Tuesday, March 29, 2011

களை கட்டிய கருத்தரங்கம்

திருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக அனைத்துக் கட்சி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கூட்டி, திருப்பூர் மக்களுக்கான அவர்கள் திட்டங்களை விளக்க, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பொருளில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன்.

உள்ளே செல்கிற போதே வேட்பாளர் ஒருவர் ‘இது நியாயமா.. இல்லை நியாயமா என்று கேட்கிறேன்..’ என்று என்னைப் பார்த்து விரல் நீட்டி கேட்க, ‘லேட்டாப் போனதுக்குதான் திட்றாரோ’ என்று ஒரு கணம் பயந்தவாறே இடம் தேடி அமர்ந்தேன். அவர் திருப்பூருக்கு யாரோ செய்த துரோகம் என்று யாரையோ காற்றில் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.

நான் கூட்டத்தைப் பார்த்தேன். கணிசமான கூட்டம் வந்திருந்தது. பெரிய அறிவிப்போ பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனர்களோ இல்லாமல் காந்தி படம் போட்ட நோட்டீஸ் துண்டு இத்தனை பேரைச் சேர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

பேசிக்கொண்டிருந்தவர் முடிக்க அடுத்ததாக எம் எஸ் உதயமூர்த்தியின் மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் விருமாண்டி மீசையுடன் வந்தார். ரொம்ப அடக்க ஒடுக்கமான வேட்பாளர் இவர்தான் என நினைக்கிறேன். குனிந்த தலை நிமிராமல் பேசினார். (நிமிர்ந்தால் எழுதியதைப் படிக்க முடியாமல் போவதும் காரணம்) பூராவும் படித்துவிட்டு நான் சொன்னதில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். 37 பேர் கைதட்டினார்கள்.

அடுத்ததாக பா ஜ க வேட்பாளர். ’எங்கள் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது தெரியுமா’ என்று பேச ‘ஏன்.. உங்களுக்கே தெரியலையா?’ என்று கேட்க நினைத்ததை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒவ்வொருவராக கிட்டத்தட்ட ஏழோ, எட்டோ வேட்பாளர்கள் பேச அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உட்கார்ந்திருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் (சிட்டிங் எம் எல் ஏ-ங்க) கோவிந்தசாமி வந்தார். கடந்த காலத்தில் என்னென்ன செய்தேன் என்று சொல்லித்தான் நான் ஓட்டு கேட்கப் போகிறேன் என்று சிலவற்றைச் சொன்னார். பேசி முடித்து அவர் கிளம்ப எத்தனிக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழுவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் ஒரு துண்டுச் சீட்டை எழுதி நீட்ட ‘சாய ஆலைப் பிரச்னைக்கு என்ன தீர்வு தருவீர்கள்’ என்று கேட்க அப்போதுதான் ஞாபகம் வந்த அவர் ‘இதை நான் மறக்கவில்லை. (அப்பறம் ஏன் பேசல?) ஆனால் இந்த நிலைக்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்த்தீர்களேயானால்’ என்று ஒரு பதினைந்து நிமிட எக்ஸ்ட்ரா மொக்கையைப் போட்டுவிட்டுப் போனார். வராவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றே அவர் வந்திருந்ததாய்த் தோன்றியது.

காங்கிரஸ் வேட்பாளர் உள்ளேயே வரிசையாக அமர்ந்திருந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. வேட்பாளர்களுக்குப் பின் வாக்காளர் சார்பில் பேச மேடையேறி நின்றிருந்த பாரதி கிருஷ்ணகுமார் கொஞ்சம் ரௌத்ரம் பழகலாமா என்று யோசிப்பதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மைக்கில் விடுத்த வேண்டுகோளால் கூட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

திருப்பூரின் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரைத் தவிர எல்லாரும் வந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பைத் தந்தது. இது ஒரு நல்ல முன்னுதாரணம் என்று பலரும் பேசிக் கொண்டார்கள்.


பேசிய வேட்பாளர்கள் எல்லாருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருந்தது. அது -

-என்று சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில்..
-நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்
-ஒன்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்

இந்த மூன்று வரிகளை எல்லாருமே பேசினார்கள்.

மேடையிலிருந்த பாரதி கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். ‘தேர்தலை நேர்மையாக நடத்தும் திறன் நம் தேர்தல் கமிஷனுக்கு வந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை’ என்றார். அப்படியாயின் ஏன் அவர்கள் எங்கெங்கே எப்படி எப்படி சோதனை நடத்தப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே நாளிதழ்கள் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்றார். சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.

முன்பெல்லாம் வரி கட்டுகிறவர்கள் மட்டுமே ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்கள். அம்பேத்கர்தான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற மசோதாவை கொணர்ந்தார் என்றார். நேருவும் அதை வழிமொழிந்தார் என்றார். 1951ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் பற்றி சொன்னார். 1951 அக்டோபர் 24 முதல் 1952 ஃபிப்ரவரி 24 வரை நான்கு மாதங்கள் நடைபெற்றதாம்.

ஓட்டுக்கு உப்புமா கொடுத்தார்களாம் 1952களில்! அப்பவே...!

