Tuesday, July 20, 2010

சினிமிக்ஸ்

ணிசார் கொஞ்சம் ஏமாற்றி விட்டதால் கொஞ்ச நாளைக்கு தியேட்டர்கள் இருக்கும் வீதி வழிகூடப் போகாமல் சுற்றித்தான் போய்வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு களவாணி ஹிட் என்று நண்பர்களிடமிருந்து தகவல். போகலாம் என்றால் போகிற மாதிரி பக்கத்து தியேட்டர் ஒன்றிலும் அது திரையிடப்படவில்லை. அப்பறம் பார்த்துக்கலாம் என்று இருந்து விட்டேன்.

அதற்கடுத்த வாரம் ஆனந்தபுரத்துவீடும், மதராசப்பட்டினமும் ரிலீஸ். ஷங்கர் தயாரிப்பென்றால் கண்ணை மூடிக்கொண்டு போய், கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கலாமே என்று நினைத்தேன். ஆனாலும் மதராசபட்டிணம் மேல் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. காரணம் ஒன்று: அதன் பீரியட் ஃபிலிம் என்ற அட்ராக்‌ஷன். இரண்டாவது: விஜய். அவரது கிரீடம் பார்க்கவில்லை. ஆனாலும் அவரது இரண்டாம் படமான பொய் சொல்லப்போறோம் அவ்வளவு பிடித்திருந்தது. மூன்றாவது காரணம்: அதன் விளம்பரங்கள். ரொம்பவும் எளிதான தீம். ஆனால் எஃபெக்டீக்வாக செய்திருந்தார்கள்.

முதலில் ஆனந்தபுரத்து வீடு என்று முடிவாகி ரிலீஸான வெள்ளி போக நினைத்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக வயிற்றுவலி அந்த எண்ணத்தில் மண்ணைப் போட்டதால் மகாலட்சுமி நகர் வீட்டுக்குப் போனேன். (அட.. எங்க வீட்டுக்குத்தாங்க..) சமீபகாலங்களில் – அதாவது ஓரிரு வருடங்களில்- வெள்ளி அல்லது சனிக்கிழமை மிஸ் ஆனால் பிறகு அந்தப் படத்துக்கே போவதில்லை. ஆக இவை இரண்டையும் களவாணி லிஸ்டில் விடுபட்டவைகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தமிழக ஏமி ரசிகர் மன்றத் தலைவர் சங்கரநாராயண் அழைத்து ‘படத்தை மிஸ் பண்ணாதீங்க தல’ என்று செல்லமாக மிரட்டி படத்தை சிலாகித்து இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார். ஆகவே என்னுள் இருந்த சினிமனப்புயல் ஆ.வீ-யிலிருந்து மதராசபட்டிணத்தின் மீது மையம்கொண்டது.

இந்த நிலையில் சென்ற வாரம் சொந்த ஊரான உடுமலை விஜயம் செய்யவேண்டி இருந்தது. போன இடத்தில் ஒரு நாள் ஃப்ரீயாக இருக்கிற சூழல்.

தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து டாக் (TALK Not DOG!) நன்றாக இருப்பதால் மீண்டும் வேறொரு தியேட்டரில் களவாணி போடப்பட்டிருந்தது. ஆக காலை ஷோ களவாணி, இரவு ஷோ மதராசபட்டிணம் என்று நானே என்னிடம் பேசி முடிவு பண்ணி கிட்டத்தட்ட நினைவு தெரிந்து ஒரே நாளில் இரண்டு படம்!


களவாணியில் ஹீரோயின் ஓவியாவின் அண்ணனாக வரும் திருமுருகன் என்னை ரொம்பவும் கவர்ந்தார். அலட்டாத இயல்பான நடிப்பு. செமையான பாடி லாங்குவேஜ். அதேபோல எந்தப் பிரச்சினையையும் வழக்கமான பதிலுக்கு பதில் அடிதடி என்பதுபோல இல்லாமல் எல்லா சண்டையையுமே விட்டுப் பிடிக்கிறார்கள். பிராக்டிகலாக இருந்தது. பார் சண்டை, எதிரி கிராமத்துப் பெண்ணைக் கடத்துவது என்று ஒவ்வொரு பிரச்சினையின் போதும் உடனே பதிலுக்கு ஓடாமல் ரியலாக என்ன நடக்குமோ அப்படி திரைக்கதை அமைத்துக் கொண்டுபோன விதத்துக்காக இயக்குனருக்கு ஷொட்டு!

