Wednesday, October 20, 2010

கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனுகம் ஆன், காமினி


அந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. சுத்தம் என்பதை விட வெறுமையாக இருந்தது என்பது தான் சரியான வார்த்தை. அவள், அவன் மற்றும் அந்த சித்திரத்தைத் தவிர அவ்வறையில் வேறு பொருட்கள் இல்லை. மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தாலும் காமினியின் பார்வை சுற்றுப்புறத்தை ஆழமாக அளவிட்டுக் கொண்டிருந்தது. அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். வேறு யாரும் தேடி கண்டுபிடிக்கும் முன் வைரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வம், வெறி அவள் முகத்தில் தெரிந்தது.

‘ஆளையும் முழியையும் பாரு’ என்று சிவாவை முறைத்துக் கொண்டே, ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அதே சித்திரத்தை திரும்பவும் ஆராய்ந்தாள். அதில் சந்திரமுகி படத்தில் வருவது போல ஒரு கதவு, அதன் கீழே ஒரு மிதியடியில் “Welcome Back” என்று எழுதப்பட்டிருந்தது. வைரத்தை அடையும் ஒரே வழி இதில் மறைந்துள்ள செய்தியை அறிவது தான், ஆனால்...

Welcome Back.. மறைந்துள்ள செய்தி.. இந்த எண்ணம் ஓடியதும், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காமினி சட்டென்று எதிர்புறம் திரும்பினாள். படத்திற்கு நேர் எதிரே உள்ள சுவற்றை தட்ட, சுவற்றோடு ஒன்றி போய் இருந்த கதவு திறந்து கொண்டது. அந்த அறையின் சுவற்றில் பெரிதாக 234445387 என்ற நம்பர் எழுதியிருந்தது. அதன் பக்கத்தில் கண், கடல் ஆகிய படங்களும், அதன் அருகில் ‘நீ’ என்ற வார்த்தையும் எழுதியிருந்தது. சிவா அவளை குழப்பத்துடன் பார்க்க, காமினி ஒரு புன்னகையுடன் தன் கைபேசியை இயக்கிக் கொண்டிருந்தாள்.

‘என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில உள்ள SM ஹாஸ்பிடலோட நம்பர் அது. கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. சீக்கிரம் அங்கே போவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் சிவா காமினியின் மூக்கில் ஒரு கர்சீப்பை வைத்து அழுந்த மூடினான். இது என்ன வாசனை, என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே காமினி மூர்ச்சையானாள்.

------------------------------------------------

மயக்கத்தில் இருந்து காமினி எழுந்த போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முகத்தில் மாஸ்க், கையில் ட்ரிப்ஸ் மற்றும் சில வயர்களும், அங்கிருந்த மெஷின்களும் அவளை பயமுறுத்தின. டாக்டர் சிவாவிடம் “உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.

‘சிவா ஆபத்தானவன். ஏதோ சதி நடக்கிறது. இவனிடம் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள். குறிப்பில் இருந்த அறை இதுவாகத் தான் இருக்கும் என்பது புரிய, அறை முழுவதையும் கண்களால் துழாவினாள். எழுந்து தேடலாம் என்று மாஸ்க்கை கழட்ட போகும் போது டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். வேறு வழியில்லாமல் பாதி முடிய கண்களால் அசுவாரசியமாக நோட்டமிட்டவள் பார்வையில் அது பட்டது.

ரிப்போர்ட்டில் எதையோ எழுதிவிட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நல்லவேளை சிவாவிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே பைப்பை பிடித்து இறங்கியவள், பைக்-கை ஸ்டார்ட் செய்து அவள் வருகைக்காக ரெடியாக நின்ற சிவாவை பார்த்து திகைத்தாள்.

‘உனக்கு.. உங்களுக்கு எப்படி நான் வருவது தெரியும்’ என்று திணறியவாறே கேட்டாள். ‘என் மனைவி என்றவுடன் உன் பல்ஸ் ரேட் ஏறியதை அந்த மெஷின் காட்டிவிட்டது. மயக்கம் தெளிந்து விட்டதால், குறிப்பை கண்டுபிடிக்க உனக்கு டைம் கொடுத்து விட்டு, உனக்காக இங்கே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்’ என்றான் சிவா. ‘சரி, என்ன கண்டுபிடுத்தாய்’ என்று கேட்டவன், அவள் பதில் சொல்ல தயங்கவும், ‘என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது, போலிஸுக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்பது உனக்கு இடப்பட்ட உத்தரவு. மறந்து விடாதே’ என்று அழுத்தமாக கூறினான்.

