Thursday, October 14, 2010

சவால் சிறுகதைப் போட்டி - அப்டேட்

வால் சிறுகதைப் போட்டிக்கு இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன.

உங்கள் ஆர்வமும், பங்கேற்பும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

கதைகளின் பெயர் மற்றும் இணைப்பை நாளையோ, நாளை மறுநாளோ தருகிறேன்.

சிறுகதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15 அக்டோபர் இந்திய நேரம் 12 மணி.

முடிவுகள் நவம்பர் 15 அன்று வெளிவரும்.

நேரடியாக, மறைமுகமாக இந்த சிறுமுயற்சிக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

போட்டி பற்றி அறிய http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html


.

18 comments:

சுசி said...

வாழ்த்துக்கள் எல்லாருக்கும்.

pichaikaaran said...

"இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன"

.மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.. இணைய உலகில் தமிழ் வெற்றிகொடி நாட்ட இது போன்ற முயற்சிகள் உதவும்..
இதற்கான உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..
நான் அட்டாச்ட் கோப்பாக அனுப்பினேன்.. ஆனால் கட் அண்ட் பெஸ்ட் செய்து அனுப்பினால்தான் வசதி என்று பதிலளித்திருந்தீர்கள்.. அந்த முதல் வரியை பார்த்த்தும், பிழையை சரி செய்து அனுப்ப சொல்லி இருக்கிறீர்கள் என நினைத்தேன்.. ஆனால் நீங்களே சரி செய்து அனுப்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.. பின் இரவு நேரத்திலும் உழைக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்

R. Gopi said...

பரிசல். எனக்குப் பரிசெல்லாம் கிடைக்கும்னு தோணலை.நிறைய உற்சாகத்துடன் பங்கு பெற்ற கோபி அப்படின்னு எங்கயாவது ஒரு இடத்துல சொல்லிடுங்க. அது போதும்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் பரிசல்

தங்களுக்கும், பங்கு பெறும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் - பொறுப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

விஜி said...

அந்த 50தில எங்களோடதும் இருக்குன்னு நம்பறேன் :))

thiyaa said...

வாழ்த்துக்கள்

நர்சிம் said...

//"இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன"

.மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.. இணைய உலகில் தமிழ் வெற்றிகொடி நாட்ட இது போன்ற முயற்சிகள் உதவும்..
இதற்கான உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..
நான் அட்டாச்ட் கோப்பாக அனுப்பினேன்.. ஆனால் கட் அண்ட் பெஸ்ட் செய்து அனுப்பினால்தான் வசதி என்று பதிலளித்திருந்தீர்கள்.. அந்த முதல் வரியை பார்த்த்தும், பிழையை சரி செய்து அனுப்ப சொல்லி இருக்கிறீர்கள் என நினைத்தேன்.. ஆனால் நீங்களே சரி செய்து அனுப்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.. பின் இரவு நேரத்திலும் உழைக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் //

நெகிழ்வு. இந்த வார்த்தைகள் பரிச்சயமாக இருக்கிறது.

வாழ்த்துகள் அனைவருக்கும்

செல்வா said...

ஹை ., நானும் அனுப்பி இருக்கேன் ..!!

Radhakrishnan said...

வாழ்த்துகள்.

எனது கதைக்கு சில விமர்சனங்கள் வந்து சேர்ந்து விட்டன.

எப்படி சிறுகதை எழுதக் கூடாது அப்படிங்கிர ஒரு பிரிவுக்கு பரிசு தந் தீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நானும் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியுள்ளேன்.. பரிசீலித்துப் பாருங்கள்.

Unknown said...

"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்..
மேலும் படிக்க http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_14.html

a said...

பரிசல் : நல்லதொரு விசயத்தை முன்னெடுத்து செல்வதர்க்கு வாழ்துக்கள்....

கௌதமன் said...

ஹய்யா நாங்க மூன்று கதைகள் அனுப்பியிருக்கின்றோம்.
(௦எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழு.)
பின் குறிப்பு: கதைகளின் சுட்டி எதுவும் அனுப்பவில்லை.
இன்னும் ஒரு கதையை வலையில் பதிவிடவில்லை.
ஒன்றும் ஆட்சேபம் இல்லையே?
முதல் கதைக்கு அக்னாலட்ஜ்மெண்ட் வந்தது. மற்ற இரண்டுக்கும் வரவில்லை.

Ramesh said...

என்னோட சிறுகதையை இன்னிக்குதான் அனுப்பினேன்..

Anisha Yunus said...

கடசி நாள்ல கதைகள் ஜாஸ்தியாயிடுச்சு போல? நல்ல வேளை கடைசி நாளையும் விடக்கூடாதுன்னு கோபி இன்னும் ஒரு கதை எழுதல...(அவர் எப்போதான் கதை எழுதினார்னு யாரும் கேக்கப்படாது )

சரி..சரி...சீக்கிரம் மீதி தகவலையும் சொல்லிடுங்ணா... :)

RVS said...

என்னிக்கு ரிசல்டு.... நகத்தை கடிச்சு கடிச்சு துப்பிக்கிட்டு இருக்கோம்.. ரொம்ப லேட் பண்ணினா விரலை கடிச்சு துப்பிடப்போறோம் பரிசல்... நிறைய பேரோட விரல் வாழ்க்கை உங்க கைல தான் இருக்கு.. ASAP சொல்லிடுங்க... தேங்க்ஸ்..

vinu said...

neenga receive pannuna 50 kathaila 49 thiru.gopi avargal anupiyathunnu thaeriyum antha 50 vathu story yaruppa.........


waiting to wish the winners...