Wednesday, July 14, 2010

அவியல் 14.07.2010

உடுமலை தளி ரோட்டில் பைக்கில் நின்று கொண்டிருந்தேன். (யாருய்யா அது… ‘பைக் மேலயா நின்னீங்க?’ன்னு பின்னூட்டம் போட நினைக்கறது?) கொஞ்சம் கசங்கலான ஆடைகளோடு ஒரு பெரியவர் அருகே வந்தார். கையில் ஒரு துண்டுச் சீட்டு. ’இது எங்க கிடைக்கும் தம்பி?’ எனக் கேட்டார். சீட்டைப் பிரித்துப் பார்த்தேன்.

PAN NUMBER என்று எழுதப்பட்டிருந்தது.

அவரை ஒரு மாதிரி பார்த்தேன். ‘இது எதுக்கு கேட்கறீங்க?’ அவர் விடாமல் ‘இது எந்தக் கடைல கிடைக்கும்ன்னு சொல்லுங்க. இந்த வீதிலதான் ஏதோ கடை சொன்னாங்க’ என்றார். நான் அவரிடம் ‘இதெல்லாம் கடைல கிடைக்காதுங்க.. சரி.. எதுக்கு இதைக் கேட்கறீங்க’ என்றேன். 'பாங்குல பணம் போடப் போனேன் தம்பி. அதுக்கு இது வேணும்கறாங்க' என்றார். அப்போதுதான் புரிந்தது.


பெரிய தொகை எதுவோ வங்கியில் டெபாசிட் செய்யப் போயிருக்கிறார் போல என்று எண்ணிக் கொண்டே அவருக்கு எப்படி உதவலாம் என்று யோசித்துக் கொண்டே இறங்க எத்தனித்தபோது, ‘விடுங்க தம்பி.. நான் பேங்கலயே போய் சண்டை போடறேன்.. ஒரு மணி நேரமா இது கிடைக்காம திண்டாடறேன். லட்சக்கணக்குல என் பணத்தை அவங்ககிட்ட குடுத்து வைக்கறேன். நான் ஏன் இதை வாங்க அலையணும்?’ வேணும்னா அவங்க வாங்கித்தரட்டுமே’ என்று சலித்துக் கொண்டபடி போனார்.

பாவமாகத்தான் இருந்தது.
******************************
எனது அவியல்களில் முடிந்தவரையில் உண்மைச் சம்பவங்களையே தருகிறேன். சுவாரஸ்யத்துக்காக நடையில் சில மானே தேனே பொன்மானே போட்டிருக்கலாம். ஆனால் மையக்கரு நிஜமாக நடந்ததாகத்தான் இருக்கும். ரொம்ப டுபாக்கூராக இருந்தால் ‘அது மட்டும் என் கற்பனை’ என்று டிஸ்கியில் அசடு வழிந்திருப்பேன்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. ரெகுலராக அவியலில் ‘அது உண்மையா நடந்ததா? இது உண்மையா நடந்ததா' என்று ஒரு பின்னூட்டமாவது வருகிறது. (சொல்லீட்டியில்ல.. இதுலயும் போடறோம் பாருடா’ன்னு கிளம்பினீங்க.. அவ்ளோதான்.. ஆமா..) அடுத்து வரும் பத்தியைப் பார்த்து ‘இது டுபாக்கூர்.. உங்க பொண்ணு இப்படிக் கேட்டிருக்காது’ன்னுடாதீங்க!
*************************
திங்கள் இரவு வீட்டில் சப்பாத்தி. சப்பாத்திக்கு நிலக்கடலை சட்னி வைத்திருந்தார் உமா. நன்றாகத்தான் இருந்தது டேஸ்ட், எனினும் ‘என்ன நிலக்கடலை சட்னி?’ என்று கேட்டு வைத்தேன். பொட்டுக்கடலை இல்ல.. 'பொட்டுக்கடலை வாங்கிட்டு வா’ன்னா உங்க சின்ன மக போமாட்டீன்னுட்டா’ என்றார். வீட்டு எதிரிலேயே கடை.

மேகாவை அழைத்து 'அம்மா சொன்னப்ப ஏம்மா போகல?' என்று கேட்டேன். 'ஹோம்வொர்க் இருந்ததுப்பா' என்றாள். 'எதிர்லயேதானே கடை.. போய்ட்டு வர எவ்ளோ நேரமாகும்? என்றேன்.

