Friday, March 26, 2010

சாயம்போன தபால்பெட்டி...

1)

ப்ரியமானவள்
கிழித்துப் போட்ட
காதல் விண்ணப்பத்திற்கு
நடுவில் நிற்கும்
ஒருதலைக் காதலனை
நினைவுபடுத்துகிறது
குப்பைகள் சூழ நிற்கும்
சாயம்போன
தபால் பெட்டிகள்


*********************************

2)

தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com



********************************

3)

வெஸ்டர்ன் யூனியன்
மணி ட்ரான்ஸ்ஃபர்கள்

பதினாறு இலக்க
எண்ணுடன்
மூன்றிலக்க
ரகசிய எண் கேட்கும்
கடன் அட்டை
பரிவர்த்தனைகள்

அலைபேசி
எண் அழுத்தலில்
கண்டம் தாண்டிப்
பயணிக்கும்
பணங்கள்

இன்னும்.. இன்னும்...
எத்தனையிருப்பினும்

இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.


***************************************************

4)

இப்போதெல்லாம்
எனக்கு
கடிதங்கள்
ஏதும் வருவதில்லை
என்ற வருத்தத்தைச் சொன்னேன்.
எங்களுக்கும்தான்
என்கிறார்
போஸ்ட் மாஸ்டர்.

************************************************


(நான்காவது கவிதை இருவாரங்களுக்கு முன் விகடனில் வெளிவந்தது)


.

30 comments:

Prabhu said...

ஃபீலிங்க்ஸூ? நிறைய ’லெட்டர்’ எழுதிருப்பீங்க போலயே?

நாமக்கல் சிபி said...

3 வது மனதை வலிக்கச் செய்யும் உண்மை!

ஸ்ரீ.... said...

அழகான கருத்துள்ள கவிதைகள்.

ஸ்ரீ....

தராசு said...

மகனின் மணியார்டர் ----

டச்சிங் தல.

கார்க்கிபவா said...

சந்திரனும், சூரியனும் அஞ்சல்காரர்கள்..

இந்த வ்ரியில் பிராசாந்தில் முகபாவனைகள் நினைவிருக்கிறதா?

மோனி said...

..// தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com //..

எனக்கு இந்த கவிதை ரொம்பவும் பிடிச்சிருக்கு நண்பா..

நர்சிம் said...

//கார்க்கி
26 March 2010 11:34 AM சந்திரனும், சூரியனும் அஞ்சல்காரர்கள்..

இந்த வ்ரியில் பிராசாந்தில் முகபாவனைகள் நினைவிருக்கிறதா?
//

கொஞ்சம் விளக்குங்க சகா.. நான் நினைக்குறது தானான்னு பார்ப்போம்.

பர்சல்..பார்ட்டி எப்போ?

M.G.ரவிக்குமார்™..., said...

சார்.........போஸ்ட்......!அம்மா கடுதாசி வந்திருக்கும்மா! போன்ற குரல்கள் இப்போதெல்லாம் ஒலிப்பதேயில்லை!..இது வளர்ச்சியா?......இல்லை......?

ஸ்ரீவி சிவா said...

இரண்டாவது & மூன்றாவது கவிதைகள் நல்லா இருக்கு பரிசல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதைகள்.

Kumky said...

கவிதைகள்....ம்.

சென்ஷி said...

இரண்டாவது, நான்காவது கவிதைவரிகள் மிகச்சிறப்பு.

குகன் said...

உணர்வும், நகைச்சுவையும் கலந்த கவிதை.... மிகவும் ரசித்தேன்.

Thuvarakan said...

காலம் ரொம்ப மாறிப்போச்சு..... :-) டெக்னாலஜி வளருதில்ல..

Ramesh said...

நல்லாயிருக்கு....
:::::
இன்றும்
ஒவ்வொரு கிராமத்திலும்
ஒரு தாயாவது
காத்திருக்கிறாள்
மகனின்
மணியார்டருக்காக.
::::
மிகவும் பிடிச்சிருக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாலாவது கவிதை நீங்க எழுதினதா? விகடன்ல வாசிக்கும் போதே நல்லா இருக்கு னு நினைச்சேன். பட் யார் எழுதினது னு நோட் பண்ணலை.
very good

என் நடை பாதையில்(ராம்) said...

//*தபால்நிலையங்கள்
குறித்த
புகார்களையும்
ஆலோசனைகளையும்
அனுப்ப வேண்டிய முகவரி:
compliance@postoffice.com*//

இதற்குப் பெயர்தான் வளர்ச்சியோ?

Unknown said...

You can post your kavithai in www.thalaivan.com also

Thanks

மங்களூர் சிவா said...

என்னது காண்டம் தாண்டிப்
பயணிக்கும் பணங்களா??????????

பரிசல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு. ஆனா பரிசல் டச் இல்ல. அவசரமா எழுதீங்களா அனந்த்பாலா?

பிரதீபா said...

மூணாவது தான் மனச ரொம்ப கஷ்டப்படுதிடுச்சுங்க ஆனந்த்பாலா.

க ரா said...

மூன்றாவது ரொம்ப நல்லா இருக்கு.

Paleo God said...

நல்லா இருக்குங்க..:))\

நாலாவது நிறைய சேதி சொல்லுது.!

ச.முத்துவேல் said...

எல்லாமே நல்லாயிருக்குது,தலைப்பைப் போலவே.

அறிவிலி said...

இந்த "போஸ்ட்" நல்லா இருக்கு.

Romeoboy said...

நான்காவது அருமை + எதார்த்தம்.

Thamira said...

பதிவெழுதாம, ஆனா லைவ்வா இருக்கிறா மாதிரியே உதார் உடுறதுக்கு உம்மகிட்டதான்யா டிரெயினிங் எடுக்கணும்.!!

Thamira said...

ஆனாலும் கவிதைகள் நல்லாத்தான் இருந்தது.

Tharshy said...

அழகான கவிதைகள்.

எம்.எம்.அப்துல்லா said...

வணக்கம் கவிஞர்.