Monday, December 28, 2009

அவியல் 28.12.2009

கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘தாறுமாறா ரூல்ஸைப் பத்தி கவலைப்படாம ஒரு வண்டி வந்துச்சுன்னா கண்ணை மூடிட்டுச் சொல்லுவேன்.. அது திருப்பூர் ரெஜிஸ்ட்ரேஷனாத்தான் இருக்கும்னு. ஏன்யா உங்க ஊர்க்காரனுக இப்படி இருக்கீங்க? எவ்ளோ கோவம் வரும் தெரியுமா’ என்று பொரிந்தார்.

“கரெக்ட்தான் சார். டக்னு பிடிச்சு ஃபைன் போட்டு கோர்ட்டுக்கு அலையவிடுங்க. திருந்துவானுக” என்றேன்.

“எங்க? உங்க ஊர்க்காரனுக நிறுத்தினா உடனே யோசிக்காம நூறோ, ஐநூறோ கேள்வியே கேட்காம கண்ணுல காமிச்சுடறானுக.. அதுனால பேசாம இருக்கேன்”

மாமூல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தான்!

***************************

திருப்பூரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ஒருவர், எனக்குத் தெரிந்தவர். கிறிஸ்துமஸ் தினங்களில்கூட ஆய்வுக்கு செல்ல வேண்டியிருக்கும். அந்த மாதிரி நாட்களில் ஆய்வு முடிந்து சமர்ப்பிக்க வேண்டிய பேப்பர்களில் கையெழுத்துப் போடும்போது கையெழுத்துக்குக் கீழே தேதியைப் போட்டுவிட்டு "Happy X-mas!' என்றும் எழுதுவார்.

நான் கேட்டேன்: “அதெதுக்கு சார் இந்த மாதிரி ஸ்பெஷல் நாட்கள்ல இன்ஸ்பெக்‌ஷன் வந்தீங்கன்னா ரிப்போர்ட் ஷீட்ல இப்படி எழுதறீங்க”

“இந்த ரிப்போர்ட் மெயில்ல போகும்போது பார்ப்பானில்ல? பார்க்கும்போது ‘நமக்கு லீவு, ஆனா அன்னைக்கு இவன் வேலை செஞ்சிருக்கான் பாரு’-ன்னு அவங்களுக்குத் தெரியணுன்னுதான்”

அட!

*****************************

பதிவரும் நண்பருமான ஒருவரிம் பேசும்போது சொன்னார்: “எங்க முதலாளி பயங்கரமா கணக்குப் பார்க்கற பேர்வழிங்க. எல்லாத்துக்கும் காசுதான் அங்க. யாராவது ஆஃபீஸ் முன்னாடி நின்னு பார்த்துட்டு இருந்தாகூட ‘அவன் நம்ம ஆஃபீஸைப் பார்க்கறான். இருபது ரூவா வாங்கீட்டு விடு அவனை’ம்பாரு”

அந்த அளவுக்கு இருப்பார்களா எனத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருந்தார்........... வேணாம் விடுங்க....

***************************

தமிழில் போர் என்பதற்கு ஆங்கிலத்தில் WAR என்று வருகிறதல்லவா.. ஆங்கிலத்தில் POUR என்பதற்கு தமிழில்? வார்! (நீரை ‘வார்’த்தான், வயிற்றில் பாலை ‘வார்’த்தான்...) ஊற்று என்ற அர்த்தம்!

இதைப் பகிர்ந்து கொண்ட பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி! இன்றைய அவியலின் கடைசியில் அவர் கேட்ட ஒரு கேள்வியும் இருக்கிறது...

*************************

னிக்கிழமை காலை பதிவர் சுரேகா அழைத்து திருப்பூரில்தான் இருப்பதாகச் சொன்னதும் மாலை சந்திக்க ஏற்பாடானது. சில நண்பர்களைப் பார்த்ததுமே ‘ஏய்.. வாடா மச்சான்’ என்று தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லத் தோன்றுமே அப்படித்தான் தோன்றியது சுரேகாவைப் பார்த்ததும். தனது நண்பர் சத்யாவுடன் வந்திருந்தார். (வெயிலானின் பார்வைக்கு: சத்யாவும் பதிவர். அன்றைக்குத்தான் வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார்!)

