Thursday, March 3, 2011

அவியல் 03 மார்ச்.2011

னித வளத்துறையில் பணிபுரியும்நண்பர் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நேர்முகத்தேர்வு செய்துகொண்டிருந்தார். வழக்கமாக, வேலைக்கு வருபவர்களின் ரெஸ்யூமைப் பார்த்து பலவித அட்வைஸ்களை அள்ளி வழங்கும் குணம் கொண்டவர் அவர். அன்றைக்கு சீக்கிரமே இண்டர்வ்யூவை முடித்துவிட நான் கேட்டேன்.. ‘நான் வந்துட்டேன்னு அவசர அவசரமா முடிச்சீங்களா?’

“ஐய.. இல்ல கிருஷ்ணா.. போன மாசம் ஒருத்தன் வந்தான். ரெண்டு ரெண்டு வருஷத்துக்கு ஒரு கம்பெனி மாறிட்டிருந்தான். நல்ல கேண்டிடேட். ஏழு வருஷத்துல நாலு கம்பெனியா-ன்னு அவனுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணினேன். செலக்ட்டும் ஆய்ட்டான். அடுத்த நாள் வர்ல. ஃபோன் பண்ணிக் கேட்டா, ‘ஒரே கம்பெனில வேலை செய்யணும்ன்னு நீங்க அட்வைஸ் பண்ணினத ராத்திரி பூரா யோசிச்சேன் சார். ஐநூறு ஆயிரத்துக்காக அடிக்கடி கம்பெனி மாற்றது எவ்ளோ முட்டாள்தனம்ன்னு புரிஞ்சது சார்.. அதான் பழைய கம்பெனிக்கே போய் ரீ-ஜாய்ன் பண்ணிட்டேன்’ங்கறான். எங்க டைரக்டர் என்னைத் திட்டாத குறை. அதுலேர்ந்து அட்வைஸ் பண்றதைக் கொறச்சுட்டேன்” – என்றார்.

ஓவர் அட்வைஸ் இந்தக் காலத்துக்கு ஒத்துவராது!

---------------------

லகக் கோப்பை சூடுபிடித்திருக்கிறது. இருப்பினும் முந்தைய வருடங்களில் இருந்த பரபர சுவாரஸ்யம் குறைவு. அட்டவணையை வீட்டுச் சுவற்றில் ஒட்டி, யூகங்களோடு உண்மை ரிசல்ட்டை ஒப்பிடுவது, நகத்தைக் கடித்துக் கொண்டு எல்லா மேட்சையும் பார்ப்பது குறைந்துவிட்டது. ஆயினும் முக்கிய மேட்ச்களைத் தவற விடுவதில்லை.

இந்திய – இங்கிலாந்து மேட்ச் ஒரு த்ரில்லர். முடிவு எதிர்பாராதது. மேட்ச் நம் பக்கமும், அவர்கள் பக்கமும் சாய்ந்து சாய்ந்து கடைசியாக சமநிலையில் முடிந்தது. ‘எப்படிடா ட்ரா ஆச்சு?’ என்று கேட்ட நண்பனிடம் சொன்னேன்:

‘சச்சின் செஞ்சுரி போட்டா தோக்கும்ன்னு பேசுவாங்க. யுவராஜ் ஃபிஃப்டி போட்டா ஜெயிக்கும்ன்னு சொல்லுவாங்க. இந்த மேட்ச்ல ரெண்டுமே நடந்துச்சா.. அதான் இப்டி’

எனக்கு இரண்டிலுமே நம்பிக்கையில்லை!

நேற்றைய இங்கிலாந்து-அயர்லாந்து மேட்ச் சரவெடி. ஓ-ப்ரெய்ன் 50 பந்துகளில் சதமடித்து கதி கலங்க வைத்துவிட்டார். அயர்லாந்து நேற்று செய்த அதே வேலையைத் தான், ஞாயிறு நமக்கெதிராக இங்கிலாந்து செய்தது. ஆயினும் முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகள் விழ, ஆட்டம் மாறுவதை உணர்ந்துகொண்டு அட்லீஸ்ட் ட்ராவேனும் செய்து காட்டிய தோனிக்கு சபாஷ்.

---------------------------

பெ
ரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் கணிப்பைக் கேட்டேன். தி.மு.க-வின் சாதனை என்னவென்று கேட்டேன்.