காமினி அந்த அறையில் இருந்த எடுத்து வந்த டவலை அவனிடம் காண்பித்தாள். ‘இந்த டவலில் இருக்கும் Patternஇல் Morse Code உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், ரகசிய செய்திகள் இந்த முறையில் நெய்யப்பட்டு, ஒற்றர்கள் அணியும் ஆடைகளில் சேர்க்கப்பட்டன. இது ஒரு வகை Steganography. இந்த காலத்தில் படங்களுக்குள் செய்திகளை ஒளித்து இண்டெர்நெட் மூலமாக அனுப்புவது போல’ என்று சொல்லிவிட்டு அந்த டவலை ஆராய்ந்தாள். இன்னும் அங்கே நிற்பது ஆபத்து என்பதால், இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி அருகிலிருக்கும் பார்க்-கில் நுழைந்தனர்.

அந்த டவலில் இருக்கும் குறிப்பை படித்து கண்டுபிடிக்க காமினிக்கு அரை மணி நேரமானது. முடித்ததும், அந்த பேப்பரை சிவாவிடம் நீட்டினாள். அவ்வளவு நேரம் சோம்பலுடன் படுத்துக் கொண்டிருந்த சிவா ஆர்வத்துடன் எழுந்து படித்தான். அதில்..

55, LAKSHMANAN ST, GANDHI NAGAR, PALLAVARAM

A THEFT REVISION

என்று எழுதியிருந்தது. “அந்த அட்ரெஸ் காலையில் நம்ம முதலில் இருந்த அதே இடம் தான். ஆனா, ரெண்டாவது லைன் தான் என்னன்னு புரியல. எதற்கும் அங்கேயே போய் பார்ப்போம்” என்றாள் காமினி.

அடுத்த பதினைந்து நிமிடத்தில், காலையில் பார்த்த அதே ‘Welcome Back’ அவர்களை திரும்பவும் வரவேற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மூலை முடுக்கு எல்லாம் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வளவு அலைந்த பின்னும் வைரம் கிடைக்கவில்லை என்ற நினைப்பு சோர்வை அதிகமாக்கியது. எரிச்சல் மேலிட அவனுடைய டீசர்ட்டில் இருந்த “Admirable?? I’m real bad!!” என்பதை பார்த்த உடன் கைபேசியை இயக்கினாள்.

வியப்பு மேலிட சிவாவைப் பார்த்து “Anagram!! வார்த்தை விளையாட்டு!! A THEFT REVISION என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை பிரித்து சேர்த்தால் ‘IT IS OVER THE FAN’ என்று வருகிறது” என்றாள். தாமதிக்காமல், சிவா ஃபேனை கழட்ட மேலிருந்து ஒரு வெல்வட் டப்பா கீழே விழுந்தது. உள்ளே பளபளவென்ற வைரமும் ஒரு அட்ரஸும் இருந்தது. நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த அட்ரஸுக்கு இருவரும் விரைந்தனர்.

அந்த வீட்டின் வரவேற்பறையை நுழைந்த அந்த நிமிடம், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. உடனே, காமினி அவன் பின்புறம் பார்த்து “நீங்களா??” என்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள். அதைக் கேட்டு சிவா தடுமாறிய அந்த நொடியில் அவளுடைய கராத்தே கை கொடுக்க, அடுத்த நொடி துப்பாக்கி காமினியிடம் இடம் மாறியிருந்தது. அதே நேரம், அறைக்குள் வந்து கொண்டே,காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“இல்லை, என்னை அறியாமல் எதாவது சதி வேளையில் ஈடுபடுத்த பட்டிருக்கிறேனோ-ன்ற சந்தேகம் இருந்ததால், காலையில் இருந்து இங்கே நுழையும் வரை உள்ள தகவல்களை எல்லாம் என் மொபைல் வழியாக ஒரு mailஆக போலீசுக்கு எழுதி வைத்திருக்கிறேன். நாளை 10 மணிக்கு முன் நான் அதை delete செய்யாவிட்டால் அது automatically send ஆகிவிடும்.” என்று சொல்லிவிட்டு பரந்தாமனை பார்த்தாள்.

