Friday, February 11, 2011

1...2...3...

1.

ன்றைக்கு எனக்கு அலுவலகத்தில் ஏதோ டென்ஷன் தினம். அடுத்த நாளும் அந்த டென்ஷன் தொடரும் நிலைமை. இரவு வீட்டுக்கு வந்து இந்திய அணியின் மேட்ச் - லைவ் - பார்க்கிறேன். இந்தியா 190க்கு ஆல் அவுட். ஐயகோ என்று தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கையும் பார்க்கிறேன். 152க்கு ஐந்து. 39 ரன்கள் மட்டுமே வேண்டும். ஐந்து விக்கெட்டுகள். வழக்கம்போல ‘இவனுக எப்பவுமே இப்படித்தான்’ என்று படுத்து உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலை ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி என்று நியூஸ் என்னை எழுப்ப, அன்றைக்கு முழுதும் உற்சாகமாய் இருந்தேன். ஒருத்தனின் மனநிலையையே மாற்றுகிறது இந்திய அணியின் வெற்றி!

உலகக் கோப்பை க்ரிக்கெட். என் போன்ற க்ரிக்கெட் ரசிகர்களின் கனவு தினங்கள் வெகு அருகில். ஓர் இந்தியக் க்ரிக்கெட் ரசிகனாக இந்த உலகக் கோப்பை வெகு ஸ்பெஷல். சரியான ஃபார்மில் இருக்கும் டீம். அதுவும் சொந்த ஊரில்.

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம் விளம்பரங்கள். வேர்ல்ட் கப்புக்காக ஸ்பெஷல் விளம்பரங்கள் அணிவகுக்கும். பெப்ஸியின் ஹெலிகாப்டர் ஷாட் (தோனி), தூஸ்ரா (ஹர்பஜன்), பல்ட்டி ஹிட் (கெவின் பீட்டர்ஸன்) போன்ற விளம்பரங்கள் சுவாரஸ்யம்.

எரிச்சலூட்டும் விஷயம் – இந்த விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பும் விதம். ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். மொத்த ஸ்க்ரீனில் க்ரிக்கெட்டைச் சுருக்கி ஒரு மூலையில் தள்ளிவிட்டு மீதி முழுவதுமாய் ஆக்ரமிக்கும் பைக் லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தரினும் வேண்டேன். போலவே பவுண்டரியைத் தொட்டுப் பறந்த ஆறாவது பந்து கயிற்றுக்கு முன் தொட்டு நான்கானதா, கொஞ்சம் பின் தொட்டு ஆறானதா என்று முடிவாவதற்கு முன் வரும் விளம்பரப் பொருட்களுக்கும் மனதளவில் தடாதான்.

சம்பந்தமில்லாத – அல்லது - சம்பந்தம் இருக்கிற ஒரு தகவல். கூகுளில் க்ரிக் இன்ஃபோவைத் தேட Cri என்று ஆரம்பித்தால் தானியங்கி குறிச்சொல் காட்டும் சொல்:

Criminal Minds!


-----------------------------------------------------
2.

ஸ்ஸெம்மெஸ் கலாட்டாக்கள் சில சமயம் க்ளுக்கென சிரிக்க வைக்கும். கொஞ்சமாய் சிந்திக்க வைக்கும்.

சமீபத்தில் வந்து என்னைக் கவர்ந்த எஸ்ஸெம்மெஸ் சில:

--

அந்த வகுப்பறைக்குள் நுழைகிறார் கலைஞர். மாணவர்களிடம் கேட்கிறார்: ‘பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் ராமு. எனக்கு இரண்டு கேள்விகள்’

கலைஞர்: “கேளு ராமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

“மிகவும் தைரியமான கேள்வி! இதற்கு இடைவேளைக்குப் பிறகு பதில் சொல்கிறேன்”

----இடைவேளை ----

மீண்டும் கலைஞர்: “பசங்களா.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”

ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’

கலைஞர்: “கேளு சோமு”

“1. ஸ்பெக்ட்ரம் ஊழல் உண்மையா? 2. அதில் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவு கிடைத்தது?”

கலைஞர்: “மூணாவது கேள்வி?”

சோமு: “ராமு எங்கீங்க ஐயா?”

****************

இன்னொன்று:

||ஜெய் ஸ்ரீ ரஜினிகாந்தாய நமஹ:||

இந்த எஸ்ஸெம்மெஸ்ஸை குறைந்தது 9 பேருக்கு அனுப்புங்கள். படிக்காமலே நீங்கள் பரீட்சையில் பாஸாகி விடுவீர்கள். உதாசீனப்படுத்த வேண்டாம். ஒரு முறை இதை உதாசீனப்படுத்தி டெலீட் செய்த ப்ளஸ் டூ மாணவனின், பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஃபெய்ல் என்று மாறியது!

****************

மூன்றாவது:

மனைவி: “டின்னருக்கு என்ன வேணும்க?”

கணவன்: “பருப்பும் சாதமும்...”
மனைவி: “நேத்துதாங்க அது வெச்சேன்?”

கணவன்: “சரி... கத்திரிக்காக் கொழம்பு”
மனைவி: “ஐய.. உங்க பையன் சாப்பிடவே மாட்டான்”

கணவன்: “முட்டைக் கொழம்பு?”
மனைவி: “ ஆளப்பாரு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை..”

கணவன்: “பூரி?”
மனைவி: “இந்நேரத்துக்கு பூரியா? ஏங்க இப்டி?”