'அம்மா நூறு பொட்டுக்கடலை வாங்கிட்டு வரச் சொன்னாங்கப்பா.. நூறு எண்ணி தர்றதுக்கு நேரமாகும்ல?' என்றாள். எல்லாரும் சிரித்து விட்டோம். சாப்பிட்டு முடித்து அவளை கடைக்கு அழைத்துச் சென்று நூறு என்றால் நூறு கிராம் என்பதை விளக்கி எடைக்கல் இருந்தால் காண்பிக்கலாம் என்று கேட்டேன். கடைக்காரர் சொன்னார். ‘என்னண்ணா நீங்க.. அதெல்லாம் இல்ல. எலக்ட்ரானிக் ஸ்கேல்தான்’

எலக்ட்ரானிக் யுகத்தில் காணாமல் போனவற்றில் எடைக்கல்லும் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

(இதை எழுதும்போது ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பெரிய பெரிய எடைக்கற்களை தராசில் வைத்து விறகு வாங்கிக் கொண்டு சைக்கிளில் போன நாட்கள் ஞாபகம் வருகிறது.)
**************************
செம்மொழி மாநாட்டைப் பற்றி என்ன நினைக்கறீங்க என்று சில நாட்கள் முன்பு சில பேர் கேட்டார்கள். ஏதேதோ சொல்லி வைத்தேன். கரிசல் காட்டு எழுத்தாளர் கிராவின் கதை ஒன்று.


அழகு என்ற தங்கள் மகனை தமிழ் படிக்க நகரத்துக்கு அனுப்பினர் கிராமத்துப் பெற்றோர். ரொம்ப நாட்கள் கழித்து அவனும் படித்து திரும்பி வந்தான். வந்ததுமே ’அன்னாய்.. தாதாய்’ என்றான் பெற்றோரைப் பார்த்து. அவர்களுக்கு திக்’கென ஆயிற்று. ‘ஏலே அளகு.. என்னசாமி ஆச்சு உனக்கு?’ என்றிருக்கிறார்கள். இவன் தொடர்ந்து ‘அன்னாய்.. தாதாய்...அயிற்சி மிக்கது. அடிசில் புக்கி, சிறிதே அன்னம் கொணர்க’ என்றானாம்.


ஏதேதோ பாஷை பேசறான்.. இவன வடநாட்டுப் பேய்தான் பிடித்துவிட்டது என்று நினைத்து ஓர் அறையில் அவனைப் பூட்டி, பூசாரியைக் கொண்டு வரலாம் என்று கிளம்பினார்கள். பூட்டும் வரை ‘அன்னாய்... தாதாய்..’ என்று புலம்பியிருக்கிறான் அவன். இவர்கள் போய் சிறிது நேரம் கழித்து பூசாரியோடு வந்து கதவைத் திறந்ததுமே அவன் ‘ஆத்தோவ்... வகுறு பசிக்குல்ல.. கஞ்சி ஊத்து’ என்றிருக்கிறான்.


பூசாரியக் கூட்டீட்டு வந்ததுல சரியாப்போச்சுபோல என்று அவர்களும் நினைத்து மகிழ்ந்தார்களாம்!


****************************

‘இப்போவெல்லாம் ஏன் அவியல்ல படிச்ச/பிடிச்ச கவிதை போடறதில்ல?’ என்று லண்டனிலிருந்து கேட்ட புவனாவுக்காக......

சைக்களில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்து திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை

-கல்யாண்ஜி

(லண்டன்ல புவனான்னு யாராவது இருப்பாங்கள்ல? அப்ப சரி...)

******************************

நம்ம சகா கார்க்கி நேத்து கூப்ட்டான். ‘நன்றி பரிசல்.. ட்விட்டர்ல வைரமுத்து ஸ்பெஷல் நான் ஆரம்பிச்ச உடனே நீங்களும் வந்து பிடிச்ச வரிகளா போட்டுத் தாக்கினதால அது சூப்பர் ஹிட் ஆய்டுச்சு பாருங்க..’ என்றான்.

‘நமக்குள்ள தேங்க்ஸா? ஒத விழும்’ என்றேன். ‘அப்ப இந்தா புடிச்சுக்கோங்க.. அடுத்த தோழி அப்டேட்ஸ்ல வரப்போற ஒரு மேட்டர். உங்களுக்காக எக்ஸ்ளுசீவா சொல்றேன்’ என்றான்.

இதோ அது..

‘வீட்டுக்குப் போக பைக்கில் ஏறியபிறகு முத்தமிடாதே தோழி. ட்ராஃபிக் போலீஸ் மது அருந்திய பின் வாகனம் ஓட்டுகிறேன் என்கிறார்கள்’

**************************

.

24 comments:

Cable சங்கர் said...

தோழி அப்டேட்ஸை.. எண்டர் தட்டி போட்டால் கவிதை..

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..

அவியலில் வந்துவிட்டதால் எனக்கு தோழி இருக்கும் செய்தியும் உண்மை செய்தியென ஆகிவிட்டது. அப்பாடி :)))

தராசு said...

//(யாருய்யா அது… ‘பைக் மேலயா நின்னீங்க?’ன்னு பின்னூட்டம் போட நினைக்கறது?)//

//(சொல்லீட்டியில்ல.. இதுலயும் போடறோம் பாருடா’ன்னு கிளம்பினீங்க.. அவ்ளோதான்.. ஆமா..)//

இப்பிடி லிஸ்ட் போட்டு குடுத்து, எனக்கு இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் வேணும்னு கேக்கறது எதுக்கு????

M.G.ரவிக்குமார்™..., said...

