Tuesday, July 30, 2013

விளம்பரங்களிலிருந்து நான் கற்றுக் கொண்டவை


சிகப்பாய் இருப்பதே சிறப்பு.

நற்குணம், தீய பழக்கங்களின்மை, ஒழுக்கம் இவற்றையெல்லாம் விட நூறு ரூபாய் பெர்ஃப்யூம் ஆண்களுக்கு அவசியம்.

பெண்கள் அனைவரும் ஆண்களால் கவரப்படுவதற்கும், ஆண்களைக் கவர்வதற்காகவுமே படைக்கப்பட்டவர்கள்.

இரயிலில் தலைவலி வந்தால், உடன் பயணிக்கும் ஆண்ட்டி உதவுவார்.

நாட்டில், இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் உபயோகித்தே பயணிக்கின்றனர்.

ஷாம்பூ உபயோகித்தால் முடி உதிரவே உதிராது.

டூத்பேஸ்ட், டிடர்ஜெண்ட் ஆகியவைகளை முறையாக ஆராய்ச்சிக்கூடத்தில் போட்டி ப்ராண்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தியாவின் டெண்டிஸ்டுகளுக்கு டூத்பேஸ்ட்டை பரிந்துரைப்பதுதான் தலையாய பணி.

வெள்ளை சட்டை வாங்குபவர்கள் அதைத் டிடர்ஜெண்ட் பவுடர் மூலம் துவைத்து துவைத்து புதியது போல வெண்மையாக்கிக் கொள்ளலாம். புதியது எடுக்கவே தேவையில்லை.

வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளை விட, சில குறிப்பிட்ட சோப் உபயோகிக்காததால் வரும் ‘ப்ராப்ளம்’கள் நம் மன உறுதியைக் குறைக்கும்.

எவரது உடையிலும் எந்தக் கறையுமே இருக்காது. நாட்டில் விற்கப்படும் டிடர்ஜெண்ட்கள் எல்லாமே, எல்லாக் கறையையும் எடுக்கவல்லது.

பெண்களின் தன்னம்பிக்கையின்மைக்கும், சமூகத்தில் – பணியிடத்தில் அவர்கள் பின்தங்கி இருப்பதற்கும் அவர்களின் மாதவிடாய்ப் பிரச்சினையே காரணம்.

நாம் குடிக்கின்ற எந்த நீரும் பாதுகாப்பானதல்ல.

திரைக்கு வரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். எல்லாப் படங்களுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றன.

எந்தப் பாலிசியையும் வற்புறுத்தலின் பேரிலோ, மூளைச் சலவை செய்யப்பட்டோ வாடிக்கையாளார் எடுப்பதில்லை.

குளிர்பானங்கள் குடித்தால் தாகம் தீருமா எனத் தெரியாது. ஆனால் பெண்ணை மயக்கலாம், டான்ஸ் ஆடலாம்.

நைட்டி போடும் பெண்கள் குடும்பப் பெண்கள்.

ஆண்களின் வீரம் ஜட்டி, பனியனிலும் – மரியாதை வேட்டியிலும் இருக்கிறது.

பேக்பைப்பர், கிங் ஃபிஷர் போன்றவை தண்ணீர் (அல்லது) சோடா தயாரிக்கும் நிறுவனங்கள்.

நகைக்கடைகள் எவற்றிற்கும் லாபநோக்கே இல்லை. வாங்கிய விலைக்கே வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர்.

....

11 comments:

துளசி கோபால் said...

நல்ல அவதானிப்பு.

இனிய பாராட்டுகள்.

maithriim said...

இந்தியாவில் அனைத்து ஆண்களும் பெண்களும் அழகு.
குழந்தைகள் எல்லாம் சொன்னதைக் கேட்கும், கொடுத்ததை சாப்பிடும்.

இந்த ரெண்டையும் சேத்துக்கங்க :-)

amas32

Unknown said...

நிஜங்களின் அணிவகுப்பு!

"ஆண்களின் வீரம் ஜட்டி, பனியனிலும் – மரியாதை வேட்டியிலும் இருக்கிறது."

"இந்தியாவின் டெண்டிஸ்டுகளுக்கு டூத்பேஸ்ட்டை பரிந்துரைப்பதுதான் தலையாய பணி"

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததற்கு நன்றி.

Vijayashankar said...

பரிசல்காரன் ராக்ஸ்!

Anonymous said...

Diary milk சாக்லேட்டை நக்கி நக்கிதான் சாப்பிட வேண்டும்.

சக்தி முருகேசன் said...

சூப்பர் மச்சி..உங்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்...வாழ்துகள்...

நாய் நக்ஸ் said...

பரிசல் ராக்ஸ் தான்....ஆனா....இந்த பதிவில் இருந்து என்ன தெரியுதுன்னா---பரிசல் ரொம்ப வெட்டியா இருக்காரோ-ன்னு....????

மாதேவி said...

நன்றாகச்சொன்னீர்கள்.

ஆடித்தள்ளுபடி :)))

இரசிகை said...

:))

டிபிஆர்.ஜோசப் said...

இதுல நிறைய விஷயம் உண்மைதாங்க. ஆனாலும் அட்வர்ட்டைஸ் பண்ணாத்தான எல்லாருக்கும் தெரியும்? அதான் பண்றாங்க:))

காற்றில் எந்தன் கீதம் said...

உண்மையில் இவர்கள் தொல்லை பெரும் தொல்லை தான்.
"குடும்ப பெண்கள் நைட்டி அனிவர்கள் " :)
நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிரிங்கன்னு தெரியுது...

நானும் புலம்பினேன்
http://sutharsshini.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D