Thursday, February 17, 2011

அவியல் 16 ஃபிப்ரவரி 2011

யணம் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதெல்லாம் ஓகே. அதீத ஆர்வத்தால் படத்தில் என் மனதை நெருடிய ஒரு விஷயத்தை விமர்சனத்தில் குறிப்பிட மறந்துவிட்டேன்.

படத்தில் ஒரு கேரக்டர். மறைந்து டாய்லெட்டுக்குள் சென்று போதைப் பவுடர் நுகர்ந்து தனி உலகத்தில் திரிகிற ஒரு தாடிவாலா. இன்னொரு கேரக்டர். குமரவேல். கண்முன் நடக்கும் அநீதிகளை முடிந்தவரைத் தட்டிக் கேட்கிறான்.

ஒரு கதாபாத்திரங்களும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுடப்படுகிறார்கள். போதைப் பவுடர் கேஸ், தப்பித்து ஓடும்போது தீவிரவாதியால் சுடப்படுகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிழைத்துவிடுகிறான். கடைசி க்ளிப்பிங்கில் ஜன்னல் வெளிச்சம் முகத்தில் விழ சிரித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் - அநீதிகளைத் தட்டிக் கேட்பவன், பொட்டெனச் சுடப்பட்டு சட்டென்று பரலோகம் போகிறான்.

இது என்ன நியாயம் ராதாமோகன்? எனக்குப் பிடிக்கவில்லை.

--------------------------

“டீமிற்கு பதினான்கு பேர் எடுத்தாகிவிட்டது. ஓர் ஆள் உன் சாய்ஸ்” -செலக்‌ஷன் கமிட்டியிலிருந்து தென்னாப்ரிக்காவில் இருக்கும் தோனிக்கு அழைப்பு போனது. தோனி உடனே சொன்ன பெயர்: ‘பீயுஷ் சாவ்லா’

‘அறிவே இல்லை. இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரையேனும் எடுத்திருக்கலாம். ஏற்கனவே ஹர்பஜன், அஷ்வின் என்று ஸ்பின்னர்கள். போதாக்குறைக்கு யுவராஜ், ரெய்னா, சேவக், சச்சின் என்று பார்ட் டைம் பவுலர்கள் வேறு இருக்கையில் – சாவ்லாவை ஏன் எடுத்தார் தோனி?’ என்று கண்டனக்குரல்கள்.

அப்போதெல்லாம் எந்த அறிக்கையும் விடவில்லை மனுஷன். ஆஸியுடனான வார்ம் அப் மேட்சில் பதில் சொல்லிவிட்டார் தோனி.

அதேபோல - தோனி தன் பழைய அதிரடி ஆட்டத்தை ஆடினால் நன்றாக இருக்கும் என்று ஏதோ ஒரு புண்ணியவான் திருவாய் மலர்ந்தார். இதோ - நேற்றைக்கு நடந்த நியூஸியுடனான மேட்சில் 62 பந்துகளில் செஞ்சுரி!

நீ கலக்கு ராசா! உனக்கு மச்சம் உச்சத்துல இருக்கு!

----------------------------------------

ரவு அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன். லேட்டாகிவிட்டிருந்தது. ஓர் இடத்தில், மூச்சு வாங்க ஒருத்தன் ஓடிச் சென்று கொண்டிருந்தான். என் பைக் அருகில் வந்ததும் லிஃப்ட் கேட்டான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, ஏதாவது டவுன் பஸ்ஸை பிடிக்கப் போகிறானோ என்று ஏற்றிக் கொண்டேன். ஐம்பதடி தூரம் போனதும் நிறுத்தச் சொன்னான். நிறுத்தியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவனிறங்கி ஓடியது - அருகிலிருந்த டாஸ்மாக்குக்கு. 10 மணிக்கு மூடிவிடுவார்களே!

டாஸ்மாக்கிற்கு அருகாமையில் வண்டி ஓட்டிச் செல்வது அவ்வளவு சவாலாக இருக்கிறது. குடிக்க வருபவர்கள் அவரச கதியில் வருகிறார்கள். குடித்து விட்டுச் சாலை தாண்டிச் செல்வபர்கள் எந்த அவசரமுமில்லாமல் ஜாலியாக தாண்டிச் சென்ற வண்ணமிருக்கிறார்கள்.