\(யாருய்யா அது… ‘பைக் மேலயா நின்னீங்க?’ன்னு பின்னூட்டம் போட நினைக்கறது?)/ஹிஹி!...நான் தாங்க அது!......பைக்கு மேலயா நின்னீங்க!?........

☀நான் ஆதவன்☀ said...

முதல் சம்பவம் உண்மையாலுமா? :(

எம்.எம்.அப்துல்லா said...

//எலக்ட்ரானிக் யுகத்தில் காணாமல் போனவற்றில் எடைக்கல்லும் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

//

நம்ப பதிவர் அண்ணன் தராசு பேரை இனிமே எலக்ட்ரானிக் தராசுன்னு மாத்திருவோமா???

தராசு said...

அப்துல்லா அண்ணே, ஒய் திஸ் மர்டர் வெறி?????

Katz said...

கவிதை சூப்பரு!

மேவி... said...

"கார்க்கி said...
ஹிஹிஹி..

அவியலில் வந்துவிட்டதால் எனக்கு தோழி இருக்கும் செய்தியும் உண்மை செய்தியென ஆகிவிட்டது. அப்பாடி :)))

14 July 2010 12:01 PM "

சார் மனுஷன் எவ்வளவு சீரியஸ் யான (????) விஷயங்கள் எழுதிருக்காரு . அதையெல்லாம் விட்டுட்டு. உங்களுக்கு தோழி இருக்குறது உண்மைன்னு prove பண்ணுவதில்லையே குரிய இருக்கீங்களே ???? நடு பகலில் பின்னோட்டம் போட்ட இப்படி தான்....

=

மொத்தத்தில் அவியல் = சரவண பவன் ...... ஹி ஹி ஹி ஹி

நல்ல இருக்குண்ணே....

எல்லா அவியல் பதிவுகளையும் சேர்த்து ஒரு புஸ்தகமா போடுங்க தல .....

ny said...

freshness !!

மேவி... said...

"நேசன்™..., said...
\(யாருய்யா அது… ‘பைக் மேலயா நின்னீங்க?’ன்னு பின்னூட்டம் போட நினைக்கறது?)/ஹிஹி!...நான் தாங்க அது!......பைக்கு மேலயா நின்னீங்க!?........"


எப்படியும் புது பைக் வாங்குறதுன்னு அவரு முடிவு பண்ணிட்டாரு ....எப்படி நின்ன என்ன .....

எப்படியும் பரிசல் ஒரு இலக்கியவாதி என்பதால் ...அவரோட ரசிகர்கள் யாராச்சு அவருக்கு பைக் வாங்கி தந்துருவாங்க

(சாருவுக்கு golf club membership கிடைத்த மாதிரி)

அபி அப்பா said...

அந்த தோழி சம்பவம் உண்மையா பரிசில்????

மணிவண்ணன் said...

//ன்னாய்.. தாதாய்...அயிற்சி மிக்கது. அடிசில் புக்கி, சிறிதே அன்னம் கொணர்க//

நயினா...இது என்ன பாஷ நயினா?

CS. Mohan Kumar said...

Nice. Interesting to read all.

Ranjithkumar said...

"அவியல்" சோ..... டேஸ்ட்.....

Prasanna said...

அந்த ரெண்டாவது மேட்டர் மட்டும் உண்மையானு சொல்லிட்டா.. எல்லாம் உண்மைதான்னு தெரிஞ்சிக்குவோம்..

Anonymous said...

நல்ல பதிவு.

//எனது அவியல்களில் முடிந்தவரையில் உண்மைச் சம்பவங்களையே தருகிறேன்//

நம்பிட்டோம் பாஸ்... (பொய்கள் கலந்தால்தானே கவிதைகள் கூட சுகமாயிருக்கும். சும்மா கலந்துகட்டி அடிங்க பாஸு).

Unknown said...

இன்றைய அவியலில் ஒரே ஒரு செய்தி மட்டும் பொய். அது எது?

பா.ராஜாராம் said...

லண்டன் புவனாவிற்கு நன்றி.

கமென்ட்டில், சிரிப்பு தக்காளிகளை சரிக்கும் அப்துல்லாவிற்கும். ;-))

ஸ்வாமி ஓம்கார் said...

//நம்ப பதிவர் அண்ணன் தராசு பேரை இனிமே எலக்ட்ரானிக் தராசுன்னு மாத்திருவோமா???
//

அவியலையும்... அமெரிக்க தரத்தில் வந்த பின்னூட்டத்தையும் ரசித்தேன் :)

தெய்வசுகந்தி said...

டேஸ்டி அவியல்!!!!!!!!

VELU.G said...

நல்ல கவிதையை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

கபிலன் said...

கல்யாண்ஜியின் சரிந்த மனித அக்கறை தக்காளிகளும்...
உங்கள் மகளின் நூறு பொட்டுகடலையும்.....
மிகவும் ரசித்தேன்...
வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைக்கு...

அன்புடன் கபிலன்..

Thamira said...

நன்று.