Friday, March 25, 2011
திருப்பூரில் ஒரு கருத்தரங்கம்
அந்தப் பிரபல அரசியல்வாதியின் மகள் இந்து மருத்துவக் கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவி. முதல் வகுப்பில் தேறுவார் என எதிர்பார்த்திருக்க – முடிவு வெளியாகிறது அவர் தேர்வில் தவறிவிட்டதாக. சக மாணவிகளெல்லாரும் திகைக்க, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடிவெடுக்கிறார் இந்து. தந்தையிடம் பேசியபோது – அனுமதி கிடைக்கவில்லை அவரிடமிருந்து!
‘மறு மதிப்பீடு செய்து, நீ உரிய மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தாலும் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டதாக உல்கம் பழி சொல்லும். ஆகவே அடுத்த தேர்வுக்கு நீ தயாராகு’ என்கிறார் அவர். மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டார்!
அதன் பின் இந்திய நிதியமைச்சராக, பிரமராகவெல்லாம் பணியாற்றிய அவர் பதவிக்காலம் முடிந்து ஒரு அடுக்கு மாடிக் கட்ட்த்தில் வசித்து வந்து, அந்த அடுக்கு மாடிக் கட்ட்ட உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை வெளியேறுமாறு தீர்ப்பளிக்க, மனமுடைந்த மருமகள் மன்நிலை பாதிக்கப்பட்டு மரித்தார்.
அந்த அரசியல்வாதி யார்?
மொரார்ஜி தேசாய்!
இந்தத் தகவலை நான் படித்தது தமிழருவி மணியன் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற நூலில். இதுபோல இப்போது கேட்டால் ‘இப்படியெல்லாம் இருந்திருக்காங்களா?’ என்ற அதிர்ச்சியில் நமக்கே மாரடைப்பு வந்துவிடும் போல பல சம்பவங்களை சொல்லியிருக்கிறார் அவர். தமிழருவி மணியனிடம் எனக்குப் பிடித்தது இது போன்ற நல்லவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, வெறும் எழுத்தில் அதைக் காட்டிவிட்டுப் போகாமல் சொந்த வாழ்க்கையிலும் அவர்களைப் பின்பற்றுவதுதான்.
தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சி அரசியல் சாராத சமுதாய அமைப்பொன்றை நிறுவி நடத்தி வருகிறார். அதன் சார்பில் வரும் ஞாயிறு – 27.03.2011 அன்று- திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடாகியிருக்கிறது.
என்ன செய்யப் போகிறோம் நாங்கள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று விளக்க, எங்கே போகிறோம் நாம் என்ற தலைப்பில் வாக்காளர் சார்பில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச இருக்கிறார்.
அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்து தங்கள் திட்டங்களை விளக்கப் போகிறார்களா?
ஆம்! உங்களைப் போலவே நானும் வெகு ஆர்வமாக இருக்கிறேன் பங்கு கொள்ள..
திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் யாவரும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புக்கு:
96 888 111 8
0421 - 43 222 82
.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//என்ன செய்யப் போகிறோம் நாங்கள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மக்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்று விளக்க, எங்கே போகிறோம் நாம் என்ற தலைப்பில் வாக்காளர் சார்பில் திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச இருக்கிறார்.
அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அமர்ந்து தங்கள் திட்டங்களை விளக்கப் போகிறார்களா?
ஆம்! உங்களைப் போலவே நானும் வெகு ஆர்வமாக இருக்கிறேன் பங்கு கொள்ள..//
wow...அமெரிக்கன் ஸ்டைலில் இது முதல் படி. இப்படியே எல்லா ஊரிலும் வைத்து, அந்த வேட்பாளர்கள் மக்கள் முன்னாடி சொன்னதையும் செய்து காட்டினார்களேயானால்... இந்தியா உண்மையிலேயே Incredible India ஆகிவிடும். மறக்காமல் Follow up Coverageஉம் செய்யுங்கள் பரிசலண்ணா. :)
Hello Parisal,
This seems to be a good start.
If possible, post the video in youtube.
eager to see my home towns future rulers and also maniyan
rgds
தமிழக அரசியல் "திருப்பூர்".
good initiative....
மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ! எல்லா வேட்பாளர்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் . இந்த நிகழ்ச்சி முன் மாதிரியாக அமைந்து எல்லா தொகுதிகளுக்கும் இது பரவ வேண்டும் ! இதே கருத்தை ஞானியும் முன் வைத்துள்ளார் , நீங்கள் செயல் படுத்தியுள்ளிர்கள் , நன்றி
நல்ல நிகழ்ச்சி ஆனா நான் இன்னைக்கு சென்னை போறதால கலந்துக்க முடியாது, பகிர்வுக்கு நன்றி சார்...
பகிர்விற்கு நன்றி
ஒரு நல்ல காலத்திற்கேற்ற முன்னெடுப்பு. பதிவர்களின் சமுதாய அக்கறையில், ஈரோடு (இதிலும்)பதிவர்கள் வழியில் திருப்பூரும் செல்வது மிகுந்த மனநிறவையும், இருளில் ஒரு ஒளியையும் காட்டுகிறது. கூட்டம் இனிது நடைபெற்று பெரும் பகுதியினர் பயனுற வாழ்த்துகிறேன்.
பரிசல் : ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகத்தை பல நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன். விகடன் பிரசுரம் உள்பட எங்கேயும் கிடைக்கவில்லை.... நீங்க எங்க வாங்குனீங்க???
பரிசல் : ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகத்தை பல நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன். விகடன் பிரசுரம் உள்பட எங்கேயும் கிடைக்கவில்லை.... நீங்க எங்க வாங்குனீங்க???
பகிர்விற்கு நன்றி
Dear வழிப்போக்கன் - யோகேஷ், you can buy ஊருக்கு நல்லது சொல்வேன் at noolulagam book store.
http://www.noolulagam.com/product/?pid=77
Post a Comment