க. ஆக, ஒரு நிமிஷம் பேச சான்ஸ் கிடைச்சா நீங்க போன ஜென்மத்துல யாரோ வயசானவங்களுக்கு ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம்.

இதுல ஏன் பேசல ஏன் பேசலன்னு கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல?

எனக்கு அஞ்சு வாட்டி சான்ஸ் கிடைச்சுது. நானும் பேசினேன். ரெண்டு எடிட்டிங்ல போக, மூணு வாட்டி பேசினதைக் காமிச்சாங்கன்னாங்க. (நான் பார்க்கல... ட்ராவல்ல இருந்தேன்) அது போக ரெண்டு மூணு வாட்டி க்ளோஸப்ல காட்டினாங்க... இதுக்கு மேல அடிக்கடி என்கிட்ட மைக்கைக் குடுத்துப் பேச்ச் சொல்ல நான் என்ன அன்னைக்கு வந்த ரேடியோ ஜாக்கி சிவசங்கரி மாதிரி KNOWN FIGURE ஆ?

:-)

ஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்காம உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.

ஆகவே நண்பர்களே...

**** ***** ******


# எந்த டாபிக் சொல்லி பேசக் கூப்டாலும், அதுல உங்களுக்கு உடன்பாடா இல்லையான்னு யோசிச்சு ஒத்துக்கோங்க. நான் “ஸ்பெஷல் டேஸ் தேவையில்லைன்னு பேச வர்றீங்களா’ன்னு கூப்டதுக்கு சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆக்சுவலா என் போன்ற கொண்டாட்ட மனநிலை கொண்டவனுக்கு (நன்றி: சாரு) இந்த நாட்களை ஆகோஷிப்பது பிடிக்கவே செய்கிறது. (ஆதாரம்: இதோ)

அந்த மாதிரி நமக்கு மனதளவில் உடன்படாத பக்கத்துக்குப் போய் உட்கார்ந்தா இப்படி சரியானபடிக்கு பேச முடியாமப் போகலாம்.

# முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....

என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்.

# ஆடத் தெரியாதவனுக்கு’ன்னு நெனைக்காதீங்க. இதையும் மீறி என்னாகுதுன்னா, எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.

அதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.

இந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்துட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன்.

# டிஃபன், டீ, காஃபி, கேசரி, சுண்டல் எல்லாமே தர்றாங்க. நல்லாருக்கு.

# அங்க போய் உங்க மேதாவித் தனத்தைக் காட்டறத அவங்க விரும்பறதே இல்லை. போனமா, பேசினமா வந்தமான்னு இருக்கணும். ஒருத்தன் கோபிநாத்கிட்ட ட்ரெடிஷனல் டே பத்திப் பேசி ‘நீங்களே வேட்டி கட்டறதில்லையே’ன்னு கேட்டு எடிட்டிங்ல மாட்டிகிட்டான். தேவையா இது?

# டைரக்டர் ப்ரேக் டைம்ல வந்து டிப்ஸா தர்றாரு. அவரோட டெடிகேஷன் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

# போன வெள்ளிக்கிழமை ஷுட் பண்ணினது, அஞ்சாறு வாரம் கழிச்சு வரும்ன்னு நெனைச்சேன். ஞாயிறன்னைக்கே போட்டுட்டாங்க..!

மறுபடியும்...

அழைத்துப் பேசிய, காலாய்த்த, எஸ்ஸெம்மெஸ்ஸிய, மெய்ல் அனுப்பிய, பாராட்டிய, திட்டிய அனைவருக்கும் நன்றி.

----------------------

நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’
--------------------------------------------

நிகழ்ச்சியின் லிங்க் இங்கே.

*** *** ***

60 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்காம உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.ஃஃஃஃ
கொடுத்து வச்சவங்க...

லதாமகன் said...

>>‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’<<

ஓ அப்ப நிசமாலுமே அது நீங்கதானா?

ILA(@)இளா said...

ஒத்த வரியில (column)ல வருது. தமிழ்மணம் கருவிப்பட்டையில பிரச்சினை இருக்கு, அதை கீழே வைங்க

ILA(@)இளா said...

//எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...//
பண்றதே காப்பி-பேஸ்ட் அதுல கூட எழுத்துப்பிழையா அண்ணா? கொஞ்சம் பாருங்கண்ணே

Gopi Ramamoorthy said...

:)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

பரிசல் : இன்னும் வீடியோ பாக்கல................
உங்க friend S.M.S சூப்பர்............

HVL said...

இந்த மாதிரி இன்னும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க என் வாழ்த்துகள்!

என். உலகநாதன் said...

பரிசல்,

மிகவும் வருத்தப்பட்டு எழுதியது போல் தெரிகிறது. எதற்காக எல்லோரும் அப்படி கேட்கிறார்கள்? உங்கள் மேல் உள்ள ஒரு பாசம் அல்லது நட்பு அல்லது ஒரு அக்கறை?

நான் கூட அப்படித்தான். கேபிள் பதிவை பார்த்தவுடன், ஆபிஸ் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு உங்கள் நிகழ்ச்சியைத்தான் பார்த்தேன். எனக்கும் ஏமாற்றமே?

இப்போது அனைத்தும் புரிகிறது. உங்களை கவனிக்க, உங்களை பற்றி பேச இவ்வளவு பேர் இருப்பதை நினைத்து சந்தோசப்படுங்கள்?

ஆமாம், ஏன் இவ்வளவு குண்டாகி இருக்கிறீர்கள்? ஏன் இந்த மாற்றம்?

முதலில் உடம்பை குறைக்கும் வழியை பாருங்கள். நீங்கள் முன்பு இருந்ததுதான் சரி.

என்றும் அன்புடன்,
என்.உலகநாதன்

(என்னை நினைவு இருக்கிறதா?)

மகுடேசுவரன் said...

பரிசல் ! இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்ள்வேண்டுமென்றால் சிறப்பு விருந்தாளியாக மட்டுமே செல்ல வேண்டும். பங்கேற்பாளராகச் செல்லவே கூடாது. நமது தரப்பை முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் பேசவைத்துச் சேதாரம் செய்துவிடுவார்கள். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. தனித்துவமான சிந்தனையுடையவர்கள் மீடியா ஃபிகராக மாறுவதை விரும்பமாட்டார்கள்.

வடகரை வேலன் said...

//மகுடேசுவரன் said...

பரிசல் ! இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்ள்வேண்டுமென்றால் சிறப்பு விருந்தாளியாக மட்டுமே செல்ல வேண்டும். பங்கேற்பாளராகச் செல்லவே கூடாது. நமது தரப்பை முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் பேசவைத்துச் சேதாரம் செய்துவிடுவார்கள். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. தனித்துவமான சிந்தனையுடையவர்கள் மீடியா ஃபிகராக மாறுவதை விரும்பமாட்டார்கள்.//

பரிசல்,

நான் சொல்ல விரும்பியதை மகுடேஸ்வரன் சொல்லி விட்டார்.

vinu said...

naanum nigalchiyay paarthukondiruntheaan enbathai Twiter ungalukku vanthu solli irrukkum, vazthukkal parisall

DHANS said...

//கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

intha avamaanam thevaiyaa?

ஜானு... said...

:D :D :D :D SMS super ...

எம்.எம்.அப்துல்லா said...

ஒன்றையனா பிளாக்கு ஒன்னு வச்சுகிட்டு என்னென்ன டிகால்ட்டி காட்டிகிட்டு இருக்க நீயி :)

வாழ்த்துகள் அண்ணே.

SurveySan said...

நீங்களும் ரவுடி ஆயிட்டீங்க. வாழ்த்துக்கள்.

Cable Sankar said...

அண்ணன் சொன்னது அப்படியே ஒரு ரிப்பீட் பார்சல்....

Anandkrish said...

///// # முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....

என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்./////

intha kodumaya school and college days la naanum anubavichiruken sir.
ethuku eduthalum roll no first inrathala enna kuppitu okkaravachuduvanga. lab viva, exam, practical nu ore torcher sir. appalam enaku "A" la arambikara pera vacha enga amma mela kovam varum.

