Wednesday, March 17, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

என் நண்பன் அவன். அவ்வப்போது பேசுவதோடு சரி. அடிக்கடி பார்த்துக் கொள்வதெல்லாம் இல்லை. சில விஷயங்களை என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான் அல்லது நான் அப்படி நினைக்கிறேன்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்துவிட்டாயா?’ என்று படம் வெளியான அன்று கேட்டான். இல்லை என்றேன். போடா என்று ஃபோனை வைத்துவிட்டான். அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அழைத்து அதையே கேட்டான். இல்லை என்பதே என் பதிலாக இருந்தது. அதன் பிறகு வேண்டா வெறுப்பாக அவன் குரல் மாறி வழக்கமான குசலங்களோடு ஃபோனை வைத்துவிடுவான்.

அந்தப் படத்தைப் பற்றி எதுவோ சொல்ல நினைக்கிறான், நான் பார்க்காததால் சொல்லவில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

சென்ற வெள்ளி மதியம், படம் பார்த்து விட்டு இரவு அவனுக்கு அழைத்தேன். படம் பார்த்ததைச் சொன்னேன்.

அவன் அதற்குள் அந்தப் படத்தை ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறான். முதல் நாள் இரவுக் காட்சிப் பார்த்தவனை படம் ரொம்பப் பாதித்திருக்கிறது. தமிழகத்தின் ஒரு மூலையில் இருந்த அவன், பைக்கிலேயே கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் இருக்கும் ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறான். அங்கேதான் அவனது தொலைந்த காதலி, தன் கணவனுடன் வசிக்கிறாள். ஏதோ ஒரு லாட்ஜில் தங்கி, நண்பர்களிடம் விசாரித்து இரண்டாவது நாளில் அவள் முகவரி அறிந்து, மூன்றாவது நாள் ஏதேச்சையாக போவது போல் (‘ஒரு ப்ராஜக்ட் விஷயமா வந்தேன், இங்கதான் உங்க வீடுன்னு கேள்விப்பட்டேன்.. அதான் வந்தேன்’) சந்தித்தித்து விட்டு வந்திருக்கிறான்.

அவளது கணவன் இருந்திருக்கிறான். மிகவும் காஷுவலாக கை குடுத்துப் பேசி வந்திருக்கிறான். ஒரு மகன். மகனுக்கு இவன் பெயராக இருக்குமோ என்று குழந்தைத்தனமாக எண்ணினானாம்.

“நீ என்ன எதிர்பார்த்துடா போன?” - கேட்டேன் நான்.

“தெரியல. போய்ப் பார்த்தே ஆகணும்னு இருந்தது. போனேன். ஹானஸ்டா சொல்லணும்னா ‘என் கல்யாண வாழ்க்கை சரியில்லைடா’ன்னு அவ சொல்லணும்னு கூட எதிர்பார்த்தேன். ப்ச். ரொம்ப நல்லா இருக்கா. கார், வீடு. மனசளவுலயும் சந்தோஷமா இருக்காங்கறது அவ பேச்சுல கண்ணுல தெரியுது”

“அப்படியே இருந்தாலும் உன்கிட்ட சொல்லுவாளா நல்லா இல்லைன்னு?”

“இல்லடா. அவ கண்ணு என்கிட்ட பொய் சொல்லாது” என்றான் எல்லா காதலர்களைப் போலவும்.

நிச்சயமாக அந்தப் படம் அவனை பாதித்ததில் அர்த்தமில்லாமலில்லை. மீண்டும் ஒரு முறை உறவுகள், அதன் சிக்கல்கள் என்று காதலோடு விளையாடியிருக்கிறார் கௌதம் வாசுதேன் மேனன்.

****************************************************

கௌதம் மேனனின் படங்களின் நாயகர்களில் ஒரு வித மேல்தட்டு வாசனை எப்போதுமே இருக்கும். என் போன்றவர்களுக்கு படம் பிடிக்க அதுவும் காரணமாய் இருக்கலாம். ஸ்பென்சரோ, சிட்டி செண்டரோ செல்லும்போது குழுமியிருக்கும் மாடர்ன் ட்ரெஸ் தேவதைகளும், அவர்களோடு ஆங்கிலத்தில் கதைத்துச் செல்லும் பாய் ஃப்ரெண்ட்ஸையும் பெருமூச்சோடு பார்க்கும் பலருக்கும் அதைத் திரையில் பார்க்கவும் பிடித்துப் போகிறது.

படத்தில் சிம்பு உள்ளங்கையால் பின்மண்டையை பதினாறு முறை தேய்த்துக் கொள்கிறார் என்பதைத் தவிர அவரது அண்டர்ப்ளே நன்றாகவே பொருந்திருயிருக்கிறது. த்ரிஷாவை மனோஜின் காமிரா அவ்வளவு அழகாய்க் காட்டியிருக்கிறது.