பரந்தாமன் சிரித்த படியே “வெல்டன் காமினி.. எங்கள் குழுவில் Investigative Journalist-ஆக சேர்வதற்கு முழு தகுதியும் உனக்கு இருக்கிறது. இந்த வேலைக்காக நாங்கள் தேர்வு செய்த ஐந்து பேரில் நீ தான் முதலில் வைரத்தை கண்டுபிடித்திருக்கிறாய். உங்களுடைய அறிவையும், ஆர்வத்தையும், தைரியத்தையும் சோதிப்பதற்காகவே இந்த போட்டி. உங்களை கண்காணிக்க ஒரு சீனியரை ஒவ்வொருவருடனும் அனுப்பி வைத்தோம். அப்படி உன்னுடன் வந்தவர் தான் சிவா.


எங்களை முழுவதாக நம்பாமல், நாங்களும் உன்னை சதி வேலையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணி போலிசுக்கு mail எழுதிய உன் சாமர்த்தியத்தை பாராட்டுகிறேன். நாளையில் இருந்து நீ வேலையில் சேரலாம்” என்றார். காமினி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னுடைய லட்சிய கனவான வேலையை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.

*******************************************

குறிப்பு: நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த படி - அனு எழுதிய சிறுகதை இது. பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தவரின் இந்த முதன் முயற்சியைப் பாராட்டுவோம்.
-பரிசல்காரன்
.

66 comments:

R. Gopi said...

I the frist

R. Gopi said...

நல்லா இருக்கு பரிசல். உங்க வலைப்பூவில் படித்த கதைகளிலேயே நல்ல கதை இதுதான்:)

சுசி said...

பாராட்டுக்கள் அனு. நல்லா எழுதி இருக்கிங்க.

சுசி said...

பரிசு பெற வாழ்த்துக்கள்.

Unknown said...

Gopi :))))))

Unknown said...

வாழ்த்துகள் அனு. 

Unknown said...

கதை நல்லா இருக்குங்க.வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

கதை அருமை.வாழ்த்துக்கள்.

சிவக்குமரன் said...
This comment has been removed by the author.
அனு said...

@Gopi Ramamoorthy

//கதைகளிலேயே நல்ல கதை இதுதான்//

நீங்க என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே?? ;-)

------------------------
ரொம்ப நன்றிங்க...

அனு said...

@Gopi Ramamoorthy

ஆனா, உங்க கூட எல்லாம் என்னால compete பண்ண முடியாதுங்க. மூணே மூணு லைன்ஸ்ஸ வச்சு வித விதமா எத்தனை கதை எழுதி தள்ளியிருக்கீங்க.. :)
Hats off.

அனு said...

@சுசி

நன்றி சுசி..

நீங்களும் ரமணிசந்திரன் Fanஆ? நான் அவங்க AC. Same Pinch :-)
அவங்க கதைகள்ல வர்ற மாதிரி, சிவாவுக்கும் காமினிக்கும் chemistry work out ஆகி அவங்க பொண்ணுக்கு 'சிவகாமி'ன்னு பேரு வைக்கலாமா-ன்ற அளவுக்கு போய்ட்டாங்க ;-)

But சிறுகதை, சற்றே பெரிய சிறுகதையாகி அப்புறம் நாவல் அளவுக்கு வந்ததால அதையெல்லாம் edit பண்ணிட்டேன் :-)

அனு said...
This comment has been removed by the author.
அனு said...

@முகிலன்

//Gopi :))))))//

நானும் நானும்!! நானும் சொல்வேன்!!

"Gopi :))))))"

//வாழ்த்துகள் அனு. //

நன்றி முகிலன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள் முகிலன்..

அனு said...

@கலாநேசன்

ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

அனு said...