கணவன்: “சரி.. பேசாம நான் ஹோட்டல்ல பார்சல் வாங்கியாரவா?”
மனைவி: “அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்க.. உங்களுக்காகத்தானே சொல்றேன்..”

கணவன்: “அப்ப மோர்க்குழம்பு வை”
மனைவி: ”அதுக்கு மோர் வேணும். வீட்ல இல்லை”

கணவன்: “இட்லி சாம்பார் வெச்சுடேன் பேசாம?”
மனைவி: “கரெக்டுங்க.. ஆனா மொதல்லயே சொல்லிருந்தா மாவு அரைச்சு வெச்சிருப்பேங்க”

கணவன்: “கம்முன்னு மேகி செஞ்சுடு. அதான் கரெக்ட்”
மனைவி: “அது உங்களுக்குப் பத்தாதுங்க. நீங்க நைட் தான் ஹெவியாச் சாப்பிடுவீங்க”

கணவன்:”வேற என்னதான் செய்வ?”
மனைவி: “இதென்னங்க என்னைக் கேட்டுட்டு? நீங்க என்ன சொல்றீங்களோ அதத்தான் செய்ய மாட்டேனா தங்கம்?”

இந்தப் பொண்டாட்டிகளே இப்படித்தான் பாஸ்!

-----------

3.


கூகுள் பஸ்தான் தற்போதைய என் சோர்வு நீக்கி. அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். பலரும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸில் கிடைக்கிற கேப்பில் ஆட்டோ, லாரி மட்டுமில்லாது குசும்பன் போன்றவர்கள் ஃப்ளைட்டே ஒட்டுகிறார்கள்.

http://www.google.com/buzz/yesbalabharathi/YaczwFPPDjA/%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A8

தல பாலபாரதியின் இந்த பஸ்ஸில் குசும்பனின் அளவிலா நக்கலின் ஒரு இடத்திலாவது நீங்கள் சிரிக்கவில்லையென்றால் உடனடியாக ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவும்.


.

17 comments:

மதுரை சரவணன் said...

aniththum arumai.. vaalththukkal

பிரதீபா said...

//கூகுள் பஸ்..//
நீங்க போட்டிருந்த சுட்டியை படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சுட்டே இருந்தேன்.. :) குசும்பருக்கு ஈடு இணை யாருமே இல்லை ..

சுசி said...

மாணவன், கலைஞர் - ஊர்ல கடைசி நேர சண்டை நடந்துட்டு இருந்தப்போ மஹிந்த வச்சு அனுப்பிட்டு இருந்தாங்க.

பஸ் :)

சுதர்ஷன் said...

//ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்து வீச்சுக்கிடையே ஒரு மங்கை அவசர அவசரமாக வந்து பொடுகு நீக்கும் ஷாம்பூ பற்றிச் சொன்னால் அந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான்//

அதே அதே .. ஹிஹிஹி கலைஞர் நகைச்சுவை அப்பட்டமான உண்மை :-)

Anonymous said...

//ந்த ஷாம்பூவை வாங்கவே கூடாது என்று நினைக்கிறவன் நான். //
Same blood!

தராசு said...

ரெண்டாவது...., ஹலோ பரிசல் அண்ணே, சௌக்கியமா, இன்னும் நல்லாத்தானே இருக்கீங்க, இன்னும் அடி கிடி எதும் படலியே.

Unknown said...

அந்த கலைஞர் SMS முன்பு ஜார்ஜ் புஷ்- ஐ கிண்டலடித்து வந்ததாக நியாபகம்...

Unknown said...

ராமு எங்க சாரர் ?



கலக்கிடிங்க

சமுத்ரா said...

ஆஹா..கலக்கல்ஸ்...

ஷர்புதீன் said...

:)

டக்கால்டி said...

நான் சொல்ல நினைத்த விளம்பர இடைவேளை மேட்டர்களை அருமையாக சொல்லி விட்டீர்கள்...அப்பாட எனக்கொரு வேலை மிச்சம் சார்...
கூகிள் பஸ் கலாட்டா கலக்கல்...வயலின் பிடிக்கும் மேட்டர் சிரிப்போ சிரிப்பு...

Unknown said...

ஜூப்பர் ஜோக்ஸ்

அண்ணாமலை..!! said...

ஐயா வணக்கம்! என் பெயர் தாமு. எனக்கு மூன்று கேள்விகள்!

1. "
2. "
3.இராமு &
4.சோமு எங்கேங்க ஐயா..?

பி.கு :
அடுத்து வருபவர்களுக்கு 5 கேள்விகளுக்கு வாய்ப்பு! :)

ILA (a) இளா said...

//இந்த படத்தில செலோன்னு ஒரு கருவிய பயன்படுத்தி இருக்காங்க.தமிழுக்கு இந்த இசை ரொம்பவே புதுசு.//
எதால சிரிக்கிறது? விதாவ’ல கூட ரகுமான் ஒரு 20 பக்கத்துக்கு வாசிச்சிருக்கார். ஜேம்ஸ் வசந்தன் அதிகம் பயன்படுத்துறாரு..

பாரதசாரி said...

//ஒரு மாணவன் எழுகிறான்: ‘ஐயா வணக்கம். என் பெயர் சோமு. எனக்கு மூன்று கேள்விகள்’//

நான்கு கேள்விகள்:
"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது?"

பாரதசாரி said...

நான்கு கேள்விகள்:
"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது?"

பாரதசாரி said...

நான்கு கேள்விகள்:
"இன்று இடைவேளை மணி ஏன் 35 நிமிடம் முன்னதாகவே அடித்தது?"