சென்னைப் பண்பலையில் பணி. அது போக சினிமாத்துறையில் உதவி இயக்குனராய் இருக்கிறார். கதாநாயகனுக்குரிய தோற்றம். மிக மிகப் பண்பாளராய்ப் பழகுகிறார். நான்கு மணிக்கு ‘அரை மணி நேர அவசர’ சந்திப்பாய் ஆரம்பித்தது ஆறுமணி வரை பேசியும் அரைமணி நேரம்போலப் போனது! பிரிய மனமில்லாமல்தான் பிரிந்து போனோம்.

புறப்படும் சமயம் இவர் ஆர்கெஸ்ட்ராக்களில் பாடியதுண்டு என்று சொன்னதுமே, நானும் அவருமாய் ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களைப் பாட ஒன்றிரண்டு பேர் நின்று பார்த்துச் சென்றார்கள். இந்த நேரத்துலேயான்னு அவர்கள் நினைத்திருக்கக்கூடும்! ஆனால் ஒருவர் ‘ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்பா? எங்க ஃபங்ஷன்?’ என்று கேட்டதுதான் உச்சம்! பாடிய நிகழ்வை நண்பர் பேரரசன் தனது பதிவில் புத்தாண்டு சிறப்புக் காணொளியாய் இட இருக்கிறார்!

இப்போதைக்கு சுரேகா சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள்:-


சிவா, பரிசல்காரன், சுரேகா, முரளி & செந்தில்நாதன் (பேரரசன்)

பதிவராய் சந்தித்து நெருங்கிய நண்பர்களான இருவர்!


இதில் மேலே இருப்பது சாமிநாதன் (ஈரவெங்காயம்).


அலுவல் காரணமாக சென்னை சென்றுவிட்டதால் வெயிலான் அன்று மிஸ்ஸிங். ஆனால் இதுபோன்ற சந்திப்புகள் என்றால் எல்லாரையும் அழைத்து, ஒருங்கிணைத்து செல்வதில் வெயிலான் எவ்வளவு எக்ஸ்பர்ட் என்றுணர்ந்தேன். அன்றைக்கு இந்தச் சந்திப்பு குறித்து மின்னஞ்சலிட்ட நான் சுரேகாவுக்கு CC போடாமல் விட்டுவிட்டேன்! அதேபோல அருகிலேயே இருக்கும், அழைத்தால் உடனே ஓடிவரும் நண்பரான ராமனையும் அழைக்க மறந்துவிட்டேன். வெயிலான் ஏற்பாடென்றால் இதெல்லாம் நடந்திருக்காது. மனதாரச் சொல்கிறேன்.... அன்றைக்கு வி மிஸ் யூ தலைவரே!

********************************

கடைசியாக (ஒடனே நாளைலேர்ந்து எழுத மாட்டீங்களா ஜாலி-ன்னு குதிக்கக் கூடாது. இன்றைய பதிவோட கடைசியான்னு அர்த்தம்!) ஒரு கேள்வி:


ஒரு ஊரில் ஒரே ஒரு முடிதிருத்துபவர்தான் இருந்தாராம். (ஏன் ஒரே ஒருத்தர்னு லாஜிக்கெல்லாம் கேட்கக்கூடாது) அவர், யார் தனக்குத் தானே முகச் சவரம் செய்துகொள்ளாதவரோ அவருக்கு மட்டுமே முகச் சவரம் செய்வாராம்.

அந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரையும் இருகுழுவாக -

அதாவது

1. தனக்குத் தானே முகச் சவரம் செய்து கொள்பவர்கள்,
மற்றும்
2. அந்த முடிதிருத்துபவரிடம் முகச் சவரம் செய்து கொள்பவர்கள் என்று பிரிக்கலாம் அல்லவா...

கேள்வி என்னவென்றால் அப்படிப் பிரிக்கும் பட்சத்தில் அந்த முடி திருத்துபவர் எந்தக் குழுவில் அங்கம் வகிப்பார் ?.

