Wednesday, February 17, 2010

அன்பெனும் அதி பயங்கர ஆயுதம்



(நண்பர் காவேரி கணேஷ் அன்பாடை போர்த்தியபோது)


ப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். சத்யசாய்பாபா சமிதியின் சார்பாக எங்கள் ஊரின் எல்லாப் பள்ளி மாணவர்களையும் இணைத்து எங்கள் பள்ளியில் சின்னச் சின்னதாய் பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, க்விஸ் என்று பல வகையான போட்டிகள். எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டேன். அந்த வார இறுதியில், ஒரு ஞாயிறில் கல்யாணமண்டபம் ஒன்றில் முடிவு அறிவிப்பு. பெற்றோருடன் எல்லா மாணவர்களும் கலந்து கொண்டோம்.

கட்டுரைப் போட்டி மூன்றாம் பரிசு என்று அறிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இரண்டாம் பரிசு.. முதல் பரிசு என்று என் பெயரைச் சொல்கிறார்கள். குதூகலமாய் மேடைக்கு ஓடி பரிசைப் பெற்றுக் கொண்டு, அதே வேகத்துடன் ஓடி வந்து அந்தப் பரிசை என் அம்மாவிடம் கொடுக்கிறேன். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை மின்னல். அடுத்த போட்டியிலும் முதல் பரிசு எனக்கே.. அதற்கடுத்த போட்டியிலும்… அம்மாவின் அருகிலிருந்த ஒருவர் ‘பேசாம உங்க பையனை மேடையிலே விட்டுடுங்க.. எல்லாம் அவன்தான் வாங்கீட்டு வருவான் போல’ என்கிறார். இப்படி எட்டு போட்டிகளில் முதல் பரிசை வாங்கிக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். இறுதியில் ஆகச் சிறந்த மாணவருக்கான கேடயம் உட்பட.

அன்றைக்கு என் அம்மாவின் முகத்தில் பார்த்த அதே மகிழ்ச்சியை ஞாயிறன்று எங்கள் புத்தக வெளியீட்டின் போது வந்திருந்த ஒவ்வொரு பதிவர்களின் முகத்திலும் காணமுடிந்தது. அன்பு ஒரு அதிபயங்கரமான ஆயுதம்தான்.

ஞாயிறு அதிகாலை சென்று இறங்கியதும் எங்களுக்காக காத்திருந்த அப்துல்லா, கார்க்கி, கேபிள் சங்கர், நர்சிம் ஆகியோரில் ஆரம்பித்தது அந்த ஆயுதத்தாலான வன்முறை. அதற்குப் பிறகு வீடு வந்து சேரும் போது கையசைத்துப் பிரிந்த சௌந்தர் வரை எல்லாரும் அந்த ஆயுதத்தால் குத்திக் கிழித்து இரண்டு நாட்களாக எதையும் எழுத இயலாமல் செய்து விட்டார்கள்.

ஒரு கால வரையறை கொடுத்து இதைப் பற்றி எழுது என்று சொன்னால் என்னால் அதை செய்ய இயலாமல் போகும். ஆனாலும் சவாலாக எடுத்துக் கொண்டு அதனை எப்படியேனும் எழுதி முடித்து விடுவேன்.

இந்தப் பயணத்தை, இவர்களின் அன்பை எழுத்தில் எப்படிக் கொண்டுவர என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். இறுதியாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.. நண்பர்களே உங்கள் அன்பின்முன் நான் தோற்று நிற்கிறேன்.

*****************************************

ஞாயிறு மாலை கே.கே. நகர் சென்று சேர்ந்தபோது தந்தைக்குரிய வாஞ்சையோடு என்னை வரவேற்றார் டி.வி.ராதாகிருஷ்ணன். ‘பரிசலு’ என்று ட்ரேட் மார்க் அழைப்போடு உண்மைத்தமிழன்!

