செம்மொழிப் பாடலை நேற்றுதான் முழுவதுமாகக் கேட்டேன். யூ ட்யூபில். எல்லாரும் சொல்வது போல் பிசிறில்லாமல் கணீரென்று ஆரம்பிக்கிறது டி எம் எஸ்ஸின் குரல். தொடர்ந்து ஏ. ஆர்.ஆர், ஹரிணி, சின்மயி என்று பயணித்து ஸ்ருதி ஹாசன் வரை - ஸ்ருதியின் அந்த ‘தமிழ்மொழி, தமிழ்மொழி, தமிழ்மொழியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்’ - அபாரம். ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கிறது - அற்புதமான பாடலாக வந்திருக்கிறது. நடுவே ப்ளாசேயின் ராப்புக்கு முன் வரும் நாதஸ்வர பிட் கவர்கிறது. கடைசியில் வரும் அந்த பாட்டிம்மா குரலும் எக்ஸ்ப்ரஷனும் நன்றாக இருக்கிறது. ஆருங்க அது?
இந்த முக்கியமான வீடியோவில் எங்கே என் SPB?
வீடியோவில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் சேரும்போது அருகிலிருக்கும் மாணவன் பெயர் கேட்கிறான். உச்சரிப்பை வைத்துப் பார்க்கும்போது அவன் ‘ஆதவன்’ என்று பதில் சொல்வதாய் தெரிகிறது. நீங்கள் சரிபார்த்துச் சொல்லுங்களேன்...
கௌதம் மேனனின் டைரக்ஷன். ஆங்கிலம் இல்லாமலா? வீட்டுச் சுவற்றில் மகள் வரைந்து கொண்டிருக்க, உள்ளே வரும் மனைவியை ‘COME' என்றுதான் அழைக்கிறான் கணவன். அதையும் சரிபார்த்துச் சொல்லுங்கள்! (வீடியோவில் 4:06 டூ 4:07 நிமிடங்களில்)
இதெல்லாம் சும்மா சொல்கிறேனே தவிர அவ்வ்வ்வளவு பிடித்திருக்கிறது ஏ ஆர் ஆரின் இந்தப் பாடல். Hats off to you Brother!
இந்தப் பாடலின் வரிகளை பாடியவர்கள் யார் யாரென்ற விளக்கத்துடன் சரவணகுமரன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். படியுங்கள்.
.