தனது கல்லூரி நண்பன் சக்தியின் தந்தை பாக்யராஜ் வைக்கும் கெட்-டுகதருக்காக எட்டு வருடங்களுக்குப் பிறகு தன் கல்லூரி நண்பர்களைக் காண மும்பையிலிருந்து வருகிறார் பிருத்விராஜ். வரும்போதே ஃப்ளாஷ்பேக்கில் தனக்கும் ப்ரியாமணிக்குமான காதல், கார்த்திக்குக்கும் தனக்குமான தீராப்பகை, எல்லாருக்கும் நண்பனான சக்தி என்று தன் கல்லூரிக் காலத்தை நினைவுகூர்கிறார். கெட்-டுகெதருக்கு வந்த இடத்தில் ப்ரிதிவிராஜைக் கொல்ல முயற்சி நடக்கிறது. சக்தியின் தந்தையாக வரும் பாக்யராஜ் ஒவ்வொருவரிடமாகப் பேச, கொலை செய்ய முயற்சித்தது யாரென்று தெரிகிறது.
முடிவு வழக்கம்போல சுபம்.
சமீபமாகவே காய்ந்துபோய்க் கிடக்கிற ரசிக உள்ளங்களுக்கு கொஞ்சமும் ஏமாற்றம் தராத படம். ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும்போதே ஜிவ்வென்று டேக் ஆஃப் ஆகிவிடுகிறது படம். அங்கங்கே வரும் ஃப்ளாஷ்பேக்கை, ஒவ்வொருவர் கோணத்தில் சொல்லியிருக்கும் விதமும் அருமை.
படம் முழுவதும் வியாபித்து நடித்திருக்கிறார் ப்ரித்விராஜ். ஆனால் கல்லூரி மாணவர் என்பதைக் கொஞ்சம் ஏற்க மறுக்கிறது. ப்ரொஃபசர் கேரக்டருக்கு சரியாக இருப்பார். ப்ரியாமணிக்கும் சொல்லிக் கொள்ளும்படியான படம். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். சக்திக்கும் நல்ல கேரக்டர்.

பாலு
பாலு கேரக்டரில் நடித்திருக்கும் இவர் யாரென்று கேபிள்சங்கர்தான் சொல்ல வேண்டும். வழக்கமாய் ஸ்ரீமன் செய்யும் கேரக்டர். கொஞ்சமும் மிகைப் படுத்தாத இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் இருக்கிறது.
கார்த்திக், லொள்ளுசபா ஜீவா(ஒடம்பைக் குறைங்க சாமி!), பாக்யராஜ், இளவரசு, மனோபாலா, ஷாலி கேரக்டரில் வரும் பெண் என்று எல்லாருக்கும் அருமையான ஸ்கோப் உள்ள படம்.
படத்தில் ப்ளஸ் பாய்ண்ட் கேமரா. பாலசுப்ரமணியெம்!

முதல் பாடலிலேயே (நண்பனைப் பார்த்த தேதி மட்டும்) யாருய்யா கேமரா மேன் என்று கேட்க வைத்துவிடுகிறார். எல்லா காட்சிகளிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான டோன். அழகாய்ப் பூத்ததே பாடலும், படமாக்கிய விதமும் டாப்!
பாடல்கள் கேட்டுச் சலிக்காததால் உட்கார வைத்துவிடுகிறது. என் பேரு உல்லாவும், செக்ஸி லேடியும் சன் டிவிக்காரர்களின் உபயத்தால் மகா மெகா ஹிட்டாகப் போவது உறுதி.
கடைசி காட்சியில் பாக்யராஜ் தன் வழக்கமான கை ஆட்டி கை ஆட்டிப் பேசும்போது தியேட்டரில் சிரிக்கிறார்கள். முடிவு சினிமாத்தனமானதுதான் என்றாலும், வேறு வழியில்லை. நிச்சயமாக பாக்யராஜுக்கு, ரொம்ப நாளைக்குப் பிறகு நிறைவுதரும் படம்.
வசனம் ஓரிரு இடங்களில் க்ளாப்ஸை அள்ளுகிறது. முக்கியமாக கால்பந்துப் போட்டியில் பாக்யராஜ், சக்தி-ப்ரித்விராஜைப் பார்த்துச் சொல்லும் டயலாக்!
நிச்சயமாக ஹிட்டாகக் கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிற படம் - நினைத்தாலே இனிக்கும்.
பி.கு: கேபிள் சங்கருக்கு இன்னொரு கேள்வி: செக்ஸி லேடி பாடலில் வரும் அம்மிணி யாருங்க??? (ஹி.. ஹி... ஹி..)
.