Wednesday, December 30, 2009

3 IDIOTS – A Genius Movie!


ருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! இந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 இடியட்ஸ்.

***********************

விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல நைஸாக கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “ஐம் ஓகே.. நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

இந்த ஆரம்பக்காட்சியிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.

படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

ராகிங் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து ஹீரோயிஸமெல்லாம் காட்டவில்லை. ஆனால் அறிவார்த்தமாக ஹீரோவாகிறார். இப்படித்தான் படம் நெடுக. இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.

அதுவும் இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?

இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்!



இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு சல்யூட்! சேட்டன் பகத்தின் FIVE POINT SOMEONE நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர். முன்னாபாய் எம்பிபிஎஸ், லஹே ரஹோ படங்களைப் போலவே இதிலும் வசனங்கள் (ஹிரானி + அபிஜத் ஜோஷி) படுஷார்ப். நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் அவரை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. (பார்த்ததேயில்லைங்கறது வேற விஷயம்!) லே லடாக் சாலையில் அந்த கார் செல்வதை இப்படியெல்லாம் காட்ட முடியுமா! வெல்டன்!

ஷர்மான், பேமன் ஈரானி, கரீனா, கரீனாவின் சகோதரி என எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன (அல்லது நாம் அப்படி நினைக்கும்) கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த ஹாஸ்டல் சிறுவன், கரீனாவின் நிச்சயிக்கப்பட்ட மணமகன் (Price Tag!), பேமான் ஈரானிக்கு முகச்சவரம் செய்யும் நபர் என்று எல்லாருமே கச்சிதம் என்றாலும் அந்த ஹாஸ்டல் சிறுவன் கவர்கிறான்!

தன் ஈகோவை விட்டு, பேமன் ஈரானி மழைநாளில் அமீரிடம் சரணடையும் காட்சியில் அவர் நடிப்பு அபாரம். அதேபோல, அந்த ALL IS WELL எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... க்ளாஸ்!


மொத்தத்தில் -

3 IDIOTS - A GENIUS MOVIE!

(முன்னாபாய் வசூல்ராஜா ஆனதுபோல, இது தமிழில் வருமா என ஏங்க வைக்கிறது. வந்தால் சூர்யா மிகவும் ஆப்டாக இருப்பார்.)


.

28 comments:

செ.சரவணக்குமார் said...

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம். நன்றி

எறும்பு said...

//வந்தால் சூர்யா மிகவும் ஆப்டாக இருப்பார்.//

Why not kamal as a student?
;)

குசும்பன் said...

// இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “ஐம் ஓகே.. நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

இந்த ஆரம்பக்காட்சியிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் //

ஓ அதுமாதிரி நீங்களும் தியேட்டரை விட்டு ஓடிபோக கூடாதுன்னு இப்படி ஒரு ஏற்பாடா? நம்ம தளபதிக்கு இந்த ஐடியாவை பரிந்துறை செய்யலாமே::)

சுரேகா.. said...

எப்ப போவோம்?

ஒரு நாள் படம் பாக்கவே ஒதுக்கி...
சுத்திட்டு வரணும்..!

3இடியட்ஸ் மறுபடி பாக்க தயாரா இருங்க!!

:)

பரிசல்காரன் said...

@ செ.சரவணகுமார்

நன்றி.

@ ராஜகோபால்

கமல்? அதுசரி!

@ குசும்பன்

கார்க்கி.. ஹெல்ப்பூஊஊ..

@ சுரேகா

இன்னும் பத்துவாட்டி பாக்கலாம் ஃபெரெண்டு. வாங்க..

குசும்பன் said...

@ சுரேகா

இன்னும் பத்துவாட்டி பாக்கலாம் ஃபெரெண்டு. வாங்க..//

அவரை எதுக்கு பெரண்டு வர சொல்றீங்க? கொஞ்சம் குண்டா இருக்கார் என்பதற்காக இப்படி எல்லாம் கிண்டல் செய்யக்கூடாது பரிசல்!

நாராயண நாராயண

கார்க்கிபவா said...

கட்டிப்போட்டு படம் பார்க்க செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லையோ என்னவோ.. அவங்களா வந்துதான் குவியறாங்களே தியேட்டரல..

//நம்ம தளபதிக்கு இந்த ஐடியாவை பரிந்துறை செய்யலாமே://

பரிந்துரை செய்வது பெரிய விஷயம்தான் . அதுக்குன்னு பரிந்துறை என்று சொல்வது டூ மச் குசம்பரே

பரிசல், இடியட்ஸ் என்று பேர் இருப்பதற்காக சூர்யா சரியான சாய்ஸ் என்று சொல்வதெல்லாம் ஓவரு..

கார்க்கிபவா said...

//3 IDIOTS – A Genius Movie!//

நான் இதை ஹிந்தி மூவி என்று நினைத்துக் கொண்டேன்

அமுதா கிருஷ்ணா said...

விஜய் தான் இப்ப காலேஜ் பையன் மாதிரி இருக்கிறார்....வசனம் எல்லாம் புரிந்து??ஹிந்தி தெரியுமா பரிசல் சார்...

Ganesan said...

கிராமத்து நினைவலைகள்---புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_29.html

M.G.ரவிக்குமார்™..., said...

என் சாய்ஸ் சூர்யா,மாதவன் & ப்ரசன்னா....போமன் இரானிக்குப் பதிலாய் ப்ரகாஷ்ராஜ்!முக்கியமாய் நல்ல டைரக்டரிடம் சிக்க வேண்டும்!..

