Tuesday, February 23, 2010

ALL IZZ WELL!

ந்த இளம் டாக்டரைச் சுற்றி நான்கைந்து நர்ஸ்கள். ஒரு நர்ஸ் கேட்கிறார்:

“டாக்டர் உங்க ஷர்ட் என்ன ப்ராண்ட்?”

டாக்டர்: “Wrangler”

“ஓ... போன மாசம் பெங்க்ளூர்ல ஒரு கான்ஃப்ரன்ஸ் போனீங்களே.. அங்க எடுத்ததா?”

“இல்ல.. இங்க திருப்பூர்லயே ஷோரூம் இருக்கே....” என்றவர் இன்னொரு நர்ஸிடம் “ஃபோகஸ் லைட்டை கொஞ்சம் லெஃப்டுல திருப்பும்மா” என்கிறார்.

எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நர்ஸ்: “டாக்டர். அவ உங்களைத் திட்டறா” என்கிறார்.

“இல்ல டாக்டர்..” என்று பதறுகிறார் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்.

“ஏய்.. பழிப்புக் காட்டினத பார்த்தேனே நான்” என்கிறார் கோள்மூட்டிய நர்ஸ்.

நான்கு நர்ஸுகளும், ஒரு டாக்டரும் இப்படி ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்த இடம் திருப்பூரில் பிரபல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு. படுக்கையில் இருந்து இந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது நான். போட்டிருந்த மஞ்சள் குர்தா சிகப்பாய் நிறம் மாறியிருக்க, அவர்கள் என் தலையில் இருந்த கிட்டத்தட்ட 10 செ.மீ. நீள வெட்டுக் காயத்தில் தையல் போட்டபடி இருந்தனர்.

*********************************************************

சென்ற சனிக்கிழமை மாலை மூன்று முப்பதுக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. ஒரு ப்ளட் டெஸ்டுக்காக அலுவலகத்திலிருந்து திருப்பூர் சென்று, நேரமாகிவிட்ட பதட்டத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். வரிசையாய் வாகனங்கள். முன்னே ஆட்டோ. அதற்கு முன்னே சுமோ. என்ன காரணத்திற்கோ சுமோ நிறுத்த அதில் ஆட்டோ இடித்து நிறுத்த ஒரு செகண்டில் ஒன்றும் செய்ய முடியாமல் நானும் ஆட்டோவில் இடிக்க என் காரின் பின்னால் யாரோ இடித்த சத்தம்தான் கேட்டது.

“சீட் பெல்ட் போடாம கார் ஓட்டாதீங்க” - அன்றே சொன்னார் அறிஞர் அப்துல்லா! அவருக்கு ஆன அதே மாதிரியான விபத்து. தலை கண்ணாடியில் மோதி தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தேன். யாராவது தம்புராவோடு ‘நாராயணா.. நாராயணா’ என்று சொல்லியபடி புராண காஸ்ட்யூமில் இருக்கிறார்களா என்று . இல்லை. ஓகே... ஆல் ஈஸ் வெல் என்று நினைத்தபடி காருக்குள்ளே தெறித்துப் பறந்த என் அலைபேசியைத் தேடினேன்.


காரின் எல்லா கண்ணாடிகள் வழியாகவும் முகங்கள். “மொதல்ல வெளில வாங்க” என்று கூக்குரல். “எனக்கு ஒண்ணுமில்ல.. பயப்பாடாதீங்க” என்கிறேன். ட்ரைவர் சைட் கதவு திறக்க முடியாதபடிக்கு லாக் ஆகிவிட்டது. இடது புறமாக எழுந்து வெளியே வந்தேன். ரத்தம் அதிக அளவில் கொட்டிக் கொண்டிருந்தது. பார்த்தவர்கள் பதட்டமடைகிறார்கள். “உங்களுக்கு ஒண்ணுமில்ல.. பயப்படாதீங்க” என்கிறார் ஒருவர். ‘இதைத்தாங்க நான் காருக்குள்ளேர்ந்து சொன்னேன்’ என்று மனதில் மட்டும் நினைத்தேன். எங்கிருந்தோ வந்த ஒருவர் என் தலையில் பெரிய துணியால் கட்டி ரத்தத்தை நிறுத்த முயற்சிக்கிறார். கட்டிய வேகத்தில் கம்யூனிஸ்டாகிறது துணியும்.

