Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்நேற்றைக்கு மதியம் வரை ரிலீஸா, இல்லையா என்று எல்லாரையும் எதிர்பார்ப்பில் வைத்திருந்து, ரிலீஸாகிவிட்டது - ஆயிரத்தில் ஒருவன்.

*******

பண்டைய சோழர் காலத்து மன்னன் ஒருவன் பாண்டிய மன்னர்களுடனான போரின்போது தன் மகனை (இளவரசனை) ஒருவரிடம் கொடுத்து, எத்தனை ஆண்டுகாலமாயினும் இவனைக் காப்பது உன் பொறுப்பு’’ என்றுவிட்டுப் போகிறான்.

------------டைட்டில்---------------

பண்டைய சோழர்கள் இருந்த இடத்தைத் தேடிச் செல்லும் அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தனைக் காணவில்லை. அவரைத் தேடும் குழுவின் தலைமையாய் ரீமாசென் பலத்த பாதுகாப்போடு கிளம்புகிறார். கூடவே பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவையும் (அவரும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலிருக்கிறார்) அழைத்துச் செல்கிறார். வியட்நாம் அருகே இருக்கும் அந்த இடத்திற்கு கப்பலில் செல்லும்போது உதவியாளர்களார் கார்த்தி தலைமையிலான கோஷ்டி வருகிறது.கப்பலிலிருந்து மாறி, இவர்கள் செல்லும் படகு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் படகோட்டிகள் எத்தனை கொடுத்தாலும் இதற்கு மேல் வரமுடியாது என்று போய்விட, இவர்களே படகைச் செலுத்தி கரை நோக்கி செல்கிறார்கள்.

கரையை அடையுமுன்னே, கடலிலிருந்து வரும் ஒரு ஜந்து இவர்களை சாரமாரியாகத் தாக்க, பலர் மடிந்து விழ.. போகுமிடத்தின் விபரீதம் புரிய ஆரம்பிக்கிறது.

ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.

அங்கே...

அந்த சோழர் பரம்பரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

அதன்பிறகு என்ன நடந்தது.. தஞ்சை மண்ணைத் தொட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாய் காத்திருந்த அந்த சோழர்கள் ஆசை நிறைவேறியதா என்பதையெல்லாம் திரையில் கண்டு களியுங்கள்.


கொஞ்சம் சிக்கலான திரைக்கதையால் பலருக்கும் புரியாத வண்ணம் இருப்பதுதான் படத்தின் மைனஸ். அதுவும் படத்தில் பல இடங்களில் பின்நவீனத்துவம் புகுந்து விளையாடியிருகிறது!

படத்தின் ஹீரோ சத்தியமாக ரீமா சென்தான்! கார்த்திக்கு வேலையே இல்லை. படத்தில் ஹெல்பர் கேரக்டரில் வருகிறார். அவர் வேலையும் படத்தில் அது்தான். ஹீரோவாச்சே என்று கடைசியில் அவரை சோழர்களைக் காக்க வந்த தூதுவராய்க் காட்டியிருக்கிறார்கள்.ரீமா சென். ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா மாதிரி ரீமாவுக்கு ஆயிரத்தில் ஒருவன். எந்த நடிகையும் நடிக்கத் தயங்கும் பல காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரதாப் போத்தனைக் கண்டுபிடிக்க இவர் ஏன் பிரயத்தனப்படுகிறாரென்று பார்த்தால், இவர் சோழர்களைப் பழிவாங்க வந்த பாண்டிய வம்சத்தவர்!

மன்னர் பார்த்திபன் (ஆம். ஆர். பார்த்திபன்) & கார்த்தி தலைமையில் சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும், அதைப் படமாக்கிய விதமும் - ராம்ஜியின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர்: காஸ்ட்யூம் டிசைனர் இரம் அலி. ஆர்ட் டைரக்டர் சந்தானம். பண்டைய காலம், பண்டைய காலத்தவர்கள் இன்று வாழும் இடம் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கால ஒவியம் மூலம் நடப்பதை கண்டறியும் யுத்தியும் அபாரம்.

இசை:- வழக்கமாய் யுவனோடு கைகோர்க்கும் இவர், இப்போது ஜீ.வி.ப்ரகாஷ்குமாரோடு கைகோர்த்திருக்கிறார். ‘ப்ரகாஷா? செல்வராகவன் படத்துக்கா?’ என்று கேட்டவர்களை ஏற்கனவே சிறப்பான பாடல்களால் வாயடைத்தார். படத்தில் நில்லாடிய சபையெங்கே என்று பார்த்திபன் பாட, ஒரு மாதிரி நெஞ்சையடைக்கிறது.

பிடிபட்ட சோழ மக்களை அதிரடிப்படை கொடுமைப்படுத்துவதும், பார்த்திபனின் பாத்திரப்படைப்பும் இலங்கைத் தமிழர் நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. :-(

தயவு செய்து குழந்தைகளோடு பார்க்காதீர்கள். இது அவர்களுக்கான படமல்ல. அதேபோல சில பெண்களும் படத்தை வெறுக்கக் கூடும்.


ஆயிரத்தில் ஒருவன் - நூற்றில் ஒரு படம்!.

54 comments:

விக்னேஷ்வரி said...

விமர்சனம் புரியல. படமும் அப்படித்தானோ..... பார்க்கலாமா வேண்டாமா....

பரிசல்காரன் said...

//விக்னேஷ்வரி said...

விமர்சனம் புரியல. படமும் அப்படித்தானோ..... பார்க்கலாமா வேண்டாமா....//

விமர்சனத்துல கடைசில படிக்கலியா?

//சில பெண்களும் படத்தை வெறுக்கக் கூடும்.//

Radhakrishnan said...

விமர்சனம் படிக்கவில்லையெனினும் கடைசி ஒரு வாக்கியம் படித்தேன். நூற்றில் ஒரு படம். மிக்க நன்றி.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

angel said...

me the 4th

m good review

தராசு said...

பொங்கும் வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

பரிசலு..

கடைசீல நீங்களும் ஜோதில கலந்துட்டீங்க..!

என்ஜாய்..!

Rajkumar said...

சம்திங் மிஸ்ஸிங் பரிசல்.
உங்கள் வழக்கமான நடை மிஸ்ஸிங். :(

மேவி... said...

"Rajkumar
14 January 2010 5:02 PM சம்திங் மிஸ்ஸிங் பரிசல்.
உங்கள் வழக்கமான நடை மிஸ்ஸிங். :( "


athe athe

romba suvarasiyamaa eluthuvingale..ennachu????


unga view ye different aa irukkume

தர்ஷன் said...

//இவர் சோழர்களைப் பழிவாங்க வந்த பாண்டிய வம்சத்தவர்!//

என்ன நண்பரே முக்கியமான முடிச்சை இப்படி அவிழ்த்து விட்டீர்களே
நானும் இன்று படத்தைப் பார்த்தேன் நேரமிருந்தால் இதையும் கொஞ்சம் பாருங்கள்

http://sridharshan.blogspot.com/2010/01/blog-post_2761.html

Unknown said...

சுட சுட விமர்சனம் போட்டுடிங்க போல..
அப்போ படம் பார்க்கலாம்னு சொல்லுரிங்க..

Unknown said...

//.. நில்லாடிய சபையெங்கே..//

சரியா..??

ஈரோடு கதிர் said...

நன்றி....

இந்தப் படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்

ஜோ/Joe said...

விமர்சனம் எழுதுறேன் பேர்வழியிண்ணு கதையை எழுதியிருக்கீங்க .என்ன கொடுமை இது.

வெற்றி said...

படம் பார்த்துட்டு விமர்சனம் படிக்கிறேன் பாஸ்..

// ஜோ/Joe said...

விமர்சனம் எழுதுறேன் பேர்வழியிண்ணு கதையை எழுதியிருக்கீங்க .என்ன கொடுமை இது.//


நல்ல வேளை நான் படிக்கல :))

joe vimal said...

பரிசல் அருமை ! நாளைக்கே பாத்துடவேன்டியதுதான்.முடிச்சை அவிழ்க்காமல் இருந்திருக்கலாம் .செல்வா ராக்ஸ்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இதற்குத்தானா ஆசைப் பட்டாய் கார்த்தி?
பருத்தி வீரன் போல ஒரு படம் கொடுத்திட்டு!
அதற்குத்தான் எதையும் ரொம்ப ப்ப்பப்லான் பண்ணக் கூடாது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பொங்கல் சிறப்புதானா பரிசல்.

kanavugalkalam said...

நாணயம் படம் விமர்சனம் போடவும் அண்ணா.

நீர்ப்புலி said...

ஒங்க டச் இல்லையே!
-தினா

Raju said...
This comment has been removed by the author.
ஜோ/Joe said...

//இந்தப் படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்//

எப்போ ? டிவி-ல போடும் போதா?

Raju said...

ஆயிரத்தில் ஒருவன் நீங்கள் எழுதிய கதையா ?

கொஞ்சம் பைரேட்ஸ் ஆப் தே கரிபியன் வாடை அடித்த மாதிரி இருக்கு.

Thamiz Priyan said...

சோழர்களை பழி தீர்க்க வந்த பாண்டிய நாட்டின் குலமகள் கதையா? வாவ்! கண்டிப்பா பார்க்கனுமே... ;-))

க ரா said...

நன்றி பரிசல்.. உங்களது விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிரது...

kailash,hyderabad said...

விமர்சனத்தில் கதை முழுவதும் சொல்வதை தவிர்த்திருக்கலாம். நல்ல வேளை நான் முழுசா படிக்கல.
கடைசி வரியில கேரண்டி கொடுத்துட்டீங்க . அப்ப பாத்துடுவோம்.

தாராபுரத்தான் said...

எங்களை மாதிரி ஆளுகளுக்கு கதையை சொல்ல உங்களை மாதிரி ஒருவர் தேவை.

Subha said...

krishna, happy pongal. Review was good but different from your previous ones......why to break the suspense of the movie???

Romeoboy said...

ரீமா அக்டிங் சூப்பர் தலைவரே. செகன்ட் ஹாப்ல பார்த்திபனும் ரீமாதான் செம கலக்கு கலக்கி இருக்காங்க.

தருமி said...

//விமர்சனம் எழுதுறேன் பேர்வழியிண்ணு கதையை எழுதியிருக்கீங்க .என்ன கொடுமை இது. //

படம் வந்ததும் விமர்சனம் செய்யும் எல்லா பதிவர்களும் வழக்கமாகச் செய்யும் கொடுமைதானே இது!

அண்ணாமலையான் said...

காசு லாபமா நஷ்டமா?

பா.ராஜாராம் said...

அளவான,நறுக்கான விமர்சனம்.

படம் பார்க்க வேணும்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

கேபிள் விமர்சனம் பார்த்து பயந்து போய்டேன்.. நீங்களாவது படம் பார்க்கலாம்னு தெளிவா (ரெம்ப தெளிவுபடுத்திட்டிங்கலோ?) சொல்லிட்டிங்க!!

செந்தில் நாதன் Senthil Nathan said...

இது இன்னொரு இடுகைல நான் போட்ட பின்னோட்டம்...உங்களுக்கும் என் வேண்டுகோள் இது. அடுத்த தடவ அப்ப தான் தைரியமா உங்க விமர்சனத்த படிக்கலாம்..

//எல்லாரும் சொல்ல்றதயே நானும் சொல்லறேன்.. கதைய சொல்லாதிங்க பாஸ்...அதுவும் கண்டிப்பா படத்த பாருங்க-னு சொல்றப்பவாது, கதை சொல்லாதிங்க..மொக்க படம்னா வசனத்தையே எழுதுங்க, யார் வேண்டாம்னா...

சரி, இப்பவாது ஒரு முன் குறிப்பு போடுங்களேன்..ப்ளீஸ்.//

Rajalakshmi Pakkirisamy said...

//விமர்சனம் எழுதுறேன் பேர்வழியிண்ணு கதையை எழுதியிருக்கீங்க .என்ன கொடுமை இது. //


athe athe :(

சுரேகா.. said...

பார்த்திபனே சொந்தக்குரலில் பேசலையாமே? அப்படியா?

கொஞ்சம் லேட்டா பாத்தா புரியுமோ?

வெற்றி said...

படம் பார்த்து விட்டேன்..மிகவும் பிடித்திருந்தது..
பின்நவீனத்துவம் புகுந்து விளையாடியிருப்பது சாதாரண ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை..

Unknown said...

பரிசல்,

மன்னிக்கவும்.இந்த பின்னூட்டம் இதைப் பற்றியதில்லை.தாங்கள் ஒரு பதிவில் “தென்றல் வந்து தீண்டும்போது”
(அவதாரம்)என்ற பாட்டின் இசைக்கோர்ப்பை சிலாகித்து எழுதி இருந்தீர்கள்.(ஆகா! ரசிக்கிறாரே!
எப்படி ராஜா பாட்டுக்கு அழகு சேர்க்கிறார்) அது மேற்கத்திய இசை நுணக்கமான counterpoint என்னும் வகையை சேர்ந்தது.
இதைப் பற்றி எழுதினால பின்னூட்டம் பெரிதாகிவிடும் என்று எழுதவில்லை.ஆனால் இதைப் பற்றி ஒரு பதிவு போடுவதற்கு ஒரு பொறியை விதைத்தீர்கள்.

அதற்கான நன்றிதான் இது.


(சோம்பேறித்தனத்தால ரொம்ப நாள் தள்ளிப்போயிற்று.)

பார்க்கவும்.

http://raviaditya.blogspot.com/2010/01/blog-post_15.html

Prakash said...

பரிசல் , பாசிடிவான விமர்சனம்.மாற்று முயர்சிகளை வர்வேற்றே தீர வேண்டும்.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம்! விமர்சனத்துல கதைய இவ்வளவு விவரமா, டைட்டில் எங்கே வருதுங்கறது உட்பட எழுதனுமாங்க? தியேட்டர் கவுண்ட்டர்லயும் உள்ள பின்னாடி சீட்லருந்தும் கதை சொல்லிட்டிருக்கறதுக்கு கொஞ்சமும் குறையாத செயலாயிருக்கு! நாசுக்கா கதை சொல்றது விமர்சனம் படிக்கையில ஆர்வமாயிருக்கும்! நான் முதல் ஷோ பார்த்துட்டேனேங்கற தொனி ரொம்ப கூடுதலாயிருக்கு! படத்த தியேட்டருக்கு போய் பார்க்காமல் திருட்டு டிவிடியில் பார்வேர்ட் செய்து பார்ப்பவர்களை உறசாகப்படுத்தற மாதிரி இருக்கு! முடிஞ்சளவு கதை சொல்றத தவிர்த்துடலாமே சார்! வாழ்த்துக்கள்!!

இனியா said...

Did Selva get his inspiration from Kalki's "Parthiban Kanavu".

In Parthiban kanavu, Chozha king (Parthiban) requests Pallava king (Narasimhan) to take care of his son (Vikramadityan) when he dies in a battle. Vikramadityan would be exiled to a far away island...


A very interesting storyline. Kudos to Selva!!!! Your review is good!

makku plasthri said...

மன்னர் பார்த்திபன் (ஆம். ஆர். பார்த்திபன்) & கார்த்தி தலைமையில் சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும்,
இந்த மாதிரி கேடயத்தை பிடிச்சிகிட்டா குண்டு பாயாதா? பாராட்டலாம்..ஆனா இதலாம் ரொம்ப ஓவர். ஆமா ஏன் யாருமே அந்த கிளைமாக்ஸ் பத்தி பேசவே மாற்றிங்க. இவ்வளவு மொக்க கிளைமாக்ஸ், தாம் தூமிற்கு பின்னாடி இப்பதான் பாக்குறேன்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நாங்களும் விமர்சனம் எழுதுவோம்ல ?!

ஆயிரத்தில் ஒருவன் என்னுடைய விமர்சனம் .....

http://desandhiri.blogspot.com/2010/01/blog-post_15.html

Chennai boy said...

படத்தின் மிக்கியமான டிவிஸ்ட்ட எல்லாம் சொல்லி பார்ப்பவர்களின் சுவாரஸ்த்தை குறைத்து விட்டீர்களே.

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

Ramesh said...

திரைக்கதை தெளிவாக இல்லை. நிறைய இடங்களில் கதையை யூகிக்க வேண்டியிருப்பதால் தலைவலிக்கிறது.

Kavi said...

படம் நேற்றுத்தான் இங்கு (paris) பார்த்தேன். தமிழில இப்படி ஒரு படத்தை எதிர்பாக்கல. பார்த்திபன் ரீமா அசத்திட்டாங்க. பலர் படம் புரியல என்று எழுதியிருக்கிறார்கள். ஆனா எனக்கு தெளிவா படம் புரிஞ்சுது!

EINSTEEN RAVI said...

//ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.//

அது ஏழு தடங்கல் இல்லன்னு நினைக்கிறேன் .அங்க ஒன்பது வரும்னு நினைக்கிறேன்.

EINSTEEN.R

EINSTEEN RAVI said...

//ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.//

அது ஏழு தடங்கல் இல்லன்னு நினைக்கிறேன் .அங்க ஒன்பது வரும்னு நினைக்கிறேன்.

EINSTEEN.R
tirunagarmadurai@gmail.com

SurveySan said...

மாயோனின் விளக்கம் அருமையா தெளிவா இருக்கு. படமும் அப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

அபி அப்பா said...

இன்னும் இன்னும் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிபார்த்தேன் உங்க கிட்ட இருந்து!

ARV Loshan said...

அருமை. இதைத் தான் எதிர்பார்த்தேன்..

//ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா மாதிரி ரீமாவுக்கு ஆயிரத்தில் ஒருவன்.

சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும், அதைப் படமாக்கிய விதமும் - ராம்ஜியின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர்: காஸ்ட்யூம் டிசைனர் இரம் அலி. ஆர்ட் டைரக்டர் சந்தானம். பண்டைய காலம், பண்டைய காலத்தவர்கள் இன்று வாழும் இடம் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கால ஒவியம் மூலம் நடப்பதை கண்டறியும் யுத்தியும் அபாரம்
//

நான் ரசித்த அத்தனை விஷயங்களையும் ரசித்துல்லீர்கள்..

ஆனால் கதை சொல்லி, இனிப் படம் பார்க்கப் போவோருக்கு சப் ஆக்கி விட்டீர்கள்.
மாயோன் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் விளக்கம் காண்கிறேன்,.. நன்றி..

சர்வேசன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

Unknown said...

i like mayon's comment.i too feel that that was what the main line.like others mentioned this is a postmodern ciema.i think this is a good example of magical realism

SUMAN said...

மிகப் பிந்திய கருத்து. இன்றுதான் பார்த்தேன்

மிக அருமையாகத் தந்திருக்கிறார் செல்வராகவன்.

செல்வராகவன் விட்ட பெரிய தவறு தமிழில் எடுத்தது. அதனை ஆங்கிலத்தில் எடுத்து பெரும்பொருட்செலவில் இன்னும் அதிக கிரபிக்ஸ் வித்தைகளைக் காட்டியிருந்தால் பின்னர் தமிழில் மொழிமாற்றஞ்செய்து ஆகா ஓகோவென்று புகழ்ந்திருப்பார்கள். நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி இந்தப்படத்தின் கிரபிக்ஸ்வேலைகளுக்கு இரண்டு கோடிகள் கேட்கப்பட்டதாகவும் ஆனால் 50 இலட்சம்ரூபாய்களோடு முடித்துக்ககொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். ஒன்று தெரியுமா அவதார் படத்தின் கிரபிக்ஸ்வேலைகளையும் செய்த அதே குழுவினர்தான் ஆயிரத்தில் ஒருவனுக்கும் பணிபுரிந்துள்ளனர்.


எது எப்படியோ சொன்ன கருத்து செல்வராகவனுடைய மனதில் இருந்ததோ தெரியவில்லை ஆனால் அதுதான் சரியான விளக்கமாக அமையும்