படத்தின் ஹீரோ - ஏ.ஆர். ரகுமான். இன்னும் ஆரோமலோயில் அல்ஃபோன்ஸா அடிவயிற்றிலிருந்து வலியோடு கத்தும் குரல் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஓமனப்பெண்ணேவில் பென்னி தயாள் ‘ஹே-ஹே’ என்பது ஈர்க்கிறது. ஹொசான்னாவுக்கு நானே எங்கள் அலுவலக மாடி, வீட்டு மாடி என்று ஆடுவதாய் கற்பனை செய்து களித்துக் கொண்டிருக்கிறேன்.

பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஆலப்புழாவின் அழகை மனோஜின் காமிரா காட்சியில் தர, பின்னணியில் ஏ ஆர் ரகுமானும் சேர்ந்து கொள்ள.. ரசனை!

நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை வேலை வாங்குவதில் கௌதம் கில்லாடி. லைட்டாக பாட்டு ஆரம்பிப்பதுபோல இருந்தாலே போதும், எங்கெங்கிருந்தோ வந்து ஆடிவிட்டுச் செல்கிறார்கள்!


*************************************************

நிச்சயமாக இது கௌதமின் சொந்த அனுபவம்தான் என்று சொல்ல வைக்கிறது ஒரு சில சீன்கள். ‘யார் இல்லைன்னா? என்னோட எல்லா படத்துலயும் என் சொந்த அனுபவம் இருக்கு. ஆனா இதோட பேஸ்லைன் என்னோட சொந்தக் கதைன்னு நினைச்சுடாதீங்க’ என்கிறார் கௌதம் ஒரு இதழுக்களித்த பேட்டியில்.

************************************************

இந்தப் பதிவை விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. ஒரு நல்ல படத்தைப் பார்த்து எழுதாமல் போவதா என்று தோன்றியதால் எழுதுகிறேன். என் காதல் தோற்றிருந்தால் இன்னும் இந்தப் படத்தை ஆழமாக ரசித்திருக்கலாமோ என்று தோன்றியது சத்தியம். ஆனால் கார்க்கிக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்காமல் போனது ஏனென்றே தெரியவில்லை.

காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்!

............................


(ஒரு வேண்டுகோள்:-

காந்தி செத்துட்டாரா? சக்கரம் கண்டுபிடிச்சாச்சா போன்ற பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்!)



.

39 comments:

வெண்பூ said...

//
காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்!
//

அப்ப காதல்ல ஜெயிச்சதன் மூலமா நீங்கதான் தோத்துட்டீங்கள்ள...

//
என் காதல் தோற்றிருந்தால் இன்னும் இந்தப் படத்தை ஆழமாக ரசித்திருக்கலாமோ என்று தோன்றியது சத்தியம்.
//
அப்ப இந்த படத்தை நீங்க ரசிச்சி இருக்கணுமே.. ஒண்ணுமே புரியல, என்ன சொல்றீங்கன்னு... :)

மேவி... said...

விண்ணைத் தாண்டி வருவாயா - காதல் தண்டி(தாண்டிய) யாத்திரை

கார்க்கிபவா said...

எனக்கு பிடிக்காமல் போனதற்கான நியாயங்களை சொல்ல எனக்கு எந்த உறுத்தலுமில்லை. அதை எல்லாம் ஏற்கக்கூடிய மனநிலையில் இங்கே யாருமே இல்லை என்பது மட்டும் புரிகிறது.

நீங்கள் மட்டும்மல்ல, இன்னும் சிலர் கூட இதே கேள்வியை என்னிடம் கேட்டார்கள். ஒரு பதிவர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொதே குறுந்தகவல் அனுப்பினார் “ஏன் சகா உனக்கு பிடிக்காம போச்சு”.

இன்னொருவர் வெளியே வந்தவுடன் அழைத்து கேட்ட கேள்வி “ எபப்டிடா புடிக்கலன்னு சொன்ன?”

இவர்கள் எல்லோருமே ஓரளவுக்கு என் காதல் அத்தியாயம் அறிந்தவர்கள்.

அவர்களுக்கு தந்த அதே பதிலை இங்கேயும் தருகிறேன்

:)))

Unknown said...

//.. காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்! ..//

சரிங்க..

பரிசல்காரன் said...

@ வெண்பூ

ஏஇகொவெ?

@ மேவி

:-)

@ கார்க்கி

அது என்ன பதில் சகா?

பரிசல்காரன் said...

@ பட்டிக்காட்டான்

சொல்லவேல்ல????

மேவி... said...

பரிசல், உண்மையை சொல்ல வேண்டுமானால்....எனக்கு மட்டும் காதல் கைகூடி இருந்தால் என் வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திற்கும்... இப்படி மொக்கையாகி இருக்க மாட்டேன்

Unknown said...

//.. சொல்லவேல்ல???? ..//
நான் சரின்னு சொன்னது உங்க கருத்துக்கு..
நல்லா கிளப்புராங்கையா பீதிய..