44 comments:

சுரேகா.. said...

உண்மையிலேயே மிகவும் அற்புதமாக உணர்ந்தேன். ஒரு நல்ல சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்த காலத்துக்கு நன்றி!

ஆமா..

அந்த கேமரா...இப்படியெல்லாம் நல்லா போட்டா எடுக்குமா? அதுவும் என்னை!?

-------------------
அவர்தான் - தனக்குத்தானே ஷேவ் பண்ணிக்கிறவுங்க லிஸ்டில் வந்துடுவாரே!

முதல் கண்டிஷன்படி...தனக்கு பண்ணிக்காதவுங்கதானே அவரிடம் போகணும்!

ஸோ அந்த இடத்திலேயே if..then.. லாஜிக்கில்..முதல் கண்டிஷன் true ஆகிடுச்சு!


ஆஹா..
அவியல் நல்ல டேஸ்ட்..

சுடுதண்ணி said...

முடிதிருத்துபவர் பெண்ணாக இருக்கலாம் அல்லது கடைய மூடிட்டு வீட்டுக்குப் போய் முடிதிருத்துபவரா இல்லாம ஒரு சாதரண மனிதனா தனக்குத் தானே பண்ணிக்குவார் :D

பிரிவு 1ல் இருக்கலாம் அல்லது பிரிவு 3ல் (பெண்கள்) இருக்கலாம்.

மணிகண்டன் said...

பதிவு போர் :)- கடைசி கேள்வியை தவிர !

பெசொவி said...

அவியல் நல்லா இருக்கு.

கடைசி கேள்விக்கு என் பதில் :
அவர் முதல் குழுவில்தான் இருக்க வேண்டும். எப்படி என்றால், அவர் தனக்கு என்று வரும்போது முகச் சவரம் செய்து கொள்கிறார். ஆகவே, அது Self Shaving தான். இரண்டாம் குழுவில் உள்ளவர்களுக்கு எல்லாம் முகச் சவரம் செய்கிறார். செய்கிறார் என்பதற்கும் செய்து கொள்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதால், அவர் முதல் குழுவில்தான் இருக்கிறார்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

மாமூலான அவியல் :)

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கடைசி கேள்விக்கு என் பதில் :
அவர் முதல் குழுவில்தான் இருக்க வேண்டும். எப்படி என்றால், அவர் தனக்கு என்று வரும்போது முகச் சவரம் செய்து கொள்கிறார். ஆகவே, அது Self Shaving தான். இரண்டாம் குழுவில் உள்ளவர்களுக்கு எல்லாம் முகச் சவரம் செய்கிறார். செய்கிறார் என்பதற்கும் செய்து கொள்கிறார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதால், அவர் முதல் குழுவில்தான் இருக்கிறார்.
//

என் பதிலும் இது தான்.

அரங்கப்பெருமாள் said...

பிரிவு 2. அவர் கடையிலே பண்ணிக்கொள்வார்.

வீட்டில் பண்ணிக் கொள்பவர்களுக்கு கடையில் இடமில்லை.இவர் வீட்டில் செய்துகொள்வதில்லை.எனவே கடையில் செய்து கொள்ளலாமே.

//சுடுதண்ணி said...முடிதிருத்துபவர் பெண்ணாக இருக்கலாம் //

நம்ம ஊர்ல நடக்கிறது என எண்ணியதால், இதுமாதிரி எண்ணத் தோணவில்லை.ஆனாலும்....

cheena (சீனா) said...

அன்பின் பரிசல்

சுரேகாவினோடான பதிவர் சந்திப்பு - ஆர்கெஸ்ட்ரா குழுவினர் - ஏதேனு புக் ஆயிற்றா - இரண்டு மணி நேரம் மகிழ்வுடன் - கடைசியா ஒரு புதிர் வேற

நல்லாருக்கு - ரசித்தேன்

நல்வாழ்த்துகள் பரிசல்

ஸ்வாமி ஓம்கார் said...

