Wednesday, April 4, 2012

ஒரு வார்த்தை

ரெண்டு வாரமா நான் சொல்லீட்டிருக்கேன். ரேஷன் கார்ட்ல அட்ரஸ் மாத்தணும். பேங்க் பாஸ்புக்ல அட்ரஸ் மாத்தணும்னு. யாரைப் பார்க்கணும்.. என்ன பண்ணனும்னு யாருகிட்டயாவது கேட்டீங்களான்னா இதுவரைக்கும் ஒரு பதிலில்லை”

“அ..”

“அதுக்கெங்க நேரம்ன்னு ஒடனே ஆரம்பிச்சிடாதீங்க. இந்த மாதிரி வீட்டு வேலைன்னா மட்டும்தான் உங்களுக்கு நேரம் இருக்காது..”

“ஆ..”

‘ஆஃபீஸ்ல லீவில்ல.. பர்மிஷன் கிடைக்காது – அதே பல்லவிதானே? எங்க யாரைப் பார்க்கணும்னு சொன்னா நான் போய்ப் பார்க்கறேன்.. அதக்கூட விசாரிச்சுச் சொல்லலைன்னா நான் என்னதான் பண்றதாம்?

“இ..”

“இப்படிப் புலம்பீட்டே இருக்கறதே எனக்கு வேலையாப் போச்சு. ஒரு காரியமும் முடிஞ்ச பாட்டைக் காணோம்.. இத விடுங்க.. ஒரு நாளைக்காவது வந்து புள்ளைங்ககிட்ட ‘இன்னைக்கு என்ன படிச்ச.. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க’ன்னு கேட்டதுண்டா?”

“எ..”

“ஒடனே ‘எதுக்கு கேட்கணும்.. அதான் நீ நல்லா பார்த்துக்கறியேன்னு ஐஸ் வைக்க வேண்டியது. நானும் கேட்டுட்டு அப்போதைக்கு பேசமாப் போய்டணும்.. இதானே ஒங்க நினைப்பு.. இன்னைக்கு விடறதாயில்லைங்க.. நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சே ஆகணும்”

“ஒ..”

“காலைல எந்திரிக்க வேண்டியது.. பேப்பர் பார்க்க வேண்டியது.. ஆஃபீஸ் போக வேண்டியது. நைட் வந்து டிவி பார்க்க வேண்டியது.. படுத்துத் தூங்கவேண்டியது…”

நா…

காலைலேருந்து நைட் வரைக்கும் நான் எவ்வளவு வேலை செய்ய வேண்டிருக்கு. ஒரு நாளைக்காவது கிச்சன் பக்கம் வந்து எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்கத் தெரியுதா?

அ..

அப்படிக் கேட்டு நான் சொல்லீட்டாலும் ஹெல்ப் பண்ணின மாதிரிதான்.. அன்னைக்கு அப்படித்தான் ஃப்ரென்ச் ஃப்ரை செஞ்சு தர்றேன்னு கிச்சனை வந்து நாசம் பண்ணீட்டுப் போனீங்களே.. அப்படித்தான் நடக்கும்..

எ..

எப்பன்னு கேட்காதீங்க.. ஒரு சண்டே அன்னைக்குச் செஞ்சீங்களே.. அப்ப்ப்பா! மொளகாத்தூள் எல்லாத்தையும் கொட்டி, எண்ணையெல்லாம் கொட்டி கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்றதுக்கே எனக்கு நாலு நாளாச்சு

இ..”

“’இதுக்குதான் நான் சமையலறைப் பக்கமே வர்றதில்ல’ன்னு சாக்கு சொல்லாதீங்க ஒடனே.. உதவி பண்றதை ஒழுங்கா பண்ணனும்”

“நா..”

“ஏதாவது சொல்லீட்டா மட்டும் கோவம் வரும். உம்முன்னு இருந்துடுவீங்க. நான் மட்டும்தான் எல்லாத்தையும் தலைல போட்டுக்கணும். இவருக்கு எதைப் பத்தியும் கவலை கெடையாது”

“ஆ..”

“ஆஃபீஸைப் பார்க்கறதா, வீட்டைப் பார்க்கறதான்னு, என்னமோ இவருதான் ஆஃபீஸ்ல எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்யற மாதிரி ஒரு கேள்வி வருமே இப்ப..”

“எ..”

“என்னதான் பண்ணச் சொல்ற இப்பன்னு கேளுங்க. வழக்கமான பல்லவிதானே நான் பாடறேன்… உங்களுக்கு ஒறைக்கவா போகுது”

“………………….”

