ஆதிமூலகிருஷ்ணன் கூப்பிட்டிருந்தார் ‘ஒரு தொடர்விளையாட்டு இருக்கு.. உங்களைக் கூப்பிட்டிருக்கேன்’ ன்னு. போய்ப்பார்த்தா அது தொடர் விளையாட்டு அல்ல. தொடர் பதிவு. ஆதி இதைத் தொடர்பதிவுன்னே குறிப்பிட்டிருக்காரு! இதை ஏன் எல்லாரும் விளையாட்டுங்கறாங்க-ன்னு யோசிச்சப்போ ‘ஒருவேளை பிடிக்காதவங்க்கிட்டேர்ந்து ஆட்டோ வந்தா ‘ஹி..ஹி.. ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க’ன்னு சொல்லித் தப்பிச்சுக்கறதுக்காகன்னு நெனைக்கறேன். நம்மதானே இந்தமாதிரியெல்லாம் பயப்படுவோம், மாதவராஜ் சாரெல்லாம் இந்த மாதிரி எத்தனை ஆட்டோ பார்த்திருப்பாரு.. அவரும் இதை விளையாட்டுன்னு ஏன் குறிப்பிட்டாருன்னா ஒருவேளை அவரே குறிப்பிட்ட மாதிரி குழந்தைத்தனமா யோசிக்கறதாலகூட இருக்கலாம். குழந்தைத்தனமானது எல்லாமே விளையாட்டுதானே!
ம்ம்..எப்படியோ ஒரு பாரா கடத்தியாச்சு.. இந்த மாதிரி ஏதாவது கிறுக்கீட்டே வந்து, டக்னு PASSன்னு இந்தப் பதிவைத் தள்ளிவிட முடியாதான்னு யோசிக்கறேன். என்னாத்துக்கு பிடிக்காதவங்க இவங்கன்னு சொல்லி ஒரு சிலர்கிட்ட வாங்கிக்கட்டிக்கணும்னு தோணுது. ஆனா ஆதி தெளிவா நாளைக்குப் பதிவு போடலைன்னா அப்பறம் பேச்சு வார்த்தையே கிடையாதுன்னுட்டாரு. அதுனால என்ன சல்ஜாப்பு சொன்னாலும் எழுதித்தான் தீரணும்...
இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
என் பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)
1.அரசியல் தலைவர் (யாருங்க எடுத்த ஒடனே இந்தக் கேள்வியைக் கொண்டு வந்தது..? பாருங்க.. கைகாலெல்லாம் ஒதறுது.. ச்சே...)
பிடித்தவர் : நல்லகண்ணு. பிடிக்காதவர்: விஜய.டி.ராஜேந்தர்
2.எழுத்தாளர்
பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன் பிடிக்காதவர் : அனுராதா ரமணன்
3.கவிஞர்
பிடித்தவர் : வாலி பிடிக்காதவர் : ரமேஷ்வைத்யா
4.இயக்குனர்
பிடித்தவர் : கே.எஸ்.ரவிகுமார் பிடிக்காதவர் : பேரரசு (இதுல விக்ரமனுக்கும் இவருக்கும் பெரும் போட்டியே நடந்தது. .000001 மார்க்குல இவரு லிஸ்ட்ல வந்துட்டாரு!)
5.நடிகர்
பிடித்தவர் : ரஜினிகாந்த் பிடிக்காதவர் : ஸ்ரீகாந்த்
6.நடிகை
பிடித்தவர் : நயன்தாரா பிடிக்காதவர் : ஓய்.விஜயா
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா பிடிக்காதவர் : எஸ்.ஏ.ராஜ்குமார் (ல...ல..ல.லா...)
8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி ப்ராடக்ஸ் சாந்தி துரைசாமி பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் ராஜரத்தினம் (வாடிக்கையாளர்களை மதிக்காமைக்கு)
9. அரசு அதிகாரி
பிடித்தவர் : கலெக்டர். ராதாகிருஷ்ணன் பிடிக்காதவர் : வால்டர்.தேவாரம்
10. சின்னத்திரை நட்சத்திரம்
பிடித்தவர் : அனுஹாசன் பிடிக்காதவர் : பூஜா (எப்பவுமே பபுள்கம்மை மென்னுகிட்டே திரிவாங்களே அதுனாலயே பிடிக்காது)
இதைத் தொடர நான் அழைப்பது:
1. இனியவன் உலகநாதன்
2. துக்ளக் மகேஷ்
3. நர்சிம்
4. கார்க்கி
5. முரளிகுமார் பத்மநாபன்
.