Tuesday, October 13, 2009

வண்ணங்களில் சில எண்ணங்கள்

கருப்பு: கண்டனம். ஜ்யோவராம் சுந்தர் மீது நடந்த வன்முறைக்கு. இங்கே நான் வன்முறை எனக் குறிப்பிடுவது அவர் மூக்கில் விழுந்த குத்தை அல்ல. அந்தக் குத்து விடுமுன் அழைக்கப்பட்டு நம்பிக்கையோடு திரும்பினாரே, அந்த நம்பிக்கையை ரோசா வசந்த் சிதைத்ததுதான் மிகப் பெரிய வன்முறை. ‘எனக்கு உங்களுடைய ஒரு கருத்தில் உடன்பாடில்லை ஜ்யோவ். வாருங்கள் சண்டையிடலாம்’ என்றே அழைத்திருக்கலாம். எழுத்திற்காக மூக்கில் அடிவாங்க நேருமென்றால் எழுத்தாளர்கள் எல்லாருமே ப்ளாஸ்திரி சுற்றப்பட்ட மூக்கோடுதான் இருக்க வேண்டிவரும். ‘உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.

சிகப்பு: வன்முறை. மீண்டும் போன பாராவின் டாபிக்கே வருகிறது. வேண்டாம். சிகப்பு - ரத்தம். ம்ஹூம். மறுபடி அங்கேயே போகிறது விஷயம்.
ம்ம்ம்ம்....

உறவினர் ஒருவரின் சிகிட்சை காரணமாக மருத்துவமனை செல்ல நேர்ந்தது. அப்போது அவசர சிகிட்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரக்சரில் கொண்டு வரப்பட்டார் ஒரு இளைஞர். தலைமுழுக்க வறுமையின் நிறம் சூழந்திருந்தது. பைக் விபத்து. எப்போதுமே ஹெல்மெட் போடுவாராம். அன்றும் போட்டிருந்தாராம். ‘அப்புறம் எப்படி?’ என விசாரிக்கையில், ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம். எதிரில் வந்த காரால் எகிறி அடிக்கப்பட்டதில் பத்தடி உய்ரத்தில் பறந்தபோது ஹெல்மெட் கழன்று எங்கோ விழுந்திருக்கிறது. எத்தனையோ நண்பர்களுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன். அன்றைக்கு, அதுவும் அத்தனை ரத்தத்தோடு அந்த இளைஞனைப் பார்த்த பிறகு இதனைக் கேள்விப்பட்டதும் அவனது அஜாக்கிரதைக்காக மனதுக்குள் அவனைத் திட்டினேன். Get well soon buddy!

பச்சை: பசுமை. மரங்கள். இயற்கையின் காதலன் நான். எங்கே மரம் வெட்டப்பட்டாலும் என் மனம் அழும். எங்கள் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ஒரு மரம் வெட்டப்பட்டது. வேறு எந்த வழியுமில்லாமல் போனது. அன்றைக்கு முழுதுமே ஏதோ கொலையாளி போல என்னை நானே உணர்ந்தேன். பிராயச்சித்தமாக குறைந்தது ஐந்து மரங்களையாவது நட எண்ணம். நிச்சயம் செய்வேன்.

நீலம்: அன்பு. என் இப்போதைய அன்பை ஆதிமூலகிருஷ்ணனுக்கு அளிக்கிறேன். வேலை, குடும்பம், வலையுலகம் என்பதையும் மீறி சென்னைவாசிகளை வதைக்கும் ஒரு விஷயம் பிரயாணம். அவர்களின் ஒரு நாளின் இருபத்தைந்து சதவிகித நேரத்தை பிரயாணம் எடுத்துக் கொள்கிறது. அந்த விஷயத்தில் ஆதியின் சிரமத்தை நானும் அறிவேன். அதையெல்லாம் மீறி நேரமொதுக்கி என்னை வரைந்து பரிசளித்த அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தவிரவும், ஒருவன் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள எவ்வளவும் சலிக்க மாட்டான். தன்னைத் தவிர, தன்னை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பது தான் நேசிக்கும் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல அந்தப் படத்தை வரையும் வரை அவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்பதைவிடவும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்வது எதுவுமில்லை. ஆதி... உங்கள் திறமைக்கும், அன்பிற்கும்..... I LOVE YOU DA!