Paleo God said...

நானும் படத்த ரசிச்சேங்க..
:)

butterfly Surya said...

:(

பரிசல்காரன் said...

@ ஷங்கர்

நன்றி.

@ சூர்யா

ப்ரொஃபைல் படத்துல மட்டும்தான் சிரிப்பீங்களா? :-)

manjoorraja said...

இன்னும் படம் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

தராசு said...

எனக்கு இந்தப் படம் புடிக்கல.

பரிசல்காரன் said...

@ மஞ்சூர் ராஜா

சரிங்க

@ தராசு

சரிங்க..

கொல்லான் said...

//காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்!//

வெற்றியாளர்கள் தோற்பதில்லை.

Prabhu said...

ஏன் பாஸ், காதலி தோற்றவர்களே வெற்றியாளர்ன்னா, காதலில் ஜெயிச்சு தோத்துறலாமே?

லாஜிக் புர்ல!

பரிசல்காரன் said...

@கொல்லான் &
பப்பு


:-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

காதலில் தோற்றவர்களே வெற்றியாளர்கள்!//
காதல் வெற்றி அடையும் வரை வெளியே உள்ள எதிரிகளோடு போராடும் காதலர்கள் வெற்றி அடைந்ததும் தாங்களே எதிரி ஆகிறார்கள்.
தோற்கும் காதல் தான் வெற்றி அடைகிறது.

Santhappanசாந்தப்பன் said...

ரொம்ப ரசிச்சி படிச்சேன்.

படிச்ச விமர்சனத்திலேயெ இது தான் டாப்.

சுப்பிரமணியன் said...

நல்ல அருமையான காதல் கதை.
அதேப் போல விமர்சனமும்!

Unknown said...

விமர்சனம் நல்லா இல்லை, இத நான் எதிர்பாக்கலை பரிசல்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

விமர்சனம் அருமை நான் பார்த்த முதல் சிம்பு படம் ...

A Simple Man said...

உண்மையான காதல் எல்லாமே கல்யாணத்தில் முடிவதில்லை.
கல்யாணத்தோடு முடிந்துவிடுவதெல்லாம் உண்மையான காதலுமில்லை..
எங்கோ படித்தது.
-ASM

sriram said...

என்னது
இந்திரா காந்தி செத்துட்டாங்களா?
கரண்ட கண்டுபிடிச்சாச்சா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வால்பையன் said...

என்னாது, நேரு செத்துட்டாரா?

வெள்ளிநிலா said...

:)

பெருசு said...

என்னது

நீங்க "விண்ணைத் தாண்டி வருவாயா"படம் பாத்தாச்சா

பாய் கடையிலே உப்புமா போடறதில்லையா

போங்க பாஸ்

Unknown said...

Nice Review :)

Thamira said...

நல்லா இல்லைன்னு சொல்லலையே. நல்லா இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றோம்.. (நானும் கார்க்கியும்)

கத்தார் சீனு said...

பரிசல்.......காதலில் ஏது வெற்றி ??? தோல்வி ???
எனக்கும் படம் ரொம்ப பிடிச்சு இருந்தது !!!
அப்புறம்...காயங்கள் ஆறி.....தேறிட்டிங்களா???

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com


(Pls ignore if you get this mail already)

மதுரை சரவணன் said...

நல்லா சொல்லியிருக்கீங்க..பல காதல் தோல்வி அடைவது பின்னால் நம் போன்றோர்கள் ரசிக்கத்தானே..!வாழ்த்துக்கள்

வெற்றி said...

//ஆனால் கார்க்கிக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்காமல் போனது ஏனென்றே தெரியவில்லை.//

எனக்கும் தெரியல..கார்க்கி விளக்குறேன்னு சொல்லிட்டு ஒன்னும் சொல்லாம எஸ்சாகிட்டாரே?

பாபு said...

//நல்லா இல்லைன்னு சொல்லலையே. நல்லா இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றோம்.. (நானும் கார்க்கியும்) //


நம்மளையும் சேர்த்துக்கங்க

Unknown said...

//.. நல்லா இல்லைன்னு சொல்லலையே. நல்லா இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றோம்..//

இதுக்கு பேசாம, காந்தி செத்துட்டாரானே பின்னூட்டம் போட்டுருக்கலாம்..

நர்சிம் said...

நல்ல படம்.

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .

மீண்டும் வருவான் பனித்துளி !

Priya said...

உங்க நண்பரை போல் இன்னும் எத்தனை பேர் இப்படி தேடி போனார்களோ?
உன்மையிலே வி.வ. ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.

Thuvarakan said...

//மாடர்ன் ட்ரெஸ் தேவதைகளும், அவர்களோடு ஆங்கிலத்தில் கதைத்துச் செல்லும் பாய் ஃப்ரெண்ட்ஸையும் பெருமூச்சோடு பார்க்கும் பலருக்கும்//

இது உங்கள் சொந்த அனுபவமா?