“காருக்குள்ள வேல்யபிள் திங்க்ஸ் ஏதுமிருக்கா” என்று கேட்கிறார் ஒருவர். உடனே ஓடிச் சென்று பார்த்த ஒருவர் உள்ளே இருந்த கேமராவைத் தூக்கி வ்ந்து என் கையில் கொடுக்கிறார். நான் ‘என் ஃபோன் உள்ள இருக்கு.. எடுத்துக் குடுங்க’ என்கிறேன். அதற்குள் என் நிறுவனத்தின் பெயரைச் சொல்கிறேன். உடனே பலரும் எனக்கு இவரைத் தெரியும்.. அவரைத் தெரியும் என்று அவரவர்கள் ஃபோனிலேயே அழைக்க ஆரம்பிக்கிறார்கள். மனிதம் என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒருவர் “எனக்கு கிருஷ்ணகுமாரைத் தெரியும்” என்றார். “நாந்தாங்க அது” என்றதும்.. “ஐயையோ... ஃபோன்ல பேசிருக்கேன் சார். நாந்தான்..XXXX ”

“ஓஓஒ! ஹலோ க்ளாட் டு மீட் யூ” என்கிறேன் நான். கூட்டம் இன்னும் பதட்டமானது.

எங்கிருந்தோ வந்த ஆம்புலன்சில் ஏறச் சொன்னார்கள். “இல்லைங்க.. எங்க கம்பெனி ஆம்புலன்ஸ் வரும்.. அதுலயே போய்க்கறேன்” என்கிறேன். “வேணாங்க... ப்ளட் லாஸ் அதிகமா இருக்கு. மயக்கம் போட்டுடுவீங்க. இதுல போங்க” என்கிறார்கள். என்னை விட அவர்கள் பதட்டமடைவதையும், வீண் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க எண்ணி அந்த ஆம்புலன்சிலேயே ஏறுகிறேன். ஒருவர் வந்து என் செல்ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். “கூட வரணுமா” என்று கேட்கிறார்கள். “வேணாம்.. நான் நல்லா இருக்கேன்” என்றபடி தனியாளாய் ஆம்புலன்சில் போகிறேன்.

ஆம்புலன்சில் அமர்ந்ததும் வர ஆரம்பித்த அழைப்புகளுக்கு பதில் சொல்லுமுன் முதலில் உமாவை அழைத்து உரத்த உற்சாகமான குரலில் பேசுகிறேன். “பெரிசா ஒண்ணுமில்ல. பயப்படாத. நான் ஹாஸ்பிடல் போய்ட்டிருக்கேன்” என்கிறேன்.

“பெரிசா ஒண்ணுமில்லன்னா எதுக்கு ஹாஸ்பிடல்ல போறீங்க?” என்கிறார் அவர்.

“கேள்வி கேட்கறது ரொம்ப ஈஸி பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா” என்று சிரித்துச் சொல்லியபடி “சரி.. வா நேர்ல பேசுவோம்” என்று வைக்கிறேன். அதற்குள் பல அழைப்புகள். பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன். வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.

மருத்துவமனை வாசலில் இறங்கி அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நடந்து சென்று அமர்கிறேன். பிறகு நடந்ததுதான் பதிவின் முதல் பத்தி!

***********************************************************

டாக்டர் கேட்டார்: “நீங்க ட்ரைவரா இருக்கீங்களா?”

“கார் ஓட்டும்போது எல்லாருமே ட்ரைவராத்தான் இருப்பாங்க டாக்டர். மத்தபடி ஆஃபீஸ்ல நான் ஏ.ஓ”

“உங்களுக்கு தலைல தையல் போடக்கூடாது.. வாய்ல போடணும். கடிக்கற கடில காதுல ரத்தம் வருது”

“அப்ப உங்க காதுலயும் தையல் போடணுமில்ல டாக்டர்? ரத்தம் நிக்க?”

முறைக்கிறார்.

*************************

சி.டி. ஸ்கேன் எடுத்து வந்து “பயப்படாதீங்க.. தலைல ஒண்ணுமில்ல”

“இதேதாங்க ஸ்கூல்ல படிக்கறப்ப எங்க டீச்சரும் சொல்லுவாங்க.. சரி டாக்டர், நீங்க எம் பி பி எஸ் பாஸ்... மேத்ஸ்ல ஃபெயிலா?”

“ஏன் கிருஷ்ணா?”

