Showing posts with label குசும்பு. Show all posts
Showing posts with label குசும்பு. Show all posts

Sunday, September 7, 2008

குசும்பனுக்காக ஒரு ‘கும்மி’ப் பதிவு!

”யோவ்... உன்னை யாரு சீரியஸ் மேட்டர் எல்லாம் எழுதச் சொன்னாங்க? ஒழுங்கா இருக்க முடியாதா” என்று நான் இருக்கும் 8-வது வார்டு மெம்பர் முதல் ஒபாமா வரை பல பக்கங்களிலிருந்தும் ஓயாத தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறைக்கு செல்ஃபோனின் அளவற்ற பயன்பாடும் ஒரு காரணம் என்று சொல்லித் தொலைத்து விட்டதால், எங்கே நான் அடிக்கடி ஃபோன் பேசுவதை ஃபோட்டோ எடுத்து பதிவாகப் போட்டுவிடுவார்களோ என்று பயந்து ஃபோனையே எடுப்பதில்லை!

அதனால், மின்னஞ்சல் மூலமும் சூப்பர் பதிவு, இது உனக்குத் தேவையாடா, அருமையாகக் கேட்டுள்ளீர்கள், எதுக்கு இந்த வேலை என்று பாராட்டுக்கள் குவிந்து இன்பாக்ஸ் முதன் முதலில் காதலிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவனின் அருகிலுள்ள குப்பைத் தொட்டி மாதிரி நிறைந்துவிட்டது!

ஆகவே.. இந்த கும்மிப் பதிவை எழுதி, அதை கும்மியடிப்போர் சங்கத் தலைவர், பின்னூட்ட சுனாமி, கேள்வியின் நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்தப் பதிவு கும்மிப் பதிவல்ல என்று யாரும் சொல்ல முடியாது.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கும்மி:-


கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது.


(நன்றி: கணேஷ்பீடியா... ச்சே ஸாரி, விக்கிபீடியா)
.
.
.
.
.
.
.
.
.
.
இனி வலைப்பதிவுக் கும்மி:-



கும்மி பலர் கூடி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடும் ஒருவகைக் கூத்து அல்லது லொள்ளு. இது வலையுலகக் காலம் தொட்டு வரும் ஒரு குசும்பன் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் மாற்றி மாற்றி சம்பந்தமில்லாமல் பின்னூட்டிக்கொண்டோ, அல்லது இருவர் மட்டும் சரிசமமாக பின்னூட்டிக்கொண்டோ வரும்போது பதிவுக்குத் தகாதவாறு தன் பின்னூட்டத்தைத் தட்டி பதிவு எழுதினவரின் மூளையையும்(இருந்தால்), கையையும், மனசையும் அசைத்து, இனிமேல் அவனை எழுதவே விடச் செய்யாமலிருக்கக் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வலையுலகம் முழுவதும் கும்மி வழக்கில் உள்ளது.

************************************************8

ஒரு வேண்டுகோள் & அறிவிப்பு:-



”பின்னோட்டங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பது ஒரு பின்னோட்டம் இட்டவர்களுக்கு செய்கிற ஒரு basic respect ஆக உங்களுக்கு தோன்ற வில்லையா ?”

இப்படி ஒரு அன்பர் மின்னஞ்சல் மூலமாகக் கேட்டிருக்கிறார். (அவர் பின்னோட்டம் என்றுதான் சொல்லியிருந்தார்.)

ஒரு வாரமாக நான் அலுவலக வேலையாக அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும், கிராமங்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியை ஆரம்பித்து வைத்தால் எனக்கு மகிழ்வைத் தருமென்பதால் சுய ஆர்வத்தில் அதைச் செய்கிறேன். நாளையோ, மறுநாளோ பதிவில் சொல்கிறேன். என்னை அழைத்துப் பேசிய சில நண்பர்களுக்கும் அது தெரியும். அதனாலதான் இணையம் பக்கம் வந்து பதில் கொடுக்க முடியவில்லை. என்னைப் புரிந்துகொண்ட எனது லட்சக்கணக்கான வாசகர்களுக்கு... (ஐயோ, குசும்பா அடிக்காதப்பா... சரி.. சரி..) என்னைப் புரிந்து கொண்டிருக்கும் அந்த 39 பேருக்கு அது தெரியும். இருந்தாலும் மேலே உள்ளது போல கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.

அதேபோல ஞாயிறு பதிவு போட்டபின், அந்த தினம் குடும்பத்துக்க்காக மட்டுமே. முடிந்தால் மட்டுமே வந்து பதில் சொல்ல முடியும்.

ஆகவே, தயங்காமல், தப்பா நெனைக்காமல் கும்மிகளைத் தொடரலாம்!