Friday, March 25, 2011

இந்தியா டீமை இன்னும் என்னென்னெல்லாம் சொல்லித் திட்டலாம்?



ன்னெல்லாம் பேசணுமோ பேசியாச்சு!

ஒண்ணுக்கும் ஆகாத டீம்.. பவுலிங்கே இல்லை...


பாரேன்.. பங்களாதேஷ் முண்ணூறை நெருங்கீட்டானுக.. கொஞ்சம் கம்மியா எடுத்திருந்தோம்னா சங்குதான் நமக்கு..


327 எடுத்தும் ஜெயிக்காம ட்ரா பண்றானுக பாரு... இவனுக வேலைக்காக மாட்டானுக..


விட்டா அயர்லாந்து ஜெயிச்சிருக்கும். 46வது ஓவர் வரைக்கும் முக்கறானுகப்பா..



நெதர்லாந்து கூட வெறும் 190 எடுக்க, அஞ்சு விக்கெட் கொடுக்கறானுக..


அதெல்லாம் கூடப் போகட்டும். சவுத் ஆஃப்ரிக்கா மேட்ச்ல தோத்ததுக்கு காரணம் சச்சின் செஞ்சுரி அடிச்சதாலயாம்!

அதுவும் நெஹ்ராவுக்கு லாஸ்ட் ஓவர் குடுத்ததுக்கு தோனியை அன்னைக்குப் பொறந்த குழந்தைகூடத் திட்டிருக்கும்!

அடாடாடாடாடா!!!

ஏங்க கப்பு வேணுமா வேண்டாமா? இந்தியா ஜெயிக்கணுமா வேணாமா? சும்மா தொட்டது 90க்கும் நெகடீவாப் பேசறதுக்குன்னே திரிஞ்சா எப்படீங்க?

எங்க ஆஃபீஸ்ல ஒருத்தன் இருக்கான்.. நேத்து மேட்ச் ஆரம்பிக்கறப்பவே வந்தான்:

‘எனக்கென்னவோ இன்னைக்கு டவுட்தான்ப்பா’

‘என்ன டவுட்டு?’

‘அவனுக மூணு வருஷமா வொர்ல்ட் சாம்பியன்ஸ்...’

‘இருந்துட்டுப் போட்டும்..

அதுமில்லாம வரலாறு என்ன சொல்லுதுன்னா...’

‘சார்.. நீங்க வரலாறுல பி ஏ -வா எம் ஏ வா?’ன்னு கேட்டேன்...

‘சொல்றத முழுசாக் கேளு.. இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவை நாம ஜெயிச்சதே இல்ல..’

‘சரி..’

‘அதுனால இன்னைக்கு டவுட்டுதான்..ஆனா ஒரே ஒரு சான்ஸ் இருக்கு’

‘என்னது அது..?’

‘சேவக் 50 ஓவர் நின்னு ஆடினான்னா...’

‘நின்னுட்டு எப்படிய்யா ஆட முடியும்?’

‘ப்ச்.. கேளுய்யா.. 50 ஓவர் முழுசா வெளையாண்டா ஜெயிக்கலாம்’

‘வேற என்னென்ன ஜோசியம் சொல்வீங்கடா நீங்க? டேய்.. அந்தக் காலமெல்லாம் போயாச்சுடா.. எவன் விளையாண்டாலும், இல்லைன்னாலும் ஜெயிப்போம்.. பாரு நீ’ன்னேன் நான்.

‘டாஸ் ரொம்ப முக்கியம்’னான்.

‘டாஸ் போடற காசு வேணா ரொம்ப முக்கியமா இருக்கலாம்.. இன்னைக்குப் பாரு ஆட்டத்தை’ன்னேன்.

ஆஸ்திரேலியா டாஸ் ஜெயிச்சாங்களா... வந்துட்டான் மறுபடியும் அவன்.
‘ப்ச்.. அவ்ளோதான்ப்பா..’னான்.

ஐய்யய்யய்ய.. இவனொருத்தன்னு நெனைச்சுட்டே ‘போடா.. போய் வேலையப் பாரு’ன்னேன்.

பாண்டிங் ஆடிட்டிருக்கறப்ப மறுபடி வந்தான் ‘ஒரு விக்கெட்டை எடுக்க முடியல நம்மாளுகளால..’ன்னான்.

‘அதான் எதிர்ல விக்கெட் விழுந்துட்டே இருக்கேடா’ன்னேன்.

பாண்டிங் செஞ்சுரி அடிச்சுடுவான் போல இருக்கே’

‘அடிக்கட்டும். ஊருக்குப் போறப்ப ஒரு செஞ்சுரியோட போகட்டுமேடா.. உனக்கேன் காண்டு?’ன்னேன்.