@asiya omar
ரொம்ப நன்றிங்க..

கதையில ரொமான்ஸ் எல்லாம் நுழைச்சு கலக்கியிருக்கீங்க.. :) உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

செல்வா said...

// கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. /

இது கலக்கலா இருக்குங்க அக்கா .,

செல்வா said...

வாய்ப்பே இல்லை அக்கா , கதை கலக்கல் ..!! ரொம்ப நல்லா வந்திருக்கு ..
நான் இப்படி ஒரு முடிவ எதிர்பார்கலை..!! எல்லோரையுமே நல்லவங்களா காட்டிருக்கீங்க .!

அனு said...

@ப.செல்வக்குமார்

//இது கலக்கலா இருக்குங்க அக்கா .,//

தேங்க்ஸ் தம்பி...

//எல்லோரையுமே நல்லவங்களா காட்டிருக்கீங்க //

ஹிஹி.. ஏன்னா, நான் ரொம்ம்ம்ம்பபப நல்லவ ;-)

உங்க 'காட்சிப்பிழை' கலக்கல் செல்வா.. நல்லா யோசிச்சிருக்கீங்க.. நீங்க பண்ணின ஹோம்வொர்க் கதையில தெரியுது. பரிசு பெற வாழ்த்துக்கள்...

அனு said...

அடடா.. சொல்ல மறந்துட்டேனே..

@பரிசல்

இந்த கதை இத்தனை பேரை சென்றடைந்தது உங்களால் தான். இந்த கதையை உங்களுடைய வலைப்பூவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..

செல்வா said...

///உங்க 'காட்சிப்பிழை' கலக்கல் செல்வா.. நல்லா யோசிச்சிருக்கீங்க.. நீங்க பண்ணின ஹோம்வொர்க் கதையில தெரியுது. பரிசு பெற வாழ்த்துக்கள்...////

எதிர்கட்சியா இருந்தாலும் பாராட்டுனதுக்கு நன்றிங்க..!!
ஹி ஹி ஹி ..!!

R. Gopi said...

\\@பரிசல்

இந்த கதை இத்தனை பேரை சென்றடைந்தது உங்களால் தான். இந்த கதையை உங்களுடைய வலைப்பூவில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.. \\

இந்த ஐடியா நமக்குத் தோணாம போச்சே. சரி இப்போ ஒரு கதை எழுதி தரேன். உங்க பதிவுல போடுங்க பரிசல்:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

VKS கட்சியின் மானத்தை காப்பாற்றிய தலைவி அனு அவர்களுக்கு வாழ்துக்கள். கதை ரொம்ப நல்லா இருக்குங்க

விக்னேஷ்வரி said...

முதல் முறை எழுதறாங்களா.. ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள் அனு.

அனு said...

@ரமேஷ்

//கதை ரொம்ப நல்லா இருக்குங்க//

நன்றி ரமேஷ்.. அப்போ, VASக்கு எதிரா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிடலாம்னு சொல்றீங்க?? ;)

அனு said...

@விக்னேஷ்வரி

ரொம்ப நன்றிங்க.. உங்க எழுத்துக்கு நான் மறைமுக விசிறி :)

நான் விரும்பி படிச்சவங்கல்லாம் என்னை பாராட்டுறது சந்தோஷமா இருக்கு :)

அருண் பிரசாத் said...

கலக்கிட்டீங்க அனு! பரிசு பெற வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! பரிசு பெற வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

அனு said...

@அருண்

//கலக்கிட்டீங்க அனு! பரிசு பெற வாழ்த்துக்கள்//

நன்றி அருண். வாழ்த்துக்கும், கதைய promote பண்ணினதுக்கும் :)

அனு said...

@எஸ்.கே

//வாழ்த்துக்கள்! பரிசு பெற வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க..

மூன்று வாழ்த்துக்கள்??
ஓ.. மூணு பரிசும் எனக்கு தானா??

வெங்கட் said...

கதை சூப்பரா இருக்கே..
பரிசு பெற வாழ்த்துக்கள்..

பெசொவி said...

அப்பாடா, VAS தலைவர் வெங்கட் கமெண்ட் போட்டப்புரம்தான் நான் கமெண்ட் போடனும்னு நினைச்சேன். அதனால இப்ப போடறேன்.