விமல் கனகச்சிதம். அதுவும் அந்த யமஹா அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்! அதில் விமல் வெள்ளுடையில் சாய்ந்து வரும் ஸ்டைல் நன்றாகவே பொருந்தியிருக்கிறது அவருக்கு!

கடைசியில் மச்சானும் மாப்பிள்ளையும் ஒன்றாக பீர் அடித்தபடி இரண்டு ஊர்களுக்கும் நெடுநாள் இருக்கும் கோயில் சிலை பிரச்சினைக்கு போகிற போக்கில் தீர்வு காண்கிறார்கள். ‘வெரிகுட்ரா’ என்றபடி வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

மதராசபட்டிணம் – ஆகஸ்ட் 15 –தாய்மண் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல் அழகான காதலையும் ஆங்கிலேயர் காலத்தையும் மிக்ஸிங் செய்து அசத்தலாகக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வளவாக சீரியஸ் தனமும் இல்லாமல் நடுநடுவே இயல்பான நகைச்சுவை வேறு. வெற்றிக்கு கேட்கவா வேண்டும். எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. ஆகஸ்ட் 15ல் ஆர்யா-ஏமியை போலீஸ் துரத்துவது ரொம்ப லெங்க்த்! அதேமாதிரி கடைசியில் துரையம்மா காலேஜ், துரையம்மா அறக்கட்டளை, துரையம்மா இஸ்திரிக்கடை என்று விக்ரமனையும், தமிழ்ப்படத்தையும் ஞாபகப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். என்ன ஆனாலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

ஜீவி ப்ரகாஷின் இசை – டாப் க்ளாஸ். அதேபோல ஆர்ட் டைரக்‌ஷன்.

தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்டதும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.

இசை:

யுவனின் இசையில் பாணாகாத்தாடி, தில்லாலங்கடி, காதல் சொல்ல வந்தேன். நான் மகான் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்.

காதல் சொல்ல வந்தேனின் ஓ ஷலா பிடித்தது. பாணாகாத்தாடியில் யுவன் பாடிய தாக்குதே கண் தாக்குதே அருமையான மெட்டு. மெட்டுக்கேத்த வரிகள். (வாலி!) ரசிக்க வைத்தது. தில்லாலங்கடியில் சொல்பேச்சு கேட்காத (சித்ரா-ஷ்ரேயா கோஷல்) பாடலில் யுவனின் குரலில் வரும் ‘நம்தும்னா தும்தரே’ சூப்பர். அதேபோல கைலாஷ்கேர், ரஞ்சித் குரலில் மெமரி லாஸ் பாடலும் கவர்கிறது. ஹிட்டாகிவிடும். நான் மகான் அல்ல ராகுல் நம்பியாரின் ‘வாவா நிலவைப்பிடிச்சு’ - பிடிச்சு.

இவை முதல்கட்ட கவனஈர்ப்புத் தீர்மானங்களே. கேட்கக் கேட்க என்ன ஆகுமெனத் தெரியவில்லை.

ஒரு விஷயம்: தில்லாலங்கடிக்கு ‘திருதிரு துருதுரு’ ஆடியோ சிடியை இலவசமாகத் தந்தார்கள். ‘நான் மகான் அல்ல’வுக்கு... ‘ஜக்குபாய்’.

.

28 comments:

ILA (a) இளா said...

//களவாணியில் ஹீரோயின் ஓவியாவின் அண்ணனாக வரும் திருமுருகன் என்னை ரொம்பவும் கவர்ந்தார்//
என்னையும்தான், காரணம் பாத்திரப்படைப்புக்கேத்த ஆள், நல்ல நடிப்பு

பனித்துளி சங்கர் said...