“மக்களின் சகிப்புத்தன்மையை அதிகரிச்சதுதான் அவங்க சாதனை” என்றார்.

நான்: ‘அப்டீன்னா?’

“ஒரு மணி நேரம் கரண்ட் கட்டா? மொதல்ல கொஞ்சம் எதிர்த்தாங்க. 2 மணி நேரமாச்சு. போங்கடான்னு சகிச்சுட்டாங்க. இப்ப 4 மணி நேரம், 5 மணி நேரம்கூட கரண்ட் கட். எவனும் கேட்கறதில்லை. தலையெழுத்துன்னு சகிச்சுட்டுப் போய்டறான். மொதல்ல எல்லாம் ஆந்திராவைப் பாரீர், கர்நாடகாவைப் பாரீர்ன்னு கலைஞர் அறிக்கை விடுவார். இப்ப எவனும் கேட்கறதுமில்ல. அவரும் கண்டுக்கறதில்லை. விலைவாசி எவ்ளோ எகிறினாலும், தன்னோட வாழ்க்கை ஸ்டைலை மாத்திக்கறானே ஒழிய எதிர்க்கறதில்ல. எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சகிச்சுப் போகணும்கற மனநிலைக்கு தன்னை தயார்படுத்திகிட்டான் பார்த்தியா?”

நான் ஒன்றுமே பேசவில்லை.

-----------------------------

தி
ருச்சிக்கு பிரகாஷ்ராஜும், ராதாமோகனும் வந்திருக்கிறார்கள். ஹலோ எஃப் எம்மில் பணிபுரியும் நண்பர் ராஜா அவர்களை நிற்க வைத்து சுற்றிப் போடுவதுபோல செய்திருக்கிறார். ‘ஏன் செல்லம்?” என்று கேட்ட பிரகாஷ்ராஜிடம் ‘பரிசல்காரன்னு ஒருத்தர் பயணம் விமர்சனத்துல எழுதிருந்தாருங்க.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து நிக்க வெச்சு சுத்திப்போடச் சொல்லி’ என்றாராம்.

நன்றி ராஜா.

-------------------

ழுதுவதைக் குறைத்துக் கொண்டு வாசிப்பை அதிகப்படுத்தியிருக்கிறேன். வேலைப்பளு, நேரமின்மை என்பது போன்ற டிஃபால்ட் காரணங்கள் ஒருபுறம்... மற்றொரு காரணம்: முன்பெல்லாம் நான் எழுதும் மளிகை லிஸ்ட் கூட எனக்கே அவ்வளவு பிடித்திருந்தது. உடனேயே அதற்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேல்ஸ்மேனிடமும், கேஷ் கவுண்டர் ஆசாமியிடமும் பின்னூட்டம் வாங்கும் ஆவலும் இருந்தது. இப்போதெல்லாம் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. (உனக்குமா-ன்னு கேட்காதீங்க!) ஆக அவ்வப்போது எழுதினால் போதுமென்று முடிவு கட்டிவிட்டேன்.

கடந்த மாதம் படித்த புத்தகம்: மணல்கடிகை. எம். கோபாலகிருஷ்ணன். திருப்பூரில் சாதாரணச் சிறுவர்கள் ஐவரின் வாழ்வில் நடக்கும் சகல சம்பவங்களையும் அழகாகக் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். வெகுநாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். படிக்கும்போது நடந்த சுவாரஸ்ய விஷயம்: கதையில் சிலர் திருப்பூரிலிருந்து சிவன்மலைக்குச் செல்லும் கட்டம் வருகிறது. அந்த அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது நான் கம்பெனி காரில் சிவன்மலையிலிருந்து திருப்பூர் வந்துகொண்டிருந்தேன். அவர்கள் படியூரைத் தாண்டி வாகனத்தில் செல்லும் வரியை நான் படித்துக் கொண்டிருந்தபோது, நானும் அதே படியூரைத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்!

தற்போது இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டிருப்பது.. சுஜாதாவின் ‘பதவிக்காக’. படிக்க ஆரம்பித்த அன்று சுஜாதாவும், பா.ராகவனும் சேர்ந்து என் கனவில் வந்தார்கள். நானும் வெயிலானும் சாமிநாதனும் அன்னபூர்ணாவில் அவர்களோடு காஃபி சாப்பிட்டுக் கொண்டிருக்க, பா.ராகவன், சுஜாதாவிடம் ‘அங்க போய்ட்டு வந்துடலாமா?’ என்று கேட்கிறார். சுஜாதா என்னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்து ‘வெய்ட் பண்ணுங்க.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவேன்’ என்றுவிட்டுச் சென்றார். இன்னமும் காத்திருக்கிறேன்.. கனவிலாவது வருவாரென.