அனு, கலக்கிட்டீங்க. என்ன, கொஞ்சம் சைன்ஸ் எல்லாம் சொன்னீங்க, அதான் புரிய கொஞ்சம் தாமதம் ஆகுது.

Congrats!

வெங்கட் said...

வாழ்த்துக்கள்.., வாழ்த்துக்கள்..

கதையை எழுதிய அனுவுக்கும்.,
அதை சொன்ன அவர் கணவருக்கும்..!

:)

ஸ்ரீராம். said...

நல்ல கற்பனை.

அனு said...

@வெங்கட்

//வாழ்த்துக்கள்.., வாழ்த்துக்கள்..
கதையை எழுதிய அனுவுக்கும்.,
அதை சொன்ன அவர் கணவருக்கும்..!//

நன்றி வெங்கட்..

அவர் கதை சொன்னது போன மாசம்.. நான் சப்மிட் பண்ணியது இந்த மாசம்.. அது வேற.. இது வேற.. :)

அனு said...

@பெ.சொ.வி

நன்றிங்க.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

// என்ன, கொஞ்சம் சைன்ஸ் எல்லாம் சொன்னீங்க, அதான் புரிய கொஞ்சம் தாமதம் ஆகுது.
//

புரியலையா.. அப்போ, நானும் இலக்கியவாதி ஆகிட்டேனா??

அனு said...

@ஸ்ரீராம்

//நல்ல கற்பனை.//

நன்றிங்க.. நல்ல கதை விடுறேன்னு சொல்றீங்க??

Gayathri said...

நல்லா இருக்கு அணு வாழ்த்துக்கள்

அனு said...

@Gayathri

ரொம்ப நன்றிங்க..

anujanya said...

நீங்களும் ஆதியும் ரூம் போட்டு (நிச்சயம் கார்க்கியின் பங்கும் இருக்க வேண்டும்) இவ்வளவு குழப்பமான விதிகளுடன் கதைப் போட்டி வைத்த போது 'அடச்சே! நல்ல நாளிலேயே நாம நாயகம். இதில இந்த மாதிரி விதிகள் வேறா? சரி ஓரமா ஒதுங்கி விடலாம்' னு இருந்தேன். இவ்வளவு கதைகள் மக்கள்ஸ் எழுதுறப் பார்த்தா....நல்ல வேளை..என் முடிவு சரிதான்.

இது வரை ஸ்ரீதர் நாராயணன், TVR சார் மற்றும் அனுவின் இந்தக் கதை மட்டுமே படித்து இருக்கிறேன். TVR கதையை அழகாக, குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கிறார். ஸ்ரீதரிடம் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம்.

இந்தக் கதை கலக்கல். முதல் முறை கதை எழுதியிருக்கும் அனுக்கு என் வாழ்த்துகள். நான் Crossword பிரியன் என்பதால் jumbling, anagrams உத்திகளை ரசித்தேன். நிறைய எழுதுங்கள். அதனுடன் நிறைய வாசியுங்கள். All the best.

அனு என்ற பெயரில் எழுதினால் ...... என்னமோடா மாதவா... எழுத்து நல்லாவே பரிமளிக்கிறது.

அனுஜன்யா

Radhakrishnan said...

வாழ்த்துகள் அனு. நன்றாக இருக்கிறது.

அனு said...

@அனுஜன்யா

நீங்க சொன்னது சரி தான். சவால் விட்டு இவ்வளவு பேரை எழுத வச்சுட்டாங்க.

//ஓரமா ஒதுங்கி விடலாம்' னு இருந்தேன்//

நீங்க இப்படி சொல்லலாமா?

//நான் Crossword பிரியன் என்பதால்//

நானும் நானும்!!! Clues & Solutions பத்தி இன்னும் விளக்கமா எழுதியிருந்தேன்.. நீளம் கருதி குறைக்க வேண்டியதா போச்சு :(

//அனு என்ற பெயரில் எழுதினால் எழுத்து நல்லாவே பரிமளிக்கிறது.//

ஹிஹி.. உங்க ஆசிர்வாதம்.. :)

அனு said...