எனக்கு உடனேயே உள்ளே நடந்து போக ஆவலாய் இருந்தது. அதுவரை புத்தகத்தை கண்ணிலேயே பார்க்கவில்லை நான்! ஓடிச் சென்று ஸ்டாலில் அடுக்கி வைத்திருந்த என் புத்தகத்தை கையில் அள்ளி எடுத்துப் பார்த்தேன். மகிழ்வாய் இருந்தது.

விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்து காத்திருந்தார்கள் பதிவுலக நண்பர்கள். சற்று நேரத்தில் எந்த பந்தாவும் இல்லாமல் அடக்கமாக வந்தமர்ந்தார்
பிரமிட் நடராஜன். அவர் வருவதற்கு சற்று முன் மைக் பிடித்த சுரேகா அருமையாக தொகுத்து, நேரமாவதை வந்திருந்தவர்கள் உணராமல் செய்தார். இவருக்கு ஸ்பெஷல் நன்றி.. (எதற்கு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)


தொடர்ந்து அகநாழிகை வாசுதேவன், அஜயன்பாலா சித்தார்த் ஆகியோர் வர விழா களை கட்டியது. மூவருமாகவே எங்கள் இருவரது புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.







பிரமிட் நடராஜனின் பேச்சு நெகிழ்வாய் இருந்தது. கேபிள் சங்கர் குடும்பத்துக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மிக அழகாய்ச் சொன்னார். சென்னை வந்து அவர் சங்கரின் தந்தை உதவியில்தான் தங்கினாராம். கேபிள் சங்கரின் தந்தை திரைத்துறையில் சாதிக்க மிகுந்த ஆவலாய் இருந்தாரென்றும் அதை சங்கர் மேல் நடத்திச் செல்கிறார் என்றும் சொன்னார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வந்தார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். வலைப்பதிவுகளை திரைத்துறையினர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கினார். படத்தின் வெற்றிக்கு பதிவர்களும் காரணம். இங்கிருக்கும் ஒவ்வொரு பதிவரும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதியாய்க் காண்கிறேன் என்றார்.

அதன்பிறகு அஜயன் பாலா சித்தார்த் பேசினார். எழுத்துத் துறையில் அவரது பிரவேசம், அதற்கான பிரயத்தனங்களில் ஆரம்பித்தவர் கேபிளின் இரு கதைகளை வெகுவாக அலசி ஆராய்ந்தார்.

பிறகு அகநாழிகை வாசுதேவன், பதிப்பாளர்கள் எவ்வளவு சிரமங்களுக்கிடையில் புத்தகம் வெளியிடுகிறார்கள் என்று சொல்லி, அவர்களை ஊக்குவிக்கக் கேட்டுக் கொண்டார். அதன்பிறகு எனது ஏற்புரை, சங்கர் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இரண்டு நாட்களாக நண்பர்களின் அன்பையும், கவனிப்பையும் எண்ணி நெகிழ்ந்து போயிருக்கிறேன். அதனால்தான் சரிவர எழுத உட்காரவேயில்லை.


அடுத்த பதிவில் சென்னைப் பயணம் & விழாத்துளிகளை எழுதுகிறேன்...

.

41 comments:

வெள்ளிநிலா said...

wishes parisal. write more and more...

நீர்ப்புலி said...

வாழ்த்துக்கள் பரிசல்!

பதிவர்களின் அன்பு மழையை விரைவில் ஊரறிய செய்யுங்கள்.
-தினா

சுரேகா.. said...

பரிசல்..நீங்கள் எதைப்பெற்றீர்களோ அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது...


அப்படித்தானே அப்துல்லா, கார்க்கி, நர்சிம் ?

:)

anujanya said...

சென்னையில் வசிக்காததின் உச்சகட்ட வருத்தம் ஏற்பட்ட நாட்களுள் அந்த ஞாயிறும் ஒன்று. Anyways, ரொம்ப ரொம்ப மகிழ்வாகவும், நெகிழ்வாகவும் உணர்கிறேன். இன்னும் நீங்கள் இருவரும் அதிக உயரங்களைத் தொட என் வாழ்த்துகள்.

