Saturday, March 6, 2010
பாதசாரி - தமிழினி
“சார்.. ஒரு சிசர் ஃபில்டர் 2 ரூவா. பாக்கெட் 20ரூவா வருது. ஒரு நாளைக்கு பத்தாவது பிடிக்க மாட்டீங்களா? அதுவும் ஃப்ரெண்ட்ஸ், கெட் டுகெதர்ன்னா ஒரு பாக்கெட் சடார்னு காணாமப் போயிடும்.. எப்படிப் பார்த்தாலும் மாசம் 300 ரூவா செலவு பண்ணுவீங்களா இல்லையா? இதுக்கு வெறும் 240 ரூவாதான் சார் வருது... அதுவும் வருஷத்துக்கு...”
-இப்படியெல்லாம் ஆரம்பித்து ஒரு நல்ல புத்தகத்துக்கு சந்தா கட்டச் சொல்லி யாசிப்பது தமிழ்ச்சூழலில்தான் நடக்கும். நடக்கிறது.
பாதசாரி - சுஜாதா ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் ஒருவர். அதனால்தான் நான் கவனிக்கலானேன். கவனித்து என்ன செய்தேன் என்றால் ஒன்றுமில்லை. அதன்பிறகு இவர் பெயர் விஸ்வநாதன் என்றறிந்து ந.விச்வநாதன், விருத்தம் விச்வநாதன் எல்லாம் இவரோ என்று கொஞ்சகாலம் குழம்பிக் கொண்டிருந்தேன்.
பிறகொரு நாளில் ஒரு தளத்தில் காசியை வாசிக்க நேர்ந்தது. பித்துப் பிடித்தது. யுவகிருஷ்ணா அதைப் பற்றி பதிவெழுதி பற்ற வைத்துவிட்டார். கலைஞன் என்பவன் உலகிற்கே சொந்தமானவன் என்றறிகிற போதும் ‘பாதசாரி கோயமுத்தூராமே’ என்று கேள்விப்பட்டபோது டீஷர்ட்டைக் கழட்டி வைத்துவிட்டு, சட்டை மாட்டிக்கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்!
நீங்களும் காசியை கூகுளில் தேடிப் படிக்கலாம். பிராயச்சித்தமாக அவர் ஆசிரியராக இருக்கும் தமிழினிக்கு ஒரு சந்தா கட்டிவிடுங்களேன்.. 240 ரூபாய் மட்டுமே!
‘மனநிழல்’ என்ற தலைப்பில் பாதசாரி எழுதும் பத்தி எழுத்துக்காக மட்டுமில்லாமல் ஒரு நல்ல பத்திரிகையைப் படித்த திருப்தியை மாதந்தோறும் உணர - மறக்காமல் உங்கள் சந்தாவைச் செலுத்தி, ஒரு பத்திரிகை தடுமாறும் சூழலிலிருந்து மாற்ற அதற்கு கைகொடுத்து உதவுங்கள்.
ஓராண்டு சந்தா மட்டும்தான். ஆயுள் சந்தா என்பது யார் ஆயுளுக்கு என்ற சந்தேகத்து இடமளிப்பதாலும், யார் ஆயுளும் சாஸ்வதமில்லா நிலையில் அது தேவையில்லை என்பதாலும் - இல்லை என்கிறார் நண்பர்.
சந்தாவைச் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்:
K.Selventhiran
615201507730
ICICI Bank
Ramnagar Branch
Coimbatore
முக்கியமாய் செய்ய வேண்டியது: வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவுடன் செல்வாவுக்கும் (k.selventhiran@gmail.com) எனக்கும் (kbkk007@gmail.com) பணம் செலுத்திய விபரத்தை உங்கள் முகவரியுடன் அனுப்புங்கள். ரசீதுடன் ஒரு நல்ல சிற்றிதழின் வளர்ச்சிக்கு உதவியதற்கு எங்கள் அன்பையும் கூரியரில் அனுப்புகிறோம்.
பாதசாரியின் காசி கதை பற்றிய யுவகிருஷ்ணாவின் பதிவுக்கு இங்கே க்ளிக்குங்கள்.
பாதசாரியின் கவிதைகள் பற்றிய யாத்ராவின் பதிவு:- இதோ
தமிழினி சந்தாவுக்காக செல்வேந்திரன் எழுதிய பதிவு:- இங்கே
பாதசாரியின் மீனுக்குள் கடல் புத்தகம் பற்றிய பேரின்பாவின் பதிவு:- இங்கே
நன்றி.
.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nice
நல்ல பகிர்வு.
முதல் பத்தி - புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் இதயத்தைத் தொட்ட வரிகள். நன்றி.
அறிமுகத்திற்கு நன்றி. பணம் செலுத்திவிட்டு வருகிறேன்.
இப்படியெல்லாம் ஆரம்பித்து ஒரு நல்ல புத்தகத்துக்கு சந்தா கட்டச் சொல்லி யாசிப்பது தமிழ்ச்சூழலில்தான் நடக்கும். நடக்கிறது.//
வேதனை தரும் வரிகள், உடம்பு எப்படி இருக்கு பரிசல்,( சரியான குரல் ஏற்ற தாழ்வுடன் இதை படிக்கவும்)
வெளிநாட்டிற்கு எவ்வளவு சந்தா அனுப்ப வேண்டும்?
செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி
டீஷர்ட்டைக் கழட்டி வைத்துவிட்டு, சட்டை மாட்டிக்கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்!//
எப்படி வாவ் great !
நல்ல முயற்சி. நோக்கம் கைகூட வாழ்த்துக்கள்.
செல்வா கணக்கில் பணமும், பின் உங்கள் இருவருக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.
அன்பிற்கு நன்றி பரிசல். நண்பர்கள் மு.சிவக்குமார் மற்றும் கே.வி. ராஜா இருவரிடம் இருந்தும் மின்னஞ்சல் வந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்.
உங்க அக்கறை நியாயமானது.... பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு நண்பரே
ஆயுள் சந்தா...?
:--)))
தொடர்கின்றேன்.
நன்றி.
பரிசல்,
நான் எப்படி பணம் கட்டுவது இங்கே இருந்து? ஏனென்றால் பேங்க் சார்ஜே சந்தாவைவிட அதிகமாகிவிடும். அதனால் ஊருக்கு வந்தவுடன் கட்டுகிறேன்.
நிறைய இதழ்கள் வாங்கி படிக்க நேரமொதுக்காமல் சேர்த்துக் கட்டிப்போடுவது ஒன்றேதான் தயங்கச்செய்கிறது.
இருப்பினும் ஒன்றையாவது உருப்படியாக வாசிக்கலாம். அது உன் மண்டையில் உள்ள களிமண்ணுக்கு நல்லது என என் மூளை சொல்வதால் கண்டிப்பாக செய்கிறேன்.
Post a Comment