சினியை பற்றி பல சிறந்த ஆய்வுகள்தான் . பகிர்வுக்கு நன்றி

a said...

[[
ILA(@)இளா Said...
//களவாணியில் ஹீரோயின் ஓவியாவின் அண்ணனாக வரும் திருமுருகன் என்னை ரொம்பவும் கவர்ந்தார்//
என்னையும்தான், காரணம் பாத்திரப்படைப்புக்கேத்த ஆள், நல்ல நடிப்பு
]]

படத்தின் இணை இயக்குநரும் அவரே....

SPIDEY said...

இரண்டொரு வார்த்தைகள் அரைமணி நேரம் பேசினார்//

2+1 words epudi arai mani neram pesunaru?? avalo periya vaarthaiya?

http://rkguru.blogspot.com/ said...

நல்லா ஆய்வு பதிவு அருமை.........வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் -ரொம்ப சரி.நுணுக்கமான பதிவு

CS. Mohan Kumar said...

ஒன்னொன்னும் ஒவ்வொரு பதிவா ஆக்கிருக்கலாம்; ம்ம் Late ஆனதால் இப்படியோ?

சரவணகுமரன் said...

நான் நினைச்சதையே நீங்களும் சொல்லியிருக்கீங்க... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அலைநீளம். அதாங்க, wavelength’ன்னு சொல்ல வந்தேன்.

Sreeram said...

முடிந்தவரை டைட்டானிக் படத்தின் காட்சிகளை காப்பி அடித்துள்ளார். ட்ரெஸ்ஸும் ஓரளவு தான் கரக்ட் - பீரியட் படம்.

களவானி ஹீரோ பருத்திவீரன் கார்த்தியை காப்பி அடித்தது உங்களுக்கு தெரியவில்லையா?

Cable சங்கர் said...

ஒரு வழியா படம் எல்லாத்தையும் பாத்துட்டே.. மிச்சமிருக்கிற அ.வீடையும் பார்த்துருங்களேன்.

Cable சங்கர் said...

இப்படிக்கு
தமிழ்நாடு மற்றும் அகில உலக ஏமி ரசிகர் மன்ற தலைவர்
சங்கர் நாராயண்

பிரபல பதிவர் said...

//துரையம்மா இஸ்திரிக்கடை //

கோவை குசும்பு

இப்படிக்கு,
அகில உலக மகாராஷ்ட்ரா ஏமி ரசிகர் மன்ற தலைவர்
அகில உலக மகாராஷ்ட்ரா ஓவியா ரசிகர் மன்ற செயலாளர்

Balamurugan,S said...

//
யேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்ட்தும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.
//
உண்மையான வாக்கியம் :) புல்லரித்தது மட்டும் இல்லாமல் இசை படத்திலயா... இல்லை நம் மனதிலயா-னு ஒரு பெரிய குழப்பம் :)

Mahi_Granny said...

பசங்க படத்தில் விமலை பார்க்கும் போது நினைத்தேன் நல்ல இடத்துக்கு வருவார் என்று. விமர்சனம் (ங்கள் ) மட்டும் படித்து திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியது தான் . பகிர்வுக்கு பாராட்டுக்கள்

விக்னேஷ்வரி said...

ரொம்ப நேரம் பல விஷயங்களை ரசிச்சிருக்கீங்க. வேலை டென்ஷனிலிருந்து விடுதலை போல தெரியுது. குட்!

செல்வா said...

///தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ ///

இது ட்ரைலர்லையே புல்லரிக்க வைக்குது அண்ணா ...

நானும் இந்த இரண்டு படத்தையும் பாத்திடணும்னு முயற்சிக்கிறேன் .. நேரமே கிடைக்க மாட்டேங்குது ..

கார்க்கிபவா said...

தில்லாலங்கடியில் தோல்வியைப் பற்றிய குத்துப்பாட்டு ஒண்ணு. சரணமெல்லாம் அபப்டியே பழைய மெட்டு என்றாலும் சொல்லியடிக்கும் பாருங்க . செமயா இருக்கு

நான் மகான் அல்ல. ம்ம்.. அதுவும் பாஸ்தான்

பாணாகாத்தாடி. அந்த ஒரு பாட்டைத் தவிர மத்தது எல்லாம் சொதப்பல்..