260 அடிச்சாச்சு. அப்பயும் வந்து குய்யோ முறையோன்னான்.

அடிச்சாச்சு. இப்ப காலிறுதில ஜெயிச்சாச்சு...

அப்புற‌ம் வ‌ந்து இப்ப‌டிதான்யா ஆட‌ணும்.. என்ன‌ம்மா ஆடினான் யுவி? ஆஸி எல்லாம் ஜெயிக்கும்னு எப்ப‌டி ந‌ம்பினோமோ? சொத்தை டீமா இருக்கு. இன்னும் ஏதேதோ பாராட்டி சொன்னான்.அவ‌ன் திட்டின‌துல‌ எப்ப‌டி ஒரு லாஜிக்கும் இல்லையோ, அதே போல‌ அவ‌ன் பாராட்டின‌துல‌ம் ஒரு லாஜிக்கும் இருப்ப‌தாக‌ தெரிய‌லை. அப்ப‌டி என்ன‌டா புட‌ல‌ங்காய் லாஜிக்னு கேட்கிற‌வ‌ங்களுக்கு..

முத‌ல் மேட் ப‌ங்க‌ளாதேஷ் கூட‌. அதுவும் அவ‌ங்க‌ நாட்டுல‌ ந‌ட‌க்கிற‌ முத‌ல் வேர்ல்ட் க‌ப் மேட்ச். எல்லோரும் என்ன‌ விரும்புவாங்க‌? தோத்தாலும் 300 ர‌ன் அடிக்க‌ணும்னுதானே விரும்புவாங்க‌? செம‌ ப‌வுலிங் விக்கெட் த‌யார் செஞ்சு, இந்தியா 180க்கு அவுட்டாகி அதையும் அவ‌னுங்க‌ அடிக்க‌ முடியாம‌ 170ல‌ அவுட் ஆனா எப்ப‌டி இருக்கும்? அந்த‌ பிட்ச்சுல‌ 170 அடிச்ச‌தே பெரிய‌ சாத‌னைன்னு சொல்ற‌வ‌ங்க‌ள‌ விட‌ 180 அடிக்க‌ முடியலையான்னு ஏமாந்து போற‌வ‌ங்க‌தான் அதிக‌ம். இப்ப‌ ந‌ம்ம‌ ஆட்க‌ள் சொல்ல‌லையா, இந்தியாகிட்ட‌ 291 அடிச்சிட்டானேன்னு. அந்த‌ லாஜிக் தான் முத‌ல் மேட்சுக்கு பிட்ச்ச‌ அப்ப‌டி த‌யார் செய்ய‌ கார‌ண‌ம்.நாம‌ 70 ர‌ன் வித்தியாச‌த்தில‌ ஜெயிச்சோம். அது சாதார‌ண‌ மார்ஜினா என‌க்கு தெரில‌.

அடுத்து இங்கிலாந்து.அதுல‌ நாம‌ க‌டைசில‌ விக்கெட்ட‌ க‌ட‌க‌ட‌ன்னு விட்ட‌து த‌ப்புதான். அதுக்கு ச‌ப்பைக்க‌ட்டு க‌ட்ட‌ல‌. நாம‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்சோம்ன்ற‌து உண்மை. ஆனா இங்கிலாந்து ப‌வுலிங் சொத்தையான்னு பார்க்க‌ணும். செளத் ஆஃப்ரிக்கா கூட‌ 176 அடிக்க‌விடாம‌ செஞ்ச‌வ‌ங்க‌தானே அவ‌ங்க‌? என்ன‌தான் ப‌வுலிங் பிட்ட்ச்சா இருந்தாலும் தென்னாப்பிரிக்கா பேட்டிங் லைன் அப்க்கு அது கொஞ்ச‌ம் ஈசிதானே? அதுல‌ ந‌ம்ம‌ ஆளுங்க‌ 10 ர‌ன் க‌ம்மியா அடிச்ச‌து த‌ப்புதான். ஆனா பெரிய‌ த‌ப்பு இல்லை. இதான் என் லாஜிக்.

அடுத்த‌ மேட்ச் அய‌ர்லாந்த். அதுல‌ நாம‌ 46 ஓவ‌ர்ல‌ அடிச்சோம். தோனி இந்த‌ தொட‌ர்ல‌ அவ்ளோ ந‌ல்ல‌ ஃபார்ம்ல‌ இல்லை. அவ‌ர் அந்த‌ மேட்ச்சுல‌ அவ‌ரோட‌ கான்ஃபிடென்ட்ட‌ ர‌ன் அடிச்சு ஏத்திக்க நினைச்சாரு. அதான் அவ்ளோ பொறுமையா ஆடினார்ன்னு நான் நினைக்கிறேன். யூசுவ் வ‌ந்த‌வுட‌னே ப‌ந்து எப்ப‌டி தெறிச்சு ஓடுச்சுன்னு நினைவிருக்கா? தோனி அடிக்க‌டி சொல்ற‌ வாச‌க‌ம்.”Dont Always play for crowd. Play for the game”.