@ V.Radhakrishnan

ரொம்ப நன்றிங்க.. :-)

vinu said...

i think i read almost hafl of the list stories, which gave by parisal and this one[yours]quite interesting, good job, a treat to read..............

அன்பரசன் said...

வாழ்த்துகள் அனு...

Anonymous said...

அனு கதை நல்லா இருக்கு..
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

அனு said...

@vinu

Thanks vinu. I am honoured..
Do read the remaining half too.. There are quite many interesting stories out here. Happy Reading!!!

அனு said...

@அன்பரசன்

ரொம்ப நன்றிங்க!!!

அனு said...

@Balaji saravana

ரொம்ப நன்றிங்க... :-)

அனு said...

ஐ.. me the 50th!!!! :-) :-)

ராஜகோபால் said...

அனு ! நல்லா எழுதி இருக்கிங்க.

வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

எனது 'சிறு'கதை லிக்க் கீழே கொடுத்துள்ளேன். (அனு கதையைப் பார்த்த பிறகு சொல்லுக்க வெட்கமாக தான் இரருக்கு). கமென்ட்ஸ் ப்ளீஸ்.
http://middleclassmadhavi.blog.co.in

அனு said...

@ராஜகோபால்

ரொம்ப நன்றிங்க!!

அனு said...

@ middleclassmadhavi

கமெண்ட்ஸ் அங்கே.. :)

Anisha Yunus said...

பிரில்லியண்ட் ஜாப் அனு. உண்மைலயே சின்ன கதை, அழகான நடை. அலுப்பு தட்டாத வேகம். பரிசு பெற வாழ்த்துக்கள்...!!

:)

Anisha Yunus said...

//இந்த ஐடியா நமக்குத் தோணாம போச்சே. சரி இப்போ ஒரு கதை எழுதி தரேன். உங்க பதிவுல போடுங்க பரிசல்:)//

ஆஹா....ஆரம்பிச்சுட்டான்யா....ஆரம்பிச்சுட்டான்யா...

Madhavan Srinivasagopalan said...

அனு.... கதைல ரெண்டு வரிகள் ரொம்ப சூப்பரா இருக்குது..

என்ன வரிகளா.... இதான்..

1 ) -------------------------------------------
2 ) ******************************

அனு said...

@அன்னு

ஹிஹி.. தேங்க்ஸ்ங்க..

[ஒரு வேளை பெயர் ராசியோ?? :-) ]

பதிவர்களை வச்சு கலக்கல் கதை போட்டது நீங்க தானே?? பரிசு பெற வாழ்த்துக்கள்..

அனு said...

@Madhavan

முதல் லைன் மட்டும் தாங்க என்னோடது.. ரெண்டாவது பரிசல் அவர்களோடது..

ஸோ, பாதி க்ரெடிட் கோஸ் டூ Mr.பரிசல் !!!

R. Gopi said...

எனக்குக் காதுல புகை வருது. 59 பின்னூட்ட்டம். இன்ட்லில வேற ஹிட்டு.

பரிசல் சீக்கிரமா வேற பதிவு ஒன்னு போடுங்க. அனு ஒரே பதிவுல பேமஸ் ஆயிட்டாங்க

vinu said...

i bet you ,


this story by Anu is the first prize, i read all the stories ennai baathithaa matoru story vibhi vasanaiyum kaamini[http://palaapattarai.blogspot.com/2010/09/blog-post_20.html] ithvum

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

kadhai superb MR.PARISAL

vinu said...

ennaa aachu naan potta comment publish aagali


any problem........

அனு said...

@vinu

//i bet you ,
this story by Anu is the first prize//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கீட்டிங்க :) :)

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க!!!

குறையொன்றுமில்லை. said...

வாத்துக்கள். கதை ரொம்ப நல்லா இருக்கு. நா இன்னிக்குதான் பாத்தேன்.
லேட்டா சொல்ரதுக்கு சாரி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனு!
முதல் கதை!
ஆனால், முத்தான கதை!
வாழ்த்துக்கள்!
(பிளாக் ஆரம்பிச்சா...
எனக்குத் தெரியப்படுத்தவும்.)