வெகு நாள் கழித்து வந்த அவியல் என்பதால் சுவையை பற்றி கவலையில்லை.


ஒரு சின்ன விண்ணப்பம் :) அடுத்த முறை பதிவர்கள் திருப்பூர் வந்தால் வேறு ஹோட்டலுக்கு கூட்டி செல்லவும். ஒரே போர்(war அல்ல).

Thamira said...

வழக்கமான சுவாரசியம்.

சுரேகா பற்றிய ஒரு ரகசியம் உடைந்தது. புரொபைலில் போட்டிருக்கிற போட்டோ 10 அருஷத்துக்கு முன்னாடி எடுத்தது. :-))

கடைசி : நல்லா கேக்குறாங்கையா கேள்வி.!

Cable சங்கர் said...

surekavai சந்திக்காவிட்டாலும் பேச்சிலேயே நெருக்கமாகிவிட்டார். நிச்சயம் அவரை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

அப்புறம் எழுந்தோமா.. ? பதிவெழுதினோமான்னு இல்லாம காலங்கார்த்தால புதிர் போட்டு இருக்குற கொஞ்சூண்டு மூளையையும் சூடாக்குற வேலை எதுக்கு..? ஹாப்பி நியூ இயர்..:)))

கார்க்கிபவா said...

// நானும் அவருமாய் ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களைப் //

எவ்ளோ கலெக்‌ஷன் மாமூ?

கடைசி கேள்வி பற்றி ஒரு கேள்வி.. முடி திருத்துபவரும், முக சவரம் செய்பவரும் ஒன்றுதானா? ஊரில் தனியா முகச் சவரம் செய்ய ஆள் உண்டா?ஹிஹிஹி

பரிசல்காரன் said...

@ சுரேகா

இதுல கோவொ கண்ணனை ஏன் இழுக்கறீங்க?

@ சுடுதண்ணி

:-)

நன்றி.

@ மணிகண்டன்

நன்றி மணி!

@ பெ சொ விருப்பமில்லை

:-)

நன்றி!

@ செந்தில்நாதன்

நன்றி.

@ அரங்கப் பெருமாள்

வித்தியாசமான பார்வை!

@ சீனா ஐயா

நன்றிங்க..

@ ஸ்வாமி ஓம்கார்

புதசெவி.

நிகழ்காலத்தில்... said...

மூன்றாவது போட்டாவின் பின்னணியில் இருக்கும் இந்திய இளைஞர் காங்கிரஸ் போஸ்டர் வருமாறு போட்டா எடுத்ததில் ஏதேனும் ’அரசியல்’ உண்டா !!!

பரிசல்காரன் said...

@ ஆதிமூலகிருஷ்ணன்

நண்பா... அதவிட நேர்ல யூத்தா இருக்காருய்யா..

அப்பறம்.. உங்க ப்ரொஃபைல் போட்டா அருமை. பார்க்கற யாருமே பயந்து போய் பின்னூட்டம் போட்டுட்டுதான் போவாங்க..

@ கேபிள் ஜி

சென்னைல இருக்கற - அதுவும் சினி ஃபீல்டுல இருக்கற - அவரை, நீங்க இதுவரைக்கும் பார்த்ததில்லை! என்ன கொடுமை சங்கர் இது!

ஹாப்பி நியூ(ட்) இயர். (ஹாட் ஸ்பாட், ஏ ஜோக்னு கலக்கற உங்களுக்கு இப்படித்தான் சொல்லணுமாமே?)

@ கார்க்கி

சும்மா கேட்டாலும் புதிய கோணமா இருக்குப்பா!

பரிசல்காரன் said...

@ நிகழ்காலத்தில்

அட.. நீங்க சொல்லும்போதுதான் ஞாபகம் வருது சிவா..

’உடனிருப்பவர் இளைஞர் காங்கிரஸால் ஈர்க்கப்பட்டிருக்கார்’-ன்னு கமெண்டணும்னு நெனைச்சுட்டு இருந்தேன்...

எறும்பு said...

அனைத்தும் அருமை.. கடைசி கேள்விய தவிர... நீங்களே பதில சொல்லுங்க...