இதில் என் மண்டையைக் குழப்புகிற விஷயம் என்னவென்றால், நான் பார்க்க வேண்டும் என்று துடித்த / நான் பார்த்தே இராத என் ஆதர்சமான சுஜாதா என்னை என்ன சொல்லி அழைத்தார் என்பதை எத்தனை முறை யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை. கிருஷ்ணா என்றாரா.. பரிசல் என்றாரா? அடுத்த முறை வரும்போது கேட்க வேண்டும்.


.

31 comments:

மாயாவி said...

வாங்க பரிசல்...
ரொம்ப நாளா ஆளை காணோமே என்று இருந்தேன் வந்துட்டிங்க...
வாழ்த்துக்கள்

Athisha said...

நல்ல ருசி!

Ŝ₤Ω..™ said...

//அட்டவணையை வீட்டுச் சுவற்றில் ஒட்டி, யூகங்களோடு உண்மை ரிசல்ட்டை ஒப்பிடுவது, நகத்தைக் கடித்துக் கொண்டு எல்லா மேட்சையும் பார்ப்பது குறைந்துவிட்டது.//

நமக்கெல்லாம் மெச்சூரிட்டி வந்திடுச்சிண்ணே.. (பின்ன வயசாயிடிச்சின்னு சொன்னா ஒத்துக்கவா போறீங்க)

---------
இந்தியா = இங்கிலாந்து
but, அயர்லாந்து > இங்கிலாந்து
ஃ இந்தியா < அயர்லாந்து

இந்த சமன்பாடு சரியா?????

----------
நீங்க சந்திச்ச பெரியவர் சகிப்புத்தண்மை பற்றி சொல்லும்போது விலைவாசியுயர்வு பற்றி சொல்லியிருக்காரு.. விலைவாசியுயர்வு எப்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும்???
(அதான் பெட்ரோலுக்கு 3% வரி குறைச்சிட்டோமில்ல...)

-----------
//‘ஏன் செல்லம்?” என்று கேட்ட பிரகாஷ்ராஜிடம் ‘பரிசல்காரன்னு ஒருத்தர் பயணம் விமர்சனத்துல எழுதிருந்தாருங்க.. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து நிக்க வெச்சு சுத்திப்போடச் சொல்லி’ என்றாராம்//

அதுக்கு உடனே பிரகாஷ்ராஜ்,
“பரிசல்காரன் என் செல்லம்”ன்னு சொல்லியிருப்பாரே.. அதையும் சொல்லுங்கண்ணே..

அன்பேசிவம் said...

சுஜாதா மேட்டர் நச், தல....

சக்தி கல்வி மையம் said...

தொடர்ந்து எழுதுங்க சார்... நானெல்லாம் உங்களைப் போன்றோரைப் பார்த்ததான் பதிவுலகிற்கே வந்தோம்...

Asiya Omar said...

நீங்கள் கூறிய ஐந்து செய்தியும் அருமை.எல்லாமே ரொம்ப அருமையாக விவரிச்சிருக்கீங்க,பரிசல்.சுஜாதா கனவில் வந்தது மனதை தொட்டது.

சக்தி கல்வி மையம் said...

Just.,

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

Sukumar said...

// இருப்பினும் முந்தைய வருடங்களில் இருந்த பரபர சுவாரஸ்யம் குறைவு. //

சேம் ஃபீலிங் பாஸ்... ஆனா நமக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்குமோ....??

தமிழ்வாசி பிரகாஷ் said...

பரிசல்காரண்னே இனிமேதான் கிரிக்கெட் விறு விறு ன்னு இருக்கும்.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

நாகராஜ் said...

அவியல் மிக அருமை...

karthi said...

Hi

First time i write a comment here...
Thanks for you to remember sujatha's pathavikaka ,i read in my school days..

Dhanraj's character is someone like jharkhand madu koda.. isnt it

Ganpat said...