பரிசல்காரன் said...

@ குசும்பன்

டேஏஏஏய்ய்ய்ய்...

@ கார்க்கி

அதே - டேஏஏய்ய்ய்...

@ அமுதா கிருஷ்ணா

ம்

@ காவேரி கணேஷ்

விளம்பர தொகையை வங்கியில் செலுத்தவும்!

@ நேசன்

ஈரானிக்கு பிரகாஷ் ராஜை நானும் நினைத்தேன்.

ஆனால் பிரசன்னா.. ம்.... யோசனையாக இருக்கிறது.

வொய் நாட் சித்தார்த்? அவருக்குக் கொஞ்சம் பணக்காரக் களை.. அதனாலா?

இல்லையென்றால் தனுஷ்? ( பேசி ஒத்துக்க வைக்கலாம்க)

Prathap Kumar S. said...

பரிசலண்ணே...விமர்சனம் தூள்...
குசும்பன் எல்லா இடத்துலயும் புகுந்து ஆட்டைகலச்சிப்புடுறாரு... அவரோட கமண்டுக்கு சிரிக்கவா பதிவை படிக்கிறதானு தெரில...

கார்க்கி சகா, 35 வயசுல இ.தளபதி ஸ்கூல் ஸ்டுன்டா நடிக்கும்போது அவரைவிட வயசுல சின்னவரான சூர்யா 10 வயசு புள்ளைக்க அப்பனா நடிச்சவரு சகா... அவருதான் இதுக்கு ஆப்ட்...என்னமோ போங்க...

பரிசல்காரன் said...

@ நாஞ்சில் பிரதாப்

//குசும்பன் எல்லா இடத்துலயும் புகுந்து ஆட்டைகலச்சிப்புடுறாரு... /

ஆட்டைக் கலைக்க அவரென்ன வெட்னரி டாக்டரா?

ஸ்வாமி ஓம்கார் said...

நான் இங்க இருக்கேன்... நீங்க அங்க இருக்கீங்க.. கணக்குல ஒன்னு குறையதே...

-பதிவின் தலைப்பை பாதி படித்து பின்னூட்டம் இடுவோர் சங்கம் :)

யோ வொய்ஸ் (யோகா) said...

i'm seconding saga kaarkki

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல விமர்சனம் கிருஷ்ணா. இங்கே டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல். சீக்கிரமே போயிட்டு வர்றோம்.

Anonymous said...

நல்ல விமர்சனம் கிருஷ்ணா.

Kumky said...

நல்லாருக்கு கே.கே.
படமும் விமர்சனமும்..

Kumky said...

ஆப் ஹிந்தி மே போல்றாரகு..?

அறிவிலி said...

பார்த்துருவோம்.

ராஜ நடராஜன் said...

எல்லோரும் விமர்சனம் போட்டே பாக்கெட்ல இருக்கிற காசை காலி செய்ய வச்சிடுவீங்க போல இருக்குதே:)

Rajalakshmi Pakkirisamy said...

//இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார்//

லாஜிக் சரி இல்லையென்றாலும் (Student of the year vera), இதை தவிர்த்து பார்த்தால் படம் excellent. சூர்யாவை தவிர வேறு யாராலும் அமீரை போல் நடிக்க முடியாது :)

Prabhu said...

சூர்யாவா? அவர் ஆதவன் மாதிரி ஒலக ஆக்‌ஷன் படத்துல நடிக்க போயிட்டாரு....

CS. Mohan Kumar said...

அருமையான விமர்சனம். நன்றி நண்பா

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான விமர்சனம், படம் பார்க்கும் ஆவல் கூடியிருக்கிறது

வாழ்த்துக்கள் பரிசல்

MyFriend said...

ரெண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். I felt it is the best movie to end with in year 2009.

Such a wonderful movie. அமீரின் ரசிகை நான். ஒவ்வொரு படத்துலேயும் ஒரு வித்தியாசம் இருக்கும். கஜினி அமீருக்கும் ஈடியட்ஸ் அமீருக்கும் என்ன ஒரு வித்தியாசம்! அப்பப்பா!!

45 வயது ஹீரோ நம்மூருல இன்னும் ஹீரோதாம்பா.. ஆனா முகத்துலே அந்த சுருக்கமே காட்டி கொடுத்துடும் அவர் வயசானவர்ன்னு. ஆனால், அமீர்! 45 வயதை எப்படித்தான் குறைத்தாரோ! கரீனாவை விட சின்னப்பையனா இருக்கார். 20 வயது பையனின் செய்கைகளை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கார்.

மாதவன் & ஷர்மன் ரொம்ப பொருத்தமான தேர்வு. ஹிந்தியில் இதுவரை என்னை அதிகம் கவர்ந்த ஒரு படம் ராங் தே பசந்தி. இப்போ இந்த படம் தூக்கி சாப்பிடுருச்சு. ஒரு ஒற்றுமை என்னன்னா இதிலும் அமீர், மாதவ், ஷர்மன் நடிச்சிருக்காங்க.. சித்தார்த் மட்டும் மிஸ்ஸிங். ;-)

vanila said...

I go with Nesan.. Perfect choice for the movie, Let madhavan do the same role, Prasanna would be perfect for sharman, and Chellammmm would be the ideal choice for Boman irani.. Music Director ???. They should not comprise with the songs, in tamil version. Then it would be the rite one..

@ PArisal.. Still we have 2 of amir's classic movies to be remade in tamil. One is Dil chahta hai & Taare Zameen par..