Sunday, May 8, 2011

கணவனை பூரிக்கட்டையுடன் மனைவி முறைக்கும் 10 தருணங்கள்




எல்லாரும் வெளில கிளம்பறோம். நான் மட்டும் உட்கார்ந்து டிவி பார்த்துட்டிருப்பேன். அல்லது கம்ப்யூட்டர்ல உட்கார்ந்திருப்பேன்… அப்ப-


ஷாப்பிங் போவோம். அவங்க ஷாப்பிங் பண்றப்ப நான் அவங்க கூட இல்லாம –ஃபோன்ல இருப்பேன், அல்லது கொஞ்சம் தள்ளி வேற பக்கம் இருப்பேன். அப்ப –


செருப்பு வாங்கப் போவாங்க. (உலகத்துலயே கணவர்கள் சந்திக்கறதுல தர்மசங்கடமான அல்லது கஷ்டமான காரியங்களைப் பட்டியலிட்டா கண்டிப்பா இந்த மனைவிக்கு – அவங்க கூட போய் - செருப்பு வாங்கறது டாப் டென்ல வரும்.) செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணீட்டிருப்பாங்க. ஒரு கட்டத்துல நாம பொறுமை இல்லாம ’கிளம்பலாமே’ன்னு சொல்லீடுவேன். அப்ப –


மதியம் சாப்பாடு கொண்டு போய் சாப்பிட்டிருக்க மாட்டேன். அன்னைக்கு ஏதாவது ஹெட் ஆஃபீஸ் மீட்டிங், அது இதுன்னு சாப்பாடை வெளில சாப்பிட்டிருப்பேன். வீட்டுக்கு வந்து ’சாம்பார் எப்படி இருந்துச்சு’ கேட்கறப்ப வழிஞ்சுட்டே ‘என் அசிஸ்டெண்ட் சாப்பிட்டான்’ம்பேன். அப்ப –


சீரியல் இடைவேளைல சானல் மாத்துவேன். க்றிஸ் கெய்லோ, வல்தாட்டியோ விளாசீட்டிருப்பாங்க. அந்த சுவாரஸ்யத்துல சீரியல மறந்துடுவேன். கொஞ்ச நேரம் கழிச்சு ‘சன் டி.வி வைங்க’ம்பாங்க. வெச்சா ‘இயக்கம்’ன்னு டைரக்டர் பேர் கருப்பு ப்ளாக்ரவுண்ட்ல வந்து இன்னைக்கு எபிசோட் முடிஞ்சுடுச்சுடான்னு சொல்லும். அப்ப –


இந்த ஞாயித்துக்கிழமை எதாவது ப்ரோக்ராம் இருக்கான்னு கேட்பாங்க. நானும் இல்லைம்பேன். அவங்க கேட்கறப்ப இருக்காதுதான். நான் சொன்னத நம்பி அவங்க எதாவது ப்ளான் பண்ணி வெச்சிருப்பாங்க. நம்ம நேரத்துக்கு அதுக்கப்பறம் எதாவது வேலை வந்து தொலைக்கும். சனிக்கிழமைதான் அது தெரியவரும். வந்து சொல்லுவேன். அப்ப –


சினிமா பார்த்துட்டிருப்போம். நமீதா டான்ஸோ, சீனோ ஓடிட்டிருக்கும். படத்துக்குள்ள முழுகிப் பார்த்திட்டிருப்பேன். யாரோ பார்க்கறாப்ல இருக்கேன்னு திரும்பிப் பார்த்தா அவங்க என்னைப் பார்த்துட்டிருப்பாங்க. அப்ப –


இதிது வாங்கீட்டு வாங்க, வந்து கணக்கு குடுங்கன்னு சொல்ல்ல்ல்லித்தான் அனுப்புவாங்க. நானும் எல்லாம் வாங்கிடுவேன். வந்து எல்லாத்தையும் பரப்பி வெச்சுட்டு கணக்கு கேட்பாங்க. எப்படிப் பார்த்தாலும் ஒரு முன்னூறுக்கோ, ஐநூறுக்கோ கணக்கு உதைக்கும். அப்ப –


இந்த சட்டைல நீங்க அழகா இருப்பீங்கன்னு சொல்லிச் சொல்லி அனுப்புவாங்க. நாலாவதோ அஞ்சாவதோ வாட்டி அதப் போட்டுட்டு போய்ட்டு வர்றப்ப அதுல கிழிசலோ, காஃபிக் கறையோ பண்ணிட்டு வருவேன். சத்தமில்லாம கழட்டிப் போட்டுடுவேன். அடுத்த நாள் துவைக்கறப்ப அதை எடுத்துட்டு என் முன்னாடி வந்து நிப்பாங்க.. அப்ப –


ஏதாவது முக்கியமான விஷயத்தை செய்யச் சொல்லி, சொல்லிருப்பாங்க. நான் வழக்கம்போல மறந்துடுவேன். வந்து அவங்க கேட்கறப்போ - நீ ஏன் ஞாபகப்படுத்தல-ம்பேன். அப்ப -


ஆமா - அப்ப உங்க வீட்ல?

.

25 comments:

சுசி said...

பத்தே பத்துத் தானா?? எனக்கென்னமோ இத நீங்க தொடரா எழுதலாம்னு தோணுது கிருஷ்ணா :))

சுதா SJ said...

ஹிஹி
நான் சின்ன பையன் அண்ணா
அசுக்கு புசுக்கு இன்னும் கலியாணம் ஆகல்ல இல்ல

Unknown said...

ஆமாங்க ஆமா.....

iniyavan said...