அனுஜன்யா

புலவன் புலிகேசி said...

விரைவில் புத்தக விமர்சனம் இருக்கு தல..படிச்சிட்டே இருக்கேன்...

ICANAVENUE said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பரிசல்!! நீங்கள் மென்மேலும் வெற்றியடைய கடவுளை வேண்டுகிறேன்!!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே. அப்படியே உட்கார்ந்துவிடாதீர்கள், இன்னும் ரொம்ப தூரம் போகணும் தல.

எறும்பு said...

என்ன ஒண்ணு உங்கள பாக்கணும்னு நினச்சுட்டு இருந்தேன்..இப்ப முடியலை... இருந்தாலும் சந்தோசம்.. அடுத்த புத்தகத்துக்கு சீக்கிரம் தயாராகுங்க..
:)

எறும்பு said...

Miles to go...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் அதிக உயரங்களைத் தொட என் வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

@ ஷர்புதீன்

நன்றி

@ தினா

இடதுகையறியச்செய்யா வள்ளல்கள் அவர்கள்!

@ சுரேகா

உங்களை ‘உன்னை’ என்று அழைக்கத் தோன்றுகிறது. அழைக்கட்டுமா? :-)

@ அனுஜன்யா

நன்றி!

@ புலவன் புலிகேசி

வெய்ட்டிங்..

@ Icanavenue

நன்றி நண்பரே... (ரொம்ப நாளாச்சு...)

@ செ.சரவணகுமார்

நிச்சயமா..

@ எறும்பு

நன்றிங்க...

@ டி வி ஆர்

நன்றிங்க ஐயா

@ சரவணகுமரன்

நன்றிகள்...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

vaalthukkal parisal

பரிசல்காரன் said...

@ நாய்க்குட்டி மனசு

மிக்க நன்றி உங்கள் தொடர்ச்சியான வாழ்த்துகளுக்கு...

butterfly Surya said...

இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துகள் கிருஷ்ணா.

Priya said...

வாழ்த்துக்கள்!!!

அரவிந்தன் said...

அடுத்து என்ன எதாவது திரைப்படத்திற்கு வசனமா அல்லது தொலைக்காட்சி தொடரா..?

புத்தக வெளியீடு விழா எதாவதொ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளதா..?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Romeoboy said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே

Prabhu said...

நீங்களூம் விரைவில் 10 புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள் :)

க ரா said...

உங்களிடமிருந்து இன்னும் பல புத்தகங்களையும் எதிர்பார்கிறோம். வாழ்த்துக்கள் பரிசல்.

Lakshmi Narasimhan said...

i may be new to these blogs..but im really convinced that im following a write(right)r's blog....

Congragulations !!!!

பா.ராஜாராம் said...

சுரேகா.. said..
பரிசல்..நீங்கள் எதைப்பெற்றீர்களோ அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது...

ஆம் பரிசல்,கேபில்ஜி,வாழ்த்துக்கள்!

iniyavan said...

இன்னும் நீங்கள் பெரிய ஆளாக வரவேண்டும் பரிசல்.

Venkat M said...

Hi Parisal... Got the courier yesterday and read ur book yesterday night itself... very nice stories... All the best for the next one.

சுரேகா.. said...

சரிடா..கட்டாயம் அழை!! :)

பார்த்தாயா! நான் முந்திக்கொண்டுவிட்டேன்.! :)

எம்.எம்.அப்துல்லா said...

பரிசல்..நீங்கள் எதைப்பெற்றீர்களோ அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது...


அப்படித்தானே அப்துல்லா, கார்க்கி, நர்சிம் ?

:)

//


101%

:)

எம்.எம்.அப்துல்லா said...