அடுத்த‌ காமெடி ச‌ச்சின் ச‌த‌ம‌டிச்ச‌தால‌தான் செள‌த் ஆஃப்ரிக்கா கூட‌ தோத்தோமாம். ஒரு ஸ்கூலில் 100% ரிச‌ல்ட் வ‌ர‌லைன்னு வைங்க‌. ஆனா முத‌ல் மார்க் ந‌ம்ம‌ பைய‌ன்னு வ‌ச்சிக்குவோம். மொத்த‌ ஸ்கூலும் பாஸ் ஆகாத‌த‌ற்கு உங்க‌ பைய‌ன் தான் கார‌ண‌ம். அவ‌ன் ராசியில்லை. அவ‌ன ரெண்டாவ‌து ரேங்க் போடுங்க‌ன்னு ம‌த்த‌ பேர‌ன்ட்ஸ் சொன்னா எப்ப‌டி இருக்கும் உங்க‌ளுக்கு? ஃபேக்ட் வேற‌ .ஒப்பினிய‌ன் வேற‌.அத‌ ப‌த்தி த‌னிப்ப‌திவுல‌ பார்ப்போம். ஒரு வ‌ரில‌ சொன்னா ச‌ச்சின் 100% அடிச்சா 69% இந்தியா ஜெயிச்சிருக்கு. இது பான்டிங், ஜெய‌சூர்யா போன்ற‌ ப‌ல‌ பேர‌ விட‌ ரொம்ப‌ ந‌ல்ல‌ ப‌ர்சேன்ட்டேஜ்.

வெஸ்ட் இன்டீஸ்கூட‌ 80 ர‌ன் வித்தியாச‌த்துல‌ ஜெயிச்சோம். ஆனா அதையும் சில‌ பேர் பாகிஸ்- ‍வெஸ்த் இன்டீஸ் மேட்ச் அப்போ கிண்ட‌ல் அடிச்சாங்க‌. அதுக்கு விள‌க்க‌ம் சொன்னா கார்த்திக்கிற்கு அம்மா ப‌தில் சொன்ன‌ மாதிரி ஆயிடும். அத‌னால‌ விட்டுடுவோம்.

இப்போ பாகிஸ்தான் தான் செம‌ ஸ்ட்ராங்னு சொல்லிட்டு திரிய‌றாங்க‌. புத‌ன்கிழ‌மை நைட்டு அவ‌ங்க‌ளுக்கும் இருக்கும். இப்போ என்ன‌ செய்ய‌லாம்?



னக்கு சமீபத்துல வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸை சொல்லி இத முடிக்கறேன்..

படுக்கையறையில் மனைவியும் கணவனும் அமைதியாக ஆளுக்கொரு திசை பார்த்துப் படுத்திருக்கிறார்கள்.

மனைவி: (மனதுக்குள்) என்னாச்சு.. ஏன் பேசாம படுத்திருக்காரு? ஏன் என்கிட்ட பேச மாட்டீங்கறாரு? வேற எவளாவது அவரோட மனசுல வந்துட்டாளா? நான் அலுத்துட்டேனா அவருக்கு? முகத்துல சுருக்கம் வந்தது காரணமா இருக்குமோ? ஓவரா மேக்கப் போடறன்னு சொல்லுவாரு.. அது பிடிக்காததாலயோ? நான் அசிங்கமாய்டேன் போல அவருக்கு.. கன்னா பின்னான்னு வெய்ட் போட்டுட்டேனோ.. இல்லியே.. ரொம்ப தொண தொணக்கறதால விலகிப் போறாரோ.. ஏன் இப்டி அப்செட்டா இருக்காரு?


கணவன்: (மனதுக்குள்):
















“ச்சே.. போயும் போயும் தோனி, நெஹ்ராகிட்டயா அந்த ஓவரைக் குடுக்கணும்?”

.

15 comments:

raji said...

நிறைய பேர் இப்படித்தான் லாஜிக்கே இல்லாம இந்தியாவை
குத்தம் குறை சொல்லிக்கிட்டே திரிவாங்க.