Bharathi said...

vikatan twitter updates parthu ungalai twitteril follow seithen.

pinbu neegal blog ezhuthuvathu therindhu blogaium padithen.

sila karuthukkal enakku udanpadaga illathavaiyaga irundhalum ungalathu mozhi nadai padikkum aarvathai thoondukirathu. rasithen.

pin neengal Tiruppuril iruppathai therindhu konden.

saga oorkaranin parattuthalkal.

நர்சிம் said...

//HVL said...

இந்த மாதிரி இன்னும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க என் வாழ்த்துகள்!
//

HVT Sir,

மனுசன் நொந்து போய் எழுதி இருக்காரு..இதுல இதேமாதிரி நிறையன்னு வேறயா.. ரைட்ட்டு..

**
ரேடியோ ஜாக்கியா அவங்க??? மைல்ட்ட்டா ஒரு டவுட்டு இருந்துச்சு..

பொன்கார்த்திக் said...

:)

அனுஜன்யா said...

மகுடேஸ்வரனை வேலன் ரிபீட் பண்ணி விட்டதால், நான் வழக்கம் போல் வேலனை வழி மொழிகிறேன். மேலும் இன்னொரு விஷயம். என்னுடைய அவதானிப்பில் (ஆஹா), மகுடேஸ்வரன் மற்றும் செல்வா கூட அவர்கள் எழுத்து ஆளுமையில் சிறு பங்கைக் கூட சிறப்பு விருந்தினராகப் பேசுகையில் பார்க்க முடியவில்லை. மேடை மற்றும் மீடியா பேச்சு வேறு ஒரு கலை போலும்.

சாரு தன்னையும் லலிதா ராமையும் (ஆண்தான்) பற்றி பகடி செய்ததைப் போல், 'ஒரு வேளை பழைய புகைப்படத்தைப் போட்டு' எங்களையெல்லாம் ஏமாத்துறீங்களா?

இவ்வளவு சொன்னாலும், இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பழைய துள்ளல், எள்ளல் எல்லாம் இருக்கு.

அனுஜன்யா

மறத்தமிழன் said...

பரிசல்,

நல்லா சுவாரஸ்யமான எழுத்து...

"நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....

என்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும்".

அனுபவித்து நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிங்க..

"எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.

அதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.

இந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்துட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன"

உண்மை...

சாதரண வகுப்பரையில கூட மைக் கிடைச்சா விடமாட்டானுங்க...

இங்க கேட்கனுமா...

அன்புடன்,
மறத்தமிழன்.

குசும்பன் said...

குப்புற குழியில விழுந்தும் கொஞ்சம் கூட மீசைல மண்ணு ஒட்டலையா பரிசல்:)))

சூனா பானா மெயிண்டன் பன்னு மெயிண்டன் பன்னு!!!

குசும்பன் said...

தானே தடுக்கி தானே விழுந்த தானே தலைவன் நீயா நானா புகழ் பரிசல் வாழ்க வாழ்க!

குசும்பன் said...

//ஓ அப்ப நிசமாலுமே அது நீங்கதானா?//

ஆத்தா சத்தியமா அதுநான் தான்யா!

இப்படிக்கு
பரிசல்

குசும்பன் said...

டேய் திருப்பூர்ல இருந்து லாரி புடிச்சி ஆட்டோ புடிச்சி எல்லாம் வந்து சேர்ந்திருக்கேன் டா..கொஞ்சம் மைக்க கொடுங்கடான்னு கதறி அழுதிருந்தா கொடுத்திருப்பானுங்க:)))

குசும்பன் said...

பரிசல் உன் போட்டோவில் மைக் வெச்சிருப்பது கிராப்பிக்ஸ் செஞ்சி கொடுன்னு கேட்டியே அது இந்த போஸ்டில் போடதானா? சொல்லியிருந்தா இன்னும் ரெண்டு மூனு செஞ்சி கொடுத்திருப்பேனே!