கா.சொ.வ: ஆல்ரெடி பதிவே போட்டாச்சு

இப்போதைக்கு தில்லாங்கடிதான் என் ஃபேவரிட். வெரிகுட் ஆல்பம்.

கார்க்கிபவா said...

இன்னொரு விஷயம். மணியை மட்டும் மணிசார் என்பதும், ஏமியையும் ஓவியாவையும் மேடம் என்று சொல்லாததும் உஙக்ளை ஆணாதிக்கவாதி என்று நிரூப்பிக்கின்றன

வணங்காமுடி...! said...

//நான் மகால் அல்ல என்று சென்ற வாரம் யுவன் வாரம்//

கண்டிப்பாக நீங்கள், மகால் அல்ல என்று தெரியும்.

//‘நான் மாகான் அல்ல’//

மாகான்..? யாருங்க அவர்? ஆகாகான் மாதிரி யாராவதா?

நாம் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் தவறாக டைப்பும் போது, கொஞ்சம் கடுப்பாகத்தானிருக்கிறது.

ஹிஹி.. என்னோட புத்தகம் எல்லாம் படிச்சியா, படிக்காம எப்படி என்னை விமர்சனம் பண்ணலாம்-னு கேட்டுறாதீங்க தலைவா...

அண்ணாமலை..!! said...

பாதிக்கு மேல சுப்பிரமணியபுரம் மாதிரி அருவா- இரத்தம்-னு ஆகிடுமோன்னு பயமா இருந்தது.

ஆனா, அழகாவே இருந்தது
களவாணி..!

பரிசல்காரன் said...

@ வணங்காமுடி

மகாலை நான் கவனித்தேன். 2வதை நீங்கள் சொல்லித்தான் கவனிக்கிறேன். நன்றி. உடனே திருத்திவிட்டேன்.

முன்னைவிட எழுதும்போது மறுபடி படித்துப் பிழை திருத்தும் பழக்கம் குறைவாகிக் கொண்டு வருவதை நான் உணர்கிறேன். திருத்திக் கொள்கிறேன் நண்பா!

கொல்லான் said...

//அவரைப்போன்ற இளைஞர்களின் கனவு பைக்!//
உங்களுக்கு வயசானத, எவ்வளவு நாசூக்கா சொல்லி இருக்கீங்க.
அற்புதம் பாஸ்.

R. Gopi said...

இந்த வாரமும் ஏதோ ஒரு காரணத்திற்காக உடுமலை சென்று ஆ.வீ. யையும் பார்த்து விட்டு அதற்கும் விமர்சனம் எழுதுங்கள்.

நன்றி.

இரா. கோபி, பெங்களூரு

Thamira said...

களவாணிதான் மிஸ் ஆகிவிட்டான். ம்.. பாக்கணும்.

அப்புறம் 'மறந்துட்டியாவுக்கு' எனக்கும் நல்லாவே புல்லு அரிச்சுது. :-))

சிநேகிதன் அக்பர் said...

குறைவான வார்த்தையில் நிறைவான விமர்சனம்.

Unknown said...

தியேட்டரில் படம் பார்க்கும்போது ‘மறந்துட்டியா’ என்று ஏமி கேட்டவுடன் ‘தானதோம் தனன தானதோம்தன்ன’ என்று ஆரம்பிக்கும் ஆலாவில் உங்களுக்கு புல்லரிக்கவில்லை என்றால் படம் விட்டதும் நீங்கள் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு போவது அவசியம்.


சேம் பிளட்...எனக்கும் அதே பீல்...

R.Gopi said...

சூப்பர்........

அப்படியே விட்டுப்போன அனந்துப்புரத்து வீடு படமும் பாத்துடுங்க...

கேபிளார் தான் அந்த ரசிகர் மன்ற தலைவரா?

சுரேகா.. said...

கேபிள் ஜி!

நீங்கதான் தலைவர்ங்கிறது ஏமிக்குத் தெரியுமா??? :)))