உதாரணமா - டாஸ் வின் பண்ணியும் ஏன் ஃபர்ஸ்ட் பேட்டிங் எடுத்தாங்களோ? ,

பாகிஸ்தான் முரட்டுத்தனமா விளையாடுவாங்க.இவங்களால தாக்குப் பிடிக்க கூட
முடியாது

இப்படி எல்லாம் சொல்லி முடிச்சு அது தப்புன்னு ஆனப்பறம் அதுக்கேத்தாப்லயும்
பேசுவாங்க. என்னமோ போங்க

சக்தி கல்வி மையம் said...

நல்லா கேளுங்க பாஸ்..

pudugaithendral said...

sms super :))

மாலோலன் said...

இப்படி நிறையபேர் திரியராங்க பாஸ்.ஆனா உள்ளுகுள்ள இந்தியா ஜெய்க்கணும்னு நெனப்பாங்க!
ஜோக் சூப்பர் !! ஆனா சுட்டதா?
ஒரிஜனல்:
அவளது நாட்குறிப்பிலிருந்து

ஞாயிறு மாலையிலிருந்து அவர் நடத்தை சற்று வினோதமாக இருந்தது. என் தோழிகளுடன் நாள் முழுதும் ஷாப்பிங் போய்விட்டு மாலையில் அவரை மதுரா ஹோட்டலில் டின்னருக்கு சந்திப்பதாகத் தான் ஏற்பாடு. அதற்கு சற்று லேட்டாகச் சென்றதால் தான் அப்படி இருக்கிறாரோ என நினைத்து மன்னிப்பு கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை!' என்றார்.

உணவருந்தும்போது, ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தார். ஒற்றை வார்த்தைகளில் ஏதோ பேசினார். "சரி வாருங்கள், கடற்கரை சென்று தனிமையில் பேசலாம்" என்றேன். வந்தார். எங்களுக்குள் உரையாடல் எதுவும் நிகழவில்லை! நான் என் தோழிகளுடன் நாள் முழுதும் ஊர் சுற்றியது குறித்து அவருக்கு கோபமோ என்ற நினைப்பில். " என் மேல் ஏதாவது மன வருத்தமா?" என வினவினேன். மறுபடியும், "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றார்.

காரில் வீட்டுக்குப் போகும் வழியில் அவரிடம், "நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்!" என்று தோளில் சாய்ந்து சொன்னதற்கு, புன்னகை பூத்தார். "நானும் கூடத் தான்!" என்று சொல்வார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!!! என்னவோ என்னை விட்டு அவர் விலகிச் செல்வது போலத் தோன்றியது. நான் அருகில் இருப்பதையே அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!

வீடு வந்தவுடன் டிவி பார்க்கத் துவங்கினார். அருகில் இருந்தபோதே அவர் என்னை விட்டு மிகத் தொலைவு சென்று விட்டது போன்ற ஓர் உணர்வு!!! மிகுந்த மன அழுத்தத்துடன் படுக்கையறை சென்றேன். சற்று நேரம் கழித்து அவரும் வந்து அருகில் படுத்துக் கொண்டார்.

இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலையில் இருந்த நான், அவருடன் மனம் விட்டுப் பேசி விடுவது என்ற முடிவுக்கு வந்தபோது அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்! தூக்கம் வரும் வரை நிறைய அழுதேன்! அவர் தன் மனதில் வேறொருத்தியை நினைத்துக் கொண்டிருப்பதாக உறுதியாகத் தோன்றியது!

என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்! விடிவு வரும் என்ற நம்பிக்கையும் இல்லை!!!

*********************************************

அவனது நாட்குறிப்பிலிருந்து

இன்று பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்று விட்டது! என்ன ஒரு கேவலமான தோல்வி!?!

நான் மிகவு ரசித்த ம்ற்றொரு ஜோக்:
1. துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை!

இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!

அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்தவுடன், ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, "நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்" என்றார். உடனே நல்ல மனம் கொண்ட நம் சர்தார்ஜி, "நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!" என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார்.

சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன், இன்னொரு பாகிஸ்தானி, "எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது" என்றவுடன், சர்தார் தயாள மனதுடன், "கவலைப்படாதீர்கள்! நான் போய் உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!" என்று மறுபடியும் சென்றார். அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்!!!

சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது. சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், நடந்த நிகழ்வை யூகித்து புரிந்து கொண்டு விட்டார்!!! மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும், பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினர் " இன்னும் எவ்வளவு நாள் இவை நீடிக்க வேண்டும்! நம்மிடையே நிலவும் இந்தப் பகை ... வெறுப்புணர்வு ... தீங்கு செய்ய நினைக்கும் மனோபாவம் ... காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!!!!!"