குசும்பன் said...

//ஏன் இவ்வளவு குண்டாகி இருக்கிறீர்கள்? ஏன் இந்த மாற்றம்?//

விட்டா// நேற்று இல்லாத மாற்றம் என்னது? ன்னு பாட்டே பாடுவீங்க போல...

பரிசல் அந்த ரகசியத்தை சொல்லவில்லையா....:)))

jokkiri said...

//‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

********

ஹா...ஹா...ஹா...

பரிசல்.... பதிவின் மொத்தத்திற்குமான கைதட்டலை இந்த வரிகளுக்கு அளிக்கிறேனய்யா....

கலக்கல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்......

ப.செல்வக்குமார் said...

//‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

ஹா ஹா ஹா ..!! இதுதான் நிகழ்ச்சியவிட கலக்கல் .!!

ப.செல்வக்குமார் said...

// கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.//

அடடா , அப்ப நமிதா கேட்டா குடுப்பாங்களா ..?

SanjaiGandhi™ said...

தலைவா அரசியலுக்கு வாஆஆஆஆஆஆ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட நீங்க குண்டாவே இருந்ததுல்ல போல அதான் உங்க நண்பருக்கே உங்களை தெரியல.. :)

நிகழ்ச்சியின் லிங்க் போட்டால் நாங்களும் பார்க்கிறோம்.
வாழ்த்துகள்.

குசும்பன் said...

//நிகழ்ச்சியின் லிங்க் போட்டால் நாங்களும் பார்க்கிறோம்.
வாழ்த்துகள். //

அட என்னங்க நீங்க நேரில் போய் நீயா நானா பார்த்துட்டு வந்து இம்மாம் பெரிய பதிவு எழுதியிருக்காரு.இதுக்கு மேலேயும் அதை பார்க்கனுமா?:))

ஜாக்கி சேகர் said...

நான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.

‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’--//

பதிவின் முடிவில் இருந்த இந்த நகைச்சுவையை ரசித்தேன்..

ஜாக்கி சேகர் said...

பரிசல் ஒன்றில் இருந்துதான் எல்லாமே... இதை ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்..

மீடியா எப்போதும் அப்படித்தான்..

இன்னும் கலக்க வாழ்த்துகின்றேன்.,.

SanjaiGandhi™ said...

/ஜாக்கி சேகர் said...

பரிசல் ஒன்றில் இருந்துதான் எல்லாமே... இதை ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்..

மீடியா எப்போதும் அப்படித்தான்..

இன்னும் கலக்க வாழ்த்துகின்றேன்.,.//

சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ள ஜாக்கி அண்ணன் மாதிரி பெரிய மனிதர்கள் மனமுவந்து வாழ்த்துவது உங்கள் பாக்கியம் பரிசல். இது போன்ற எளிமையான பெரிய மனிதர்கள் அபூர்வம். இன்னும் உயரம் தொட வாழ்த்துகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

// ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். //

ஜாக்கி சேகர் //பதிவின் முடிவில் இருந்த இந்த நகைச்சுவையை ரசித்தேன்..//

பதிவின் முடிவிலயா? ஏண்ணே, நான் படிக்க ஆரம்பிச்சதிலேர்ந்து சிரிக்கிறேன்.

பரிசல், கலக்கல்ஸ். கிருஷ்ணபிரபு சொன்னமாதிரி மொக்கை டாபிக்னாலும் உங்களுக்கு கிடைச்ச கேப்ல சிக்ஸர் அடிச்சிதான் ஆடியிருக்கிங்க... :-)

வெண் புரவி said...

ம் ம்ம்ம் ..இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்....
தல நகரம் போய் வழுக்கி விழுந்த ஸாரி கலக்கி வந்த தல பரிசல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Madhavan said...

//‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’//

அட்லீஸ்ட் உங்களை ஞாபகம் வெச்சிருக்காரே.. 'அது'

Rajeev said...

முதலில் மிகவும் அக மகிழ்ந்தேன்.. ஆனால் பரிசல், நிகழ்ச்சி போக போக, ஏன் இன்னும் அங்கே உட்கார்ந்து இருந்தீர்கள்.. பாதியிலேயே எழுந்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது..

