இரவு திடீரென, கலைஞரும் அவரைச் சுற்றி கவிஞர்கள் அமர்ந்து கவியரங்கம் பாடுவதும் நினைவுக்கு வரவே, படுக்கையிலிருந்து குதிகாலை கீழ்வைத்திறங்கி, அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாய் என் நண்பனுக்காக எழுதிய கவிதையிது. கவிதையில் உயர்வு நவிற்சி இருக்கலாம். பொருத்தருள்க!
*********************************
எனக்கான விஷயம் எல்லாவற்றையும்
எப்போதுமே தள்ளிப் போடுகிறேன் நான்.
உனக்கான வாழ்த்தையும்
ஒருநாள் தள்ளிப் போட்டது
உன்னையும் நானாய் எண்ணியதால்தானோ?
எனக்கு ஏழுலட்சம் வாசகர்கள்
என்று நான் சும்மா சொல்வதுண்டு. – ஆனால்
உன் ‘ஏழு’வுக்கு லட்சம் வாசகர்கள் என்பதை
ஊரறியும் நண்பா!
ஆம்.. ஆறும் அஞ்சும் உனக்குப் பிடித்தாலும்
எட்டுத் திக்கும் உனைக் கொண்டு சேர்த்ததென்னவோ
‘ஏழு’தானே?
முட்டி முட்டி என்ன எழுத என்று நாங்கள்
யோசித்துக் கொண்டிருக்க – நீ
புட்டிக் கதைகள் எழுதி எங்களை
முந்திக் கொண்டிருக்கிறாய்.
எழுதப் பொருளேதுமின்றி
எனைப் போன்றோர் தவித்திருக்க
எழுதப் பொருளில்லை என்பதே - உனக்கு
எழுதுபொருளாகிவிடுகிறது.
பலர் சொல்லலாம்
உன்னை மொக்கையென்று
நான் சொல்வேன் நீ விடாதே
உன் நம்பிக்கையென்று!
வாரத்தில் ஆறுநாள் ஹைதையில் இருப்பாய்
மீதிநாள் சென்னையில் இருப்பாய்
எல்லா நாளும்
எங்கள் இதயத்தில் இருப்பாய்.
உனக்கு
இணையத்தை கையாளவும் தெரியும்
நண்பர்களின்
இதயத்தைக் களவாடவும் தெரியும்.
இசையென்றால் உனக்கிருக்கும்
ஆர்வம் நானறிவேன்.
நண்பர்களுக்கு எவரிடமிருந்தாவது
வசையென்றால் உனக்கு வரும்
கோவமும் நானறிவேன்.
எனக்கு நாசரை மிகப் பிடிக்கும்
உன்னையும் மிகப் பிடிக்கும்
நாசர் வில்லனாய் தன் பெரிய மூக்கில்
குத்துவாங்கிப் பிரபலமானார்.
நீ உன் பெரிய மூக்கில்
முத்தம் வாங்கிப் பிரபலமானாய்.
ஆதி
கேமராவையெடுக்கும்போதெல்லாம்
உன்னை நினைத்துக் கொள்கிறார்.
நீ நடித்தால் மட்டும்
குறும்படம் வெறும் படமாய் இல்லாமல்
பெரும் படமாய் ஆகும் ரகசியமென்னவோ?
‘ஆடுவது கண்டு விஜயின் ரசிகனானேன்’
என்பாய் நீ.
பல நேரங்களில் நீ
ஆடாமல் இருப்பதால்தான்
உன்னையும் நாங்கள் ரசிக்கிறோம்.
எவரோடும் சண்டைபோடத்
தயங்காதவன் நீ.
ஆனால் உன்னை அடக்கும் ஆயுதம்
அன்பென்பதை ஒரு சிலரே அறிவர்.
நான்
சமீபத்தில் மிகச் சந்தோஷப்பட்டது
கார் வாங்கியதற்குத்தான்.
அதனால்தால்தானே
எப்போதும் என்னோடிருக்கிறது CAR KEY!
.