அதே போல கள்ள ஓட்டு பற்றியும் சொன்னார். ஜனாதிபதி ஆர்.வி. வெங்கட்ராமனின் ஓட்டை யாரோ போட்டிருந்தார்களாம். சரி.. அவரைத்தான் தெரியாது. சிவாஜி கணேசனையுமா தெரியாது? அவர் ஓட்டையும் குத்திவிட்டார்களாம். காரில் ஏறும்போது அவர் சொன்னாராம்: “அங்கதான் டூப்னா.. இங்கயுமா?”

கடைசியாக அவர் சொன்ன இரண்டு லியோ டால்ஸ்டாயின் கதைகள்தான் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு சுவையாக முடித்தது. இரண்டு கதைகளுக்கும் வலிக்க வலிக்க கைதட்டினார்கள் பார்வையாளர்கள். அதுவும் இரண்டாவது கதையின்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அனைவரும் எழுந்து நின்று விடாமல் இரண்டு நிமிடம் கைதட்டியதில் அவரே பேச்சற்றுப் போனார்.

என்ன அந்தக் கதைகள்?

அடுத்த பதிவில்!

(எப்பூடி??)


.

17 comments:

பிரதீபா said...

அடுத்த பதிவுக்கு ஆஹா கதைகள்..

சுசி said...

கதை கேக்க நான் ரெடிங்கோ ;)

Unknown said...

நிச்சயம் இது நல்ல முன்னுதாரணம் தான். கதை கேட்க ஆவல்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நல்ல முயற்சி.
நல்ல வேலை - அங்கும் வந்து சேரால் அடித்துக்கொள்ளாமல் இருந்தார்கள்.
நன்றி.

a said...

என்னா வில்லத்தனம்....

வலிக்க வலிக்க கை தட்டினாங்களா??? யார் முதுகுல....

அன்பேசிவம் said...

வெயிட்டிங் ஃபார் லியோ டால்ஸ்டாய்

Cable சங்கர் said...

interesting

middleclassmadhavi said...

நாடு முன்னேறியிருக்கிறது - உப்புமா பிரியாணியாகி இருக்கே!!

நிழற்குடை said...

எல்லாம் கேபிள் சங்கரைப் படிப்பதால் வரும் வினை. இண்ட்ரஸ்டிங்கா கொண்டு‍ போக வேண்டியது‍ படார்னு‍ தொடரும்-னு‍ போட வேண்டியது‍. கதைய சொல்லுங்க சார்.

நிகழ்காலத்தில்... said...

//சோதனைகளில் இதுவரை எந்த அரசியல் கட்சியின் பணமும் பிடிபட்டதாக வரவில்லை. எல்லாம் வெல்ல மண்டி, வெங்காய மண்டிக்காரர்களின் பணம் மட்டுமே மாட்டிக் கொண்டு கருவூலம் பயணிக்கிறது என்ற உண்மையை அவர் சொன்னபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.//

உண்மை, உண்மை, உண்மை

venkat said...

let democracy go hell story first

selventhiran said...

யோவ்... கலக்கிட்டய்யா...!

selventhiran said...

என் பழைய பதிவிலிருந்து சிறு துண்டு:

ஓட்டுக்காகக் காசு என்பதைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது யார்?

சி.பா. ஆதித்தனார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். 1957ல் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலின் போது காசு வினியோகம் துவங்கி இருக்கிறது. எங்கே மாற்றிப்போட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் சாமிப் படங்களைக் காட்டி சத்தியம் வேறு வாங்கிக்கொண்டு ஜெயித்தார்களாம்.

ஆக ஓட்டுக்குக் காசு என்கிற கான்செப்ட் துவங்கி சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. யாராவது விழா எடுத்தால் காசு வாங்கிக்கொண்டு கலந்து கொள்ளலாம்.

kailash said...

10 years back when it came to bogus voting and booth capturing only Bihar and UP came to our mind ( We still had bogus voting but it was upto certain extent and not as a mass ) , after Tirumangalam Tamilnadu has made a remarkable turnaround . We should send our appreciation to Azhagiri for bringing this revolution to TN .Even though it is a good start it shows the lack of vision among our candidates . Sensitive issue of dye factories pollution has not been touched by sitting MLA , some one has to remind him about that.

Vijay Periasamy said...

திருப்பூர் நகரத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன் , தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் , திருப்பூருக்கு சிறப்பான இடம் உண்டு .
தமிழகத்தின் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கால் பாகம் , திருப்பூரில் இருந்து தான் நடக்கிறது . இன்னும் பல சிறப்புகளை கொண்ட இந்த தொழில் நகரில் சாலை வசதிகளும், சாலை பராமரிப்பும் ஏன் படு மோசமாக உள்ளன ?
(இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை )

Ganpat said...

மிகவும் நன்றி குமார்!
உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி முன்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!

பாரதி கிருஷ்ணகுமாரை,யாராவது சென்னைக்கும் அழைத்து பேசவைத்தால் நல்லா இருக்கும்.ஞானி போன்றவர்கள் முயற்சி செய்யலாம்.
அந்த சிவாஜி கணேசன் செய்தி எனக்கும் புதுசு.அந்த பூத் ஆபீசரை தூக்கில் போட்டிருக்க வேண்டும்.

Anisha Yunus said...

hmm... I sense, it was not upto the expectations though!!! But definitely a good start in politics...!!

Thanks anna for sharing :)