Tuesday, October 6, 2009

கிருஷ்ணகதா 06.10.09

“அன்புள்ள பரிசல்.... வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி என்று அறிந்து கொண்டேன். ஆனால் எழுத்து என்பது வரவே இல்லை. என்ன எழுதினாலும் அது நீங்களெல்லாம் எழுதுவது போல வருவதில்லை” – இந்தக் கருத்துடன் மாதத்திற்கு ஒரு ஆறரை பேரின் (கவனியுங்கள்... லட்சமெல்லாம் இல்லை) மின்னஞ்சல்கள் வந்துவிழுகின்றன.

‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.

சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.

அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.

“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.


பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.

“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.

ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.

கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.


பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.

நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.

பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.

இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.


ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!

கடைசியாக....

என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.

‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.

“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”

அவன் கேட்டான்:

“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”

இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.

.

44 comments:

ILA (a) இளா said...

ஆக மொத்ததுல 6 வருசம் கழுவி கமுத்துனாத்தான் எழுத்து வரும்ங்கிறீங்க ? :)).. சும்மாச் சொன்னேன். ஒரு 2 பதிவு எழுதுங்க. நீங்களே படிச்சி பாருங்க. எந்த இடத்திலயாவது மாத்தனும்னு தோணிச்சுன்னா மாத்துங்க. உடனே வெளியிடாம, அடுத்த நாள் மறுபடியும் படிச்சு பாருங்க. மாத்தனும்னா மாத்துங்க. வெளியிட்ட்டுருங்க. ஒரு 10 பதிவு நமக்கே சிரிப்பா இருக்கும். அப்புறம் கலக்கிருவீங்க. எந்த ஒரு ஓட்டப்பந்தய வீரனும் விழுந்துதானே நடக்க ஆரம்பித்திருப்பான்.

பரிசல்காரன் said...

@ இளா

ரொம்ப நன்றிங்க!

சின்னப் பையன் said...

சாமுராய் கதா சூப்பர்!!!

இளா -> அப்போ எனக்கு இன்னும் 4.5 வருஷம்தான்... அப்புறம் பாருங்க பிச்சி உதறுவேன்... :-))

Anonymous said...

எங்களை மாதிரி மத்தவங்க படிக்கறாங்களோ இல்லியோ எழுதறோம் பாருங்க என்னைக்காவது ஒருநாள் நமக்கும் எழுத வரும்கற நம்பிக்கைல!!!
அது மாதிரி முயற்சி பண்ணிக்கிட்டே இருக்க சொல்லுங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

கிருஷ்ணா... கதா சூப்பார்

ஜென் கதை சொல்லி மக்களிடையே ஆன்மீகம் பற்றி பேச எனக்கு ஒரு கோஸ்ட் ரைட்டர் தேவைப்படுது..
ஆர் யூ இண்ட்ரஸ்டட் :)

இங்கனம்
நிக்கிச்சி - 3

எம்.எம்.அப்துல்லா said...

//ஜென் கதை சொல்லி மக்களிடையே ஆன்மீகம் பற்றி பேச எனக்கு ஒரு கோஸ்ட் ரைட்டர் தேவைப்படுது..
ஆர் யூ இண்ட்ரஸ்டட் :)

இங்கனம்
நிக்கிச்சி - 3

//

நாவேண்னா வரட்டா சாமி??

(பேரெடுக்க ஆள்கூப்பிட்டா பேரைக்கெடுக்க உடனே வர்றேங்குறாய்ங்க) :))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் //

ஏழுவருடம் கற்றுக்கொண்டால் நல்ல ஆசிரியன் ஆகலாம், வீரன் ஆகமுடியுமா தலைவரே.., வயதாகிவிடுமே!

sriram said...

பரிசல்
நானெல்லாம் எழுதறேங்கற விஷயமே காமடி தான், பாருங்க இன்னும் 5-6 வருஷத்தில சூப்பரா இல்லன்னாலும் சுமாராவது எழுதுவேன், ஆனால் அதுவரை தாக்குவதற்கு குருவுக்கு எங்கே போவது?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முரளிகண்ணன் said...