மஞ்சள்: எச்சரிக்கை. நாட்டை செல்ஃபோன் வியாதி மிகத் தீவிரமாக பற்றிக் கொண்டு வருகிறது. ஒரு ஃபோன் என்பதைத் தாண்டி, இரண்டு ஃபோன்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. (அதில் ஒன்று டபுள் சிம் ஃபோன்!) பொது இடத்தில் புகைக்கத் தடை இருப்பதுபோல (இருக்கிறதுதானே?) செல்ஃபோன் பேசவும் தடைவிதிக்கலாம். விதிக்கும் காலம் வரலாம். அத்தனை உரக்கக் காதலிக்கிறார்கள் ஃபோனில். அத்தனை உரக்கச் சிரிக்கிறார்கள். அத்தனை உரக்க உரையாடுகிறார்கள். அத்தனை உரக்கக் கட்டளையிடுகிறார்கள். அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது. அவர்களின் வெட்கம் என்னைப் பற்றிக் கொள்கிறது. மருத்துவமனையில் சிலரின் வேதனை முகங்களுக்கு நடுவே, அவர்களின் சிரிப்பொலி எனக்கு எரிச்சலைத் தருகிறது. அவர்கள் வீட்டு சாம்பாரில் என்ன காயென்று எனக்குத் தெரிகிறது. அவர்களின் கோவம் என்னை நடுங்கச் செய்கிறது. அவர்களின் கட்டளை என்னையும் செலுத்துகிறது. அவர்களுக்கு நடுவே, அலைபேசியை மௌனித்து வைத்திருக்கும் நான் அந்நியனாகிறேன். என்னிடம் அலைபேசி இல்லையென்று அவர்கள் நினைப்பார்களோ, அப்படி இருப்பது கௌரவக்குறைவோ எனும் பேதமை எண்ணம் என்னைச் செலுத்த, வெறுமனே எடுத்துப் பேசுகிறேன். கத்துகிறேன். சிரிக்கிறேன். தொலைக்காட்சியை இடியட் பாக்ஸ் என்கிறீர்கள். அதன் அப்பனுக்கு அப்பனை பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு திரிகிறோம். உபயோகிக்கும் முறை தவறி. உடனடியாக எல்லாரும் அலைபேசி சாத்தானிடம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Be Alert!

வெண்மை: அமைதி. ஒன்றுமே எழுதாமல் அமைதியாகவே இருக்கிறேன். விட்டால், எதையும் பேசாமல் ரொம்பவும் அமைதியாக இருப்பதால் அமைதிக்கான நோபல் பரிசை எனக்கும்கூட கொடுத்துவிடுவார்கள் என்பதால் இதை எழுதுகிறேன். வெண்மை சமாதானத்திற்கும் அடையாளமாகச் சொல்வார்கள். பதிவுலகின் சண்டைகளும், பொறாமைகளும், சமாதானமடைய என்னை நானே வேண்டிக் கொள்கிறேன். அதை நோக்கி அனைவரும் செயல்படலாம். ஆதிமூலகிருஷ்ணன் ஒன்றை ஆரம்பித்தது போல, எல்லாரும் பகைமைகளை, வேதனைகளை மறக்கச் செய்ய ஏதாவது எழுதி, நம்மை படிக்க மட்டுமே வரும் இணைய வாசகர்களை ஆற்றுப்படுத்தலாம். Let’s Make it Happen!



.

60 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைத்து வண்ணங்களும்..பளீச்சென உங்கள் நிறப்பிரிகையை உணர்த்துவதால்..கண்டிப்பாய் நோபல் பரிசு கொடுக்கப்போகிறார்கள் பாருங்களேன்

Anonymous said...

என்னைக்கவர்ந்த உங்கள் இடுகைகளுள் இதுவும் ஒன்று. வண்ணங்களுடன் ஒப்பிட்டது அருமை. ஆதி உங்களுக்குக்கு கொடுத்த விருதுக்கு வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

//அனைத்து வண்ணங்களும்..பளீச்சென உங்கள் நிறப்பிரிகையை உணர்த்துவதால்..கண்டிப்பாய் நோபல் பரிசு கொடுக்கப்போகிறார்கள் பாருங்களேன்//
Repeate

cheena (சீனா) said...

வண்ண மயமான இடுகை - கருத்துகள் சிறப்பாக இருக்கின்றன - நல்வாழ்த்துகள் பரிசல்

Ravichandran Somu said...

வண்ணங்களில் நல்ல எண்ணங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அப்பாவி முரு said...

//அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது.//

ஒரு மின்னல் வெட்டினாலே, நிலத்தின் எல்லா பகுதிக்கும் பாஸ்பரஸ் விழுந்து பல ஆயிரம் காளான்கள் முளைப்பதைப் போல்...

செந்தில் நாதன் Senthil Nathan said...

யாரோ என்ன கொடுக்குறது...நா தரேன்... எடுத்துங்கோங்க....நோபல் பரிச...

அப்புறம் இன்னொரு விஷயம்...வெண்மைக்கு நல்ல உதாரணம் உங்க மனசு... :-)

நாமக்கல் சிபி said...

அதென்ன வெண்மையை மட்டும் கருப்பு கலர்ல எழுதி இருக்கீங்க?

கோவி.கண்ணன் said...

:)

சுந்தர் மேட்டர் இல்லை என்றால் இந்த கலர்ஸ் பற்றி வார இதழ் ஒன்றில் வெளி இடலாம்.

"புதிய தலைமுறை" நம்ம லக்கியிடம் சொல்லி போடச் சொல்லிடுவோமா ?
:)

புருனோ Bruno said...

:) :)

ஆ.ஞானசேகரன் said...

வண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள் அருமை....

முரளிகண்ணன் said...

கருப்பு மட்டுமல்ல எல்லாக் கலரும் பிடிச்சிருக்கு

எம்.எம்.அப்துல்லா said...

இந்த இடுகை உமாவுக்கு சற்றும் குறைந்ததல்ல

selventhiran said...

அதென்ன பாரதி ராஜா மாதிரி பாரா முடிகையில் இங்கிலீஸூ... மரியாதையா எல்லாத்துக்கும் அர்த்தம் சொல்லிடுங்க :)

Anonymous said...

//நாமக்கல் சிபி 13 October, 2009 6:08 AM

அதென்ன வெண்மையை மட்டும் கருப்பு கலர்ல எழுதி இருக்கீங்க?
//

நீங்கெல்லாம் படிக்கவேண்டாமா சிபி அண்ணா :)

ஆயில்யன் said...

வண்ணங்களுடன் ஒப்பிட்டது அருமை!

Cable சங்கர் said...

cell மேட்டர் அருமை.. பரிசல்..

taaru said...

தல, இனிமே சத்தியமா கத்தி பேச மாட்டேன்...
கட்டளை இட மாட்டேன்...
கமுக்கமா இருக்கேன்...
well written.

anujanya said...

A good post.

அனுஜன்யா

GHOST said...

வண்ணங்கள் வண்ண கோலங்கள் அடுத்த நோபல் பரிசு உங்களுக்குதான்

Unknown said...

//அவர்களின் காதலியின் முத்தம் என் கன்னத்தில் விழுகிறது.//

அண்ணீஈஈஈஈஈஈஈஈ இங்க கொஞ்சம் வாங்க ப்ளீஸ்....

ஸ்வாமி ஓம்கார் said...

இது பேருத்தான் கலர் கலரா எழுதரதா? :)

உங்கள் வலைப்பூ முழுவது நீலமாக இருப்பது உங்கள் அளவில்லா அன்பை காட்டுகிறது.

பரிசல்காரன் said...

@ டி வி ஆர்

நன்றி ஐயா..

@ சி அ

மிக்க நன்றி

@ இளா

சீக்கிரம் ரெகமெண்டுங்க ஜி.. (ஆமா கூட காசும் குடுப்பாங்கள்ல..)

@ சீனா

நன்றி ஐயா!

@ ரவிச்சந்திரன்

மிக்க நன்றி ரவி (சிக்சருக்கு அப்புறம் ஒண்ணுமே எழுதலியா? ரெஸ்டா?)

@ அப்பாவி முரு

கவிதைங்க!!

@ செந்தில்நாதன்

என் மனசா? கி கி கி... நன்றி செந்தில்...

அன்பேசிவம் said...

பரிசல், மஞ்சள் நிறத்தில் எனக்கு ஒரு அருமையான கதை தெரிகிறது, இல்லை அதை கவிதையாகவும் உருவகப்படுத்தலாம். சரியா? உங்க வானவில்லில் மஞ்சள்-தெளிவு

பரிசல்காரன் said...

@ சிபி

வெள்ளைல எழுதி செலக்ட் பண்ணி படிக்கச் சொல்லலாமான்னு பார்த்தேன்.. வேணாம்னு விட்டுட்டேன்..

@ கோவி கண்ணன்

இந்த சிந்தனை எனக்கும் வந்தது. யாரேனும் கேட்டுக் கொண்டால், இதே தலைப்பில் வாரா வாரம் எழுதலாம்... பார்க்கலாம்.. (இந்த நெனைப்பு வேற இருக்கா...)

@ புரூனோ

நன்றி டாக்டர் சார்

@ ஞானசேகரன்

நன்றி ஞானம்.. (நீங்க சைடுபார்ல போட்டிருக்கற இயற்கை ஸ்டில் எனக்கு ரொம்ப பிடிக்கும்)

@ முரளிகண்ணன்

நன்றி முரளி சார்.

@ எம். எம். அப்துல்லா

மனதுக்குப் பிடித்த பின்னூட்டம் இது அண்ணே.. (பாராட்டினா பின்ன, பிடிக்காமயா இருக்கும்..)

@ செல்வேந்திரன்

அது தெரிஞ்சா நான் ஏன் இங்க வந்து குந்த வைக்கறேன்..

@ நன்றி ஆயில்யன்

@ கேபிள் சங்கர்

நெனைச்சேன்....

@ டாரு

ஏன் இந்தப் பணிவு..???

@ அனுஜன்யா

நன்றி அனு ஜி..

@ சஹானா

ஏன் இப்பவே இருக்கறத பிரிச்சுக் கொடுங்களேன்...

@ ஸ்ரீமதி

எழுத்தாளின் எழுத்தை இப்படி அலசி ஆராய்ஞ்சு அவனை மாட்டிவிடறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷமாப்பா??

@ ஸ்வாமி ஓம்கார்

நெஜமாவே நீலம் எனக்குப் பிடிச்ச கலர் ஸ்வாமிஜி

@ பரிசல்காரன்

பதில் பின்னூட்டங்களுக்கு நன்றி பரிசல்..

பரிசல்காரன் said...

ஸாரி.. வரிசையா பாத்துகிட்டே பதில் போட்டதுல எனக்கு நானே பதில் சொல்லிகிட்டேன்..

@ முரளிகுமார் பத்மநாபன்

திடீர்னு டாப் டென் தொகுப்பாளர் மாதிரி ஆய்ட்டீங்க.. (அது எழுதும் போது நீங்க சொன்னத நான் உணர்ந்தேன்)

தராசு said...

செல்லு மேட்டர் கொல்லுது,

வண்ணங்கள்,,,,,, வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

புதுமை!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க பரிசல்.வண்ணக்கலவை.

கார்க்கிபவா said...

பரிசல் உங்களுக்கு நோ’பல் பரிசு கிடைக்க போகுதாமே!!!!

வண்ணங்களுக்கு ஏத்தப்படி.. இருங்க அந்த பாட்ட கேட்டு வறேன்..

☼ வெயிலான் said...

உங்கள் எண்ணங்களின் வண்ணங்களில் வசமிழந்தேன்.

Prabhu said...

இன்னும் ரெண்டு கலர் சேர்ந்திருந்தா வானவில்தான்!

பரிசல்காரன் said...

@ தராசு

நன்றாக எடை போட்டிருக்கிறீர்கள்!

@ நான் ஆதவன்

நன்றி ஃப்ரெண்டு!

@ நர்சிம்

நன்றி நண்பரே.

@ கார்க்கி

யாராவது அடிச்சு பல்லு விழுந்தா அந்தப் பரிசுதான்ப்பா!

@ வெயிலான்

உங்களுக்கு பின்னூட்டமும் கவிதையாவே வருது தலைவரே.

@ பப்பு

மொதல்ல அந்தப் பேர்தான் (வானவில்) வெச்சேன். கரெக்டா மேட்டர் சிக்கல. அதுனால மாத்தினேன். :-))

Truth said...

ம்ம்ம்...
சிகப்பு - ஸ்ட்ராப் போடாமல் ஹெல்மெட் என்பது தேவையற்றது. நானும் இதை பல முறை நன்பர்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

பச்சை - சூப்பர் அண்ணே. வாய்ப்பிருந்தால் நானும் உங்களுடன் சேர்கிறேன்.

நீலம் - சந்தோசமா இருக்கு :-)

மஞ்சள் - முழுவதுமாக ஒத்துப்போகிறேன். 100% correct

பரிசல்காரன் said...

நன்றி ட்ரூத்.

-- said...

உங்களுடைய எழுத்து நடை ஏனோ
வரவர என்னை மிகவும் உன்னிப்பாக ரசிக்க வைக்கிறது.