நன்றி:enRenRum-anbudan.BALA

Thirumalai Kandasami said...

இந்திய தோக்கணும்னு வெளியில் சொல்லிவிட்டு,இந்தியா ஜெயிக்கனும் அப்படிங்கற வெறியோட மேட்ச் பாக்ற mentality உடையவரில் நானும் ஒருவன்..
அப்புறம் அந்த ஜோக் சூப்பர்

Unknown said...

எல்லாருக்கும் இந்தியா ஜெயிக்கனும்கற ஆசை இருக்கும், ஆனா தோத்துடுவாங்களோங்கற பயம் மனசுக்குல்ல இருக்கும், அத தவிர்க்கதான் தோத்துறும் தோத்துரும்னு சொல்லி மனச தேத்திக்குவாங்க, உண்மையிலேயே ஒருவேளை தோத்துட்டா பீல் பண்ண வேண்டாம் பாருங்க :-)

Madhavan Srinivasagopalan said...

// ‘சொல்றத முழுசாக் கேளு.. இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவை நாம ஜெயிச்சதே இல்ல..’ //



1987 ரெண்டு குரூப்பா பிரிச்சாங்கே.. எ குரூப்புல இந்தியா, ஆஸ்திரேலிய, ஜிம்பாப்வே, நியூசிலாந்து..

ஒவ்வொரு டீமும் மத்த டீமோட ரெண்டு தடவை லீக் Matches ஆடணும்.. மொதல்ல நாம ஆஸ்திரேலிய கிட்ட 1 ரன்னுல தோத்தோம்.. ரெண்டாவது தடவை ஜெயிச்சோம்.. அதாவது உலகக் கோப்பை மேட்ச்சுல இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சிருக்கு.

middleclassmadhavi said...

இந்தியா ஜெயிப்பது சம்பந்தமாக என் பதிவை http://middleclassmadhavi.blogspot.com/2011/03/blog-post_24.html முடிந்தால் பாருங்கள்!

சுசி said...

கண்ஸ் கிட்ட இந்தியன் டீம் நேத்து எக்கச்சக்கமா திட்டு வாங்கிட்டு இருந்தாங்க பரிசல்.. எல்லாம் ஒரு ஆதங்கம்தான் :)

அப்புறம் அந்த எஸ் எம் எஸ்.. மான்சஸ்டர் யுனைட்டட் ஃபுட்பால் டீம் தோத்துப் போறப்போ எங்க வீட்லயும் நடந்திருக்கு :))))

Anonymous said...

அவுஸ்ரேலியா தான் ஒரு பிரச்சனையாய் இருந்திச்சி ஆனா இனி இருக்கிற அணிகளில இந்தியாவின் கை தான் ஓங்கி இருக்கு..

இறுதியாக இந்திய vs ஆபிரிக்கா...
http://nekalvukal.blogspot.com/2011/03/vii.html உலகக்கிண்ணம் - VII பழி தீர்த்த இந்தியா

Bucker said...

இரவு வானம் சொன்னதுதான் மிகவும் கரெக்ட். இது ஒரு விதமான மனவியாதி.

Jayadev Das said...

\\இதுவரைக்கும் ஆஸ்திரேலியாவை நாம ஜெயிச்சதே இல்ல..’\\உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் ஏற்கனவே இரண்டு மேட்சுகளில் இந்தியா வென்றிருக்கிறதாம்

\\.‘சேவக் 50 ஓவர் நின்னு ஆடினான்னா...’

‘நின்னுட்டு எப்படிய்யா ஆட முடியும்?’\\நிக்காம உட்கார்ந்துக்கிட்டே எப்படிய்யா ஆட முடியும்!!

இப்போதைக்கு தோனியின் மோசமான ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

Admin said...

நீங்க என்ன சொன்னாலும் கப் எங்களுக்குத்தான் பாஸ்.

இன்று நான்:
பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)

பின்னோக்கி said...

திட்டுபவர்கள்.. ஜெயிக்காது என்று சொல்பவர்கள் அனைவரின் உள்மனது ஆசையும், இந்தியா ஜெயிக்கவேண்டும் என்பதே. இவனுங்க தோத்துடுவானுங்கன்னு சொல்லும் போதே மனசுல, நாம சொல்லுறது தப்பாகி ஜெயிச்சுடனும்னு தான் நினைப்பாங்க.

தமிழ் சினிமா செய்திகள் said...

கடந்த வாரத்தில் அதிகமாக சொல்லப்பட்ட வார்த்தை..
ஆஷிஷ் நெஹ்ரா ..


முதல் இரண்டு வார்த்தை அவங்கம்மாவும் அவங்கக்காவும்..