இந்த அவலங்களையெல்லாம் தாண்டி வந்து புலம்புவதற்குப் பதிலாக, நானும் வண்டி நிறுத்தி போய் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வரலாமா என்று யோசித்ததுண்டு. வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!

------------------------------------------

ரு ட்ரெய்னிங் க்ளாஸ் நடந்துகொண்டிருந்தது. மனிதவளத்துறையின் மகத்துவம், அதன் சவால்களை ஒருத்தர் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தார். சொன்னதையே நான்கைந்து முறை சொல்வது, சப்பையான உதாரணங்கள் என்று நடத்தியவர் எல்லார் காதுகளிலும், கழுத்துகளிலும் ரத்தம் வரவைத்துக் கொண்டிருந்தார். குறிப்பிடப்பட்ட நேரம் தாண்டியும் வகுப்பு போய்க் கொண்டிருந்தது. மொத்தம் 30 பேர் அமர்ந்திருந்தோம். மனிதவளத்துறையினர் தங்களிடம் வரும் குறைகளுக்கு உடனுடனேயே பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்றவர் தொடர்ந்து சொன்னார்.

‘ஒருத்தனை திருப்தியில்லாத இதயத்தோடு அனுப்பினீர்களானால் அவன் ஒரு நாளில் 27 திருப்தியில்லாத இதயங்களை உருவாக்குவான். இது உண்மை’ என்றார்.

எங்களில் ஒரு குரல் சொன்னது: “சார்.. இப்ப நீங்க சீக்கிரம் இந்த க்ளாஸை முடிக்கலைன்னா 30 திருப்தியில்லாத இதயங்களை ஒரே நாள்ல உருவாக்குவீங்க”

-----------------------

எஸ் எம் எஸ்:

பாருக்குச் சென்ற கொஞ்சம் கூச்சசுபாவியான அவன் ஒரு டேபிளில் அழகான இளம்பெண் அமர்ந்திருப்பதைக் காண்கிறான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாய் அவளருகில் சென்று ‘இங்கே அமர்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லையே’ என்கிறான் தணிந்த குரலில். அவள் உரத்த குரலில் சொல்கிறாள்: “இன்றிரவை உன்னுடன் கழிக்கும் எண்ணம் எனக்கில்லை” என்று. சுற்றியிருப்பவர்கள் இவனை ஒரு மாதிரி பார்க்க - அதிர்ச்சியுடனும், தர்மசங்கடத்துடனும் வேறொரு டேபிளில் சென்றமர்கிறான்.

சிறிது நேரத்தில் அவனருகில் வந்த அந்த அழகி, மெதுவான குரலில் சொல்கிறாள்: ‘மன்னித்து விடு. நான் ஒரு சைக்காலஜி மாணவி. தர்மசங்கடமான சூழ்நிலைகளை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான்...’ என்று இழுக்க இவன் மிக உரத்த குரலில் கத்துகிறான்: “என்னது? மூவாயிரம் ரூவாயா..! ரொம்பவே அதிகம்!”

ஹும்! யாருகிட்ட!!

------------------

ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் வந்தது. ஃபோனில் பெண் குரல்: ”சார் இம்மீடியட்டா நடேசன் தெரு, பத்தாம் நம்பர் வீட்டுக்கு வாங்க.. ஒரு பூனை என்னையே பார்த்துட்டிருக்கு”

“என்னம்மா பூனைக்கெல்லாம் பயந்துட்டு? நீங்க யார்.. உங்க பேரென்ன”

“என் பேரு பப்பி. நான் இந்த வீட்ல வளர்ற கிளி”

--------------------

ஒரு கவிதை:

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

-ஆத்மாநாம்

.

24 comments:

sriram said...

//வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு கிருஷ்ணா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

Very Tasty

Philosophy Prabhakaran said...

மூவாயிர ரூபாய் எஸ்.எம்.எஸ் மேட்டர் சூப்பரண்ணே...

சுசி said...

// அநீதிகளைத் தட்டிக் கேட்பவன், பொட்டெனச் சுடப்பட்டு சட்டென்று பரலோகம் போகிறான்.//
நல்லதுக்கு காலம் இல்லை பரிசல்.. ஹூம்..

எம்மாம் பெரிய பொதுத் தொண்டு செஞ்சிருக்கிங்க.. குடி இருக்கும் வரை அவர் உங்களை மறக்கமாட்டார்..

கவிதை ரொம்ப நல்லாருக்கு.

Raghu said...