//“மக்களின் சகிப்புத்தன்மையை அதிகரிச்சதுதான் அவங்க சாதனை” என்றார்.//
மிக முக்கியமான ஒரு பிரிவை அவர் விட்டு விட்டார்..அதுதான் ஊழல்

முன்பெல்லாம் ரூ 50 அல்லது 100 கோடி ஊழல் என்றாலே பதறிப்போவோம்.இப்போ ஒரு லட்சம் கோடி எல்லாம் ஜூஜூபி!!

ஈரோடு கதிர் said...

சகிப்புத்தன்மையை அதிகரிச்சதையும் சகிச்சுக்குவோம்!

krishna said...

ஹாய் பரிசல்,
ரெண்டு நாள் முன்னாலதான் உங்க ப்ளாக் வந்தேன் எல்லாம் அருமை. பார்த்தேன்..படித்தேன்..ரசித்தேன்... அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..

என்றும் அன்புடன்,
கிருஷ்ணகுமார் (தேனி)
சவுதிஅரேபியா..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முன்பெல்லாம் நான் எழுதும் மளிகை லிஸ்ட் கூட எனக்கே அவ்வளவு பிடித்திருந்தது. உடனேயே அதற்கு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சேல்ஸ்மேனிடமும், கேஷ் கவுண்டர் ஆசாமியிடமும் பின்னூட்டம் வாங்கும் ஆவலும் இருந்தது.//
இந்த வியாதிக்கு தான் மருந்தே இல்லையாம் ,சுயமா சுதாரிச்சிக்கிட்டாத்தான் உண்டாம்

மாணவன் said...

அவியல் செம்ம டேஸ்ட்...

:))

middleclassmadhavi said...

சுவையான அவியல்!

சுசி said...

ரைட்டு!!

பரிசல்னு தான் சொல்லி இருப்பார்.. ;)

Unknown said...

//சகிப்புத்தன்மை// அது உண்மைதான்..

Mahi_Granny said...

அடிக்கடி எழுதுங்க . படிச்சதையும் எழுதுங்க (எழுதுவதற்காக படியுங்க) பரிசல்.

Venkatramanan said...

//நான் பார்க்க வேண்டும் என்று துடித்த / நான் பார்த்தே இராத என் ஆதர்சமான சுஜாதா//
Same blood!

Regards
Venkatramanan

யுவா said...

அட்டகாச அவியல்.

yogesh said...

கனவுல சொன்ன பேர கனவுலே நினச்சிபாருங்க.. ஞாபகம் வரும்...

Arun said...

கண்ட கண்ட பதிவு எல்லாம் படிச்சி நொந்து போய் இருக்கோம்.உங்க பதிவு தான் ஆறுதலா இருக்கு..உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ எங்களுக்கு பிடிச்சி இருக்கு..
அதனால அடிக்கடி போடுங்க அவியல்!!அது தான் எங்களுக்கு குஷி குவியல்!!
அவியல் தினமும் சாப்பிட நாங்க ரெடி..

A Simple Man said...

கடைசி 2 ஓவரில் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பிருந்தது.
தோனியோட கேப்டன்சிப் சொதப்பலால் டை ஆயிடிச்சி. ஆனாலும் தோனிக்கு ரொம்ப அதிகமாவே அதிர்ஷ்டம் இருக்குது..

விஜி said...

பதவிக்காக, இன்றைய சூழலை கூட மேட்ச பண்ணும் நாவல்..

Saminathan said...

என்ன கொடும தல இது...
எதுக்கும் கனவுகளின் பலன் பார்த்துக்குங்க...

R. Gopi said...

தொடரப் பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

☼ வெயிலான் said...

// நானும், வெயிலானும், சாமிநாதனும் அன்னபூர்ணாவில் அவர்களோடு காஃபி சாப்பிட்டுக் கொண்டிருக்க //

ம்....

பூமகள் said...

//பெரியவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. அவர் கணிப்பைக் கேட்டேன். தி.மு.க-வின் சாதனை என்னவென்று கேட்டேன்.

“மக்களின் சகிப்புத்தன்மையை அதிகரிச்சதுதான் அவங்க சாதனை” என்றார்.//

வெகுவாக ரசித்தேன். நிதர்சனம். பாராட்டுகள்.

பயணம் பதிவில் என் பின்னூட்டத்தைக் காணவில்லையே.. உங்களுக்கு கிட்டவில்லையோ??

சுரேகா.. said...

கலக்கு! உங்க ஏரியா பத்தி வரும் என் விகடனில்..உன்னைப்பற்றி வரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
வாழ்த்துக்கள்!