அசத்தல் பரிசல்.

iniyavan said...

கலக்கலான பதிவு பரிசல்.

பரிசல்காரன் said...

@ ச்சி.பை

இப்பவே கலக்கறீங்களே சத்யா..

@ சி.அ.

அப்டியெல்லாம் இல்லியே.. நல்லா இண்ட்ரஸ்டிங்காதான எழுதறீங்க?

@ ஸ்.ஓ.

டீல் ஓகே!

-நிக்கிச்சி 4

@ எம்.எம்.அ.

அதுசரி!

@ su (ப)

வீரனுக்கு வயதொரு பொருட்டல்ல! ஒருவர் 101 வயதில் தனியாளாக திருடனைப் பிடித்த சம்பவம் ஒன்றை போன மாதம் நாளிதழில் படித்தீர்களா?

@ Sri

தாக்க நான் ரெடி. ஆனா நான் குருவெல்லாம் கிடையாது. ஃபெரெண்டா ஏத்துக்குவீங்களா?

@ த

சரி.

@ மு.க

ரொம்ப நாளாச்சே ஜி?

@ என்.உ.

நன்றி சார்! (டெய்லி பதிவு போட்டு கலக்கறீங்க சார்!)

ராமலக்ஷ்மி said...

சாமுராய் கதை மிக நல்ல பகிர்வு.

தராசு said...

ஒத்துக்கறேன், உங்களுக்கு எழுத வரும்னு ஒத்துக்கறேன்,

நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

மாதவராஜ் said...

எழுதுவது எப்படி என்றால், கத்திக் கதை சொல்கிறீர்கள். எதற்குங்க...:-))))

Cable சங்கர் said...

samurai story is good..

Muthukumar said...

பரிசல்... கதா நல்லாருக்கு

Unknown said...

தளம் அழகு.... :))

GHOST said...

'கிருஷ்ணா" கத நல்லா இருக்கு

taaru said...

அசராத பரிசலார் [சாமுராய்] இன் ஜென் அருமையோஓஓஓஓஓ அருமை...


அன்புடன்,
அய்யனார்.

Saminathan said...

சாமுராய் கதை சூப்பர்...

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல்

நிக்கிச்சி-5

SurveySan said...

அதெல்லாம் எல்லாருக்கும் வராதுங்க. நம்மள மாதீரி அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே ஆன கலை இது ;)

ஹி ஹி. ஏற்கனவே பதிவருங்க தொல்ல தாங்க முடியல்ல. டமில்மணத்துல எடமே இல்லை. நீங்க வேர வளத்து விட்டுக்கினு ;)

Eswari said...

நானும் இதுபோல ஆர்வ கோளாறுல எழுத அரம்பிச்சவதான். ஆனாலும் பத்துக்கு மேல பதிவு போட்டாலும் இன்னும் நான் நல்லா எழுதுவதா எனக்கு தெரியலை.

கார்க்கிபவா said...

ரைட்டு.. நடத்துங்க..

Jawahar said...

உஷாராக கவனித்தால் எல்லாவற்றிலுமே எழுத ஏதாவது இருக்கும் என்று நீங்கள் எழுதியிருப்பது சிந்தனைக்குரியது.

http://kgjawarlal.wordpress.com

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு பரிசல்.

பரிசல்காரன் said...

@ ரா.ல

நன்றிங்க

@ த

அவ்வ்வ்வ்வ்....

@ மா.ரா.

நன்றி ஐயா.. நீங்களுமா...? :-))

@ C.S.

Thaaaanks!

@ Mk

அப்டியா.. சரி!

@ ஸ்ரீ

அப்ப பதிவு?

@ g

ஓகே!

@ ta

அய்யனாராஆஆஆஆ?

வணக்கொம்!

@ ஈ.வெ.

நன்றி. (டூர் முடிஞ்சுதா?)

@ நா.ஆ

நன்றி.

-நிக்கிச்சி 4.5

@ SS

புதியவங்க வந்தாத்தாங்க நாம சீனியர்னு ஆகும்? என்னாங்க நீங்க இப்டி சொல்லிட்டீங்க? அதுதான் டமில்மணம் மாதிரி டெய்லி பத்து திரட்டி வருகுதே...