ஏற்க‌ன‌வே அறிந்திருந்தாலும் ஒரு ஸ்மைலை வ‌ர‌வ‌ழைத்த‌து இந்த‌ எஸ்எம்எஸ்

Unknown said...

SMS சூப்பர்.

//ஒரு கதாபாத்திரங்களும்//?

மாணவன் said...

“அவியல்” அசத்தல் :)

CS. Mohan Kumar said...

//ஒரு கதாபாத்திரங்களும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சுடப்படுகிறார்கள்.//

இதில் முதல் வார்த்தை இரு என இருக்கணுமோ?

Xavier said...

கலக்கல் பரிசல். நிறைய அவியுங்கள்.

குரங்குபெடல் said...

“என்னது? மூவாயிரம் ரூவாயா..!"


உங்க தளத்துல இப்படியும் வருமா ?

ஹுஸைனம்மா said...

//வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது!//

திருமதி ஒரு வெகுமதி. வாழ்த்துகள் - உமாவுக்கு.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஆத்மா நாமின் கவிதை அட்டகாசம். வழக்கம் போலவே அவியல் சுவையாக !

அமுதா கிருஷ்ணா said...

sms சூப்பர்.கிளி ஃபோன் செய்வதும் சூப்பர்.

ஈரோடு கதிர் said...

//வீட்டில் பர்மிஷன் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது\\

நம்பிட்டோம் பாஸ்!

Vijay Periasamy said...

//இது என்ன நியாயம் ராதாமோகன்? எனக்குப் பிடிக்கவில்லை.//

வாழ்க்கையில் சில உண்மை நிகழ்வுகள் இப்படித்தான் சுட்டெரிக்கும் .

நாகராஜ் said...

ஐம்பதடி தூரம் போனதும் நிறுத்தச் சொன்னான். நிறுத்தியதும் சொல்லாமல் கொள்ளாமல் அவனிறங்கி ஓடியது - அருகிலிருந்த டாஸ்மாக்குக்கு. 10 மணிக்கு மூடிவிடுவார்களே!

அவினாசி ரோடுன்னா அது நான் தான் ,பல்லடம் ரோடுன்னா அது என் பங்காளி
எனிவே டாங்ஸ் ஸ்..

அறிவிலி said...

@நாகராஜ்

:-)))))))))))))))))))

சாமக்கோடங்கி said...

அட்டகாசம்.. நல்லா எழுதி இருக்கீங்க.. அதிலும் அந்த பார் காமெடி.. சூப்பர்..

சாமக்கோடங்கி said...

உங்கள் தலைப்பில் "பரிசல் காரன் " எழுத்தும், அதில் ரி எழுத்து பரிசலின் துடுப்பாகவும் வடிவமைத்து இருப்பது அருமை.. வடிவமைப்பு யார் எனத் தெரிந்து கொள்ளலாமா..

அன்புடன்
சாமக்கோடங்கி..

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

Unknown said...

அருமை

Anisha Yunus said...

//எங்களில் ஒரு குரல் சொன்னது: “சார்.. இப்ப நீங்க சீக்கிரம் இந்த க்ளாஸை முடிக்கலைன்னா 30 திருப்தியில்லாத இதயங்களை ஒரே நாள்ல உருவாக்குவீங்க”
//

ஹெ ஹெ ...மனித வளம்!!!!!

:)))

அருவி said...

அவியல் வழக்கம் போல சூப்பர்

பூமகள் said...

நீங்க ராதாமோகன் ரசிகரா?? நானும் அவரின் பரம ரசிகையே..

இப்போது வரும் பெருவாரியான படங்களைப் பார்க்கையில், என் கலவரம் கண்டு சொல்லுவார்கள்.. 'நீ ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வரும் படம் பார்க்கத் தான் லாயி க்கு' என்று.. ;)

பயணம் பார்த்து விமர்சனம் எழுதியதோடல்லாமல் படத்தில் உங்களுக்கு பிடிக்காதவற்றையும் விமர்சித்திருப்பது உங்கள் நேர்மையைக் காட்டுகிறது.. இன்னும் படத்தைப் பார்க்க இயலாத சூழல். பார்த்தபின் என் ப்ளாக்கில் விமர்சிக்கிறேன். :)

இத்தளம் பற்றி வெகு நாட்களுக்கு முன் அறியப்பெற்றாலும்.. இப்போது தான் விமர்சிக்க நேரம் கிடைத்தது.

பாராட்டுகள்.. தொடருங்கள். :)