எழுத வேற மேட்டரே கிடைக்கலியா பரிசல்? இந்த மாதிரி எல்லாம் எழுதி உங்க எழுத்து திறமையை வேஸ்ட் பண்ணறீங்கன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

பத்து குத்துன்னு ஆரம்பிச்சதும் நீங்க தான். இப்ப 10 பூரிக்கட்டை தருணங்களும் ஆரம்பிச்சிருக்கீங்க. ஒரு ரவுண்டு எல்லோரும் எழுதுவாங்கனு நினைக்கிறேன். எனக்கு ஜாலி. ஹி ஹி.

ஷர்புதீன் said...

same blood!

a said...

//
எல்லாரும் வெளில கிளம்பறோம். நான் மட்டும் உட்கார்ந்து டிவி பார்த்துட்டிருப்பேன்
//
லுங்கி பனியனோடு...

//
இன்னைக்கு எபிசோட் முடிஞ்சுடுச்சுடான்னு சொல்லும்.
//
மவனே உனக்கு எபிசோட் ஆரம்பமாயிடுச்சுடான்னு சொல்லும்.

S Maharajan said...

அண்ணே சூபரு!
மதினி கிட்டே நெறய
வாங்குவீங்க போல...

அமுதா கிருஷ்ணா said...

ட்சே..பத்து தானா? ஆதிமூலகிருஷ்ணன் கிட்ட ஐடியா கேட்டு இருக்கலாமே??

Unknown said...

ஹஹாஹா...
நிறைய அனுபவம் இருக்கும் போல உங்களுக்கு .படிக்க படிக்க சிரிப்பை அடக்க முடியாமல்...இன்னமும் நினைச்சு நினைச்சு முடியலை சாமி... உங்கள் மனைவி குடுத்து வச்சவுங்க... எது சொன்னாலும் இப்படி சிரிக்கவச்சே சமாளிசுடுவீங்கன்னு நினைக்கிறேன்.

சமுத்ரா said...

:)

நிழற்குடை said...

ஆகா! எங்க வீடு‍ தேவலாம் போலருக்கே!

Hai said...

கொடுமைதான்.

அவர்கள் எல்லாம் ஷாப்பிங் போகையிலும் செருப்பு வங்க போகையிலும் சினிமா பார்க்க போகையிலும் பூரிக்கட்டையுடன் பயனிக்கைராகள் என்பதனை விடவும் வேறென்ன கொடுமை ஆண் வர்க்கத்திற்கு உள்ளது சொல்லுங்கள்.

விக்னேஷ்வரி said...

இங்கே வந்து பாவம் மாதிரி நடிக்கறீங்க. வீட்ல கேட்டா தான் தெரியும் யாரு அடி வாங்கறதுன்னு..

தராசு said...

ரைட்டு, மறுபடியும் பத்தா????

கலக்குங்க.

தராசு said...

எங்க தல உண்மையை சொன்னாலும் நடிக்கறீங்க என்று குற்றம் சுமத்தும் பெண்ணாதிக்க வாதிகளை ரங்கமணிகள் அனைவரும் மொத்தமாக கண்டிக்கிறோம்.

சின்ன கண்ணன் said...

எனக்கு என்னமோ அப்படி தெரியலேயே//////////
உங்க கிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர் பார்கிறேன் பிரதர்./////////////

இராஜராஜேஸ்வரி said...

பூரிக்கட்டைகள் மொத்தமாக ஹோல்சேலில் வாங்குவீர்களா??
அல்லது வெறும் மிரட்டல் மட்டும் தானா??

R. Gopi said...

அடி வாங்கின வீடியோ, போட்டோ எதுவும் இருந்தா போடவும். நாங்க அதை ஒரு நாலு பேருக்கு அனுப்பி வெச்சு உங்க புகழ் பரப்புவோம்:-)

Rajan said...

பதினொண்ணாவதா சேத்துக்குங்க..
இந்த பதிவை படிக்கும் போது..

Vadivel M said...

ஒய் பிளட்! சேம் பிளட்!

கொள்ளென கொடுத்தல் said...

தனிக்குடித்தனம் இருக்கிற உங்களுக்கே இவ்ளோன்னா அப்பா அம்மாவோட கூட்டு குடும்பத்திலே இருக்கிற எனக்கு எவ்ளோ 'பூரிக்கட்டைகள்' இருக்கும். நானெல்லாம் ஒரு என்சைக்ளோபீடியா எழுதலாம்க (உங்க அளவுக்கு தைரியம் இருந்தா...)

கொள்ளென கொடுத்தல் said...

தனிக்குடித்தனம் இருக்கிற உங்களுக்கே இவ்ளோன்னா அப்பா அம்மாவோட கூட்டு குடும்பத்திலே இருக்கிற எனக்கு எவ்ளோ 'பூரிக்கட்டைகள்' இருக்கும். நானெல்லாம் ஒரு என்சைக்ளோபீடியா எழுதலாம்க (உங்க அளவுக்கு தைரியம் இருந்தா...)

maithriim said...

என்ன முறைச்சு என்ன, அப்படியே தானே இருக்கீங்க? மாறலையே.(including my husband) :))
amas32

கொங்கு நாடோடி said...

செருப்பு வாங்கப் போவாங்க. (உலகத்துலயே கணவர்கள் சந்திக்கறதுல தர்மசங்கடமான அல்லது கஷ்டமான காரியங்களைப் பட்டியலிட்டா கண்டிப்பா இந்த மனைவிக்கு – அவங்க கூட போய் - செருப்பு வாங்கறது டாப் டென்ல வரும்.) செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணி, செலக்ட் பண்ணீட்டிருப்பாங்க. ஒரு கட்டத்துல நாம பொறுமை இல்லாம ’கிளம்பலாமே’ன்னு சொல்லீடுவேன்

கண்டிப்பாக... அதுவும் மாசத்துக்கு ஒண்ணுனு வாங்கினா?