@ Es.

அப்படியெல்லாம் இல்லை. எழுத எழுத வரும்.

@ கா

ம்ம்..

@ J

அப்படியா சொல்றீங்... சரிங்..

பரிசல்காரன் said...

@ வி

ஐ!

நர்சிம் said...

அ.

Unknown said...

எழுத்தில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் (பதிவர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) அவர்கள் அனைவருக்குமே ஆழ்ந்த கவனிப்புத்திறன் இருப்பதைப் பார்க்கலாம். ஆழ்ந்த கவனிப்பும், அதை நினைவில் வைத்து எழுத்தில் கொண்டுவரும் திறமையும் இருந்தாலே பாதி எழுத்தாளன் தான். மீதி - ஆழ்ந்த வாசிப்பு. வாசிப்பு அதிகரிக்க எழுத்தின் வீச்சு அதிகரிக்கும். நல்ல, உபயோகமான பதிவு பரிசல்.

Truth said...

கிருஷ்ணகதா - நல்லா இருக்கு அண்ணே :-)
ஏதோ லைட்டா யோசிக்க வெச்சிருக்கு.

பரிசல்காரன் said...

@ நர்சிம்

ந!

@ ரா/K

க க க போ!

@ Tr

உங்களை நெனைச்சுதான் எழுதினேன்.. ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தீங்கள்ல??

யுவகிருஷ்ணா said...

உலகத்திலேயே சுலபமானது எழுதுவது. அதற்கு கதையும், வியாக்கியானங்களும் எதுக்கு? :-)

பரிசல்காரன் said...

@ யு

பார்த்தீங்கள்ல... பாவமில்லையா நானு..

sriram said...

//தாக்க நான் ரெடி. ஆனா நான் குருவெல்லாம் கிடையாது. ஃபெரெண்டா ஏத்துக்குவீங்களா?//

கிருஷ்ணா, அவ்வ்வ்வ்வ்வ் நான் இப்போ உங்களை ஃபெரண்டா த்தான் நினைச்சிருக்கேன், அப்படி இல்லயா???

இனிமேல் ஒவ்வொரு இடுகைக்கும் உங்க தாக்குதலை எதிர்பார்ப்பேன். அப்படியாவது நல்லா எழுதறேனான்னு பாக்கலாம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பின்னோக்கி said...

கொஞ்சம் கொஞ்சம் அடி வாங்குனாதான் எழுத வரும்கிறீங்க...பார்க்குறேன்

Prabhu said...

கதை ஜூப்பரு!

selventhiran said...

தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். //

பரிசல், தினமும் எதாவது ஒன்று கிடைத்தே தீர வேண்டுமா...?! தினமும் எழுதினால் எழுத்து எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யவே பயமாகவே இருக்கிறது. வாசிப்பு என்கிற சமாச்சாரத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே... :)

டிஸ்கி:
ஸ்மைலீன்னு போடவில்லையென்றால் 'அவர்களின்' அகராதியில் இது சண்டை!

Kumky said...

ட்யூஷன் பீஸ் எவ்ளோ மாஸ்டர்..நிக்கிச்சி..4.?

taaru said...

//@ ta
அய்யனாராஆஆஆஆ?
//
அவரு இல்லண்ணே.நான் வேற. இப்பத்தேன் ஆ ரம்பிக்கிறேன்...

//வணக்கொம்!//
நன்றி...

மங்களூர் சிவா said...

/
ILA(@)இளா said...

ஆக மொத்ததுல 6 வருசம் கழுவி கமுத்துனாத்தான் எழுத்து வரும்ங்கிறீங்க ? :)).
/

ROTFL
:)))

கதை சூப்பர் பரிசல்!

அரங்கப்பெருமாள் said...

கத்திப் பற்றி எழுதினா "அறுவை"யாகத்தானே இருக்கனும். இது நல்லாயிருக்கே!!!

Thamira said...

தேங்ஸ் குரு.! ‍: நிக்கிச்சி‍ -5

settaikaaran said...

அருமையான பதிவுங்க ... எழுதனும்னு ஆசை படும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு ...