Monday, December 21, 2009

உளவாளி


சென்ற வார விகடனின் இணைப்பு: உளவாளி. அந்த இணைப்பைப் படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

1991 டிசம்பரின் போது சென்னை சென்றுவிட்டு, உடுமலைப்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து திருச்சி வரைதான் பஸ் கிடைத்தது. திருச்சியில் இறங்கி சாப்பிட ஒரு நல்ல ஹோட்டல் (பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே) தேடிக் கொண்டிருந்தேன். தோளில் ஒரு கருப்பு Bag, கையில் ஒரு Bag என்று சுமை வேறு. இரவு நேரம். சுற்றி சுற்றி ஏதோ ஒரு ஹோட்டலுக்குப் போவோமென்று போய் சாப்பிட்டு விட்டு வந்தேன். வெளியே வந்தபிறகு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணலாமென்று மறுபடி சில கடைகள் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் கவனித்தேன் – என்னையே ஒரு ஆள் பார்த்துக் கொண்டும், தொடர்ந்து கொண்டும் இருந்தார். ‘அவனா நீ’ என்பதெல்லாம் அப்போதெனக்கு தெரியாதையாகையால் ஒரு வேளை வழிப்பறி கேஸாக இருக்குமோவென சந்தேகப்பட்டேன். அப்படியே இருந்தாலும் நான்கைந்து ஜட்டி, பேண்ட், சட்டைகளையும், புத்தகங்களையும் வைத்துக் கொண்டு அவனென்ன செய்யப் போகிறானென்று அவனை நினைத்து பரிதாபப்பட்டேன். தொடர்ந்து நடந்தேன்.
அரை மணி நேரம் கழித்து, அந்த ஆள் இன்னொரு ஆஃபீஸர் ரேஞ்ச் ஆளுடன் சேர்த்து என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான்!

இதென்னடா, நெஜமாவே என்னைப் ஃபாலோ செய்கிறார்களா, இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா என்று ஐயமாகவே இருந்தது. சிறிது நேரத்திலேயே அந்த ஐயம் தெளிவானது.

அந்த ஆஃபீஸர் என்னருகில் வந்து ‘தம்பி.. கொஞ்சம் எங்க கூட வாங்க’ என்று மரியாதையாக – அதே சமயம் – கண்டிப்புடன் அழைத்தார்.

ஒருமாதிரி பயந்தவாறே அவர்களுடன் சென்றேன்.

பஸ் ஸ்டாண்டிலேயே இருந்த சிறிய அறை ஒன்றிற்கு அழைத்துப் போய், அமர வைத்தார்கள். அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் குழு’ என்று ஏதோ ஒரு கார்டைக் காட்டினார்கள். என்னுடைய பைகள் இரண்டையும் முழுமையாக சோதனை செய்தார்கள். அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்டில் எதையோ தேடிச் சுற்றிக் கொண்டிருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது.

அப்போது நான் யாரென்று நிரூபிக்கும் எந்த அடையாள அட்டையும் என் வசமில்லை. ஒரு பத்திரிகை, ஒரு மாதத்திற்கு அந்தப் பத்திரிகைக்காக நான் தகவல்கள் சேகரிக்க எனக்கொரு அனுமதிக் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதைக் காண்பித்தபிறகு, ஃபார்மலாக சில கேள்விகள் கேட்டு விட்டு விட்டார்கள்!

அப்போதுதான் சொன்னார்கள். எல்லா பஸ் ஸ்டாண்டிலேயும் சில ஆட்களை நியமித்திருக்கிறார்களாம். அவர்கள் டீக்கடையில் டீ போட்டுக் கொண்டோ, பழங்கள் விற்றுக் கொண்டோ, பொரி கடலை விற்றுக் கொண்டோ இருப்பவராகக் கூட இருக்கலாம். அவர்கள்தான் இவர்களின் உளவாளிகளாம்! (அப்பாடா.. தலைப்பு வந்துடுச்சுல்ல!)


ன்னொரு சம்பவம் – ஏழெட்டு வருஷங்களுக்கு முன். நான் திருப்பூரில் பணிபுரியும் நிறுவனத்திற்கு அருகிலிருக்கும் டீக்கடை ஒன்றிற்கு தேநீர் இடைவேளையின்போது போவோம். அப்போதெல்லாம் அங்கே ஒரு ஆள் அழுக்கு உடையும், துணி மூட்டையுமாய் அமர்ந்திருப்பான். இரவு நேரம் அவ்வளவாக தென்பட மாட்டான். ஒவ்வொரு நாள் இருப்பான், ஒவ்வொரு நாள் காணாமல் போவான். நாங்கள் அமர்ந்து தேநீர் குடிக்கும்வரை இருப்பான். பன், பிஸ்கெட் எதையாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வான், அவனாகக் கேட்க மாட்டான். ஒரு பேச்சு பேசி யாரும் கேட்டதில்லை. ‘அவன் ஒரு மெண்டல் கேசு தம்பி’ என்பார் கடைக்காரர்.

கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களாக இருந்தவன், கொஞ்ச நாட்களாக கண்ணில் தட்டுப்படவில்லை. அந்த டீக்கடைக்காரரிடம் விசாரித்தபோது தான் சொன்னார்:

“அதையேன் கேட்கறீங்க.. நாலுநாள் முந்தி ஒரு ஆள் நம்ம கடைக்கு டீ குடிக்க வந்தான். டீ சொல்லீட்டு உட்கார்ந்திருந்தான். ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். கடைக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்னுச்சு. நாம மெண்டல் கேசும்போம்ல, அந்த ஆள் திடீர்னு எந்திருச்சு, டீ குடிக்க வந்தவன் கையைப்பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போனான். நாங்க கிறுக்குப் பிடிச்சு பண்றான்போலன்னு போய்த் தடுத்தோம், எங்களை முறைச்சு கத்தினான் பாருங்க.. நடுங்கீட்டோம். அதுக்குள்ள அம்பாசிடர் கார்லேர்ந்து ரெண்டு பேர் வந்து அந்த டீ குடிக்க வந்தவனை அள்ளிப் போட்டாங்க. இந்த மெண்டல் கேசும் கார்ல முன்னாடி உட்கார்ந்துட்டு போச்சு”

“கார்லயா?”

“ஆமாம்ப்பா. அது மெண்டல் கேசுல்ல. போலீஸ்ல ஏதோ வேலையாம். மூணு நாலு கொலை பண்ணிட்டு தலைமறைவா திரிஞ்ச ஒருத்தனை தேடிகிட்டு இருந்திருக்காங்க. அவன் சின்னவீடு இந்தப்பக்கம்தான் இருக்குன்னு அவங்களுக்கு தகவலாம். அதுக்காக ஒருமாசமா இப்படி அப்பப்ப வந்து உட்கார்ந்து, எல்லாம் விசாரிச்சு, அவன் வந்தப்ப கையும் களவுமா பிடிச்சுட்டாங்க” என்றார்.

கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!


.

48 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!//

அந்த‌ க‌தையை சொல்லுங்க‌

Cable சங்கர் said...

இண்ட்ரஸ்டிங்..

பரிசல்... நேற்று இரவு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. :)))))))

தராசு said...

வணக்கம் தல

Cable சங்கர் said...

/பரிசல்... நேற்று இரவு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. :)))))))
//

halloo... நேற்று நாம ஈரோடு பதிவர் சந்திப்புல சந்திச்சதை பத்தி சொன்னேன்.. தப்பா நினைச்சிக்க போறீங்க..

anujanya said...

வெல்கம் பாக் என்று சொல்லலாமா? பழைய சுவாரஸ்யம். தொடர வேண்டும் கே.கே.

'யோவ் கேபிள், என்னதிது பொதுவில்?' என்று டைப் செய்து விட்டேன். ஈரோடா? சரி சரி.

அனுஜன்யா

CS. Mohan Kumar said...

முதல் அனுபவம் செம திக் திக். ரெண்டாவதும் சுவாரஸ்யமே..

//கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!//
நிருபர் டச் !!

Nat Sriram said...

91 ல வேலை பார்த்தீங்களா? ரொம்ம்ம்ப சீனியரா இருப்பீங்க போலருக்கே...
(compliment தாங்க. ஆளு இன்னும் யூத்தா இருக்கீங்கனு சொல்றேன் )

Kumky said...

ஹூம்.. ஆட்டம்..பாட்டம்...கொண்டாட்டம்.

நல்லாருங்க ராசா..

நான் பதிவ சொல்லலை.

Anonymous said...

நீங்க யாருக்கு உளவு பாத்தீங்கன்னு சொல்லவேயில்லை....

பரிசல்காரன் said...

@ கரிசல்காரன்

ஹி ஹி ஹி...

@ கேபிள் சங்கர்

//பரிசல்... நேற்று இரவு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. //

இளையராஜா இசை இரவைச் சொல்கிறீர்கள் தானே..? கலக்கீட்டோம்ல?

@ தராசு

வணக்கொம்.

@ அனுஜன்யா

//தொடர வேண்டும் கே.கே. //

ஆசிகளுக்கு நன்றி பாஸ். அப்படியே ஆகட்டும்.

@ மோகன்குமார்

நன்றி நண்பரே.

@ நடராஜ்

வேலை இல்ல நண்பா அது. ஃப்ரீலான்ஸா ஒரு பத்திரிகையோட ஒரு மாத இதழைத் தயாரிக்கறப்போ நடந்தது...

பரிசல்காரன் said...

@ கும்க்கி

நல்லா இருந்துச்சு ராசா தயவுல. நீங்க இல்லைன்னு வாலு ரொம்ப வருத்தப்பட்டாரு!

@ சின்ன அம்மணி

எல்லாருக்கும் எல்லாரும் உளவு பார்த்துக் கொண்டிருக்கிறோம்னு சொல்லுவாங்க மேம்...

ஆரூரன் விசுவநாதன் said...

நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......

மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....


அடுத்த முறை இதை ஒரு தனி நிகழ்வாக மேடையிலே நடத்திவிடுவோம்..

ஈரோடு பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...


அன்புடன்
ஆரூரன்

பாண்டி-பரணி said...

என்னங்கண்ணா ரொம்ப நாளா காணாம் ?

பதிவு சூப்பர் அப்பறம் உளவாளி பத்தி தமிழில் எதன புக் இருக்கா ? எந்த பதிப்பகம்

Unknown said...

அப்போ பார்ட் டூ , த்ரீ லாம் உண்டா...,

பரிசல்காரன் said...

@ ஆரூரன் விஸ்வநாதன்

பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கும், கதிருக்கும் ராயல் சல்யூட்! இன்னும் பிரமிப்பு அடங்காமலே இருக்கிறோம்!

@ பாண்டி பரணி

சரியாகத் தெரியவில்லை. விசாரிக்கிறேன். (க்ரைம் நாவல்கள் எல்லாமே அந்த டைப்தானே பாஸூ...)

Prabhu said...

நேரடி அனுபவமா? எங்களுக்கெல்லாம் ஆங்கில புத்தகங்கள்தான். உளவாளின்னா க்ருப்பு கண்ணாடி தொப்பில்லாம் போட்டிருந்தாங்களா?


//பரிசல்... நேற்று இரவு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. :))))))) ///

நான் வேட்டைக்காரன் படம் போனீங்களோன்னு நினைச்சுட்டேன்! :)

பரிசல்காரன் said...

@ பேநாமூடி

ம்.. ம்ஹூம்.. (அதென்ன னா’வுக்கு பதிலா ’நா?’ தெரிஞ்சா.. தெரியாமலா?)

பரிசல்காரன் said...

@ பப்பு

இன்னொரு வாட்டியா? ம்ஹூம். ஒன் டைம் ஓகே...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுவாரசியம்!

மேவி... said...

நல்ல வேளை உங்களுக்கு NORTH BY NORTHWEST கதை போல் ஆகவில்லை........

உண்மையில் சுகந்திர போராட்ட வீரர்களை பிடிக்க அந்த காலத்தில் CID கள் பலர் ஊருக்குள் சுற்றி கொண்டு இருப்பார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் ...........

பரிசல்காரன் said...

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி குருஜி.

பரிசல்காரன் said...

@ டம்பீமேவி

அப்படீன்னா? புதசெவி!

மேவி... said...

Cable Sankar : "பரிசல்... நேற்று இரவு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.. :)))))))"


பரிசல்காரன் :"இன்னொரு வாட்டியா? ம்ஹூம். ஒன் டைம் ஓகே..."


(dialogue nalla irukku la..he he he he )

ஸ்ரீநி said...

நல்லா கெளப்புறாங்கப்பா பீதியா
இனி உங்க புண்ணியத்துல டி கடைல
கெடைக்கிற நிம்மதியும் போச்சு தல

கார்க்கிபவா said...

//கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை//

அப்போ ராஜா மாதிரி இருந்தீங்கன்னு சொல்லுங்க..

//நீங்க இல்லைன்னு வாலு ரொம்ப வருத்தப்பட்டாரு//

அவரு அப்படி சொன்னதுக்கேன் நீங்க இப்போ வருத்தபடறீங்க சகா?

Kumky said...

அவரு அப்படி சொன்னதுக்கேன் நீங்க இப்போ வருத்தபடறீங்க சகா..?

குட் கொஸ்டின்..

கார்க்கிபவா said...

அய்யய்யோ.. ஸ்மைல் போட மறந்துட்டேனே :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Kumky said...

கார்க்கி said...
அய்யய்யோ.. ஸ்மைல் போட மறந்துட்டேனே...

சீரியஸா எடுத்துப்பாரோ....?

Kumky said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!

நன்றி.

Kodees said...

நிறைய எழுதுங்க பரிசல்.

தாரணி பிரியா said...

அது ஏங்க உளவாளின்னா கருப்பு கோட் கருப்பு தொப்பி கூலிங்கிளாஸ்ன்னு படம் போடறாங்க

எம்.எம்.அப்துல்லா said...

//கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!

//

அட!தெரியாமப் போச்சே. நானும் போயிருந்துருப்பேன்

:)

iniyavan said...

அருமையான நடையில் இருக்கிறது இந்த பதிவு பரிசல்.

எல்லோரும் பதிவர் சந்திப்ப பத்தி பேசறத பார்த்தா பொறாமையா இருக்கு.

அடுத்த வாரம் சந்திக்கலாமா?

அன்பேசிவம் said...

நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......

மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை....//

நான் கிளம்புவரை காத்திருந்து இத்தனையும் செய்ததை , நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்.

பரிசல்காரன் said...

@ ஸ்ரீநி

அப்படியெல்லாம் இல்லீங்கோவ்வ்வ்

@ கும்க்கி

இன்னைக்கு நானா?

@ கார்க்கி

நீயுமா?

@ ஈரோடு கோடீஸ்

அப்பவாச்சும் புரியுதான்னு பார்ப்போம்கறீங்களா?

@ தாரணிப்ரியா

அப்பதானே ஒரு ’இது’ இருக்கும்?

@ எம்மெம் அப்துல்லா

சிங்கரே, இப்பவும் உங்களுக்கு மரியாத நல்லாத்தான இருக்கு?

@ எம். உலகநாதன்

லாமே.. வர்றீகளா?

@ முரளி

நீங்க மாலை போட்டிருந்ததால, போன பிறகு கச்சேரிய ஆரம்பிச்சோம்.. இளையராஜா சாங்க்ஸ். கலக்கலா இருந்துச்சு!

முரளிகண்ணன் said...

வழக் கலக்

butterfly Surya said...

பரிசல், திருப்பூர் சந்திப்பு எப்போ..??

Sanjai Gandhi said...

இதுக்கு வெயிலானின் ப்ரொஃபைல் படத்தைப் போட்டிருக்கலாம். :)

Sanjai Gandhi said...

//நேற்றைய பதிவர் சந்திப்பின் மகுடமே நீங்களும், அப்துல்லாவும் இணைந்து நடத்திய "ஜுகல்பந்தி" தான்......

மிகவும் ரசித்தோம். நண்பர் கேபிளின் நடனம் அருமை..//

அட கொன்னியான்... கிளம்பறேன்னு என்கிட்ட சொன்னது நீங்க கிளம்பறதுக்கு இல்லையா? எங்களை தொரத்த தானா?

பரிசல்காரன் said...

@ முரளிகண்ணன்

நன்றி பாஸ்

@ சஞ்சய்காந்தி

கிளம்பும்போதுதான் ‘அது’ நடந்தது!

நர்சிம் said...

நல்ல சல்ல்ல்ர்ர் பரிசல்.

கிருபாநந்தினி said...

இப்படியெல்லாமா ஆளுக உலவிட்டிருக்காங்க நாட்டுல! நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதிய! ஆமா, நீங்க யார உளவு பாக்க அங்கிட்டு அலைஞ்சீங்க?

Romeoboy said...

பாத்து பாஸ் உளவாளி உங்க வீடு பக்கத்துல இருக்க போறான்,

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா ரொம்ப நல்லா சுவாரஸ்யமா இருக்கு டீக்கடை பேரு தளிரோடு ஆனந்த்????????????????

பரிசல்காரன் said...

@ நர்சிம்

நன்றி பாஸ்!

@ கிருபாநந்தினி

கி கி கி..

@ ரோமியோபாய்

அப்டியா?

@ ப்ரியமுடன் வசந்த்

இது நடந்தது திருப்பூருலங்க.. உடுமலை இல்ல.

☼ வெயிலான் said...

// இதுக்கு வெயிலானின் ப்ரொஃபைல் படத்தைப் போட்டிருக்கலாம்.//

ஏன்? ஏன்? நான் நல்லாருக்கிறது பிடிக்கலியா?

Sanjai Gandhi said...

//ஏன்? ஏன்? நான் நல்லாருக்கிறது பிடிக்கலியா? //

அட.. சிஐடி சின்னசாமி மாதிரி இருகுங்க அந்த போட்டோ.. அதான் சொன்னேன்.. :)

Thamira said...

சுவாரசியம், திரில்.!