இணையத்தின் மூலம் உங்களை அறிந்த வரையில், இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத டாபிக்.. :-(

"என் wedding day நான் மட்டும் தான் கொண்டாடுவேன், அவர் எல்லார்க்கும் gift குடுக்க போறாரா?" - ரசித்தேன்.. ! :-)

ஆனால் அதை விட ரசித்தது - எதிர் அணி முதல் வரிசை பெண் சொன்னது - "உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு.. - அவங்க எல்லாருமே வாழ்க்கையில் ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்கு.. " :-) :-)

Rajeev said...

விடுங்க பரிசல், இப்போ தீபாவளி வருது.. கொண்டாடனுமா வேணாமானு நீங்க சொல்லுங்க தலைவா..
ஆணையிடுங்கள்.. காத்திருக்கிறோம்.. :P

இப்படிக்கு,
பரிசல் ரசிகர் மன்றம்

வெண்பூ said...

பார்ட்ன‌ர், வியாழ‌க்கிழ‌மை நைட்டு வேஸ்ட் ப‌னிய‌ன் லாரி புடிச்சி வெள்ளிக்கிழ‌மை ம‌த்தியான‌ம் வ‌ந்து கோய‌ம்பேட்டுல‌ இற‌ங்கி க‌ப்ப‌டிக்குற‌ ப‌ஸ் ஸ்டேன்டு பாத்ரூம்ல‌ அடிச்சி புடிச்சி குளிச்சி ப‌வுட‌ர் போட்டுட்டு ஸ்டுடியோக்கு போயி ரெண்டு ம‌ணிநேர‌ம் உக்காந்து அந்த‌ பொண்ணு பேசுற‌தை வேடிக்கை பாத்துட்டு வ‌ந்திருக்குறீரு.. எல்லாரும் என்ன‌டான்னா எந்திர‌ன் ஐநூறு ரூபா குடுத்து பாக்குற‌வ‌ங்க‌ள‌ ம‌ட்டும் திட்டுறாங்க‌.. :))))

இரசிகை said...

vaazhthukal......!
sms superb.....:)

ம.தி.சுதா said...

@ ILA(@)இளா said...
((((((((//எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...//
பண்றதே காப்பி-பேஸ்ட் அதுல கூட எழுத்துப்பிழையா அண்ணா? கொஞ்சம் பாருங்கண்ணே)))))))
அண்ணே அப்படியே ஒருக்கால் மண்டபம் முகாம் போய் இதை அப்படியே காட்டுங்கண்ணே சரியா பிழையாண்ணு சொல்லுவாங்கள்... நாங்கள் யாழ்ப்பாணத்து ஆளுங்கள் எங்களிண்ட பேச்சு மொழி இப்படித் தாண்ணே... தமிழ் நாட்டு தமிழ் கழுத்தளவில் நிக்குது.. ஆனால் யாழ்ப்பாணத்துத் தமிழ் முழங்கால் அளவில் தான் நிக்குது இப்போதைக்கு இறக்காது...

நர்சிம் said...

//அனுஜன்யா said...

மகுடேஸ்வரனை வேலன் ரிபீட் பண்ணி விட்டதால், நான் வழக்கம் போல் வேலனை வழி மொழிகிறேன். மேலும் இன்னொரு விஷயம். என்னுடைய அவதானிப்பில் (ஆஹா), மகுடேஸ்வரன் மற்றும் செல்வா கூட அவர்கள் எழுத்து ஆளுமையில் சிறு பங்கைக் கூட சிறப்பு விருந்தினராகப் பேசுகையில் பார்க்க முடியவில்லை. மேடை மற்றும் மீடியா பேச்சு வேறு ஒரு கலை போலும்.

சாரு தன்னையும் லலிதா ராமையும் (ஆண்தான்) பற்றி பகடி செய்ததைப் போல், 'ஒரு வேளை பழைய புகைப்படத்தைப் போட்டு' எங்களையெல்லாம் ஏமாத்துறீங்களா?