சுரேகாண்ணே,

பரிசல் வர்றாரு. நம்ப புதுக்கோட்டை பிளாக்கர்கள் சங்கம்தான் கவனிச்சு அனுப்பனும்னு உத்தரவு போட்டீங்க.செஞ்சாச்சு. சங்கத் தலைவர்ங்குற முறையில நீங்க சிறப்பா செயல்பட்ட எங்களுக்கு என்ன செய்யப் போறீங்க???

பாபு said...

நீங்கள் அதிக உயரங்களைத் தொட என் வாழ்த்துகள்

அகநாழிகை said...

மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் பரிசல்.

Thenammai Lakshmanan said...

//சுரேகா.. said பரிசல்..நீங்கள் எதைப்பெற்றீர்களோ அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது...//

புலவன் புலிகேசி said...
விரைவில் புத்தக விமர்சனம் இருக்கு தல..படிச்சிட்டே இருக்கேன்//

ரிப்பீட்டேய்ய் ...

பரிசல் விரைவில் நானும் உங்க புத்தக விமர்சனம் போடப் போறேன்

குழந்தையைத்தொட்ட மன நிலை உணரக்கிடைத்தது நீங்க உங்க புத்தகத்தை ஓடிச்சென்று தொட்டது

சுரேகா.. said...

@அப்துல்லா

பரிசல் வச்சிருக்கிற அதிபயங்கர ஆயுதத்தை எடுத்து வூடு கட்டி விளையாடிட்டீங்களாமே!

பத்திரமா வச்சுக்குங்க!
நானும் ஆயுதத்தோட வரேன்!

உலகத்தை எந்த ரெஜிஸ்டர் ஆபீஸில் பதிய முடியும்..? அப்படி முடிந்தால்..அது உங்களுக்குத்தான் அப்துல்லா!

என்னால் அன்பைத்தவிர எதையும் தர இயலாது. ஏனெனில் எல்லாமே நீங்கள் கொடுத்ததுதான்! :)

தராசு said...

வாழ்த்துக்கள் தலைவரே,

இன்னும் எழுதுங்கள். வாழ்த்தக் காத்திருக்கிறோம்.

Paleo God said...

வாழ்த்துகள் நண்பரே ..:))

Guna said...

முதல் படியில் கால் வைத்திருக்கிறீர்கள், சில படிகளுடன் நிறைய பேர் நின்றுவிடுவார்கள் ஆரம்ப உற்ச்சாகம் வடிந்தவுடன். விடாமல் தொடருங்கள். தரமாகவும் இருக்கட்டும். சென்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

M.G.ரவிக்குமார்™..., said...

நிச்சயம் அன்பு ஒரு மிகப் பெரிய ஆயுதமே!.....அடிக்கடி அதன் மூலம் தாக்கவும் வேண்டும் தாக்கப் படவும் வேண்டும்!....முதன் முதலில் உங்களுடன் பேசியது மிக மகிழ்வாய் இருந்தது!....நான் நினைத்தது போலவே உங்கள் குரலுக்கும் உங்களின் முகத்துக்கும் சம்பந்தமே இல்லை!...

திருவாரூர் சரவணா said...

புத்தகத்தை படிச்சுட்டேன். விமர்சனத்தையும் எழுதிட்டேன். (துணிச்சலோட...)

உண்மைத்தமிழன் said...

வாழ்க பரிசலு..!

இன்னும் நிறைய ஆக்கங்கள் இயற்றி பெருமையடைய வாழ்த்துகிறேன்..!

Cable சங்கர் said...

சுரேகா சொன்னதைரிப்பீட்டுகிறேன்

Sanjai Gandhi said...

ரைட்டு

selventhiran said...

யோவ் பொஸ்தகத்தை அனுப்பி வைக்கப் போறீரா இல்லையா?!

ரோஸ்விக் said...

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. :-)

தொடரட்டும் உமது வெற்றிப் பயணம்.

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos