Monday, February 13, 2012

விகடனுக்கு நன்றி!


ந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடனில் உலகத்திலேயே மிகச் சிறந்த எழுத்தாளுமை மிக்க, அறிவான, அழகான, நல்ல வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘வலையோசை’ என்கிற பகுதி ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதில் கொங்கு மண்டல இணைப்பில், நான் மேற்கூறிய தகுதிகளோடிருக்கும் வலைப்பதிவாளர்கள் யாரும் இல்லாததால், என் வலைப்பூ பற்றிய செய்தி வந்திருக்கிறது.

இதைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கூறுகையில், ‘வலைப்பூ பற்றிய அறிமுகம் என்கிற வகையில் இது மிகச் சிறந்த அங்கீகாரம். வாழ்த்துகள்’ என்றார்.

கமலஹாசனுடன் பேசும் போது ‘உன் மூஞ்சிய எல்லாம் அட்டைப்படத்துல போட்டுட்டாங்களா! அட! நல்லாரு’ என்றார். பவர் ஸ்டார் சீனிவாசன் (அவர் வீட்டு மாடிப்படியில்) ஒரு படி மேலே போய் 'அடங்கொண்ணியா.. நடுப்பக்கத்துல ரெண்டு பக்கமா! இதே ப்ளேபாய்ல நடுப்பக்கம் வந்திருந்தாகூட அஞ்சோ பத்தோ (கோடியாம்) பார்த்திருக்கலாம்.. ஹும்.. ஒனக்கெல்லாம் நேரம்டா’ என்று வாழ்த்தி வசை பாடினார்.

எழுத்தாளரும், சிந்தனாவாதியுமான சாருநிவேதிதா ‘நோ கமெண்ட்ஸ். நீங்க வலைல எழுதறதெல்லாம் குப்பை. நான் அதையெல்லாம் படிக்கறதே இல்ல. அவியல்னு ஒரு குப்பை எழுதறீங்க. நகைச்சுவைங்கற பேர்ல பல குப்பைகளை எழுதித் தள்றீங்க. அதெல்லாம் படிக்கறதே இல்ல நான். என்னோட எக்ஸைல் புக் ஓசியில கெடச்சதா எங்கயோ எழுதிருந்தீங்க. அதப் படிச்சு விமர்சனம் போடாத உங்க வலைப்பூ பத்தியெல்லாம் அவங்க எழுதறாங்கன்னா.. அதுக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னு தெரியாததாலயே நோ கமெண்ட்ஸ்’ என்றார். மேலும் இது குறித்து நேயதேவப்பாணாவர் அரங்கில் நடக்கும் கூட்டத்தில் தான் பேசப்போவதில்லை என்றும் குறிப்பிடச் சொன்னார்.

மேலும் பலர் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்:

ஜெயலலிதா: வாழ்த்துகள். ஆறு டூ ஒன்பது கரண்ட் இல்லாததால் இன்னும் அந்த விகடனைப் படிக்க முடியவில்லை. 9 மணிக்கு கரண்ட் வந்தால், சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு நான் உறங்கச் செல்வது வழக்கம். அதனால் பகலில் படித்துவிட்டு கருத்துச் சொல்கிறேன். பகலில், கரண்ட் இல்லாமல் ஏசி வேலை செய்யாவிட்டால் புழுக்கத்தில் படிக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி: பரிசல் வாழ்க. சென்ற ஆட்சியிலேயே இதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. சில கருங்காலிகள் செய்த சதியால் அது தாமதமாகிவிட்டது. என் ஆட்சியாக இருந்தால் இந்தச் செய்தி மெய்ன் விகடனில் வந்திருக்கும். எனினும் மகிழ்ச்சியே.

கேப்டன் விஜய்காந்த்: ஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

விஜய்: ‘ ’

அஜீத்: நான் பேஸ்மாட்டேன்.மேலும் கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், லக்கி, அதிஷா, கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் ஆகியோர் முறையே ‘வாவ்’ ‘அட’ ‘ஆஹா’ ‘ச்சே’ ‘ம்ம்!’ ‘ஓஹோ’ என்று வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும்

‘ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்..
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்..
அனா நான்தான்.. ஆவன்னா நீங்கள்..
நீங்களில்லாமல் நானிங்கு இல்லை இல்லை’ என்ற பாடலைப் பாடி / ஆடி சிடி அனுப்புகிறேன்.

---------------

பி.கு: விகடன் வாங்கி, அதில் என் பேரை பேனாவில் எழுதி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.. இப்ப அந்த விகடன்லயே... (போதும்டா நிறுத்து..!) ஆகவே - விகடனுக்கு நன்றி!.

43 comments:

யுவகிருஷ்ணா said...

:-)

Lakshmi said...

விகடனின் அங்கீகாரத்துக்கு வாழ்த்துகள்.

M.G.ரவிக்குமார்™..., said...

நச்!

கார்க்கி said...

உங்க‌ளோட‌ ச‌ட்டைப்ப‌ட‌ம் தான் விக‌ட‌னின் அட்டைப்ப‌ட‌ம் என்றெண்ணும் போது இந்த‌ க‌ட்டை இனி வேகும் என்று தோன்றுகிற‌து. இருந்தாலும் இதையெல்லாம் ச‌ட்டை செய்யாம‌ல், ஒரே குட்டையில் மித‌க்காம‌ல் ஓடியாடி வ‌ள‌ர‌ வேண்டுகிறேன்

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துகள்.

Jackiesekar said...

ஓஹோ...

வேதாளம் அர்ஜுன் said...

அதகளம்.... வாழ்த்துக்கள் குருவே./

வேதாளம் அர்ஜுன் said...

தலைவா யூ ஆர் கிரேட்....

வாழ்த்துகள்!

ஆளுங்க (AALUNGA) said...

விகடனில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

விகடன் அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள் பரிசல்.....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்த்துகள் ..

ஆதி தாமிரா said...

விகடனின் அங்கீகாரம் ஒரு சிறப்பான விஷயம் எனும் அதே நேரம் அதற்கான தகுதி, உழைப்பு, உண்மை, உயர்வு, நம்பிக்கை, நேர்மை..

அடச்சே..

வாழ்த்துகள் மச்சி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஒபாமா சொன்னாதை விட்டுடிங்க ?

Sen22 said...

நல்ல விஷயம்.. வாழ்த்துக்கள்...

இளங்கோ said...

வாழ்த்துகள் :)

Nithu Bala said...

வாழ்த்துக்கள்:-)

வெண் புரவி said...

வாழ்த்துக்கள் பரிசல். ரஜினியை கூட்டி வந்து ஒரு பாராட்டுவிழா நடத்திடுவோமா?

வெண் புரவி said...

வாழ்த்துக்கள் பரிசல். ரஜினியை கூட்டி வந்து ஒரு பாராட்டுவிழா நடத்திடுவோமா?

நடராஜன் said...

டிவிட்டரில் கேட்ட அதே கேள்வியைத் தான் இங்கும் கேட்கிறேன்! உங்கள் படம் விகடன் அட்டைப் படத்தில் வரலாம். ஆனால் ப்ளேபாய் அட்டைப்படத்தில்????

Madhavan Srinivasagopalan said...

நல்லதொரு அங்கீகாரம் ..
வாழ்த்துக்கள் .

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் பரிசல் கிருஷ்ணா..

middleclassmadhavi said...

Congrats!

KSGOA said...

மீண்டும் இங்கு ஒரு முறை என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

சுசி said...

வாழ்த்துகள் :)

Azhagesan Jayaseelan said...

வாழ்த்துக்கள்..... :-)

இரசிகை said...

:)

vaazhthukal..

Anonymous said...

வணக்கம் நண்பரே!

உங்கள் வலைப்பூவை பற்றி நான் விகடனில் நேற்று தான் பார்க்க நேர்ந்தது. நீங்களும் நாம ஊரு பக்கம்னு தெரிஞ்சதும் மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு.

உங்களோட பதிப்புகள் மிக அருமை. உங்கள் பதிவுலக சேவை தொடர எனது வாழ்த்துக்கள்... :)

முரளிகுமார் பத்மநாபன் said...

vaalthukkal thala

பிரதீபா said...

வாழ்த்துக்கள் பரிசல் !! கார்க்கி கமெண்ட் :)

vinu said...

;-)

ப.செல்வக்குமார் said...

அண்ணா :)))))) இப்பத்தான் படிச்சேன். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் விகடன் வாங்கி படிச்சிட்டு மறுபடி வர்றேன் :))

சின்ன கண்ணன் said...

வாழ்த்துக்கள்...

விகடன் முதல் பக்த்தில் தல படம் போல உங்க படமும் வெகு விரைவில் வர வேண்டும் நண்பரே . . .

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான வாழ்த்துகள்
விகடன் அங்கீகாரத்திற்கு!

நாகராஜ் said...

CONGRATS SIR...

வால்பையன் said...

இது எப்பவோ நடந்திருக்க வேண்டியது தல!

வாழ்த்த வயதில்லை தான், ஆனாலும் வாழ்த்துக்கள்!

Vetrimagal said...

Congratulations. நன்றாக எழுதப்பன்ன பதிவுகள்.

நன்றி.

Gopi Ramamoorthy said...

இப்போதான் பாக்கிறேன். வாழ்த்துகள்!

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள் பரிசல் :)

க.பாலாசி said...

வாழ்த்துகள் தலைவரே..

jaisankar jaganathan said...

பரிசல் உன்னை பாராட்ட வார்த்தையே இல்லை. சீக்கிரம் உன் பேர் மெயின் விகடன்ல மெயின் பக்க்த்துல வரும் என் வாழ்த்துகிறேன்

Madhan Kumar said...

very good...

மாயத் திரையன் said...

kekkaravan kenaiyana irundhaa
rajabakshe i,na sabai athibarnu solluvanga pola,


sari eppadio naamum oru rowdi,sorry valaippathivarthaan vazththukkal parisalkaar.....runggggg

மேகா said...

வாழ்த்துகள்... பதிப்புகள் மிக அருமை.