“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்கப்பா வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தியா? எல்லாம் என் தலையெழுத்து!”

38 comments:

சுரேகா.. said...

டேய்...பின்றடா...!! சேம் ப்ளட்..!! :))))))))

சத்யா said...

அப்பா என்பது தான் இந்தக் கதையின் அடிச்சறுக்கல். நகைச்சுவையான கதையில் அந்த வார்த்தை ஒன்று தான் வலிக்க வைத்து விட்டது

R. Gopi said...

@பரிசல், :-))

@சத்யா, குழந்தைகள் முன்பு இது போன்று பேசக்கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?

Maya said...

Super :)))

பரிசல்காரன் said...

@ சத்யா


கோபி சொல்றதுதான் காரணம்னா ஒண்ணு சொல்றேன்.. அப்பான்னு அவங்க சொல்றது - பொறந்து 3 மாசமான குழந்தைகிட்டயாவும் இருக்கலாம் அல்லது மெச்சூர்டான காலேஜ் போற பையன்கிட்டயாவும் இருக்கலாம்.

இப்டி சொல்றது எல்லார் வீட்லயும் நடக்கறதுதானே?

Unmaivirumpi said...

இது எங்கேயோ கேட்ட மாதிரி ரொம்ப பரிச்சய்யம்மான வார்த்தைகளா இருக்கே ...

கிரி said...

:-)

kosaaksi said...

ஆஹா!சூப்பர்!ஒரு அப்ரானி கணவனின் எமோஷன்களை அப்படியே உள்வாங்கிருக்கீங்க! #ஆமா!உங்க வீட்ல அப்படித்தானுங்களா?-@NForNeil #Super!;)

இராஜராஜேஸ்வரி said...

வழக்கமான பல்லவி

நவின் குமார் said...

இந்த கமெண்ட இன்னும் யாரும் போடல சரி நாம போடுவோம் “பரிசல் டச்”....

Unknown said...

super.....

நாய் நக்ஸ் said...

செம பதிப்பு போல.....
காது சும்மா கொய்ய்யியியியியய்-னு
இருக்குமே....

இன்னும் செவிட்டு மெசின் வாங்கலையா????

கல்யாணம் ஆகும்போதே அதையும் சேர்த்து வாங்கணும்...

யாரும் friends சொல்லலையா...?????

Indian said...

அத்திப்பூ!

ர.கிருஷ்ணசாமி said...

நேத்துதான் எனக்கு இதே மாதிரி நடந்தது. இன்னைக்கு வந்து உங்க ப்ளாக் அ பார்த்தா அப்படியே எழுதி இருக்கீங்க பரிசல். சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறே வலிக்குது.

தல தளபதி said...

ஹா ஹா செம ;-)

maithriim said...

கேள்விக்கெல்லாம் ஒரே ஒரு எழுத்து பதிலாக வந்து கடைசியில் மௌனமே வார்த்தையாக மாறிவிட்டது! பாவம் மனைவிகள் :-)
amas32

sanchana said...

வழக்கம் போல் நன்றாக இருந்தது. எல்லாக் கணவர்களும் இப்படித்தானா? எங்க வீட்டிலும்.... நீங்களாவது ஒரு வார்த்தை, இங்க அது கூட இல்லை.

rathinamuthu said...

இது தான் உங்கள் களம். இதில் என்னைப் பொருத்தவரை நீங்கள் தான் டாப். கணவர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்களா? பிள்ளைகள் முன்பு தான் நாம் பிரச்சனைகளைப் பேசுகிறோம். தவறில்லை என்பது என் அபிப்பிராயம். சிறு குழந்தையாக இருந்தால் புரியப்போவதில்லை. மெச்சூர்டாக இருந்தால் புரியவேண்டியது அவசியம்.

முரளிகண்ணன் said...

சூப்பர் பரிசல்

குறையொன்றுமில்லை. said...

அருமை.
வாழ்த்துகள்.

ponsiva said...

அடிக்கடி எழுதுங்க +பரிசல்காரன் கிருஷ்ணா

பரிசல்- ’ஆ...”

ஆபிசல ஆனி அதிகம், அது இதுனு அளந்து விடாதிங்க..

பரிசல்- ’வீ...”

வீட்டுக்கரம்மா இப்படி மொத்து மொத்துனு மொத்துரதுனாலதான்..எழுத நெரமில்லைனு சொல்லாதிங்க அடிக்கடி எழுதுங்க பரிசல்..