அன்பேசிவம் said...

// நானும் அவருமாய் ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களைப் //

எவ்ளோ கலெக்‌ஷன் மாமூ?///

சகா இன்னும் ரெண்டு பாட்டு பாடியிருந்தா சத்தியமா கல்லா கட்டியிருக்கலாம், வடை போச்சே.....

எம்.எம்.அப்துல்லா said...

sureka vum veilanum ore grade!!

it means sureka pudukkottai bloggersgalin thalaivar :)

sathishsangkavi.blogspot.com said...

அணைத்தும் அருமை..... ஆனால் கடைசி கேள்விக்கு விடை தெரியவில்லை....

Prathap Kumar S. said...

அவியல் ஒகே...

அந்த சவரக்காரர் இரண்டு பிரிவுகளில் வரமாட்டார், தனக்குதானே பண்ணி மற்றவர்களுக்கும் பண்ணிக்கொடுக்கும் மூன்றாவது ஒரு பிரிவில் வருகிறார்...ரொம்ப மொக்கையா இருக்கோ... ரைட்டு..

Unknown said...

எந்தப் பிரிவிலும் அவரை சேர்க்க முடியாது. Russell's Paradox.

Vinitha said...

எங்கே இருக்கு அந்த பிரபல பதிவர் சந்திப்பு ஹோட்டல்?

SurveySan said...

அவியல் நன்னால்ல.

butterfly Surya said...

அனைத்தும் அருமை.

புத்தாண்டு வாழ்த்துகள்.

angel said...

veliyur sendru shave seivar

ஆரூரன் விசுவநாதன் said...

nice article parisal

குசும்பன் said...

//கதாநாயகனுக்குரிய தோற்றம். மிக மிகப் பண்பாளராய்ப் பழகுகிறார். //

பரிசல் எதுக்கு சுத்திவளைச்சுக்கிட்டு சுரேகா அப்படியே நம்ம குசும்பன் போலன்னு சொல்லிடவேண்டியதுதானே:)))

********
//நானும் அவருமாய் ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களைப் பாட ஒன்றிரண்டு பேர் நின்று பார்த்துச் சென்றார்கள். //

ஆமாம் வர வர என்னா நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏறிக்கிட்டு, அனைக்கும் இப்படிதான் அப்துல்லா கத்தும் பொழுது அவர் கூடவே சேர்ந்து கத்திக்கிட்டு ஓடுறீரு, இன்னைக்கு என்னடான்னா சுரேகா கூட...

வரிகுதிரைய பார்த்து கோவேரி குதிரை உடம்பு முழுக்கலும் டை அடிச்சிக்கிச்சாம்...:))

அப்துல்லா பாடினா காதில் இருந்து இரத்தம் வரும்...நீங்க பாடினா எல்லாம் ஒன்னும் வராது. அதனால் தேவை இல்லாத முயற்சிகளை விட்டுவிட்டு ஒழுங்கா வேலைய பார்க்கவும்:)

☼ வெயிலான் said...

சுரேகாவை ஏற்கனவே கோவையில் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் இப்போது சந்திக்க முடியாதது வருத்தமே.

அது யாரு புதுப்பதிவர் சத்யா? விண்ணப்பப் படிவம் வழங்கியாச்சா? சந்தாவும் வாங்கியாச்சா?

கடைக்குட்டி said...

ம்ம்ம்...

உங்க ஆட்டம் அடங்கல போல இன்னும்..


அது என்ன போட்டோல அப்பிடி ஒரு போஸ்.. (யூத்தோ ??) :-)

க.பாலாசி said...

//தமிழில் போர் என்பதற்கு ஆங்கிலத்தில் WAR என்று வருகிறதல்லவா.. ஆங்கிலத்தில் POUR என்பதற்கு தமிழில்? வார்! (நீரை ‘வார்’த்தான், வயிற்றில் பாலை ‘வார்’த்தான்...) ஊற்று என்ற அர்த்தம்!//

நல்ல தகவல்.

Prabhu said...