இவ்வளவு சொன்னாலும், இந்த இடுகை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. பழைய துள்ளல், எள்ளல் எல்லாம் இருக்கு.

அனுஜன்யா
//

பறவையே எங்கிருக்கிறாய் ...

HVL said...
This comment has been removed by the author.
வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துக்கள் பரிசல்.

ஜோசப் பால்ராஜ் said...

ஜூன் மாத இறுதியில் திருப்பூர்ல பார்த்தப்ப செம ஒல்லியா இருந்திங்க. அதுக்குள்ள எப்டி இவ்ளோ குண்டா?????

நிகழ்சி எங்களுக்கு இந்த ஞாயிறு தான் ஒளிபரப்பாகும். பார்த்துட்டு கருத்து சொல்றேன்.

நீங்க ஏன் போறப்பவே ஒரு மைக் சொந்தமா கொண்டு போயிருக்க கூடாது??

மங்களூர் சிவா said...

/


நீங்க ஏன் போறப்பவே ஒரு மைக் சொந்தமா கொண்டு போயிருக்க கூடாது??
/

அதானே?
:)

வள்ளி said...

கலக்கல் பதிவு!
நீண்ட நாட்களுக்குப் பின் பழைய பரிசல்.

பிரதீபா said...

பேசாம இதுக்குத் தலைப்பு 'நானா? அவரா?-சில வெறுப்புகள்' ன்னு போட்டிருக்கலாம் :) குண்டா இருக்கீங்கன்னு ஆளாளுக்குப் போட்டு கும்மீட்டாங்க ..

// எம்.எம்.அப்துல்லா said...
ஒன்றையனா பிளாக்கு ஒன்னு வச்சுகிட்டு என்னென்ன டிகால்ட்டி காட்டிகிட்டு இருக்க நீயி :)//- இப்படி சொல்லிட்டீங்களே !!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி.. இதுக்குப் பேரு பதிலுக்கு பாராட்டுவதல்ல.

உண்மையிலேயே டாப்பிக்கைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தப் பதிவில் நாசூக்கு, கச்சிதம் என உங்கள் பழைய எழுத்தைப் பார்க்கமுடிந்து மகிழ்ந்தேன். ஹிஹி.. கொஞ்ச நாட்களாக அது மிஸ்ஸாகி கடுப்பாக இருந்தது.

மாறன் said...

பரிசல்காரருக்குதானே தெரியும் அக்கறைக்கு இக்கறை பச்சை என்று.உண்மையை எடுத்துறைத்தமைக்கு மிக்க நன்றி!!!

kggouthaman said...

இனிமேல் நீயா நானா போன்ற 'கூட்டத்துல கோவிந்தா' நிகழ்ச்சிகளுக்குப் போறவங்க, சட்டைலே இடதுபக்கத்தில் ஒரு பெயர் ஐ டி கார்ட் / பெயர்ப் பலகை வெச்சிக்குங்கபா - யாரு பரிசல்காரன் என்று நான் தேடிக்கொண்டே இருந்ததில், யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதை எல்லாம் கவனிக்க முடியாமல் போனது. வீட்டுல பாத்துகிட்டு இருந்த மனைவி, மகன், மருமகள் எல்லோரும் 'உங்க ஃபிரண்டு என்று சொல்கிறீர்கள், முகம் கூடத் தெரியாதா?' என்று கிண்டல் அடித்ததுதான் மிச்சம்!

சி.பி.செந்தில்குமார் said...

kirush உங்க அனுபவம் சூப்பர்,சிறுகதை மாதிரி கடைசி லைன் நண்பனின் கமெண்ட்.(கூகுள் பஸ்ல இதை பற்றி பகிர்ந்துக்கவே இல்லையே,ஒரு வேலை நான் பாக்கலையோ?

Uma said...

neenga matum pasa athu parisal in naarkanal ellaya athu neeya naana thana dont worry vitu thalungal

Uma said...

parisal matum pasa athu parisal in naarkanal ella athu neeya naana thats it dont worry wait