சேலம் தேவா said...

:) கணவர்களின் பொதுப்பா(ட்டு)டத்திட்டமாவே வைக்கலாம்.

கோவி.கண்ணன் said...

இம்புட்டு நாளாக எங்கிருந்திங்க. நல்லா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

ஹொவ்ஸுக்கு ஹொவ்ஸு (G)கேட்-ஸ்டெப்பு...

chinnapiyan said...

enjoying your life. Good. wishes

சுசி said...

சிரிச்சு முடியல :)

KSGOA said...

நீண்ட நாட்களுக்கு பின் இந்த பதிவு உங்கள் டச்சுடன் சூப்பர்!!!!!!

பிரதீபா said...

வித்தியாசமா யோசிச்சு வந்த அழகான கதை/அனுபவம், எப்பொழுதும் போல இப்பவும் ரசிக்கும்படி :)

vinu said...

Parisal special treat!!!!!

கத்தார் சீனு said...

love u parisal....

post more like this....

keep us happy !!!

நாடோடி இலக்கியன் said...

கலக்கல். ரொம்ப நல்லாயிருந்தது.

Ganpat said...

அருமையோ அருமை..வாழ்த்துக்கள்..
<<“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்க புள்ள வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தீங்களா? எல்லாம் என் தலையெழுத்து!”>>
என இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ??
சத்யாவையும் சந்தோஷப்படுத்தி இருக்கலாம்!! ;-)

Ganpat said...

அருமையோ அருமை..வாழ்த்துக்கள்..
<<“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்க புள்ள வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தீங்களா? எல்லாம் என் தலையெழுத்து!”>>
என இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ??
சத்யாவையும் சந்தோஷப்படுத்தி இருக்கலாம்!! ;-)

Ganpat said...

அருமையோ அருமை..வாழ்த்துக்கள்..
<<“அரை மணி நேரமா கத்திகிட்டிருக்கேன். உங்க புள்ள வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசறாரான்னு பார்த்தீங்களா? எல்லாம் என் தலையெழுத்து!”>>
என இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ??
சத்யாவையும் சந்தோஷப்படுத்தி இருக்கலாம்!! ;-)

Kathiravan Rathinavel said...

கலக்கிட்டிங்க போங்க, படிக்க ஆரம்பிக்கும் போது இவ்வளவு தெளிவா நேர்ல பார்க்கற மாதிரியே எழுதுவிங்கனு நான் எதிர்பார்க்கலை, வாழ்த்துக்கள். உங்களை refer பன்னதுக்கு வேதாளம் க்கு நன்றி

exerji said...

அருமை, நண்பரே !

என்ன ஒண்ணு ரொம்ப மனச உருத்துதுன்னு கேட்டீங்கன்னா .. இந்த மாதிரி 'decent'ஆ சண்டை போட்டு வெகு நாட்கள் ஆயிட்டுதேன்னு ! :-)

'அதையும் தாண்டி.. புனிதமானது.. புனிதமானது' ...ங்கற ரேஞ்சுல போய் பல வருஷம் ...

'Bachelor'ஆ வலம் வந்து சந்தோசமா இருந்த பிரஜைங்க 'பேச்சு இலர்'ஆ மாறர இந்த அவலம் ...ஹும்ம் .. என்னத்த சொல்ல ...

..இதோ .. வந்துட்டேன் ...

exerji said...

அருமை, நண்பரே !

என்ன ஒண்ணு ரொம்ப மனச உருத்துதுன்னு கேட்டீங்கன்னா .. இந்த மாதிரி 'decent'ஆ சண்டை போட்டு வெகு நாட்கள் ஆயிட்டுதேன்னு ! :-)

'அதையும் தாண்டி.. புனிதமானது.. புனிதமானது' ...ங்கற ரேஞ்சுல போய் பல வருஷம் ...

'Bachelor'ஆ வலம் வந்து சந்தோசமா இருந்த பிரஜைங்க 'பேச்சு இலர்'ஆ மாறர இந்த அவலம் ...ஹும்ம் .. என்னத்த சொல்ல ...

..இதோ .. வந்துட்டேன் ...

Vijay Periasamy said...

ஹையோ , எனக்கு நடக்கரமாதிரியே இருக்கே ..

இவண்
இணையத் தமிழன் , விஜய் .
http://inaya-tamilan.blogspot.com