நீங்க டீசர்ட்ல ஜூப்பரா இருக்கீங்க, பாஸ்! யூத்தா?

மேவி... said...

neenga t shirt podum pothu shoulder pakkam konjam loose yaga irukkira madiri podunga.....

app thaan nalla irukkum

selventhiran said...

யோவ்...!

செ.சரவணக்குமார் said...

புகைப்படத்தில் மிக அழகாக இருக்கிறீர்கள் பரிசல்.

Anonymous said...

அவர் ஒரு பெண். அதனால சவரம் செய்ய வேண்டி வராது!! சோ தனக்குத்தானே முடி திருத்திபவர்!!

அவர் ஆணாக இருந்து, தாடி வளர்ப்பவராக இல்லாமல் இருந்தால்
அவர் கண்டிப்பா, தனக்குத்தானே முகச் சவரம் செய்பவராகத்தான் இருக்கணும்.

1) தனக்குத்தானே முடிதிருத்துவது கடினம்
2) முடித்திருத்த பக்கத்து ஊருக்கு போனா மாசத்துக்கு ஒருதடவ போனா போதும்! முகச் சவரம் மாசத்துக்கு நாலு நாள் போகணும்!

(நீங்க இந்த மாதிரி கேள்வி கேளுங்க அண்ணே, நான் வெட்டியா தான் இருக்கேன்.. நான் திங்க் பண்ணறேன்!)

Anonymous said...

அவர் ஒரு பெண். அதனால சவரம் செய்ய வேண்டி வராது!! சோ தனக்குத்தானே முடி திருத்திபவர்!!

அவர் ஆணாக இருந்து, தாடி வளர்ப்பவராக இல்லாமல் இருந்தால்
அவர் கண்டிப்பா, தனக்குத்தானே முகச் சவரம் செய்பவராகத்தான் இருக்கணும்.

1) தனக்குத்தானே முடிதிருத்துவது கடினம்
2) முடித்திருத்த பக்கத்து ஊருக்கு போனா மாசத்துக்கு ஒருதடவ போனா போதும்! முகச் சவரம் மாசத்துக்கு நாலு நாள் போகணும்!

(நீங்க இந்த மாதிரி கேள்வி கேளுங்க அண்ணே, நான் வெட்டியா தான் இருக்கேன்.. நான் திங்க் பண்ணறேன்!)

மாதேவி said...

"அவியல்" சுவாரஸ்யம்.

ஈரோடு கதிர் said...

//ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்பா? எங்க ஃபங்ஷன்?’ //

ஏனுங்க.... வெள்ளிக்கிழமை வெடிய வெடிய போன்ல வேற பாடுனீங்களாமே.....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{“எங்க? உங்க ஊர்க்காரனுக நிறுத்தினா உடனே யோசிக்காம நூறோ, ஐநூறோ கேள்வியே கேட்காம கண்ணுல காமிச்சுடறானுக.. அதுனால பேசாம இருக்கேன்”

மாமூல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தான்!}

ஆக இந்தியன் தாத்தாவுக்கு டார்கெட் நிறைய உங்கள் ஊரில்தான் இருக்காங்கன்னு சொல்ல வர்ரீங்க,இல்லையா ?!

Bruno said...

அவர் தாடி வளர்க்கிறார்

அல்லது அவருக்கு Alopecia universalis http://en.wikipedia.org/wiki/Alopecia_universalis

sriram said...

கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி பரிசல், பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...
சீக்கிரம் பதில சொல்லுங்க, மண்ட காயுது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கிருபாநந்தினி said...

விடுகதைன்னா எனக்குப் புடிக்குங்ணா! அந்த முடி திருத்துறவர் நிச்சயமா இரண்டாவது லிஸ்ட்லதான் வருவாரு!

Romeoboy said...

:)

கார்க்கிபவா said...

//வெள்ளிக்கிழமை வெடிய வெடிய போன்ல வேற பாடுனீங்களாமே.//

ஆமா.. அதுக்கு உங்க இன்ஃபார்மர் ஒரு ரீரெக்கார்டிங் தந்தாரு பாருங்க.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்