All the Best Parisal Sir..!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எல்லா வண்ணமும் அருமை.

Eswari said...

கருப்பு : கண்டனத்திற்குரிய கருப்பில் கடவுள் சிலை
சிகப்பு : அதிக தூரத்திலும் தன்னை பற்றி அறிவிக்கும் ஒரே நிறம்
பச்சை : நம் நல்முயற்சிகளுக்கு வேண்டும் பச்சை கொடி
நீலம் : திறந்த வானம் சொல்லுவது என்னவோ?
மஞ்சள் : தங்கத்தோடு காதல்
வெள்ளை : வெள்ளை உடையில் கருப்பு ஆடுகள் நம் அரசியல் வாதிகள்

Eswari said...

நிறங்களில் தென்பட்ட உங்கள் கண்டனம், கோபம், வருத்தம், அன்பு, எச்சரிக்கை, அமைதி எல்லாமே அருமை

Unknown said...

//எழுத்தாளின் எழுத்தை இப்படி அலசி ஆராய்ஞ்சு அவனை மாட்டிவிடறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷமாப்பா??//

அது யாரு?? ;)))))))

Unknown said...

வெள்ளைக்கு ஒரு கருப்பு பேக்ரவுண்டு போட்டு வெள்ளையாவே எழுதி இருக்கலாமே!

இடுகை அருமையா இருக்கு. உங்களின் இந்த இடுகையில் எனக்கு ரொம்ப பிடிச்சது பச்சையும் மஞ்சளும்

பாண்டி-பரணி said...

கலர் கலர கதம்பமாலை

அதுவும் மஞ்சள்

சூப்பர் நடை ரொமப ரிதமிக்க

simply Super!

R.Gopi said...

உங்கள் இந்த வண்ணங்களில் சில எண்ணங்கள் பதிவு யோசிக்க வைத்தது, பலே ஜோர்... படிக்கும் போது இளையராஜாவின் இந்த இனிமையான பாடல் நினைவுக்கு வந்தது... நான் குறிப்பிட்டுள்ள வார்த்தை சற்று அப்படி இப்படி இருந்தாலும், இந்த பதிவும், அந்த பாடலும் மிக நன்றாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை...

வாழ்த்துக்கள் பரிசல்...

''தென்றல் வந்து தீண்டும் போது என்ன எண்ணமோ மனசுல‌
திங்கள் வந்து காயும்போது என்ன எண்ணமோ நெனப்புல‌
வந்து வந்து போகுதம்மா, எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுதம்மா''

அப்படியே நம் வலை பக்கமும் வந்து பாருங்கள் (நிறைய முறை அழைத்தும் நீங்கள் வராததால், இந்த முறை ஒரு ஸ்பெஷல் அழைப்பு விடுத்துள்ளேன்..)...

தீபாவளி வாழ்த்தும், பதிவின் கடைசியில் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டும் வைத்துள்ளேன்.. வருகை தந்து மறுக்காமல் பெற்றுக்கொள்ளவும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

பாபு said...

cell மேட்டர் அருமை

Romeoboy said...

""உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை வணங்குகிறேன்.""

சூப்பர் ... நான் இதை அப்படியே ஏற்று கொள்கிறேன்.

பரிசல்காரன் said...

@ பேருந்து காதலன்

நன்றி நண்பா.

@ ஸ்ரீ * ஈஸ்வரி

நன்றி

@ ஸ்ரீமதி

நீங்களும் சொல்ல மாட்டீங்க, நானா சொன்னாலும் ஏத்துக்க மாட்டீங்க.. பொல்லாத உலகமடா சாமி!

@ கே வி ஆர்

நன்றி

@ பாண்டி பரணி

நன்றி!

@ கோபி

வந்துட்டே இருக்கேன்

@ பாபு

தேங்க்ஸ்!

@ ரோமியோபாய்

Thanks Buddy!

Kathir said...

பதிவு நல்லா இருந்தது.

மஞ்சள் - தெரிஞ்சே செய்கின்ற தப்பு. ஏதாச்சும் செய்யனும் பாஸ்.

பரிசல்காரன் said...

@ Kathir

Let's do something... Or not do anything with the cells..

நந்தா said...

பரிசல் உங்களுடையதில் மிக பிடித்த ஒரு பதிவு இது. குறிப்பாய் செல்ஃபோனில் உரக்கப் பேசுபவர்களின் மீதான உங்களது எழுத்துக்கள் மிக அழகாய் வெளிப்பட்டிருக்கிறது.

http:blog.nandhaonline.com

அறிவிலி said...

அந்த மஞ்ச கலரு.

சேம் ப்ளட்.

///@ பரிசல்காரன்

பதில் பின்னூட்டங்களுக்கு நன்றி பரிசல்..///

இது என்ன நமக்கு நாமேவா?

Kumky said...

நோ”பல் பரிசா...?
கொடுக்க ஆள் தயாரா..?
:-))

செல் பயன்பாடு வரைமுறைகளையெல்லாம் தாண்டி எல்லையில்லா வருவாயுடன் செழித்துவிட்டது கே.கே.
கண்டக்டரருடனும்,டீ கடைக்காரருடனும் செல்லில் விசாரிக்காதது ஒன்றுதான் பாக்கி.

மனதில் நினைத்துக்கொண்டிருந்தேன்...ஒரு நபரை தாக்குவதைவிடவும், நம்பிக்கை துரோகம்தான் மிக கொடியது.சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்..

ஹெல்மெட் சமாச்சாரத்தில் சில சிரமங்களும் இருக்கின்றன.

kishore said...

யார்யாருக்கோ நோபல் பரிசு குடுக்குறாங்க.. நீங்க ஒன்னு கேட்டா தரமாட்டேன்னா சொல்ல போறாங்க..

மங்களூர் சிவா said...

ஆதி உங்களுக்குக்கு கொடுத்த விருதுக்கு வாழ்த்துக்கள்.

வண்ண மயமான இடுகை.

விக்னேஷ்வரி said...

அனைத்தும் நல் எண்ணங்கள்.

Unknown said...

//.. "உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்’ என்ற வால்ட்டேரை ..//

அருமை..

பட்டாம்பூச்சி said...

வண்ணங்கள்+எண்ணங்கள் அருமை :)

Anonymous said...

why didn't u write caption for black and green.your comment about colors is a colorful post.

நாடோடி இலக்கியன் said...

பரிசல்,
ரொம்ப நாளா நீங்க பழைய படி எழுதவில்லையோங்கிற எண்ணம் எனக்கு இருந்தது(இது என்னுடைய எண்ணம் மட்டுமே).இந்த பதிவில் எதற்காக பரிசலை படிக்க வேண்டும் என்பதற்கு நியாயம் செய்திருக்கின்றீர்கள். சிறப்பான இடுகை.கோவி கண்ணனின் கருத்தை நானும் வழிமொழிந்து கொள்கிறேன்.

Kumky said...

அப்புறம்...?

Thamira said...

ஹெல்மெட்டின் பட்டியை (STRAP) போட மாட்டாராம்.//

அப்படி ஆட்களைப்பார்த்தால் ஏனோ தெரியவில்லை எனக்கு கடுங்கோபம் வரும். வீட்டுக்கு கதவென்று ஒன்றிருக்கிறது. கதவை சார்த்திவிட்டு பூட்டாமல் வெளியே போவீங்களாடா லூசுங்களான்னு கேட்டு.. ஹெல்மட்டை கழற்றிவிட்டு மண்டையிலேயே நங் நங்கென்று கொட்டலாம் போல இருக்கும்.

செல்போன் கதையும் அதே.!

என் போன் யாரையும் தொல்லை செய்யாமல் சைலன்ஸில்தான் இருக்கும். வீட்டுற்கு வந்தவுடன் ரிலீஸ் செய்ய மறந்து கால்கள் மிஸ்ஸாகின்றன சமயங்களில். அதனாலென்ன?

விருதைப்பொறுத்தவரை நண்பர்கள், சீனியர்கள், புதிய ரசனைக்காரர்கள் அனைவருக்கும் தரவேண்டுமென்ற ஆசை என்னிடம் உண்டு. ஆனால் அது பேராசை, மிகச்சிரமம் என்பதையும் உணர்கிறேன். இயன்றவரை செய்கிறேன். பார்ப்போம். உங்கள் பாராட்டுக்கூ நன்றி பரிசல்.! (இவ்வளவுக்கும் உங்கள் படத்தைவிட கார்க்கி, அப்துல் படங்கள் நன்றாக வந்திருக்கிறது அல்லவா?.. அவ்வ்வ். நான் ப்ரொபஷனல் அல்ல, எந்த முறையான பயிற்சியும் இல்லாத ஹாபிக்காரன் என்பதால் மன்னிக்கலாம். ஹிஹி)