“பன்னெண்டு தையல் போட்டிருக்கீங்க.. கேட்டதுக்கு பத்துன்னீங்க?” னேன்.

கட்டை லேசாகத் தூக்கி எண்ணிப் பார்த்த அவர் “ஆமால்ல... எப்படிப் பார்த்தீங்க”

“ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்ததுன்னு எண்ணிப் பார்க்கும்போது கண்ணாடி முன்னாடி நின்னு இதையும் எண்ணிப் பார்த்தேன் டாக்டர்”னேன்.

“நர்ஸ்.. இவரை சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணுங்க” என்றார் முறைத்தபடி.

***************************************

ஞாயிற்றுக் கிழமை கூப்பிட்ட நண்பர் ஒருவர் “சார்.. நாளைக்கு இருப்பீங்களா?” என்றார்.

“நேத்து பொழச்சுட்டேன். நாளைக்கு இருப்பேன்னுதான் நினைக்கறேன்” என்றேன்.

“கடவுளே.. ஹாஸ்பிடல்ல இருப்பீங்களான்னு கேட்டேன். வந்து பார்க்கறதுக்கு” என்று கட் செய்தார்.

***************************************

டிஸ்சார்ஜ் செய்யும்போது டாக்டர் சொன்னார்: “இத்தனை பெரிய வெட்டுக்காயம்.. இவ்வளவு ரத்தம் லாஸ் ஆகி.. மயக்கம்போடாம வந்த பேஷண்ட் நீங்கதான். எப்படி இவ்ளோ லைட்டா எடுத்துக்கறீங்க?” என்றார். காமிராவை என்னை நோக்கி ஜூம் செய்யச் சொல்லி நண்பர்கள், வாசகர்களை நோக்கி விரல் நீட்டி “இவங்கதான் காரணம்” என்று சொன்னேன்.

துரத்திவிட்டார்கள் என்னை.

***************************************

கவே நண்பர்களே.. ALL IZZ WELL! அவ்வளவு ஈஸியாக நீங்கள் என்னிடமிருந்து தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை. இருந்தாலும் நான்கைந்து தினங்களுக்கு ரெஸ்ட். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் நீங்கள்.

ஓகே?.

104 comments:

ராமலக்ஷ்மி said...

ALL IZZ WELL!

vanila said...

Come Back Parisalji... we all are waiting for you.. Zor se Bolo.. ALL IZZ WELL..

☀நான் ஆதவன்☀ said...

only one idiot! (சீட் பெல்ட் போடாததற்கு)

anyway all izz well :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

வரதராஜலு .பூ said...

அந்த டாக்டர பாத்தா உங்களுக்கு பாவமாவே இல்லியா? இப்பிடியா பண்ணுவிங்க? :-)

Thank god for "All izz well !" & take care

shortfilmindia.com said...

:)

இதான் பரிசல்..:))

கேபிள் சங்கர்

SanjaiGandhi™ said...

இனியாவது கொஞ்சம் பொறுப்பா இருங்க ராசா.. நல்லா ரெஸ்ட் எடுங்க மாம்ஸ்..

என். உலகநாதன் said...

உடம்பை நல்லா பார்த்துக்கங்க பரிசல்.

தராசு said...

பெல்ட் போட்டு ஓட்டுங்க தல. அறிஞர்கள் சொன்னா கேக்கணும்.

இனிமே ஒரு டெரர் லுக்குல தான் இருப்பீங்க போல.

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆமா தல, ஆல் இஸ் வெல்

அது கிடக்கட்டும், அந்த குளுக்கோஸ் பாடிலுக்காக பக்கத்து கட்டிலுக்கு பாயப்பாத்திங்களே, அதை சொல்லலையா?
கிகிகி.

மக்களே! உண்மையில் பரிசலுக்கு விபத்தில் அடி சிறியதுதான், சுமார் நான்கு ஸ்டிச் போடுமளவிற்கு.

மத்த ஸ்டிச்செல்லாம் அவரா வாங்கிகிட்டது. பதிவை முழுசா படிச்சிட்டுமா ஏன்னு என்னை கேக்குறிங்க?
அவ்வ்வ்வ்வ்

சென்ஷி said...

:)

valli said...

When will u come back krishna?.. we are eagarly waiting for you..

எறும்பு said...

Suthi podunga saami..

ஆயில்யன் said...

//Blogger சென்ஷி said...

:)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்! :)

கும்க்கி said...

:-)

pappu said...

வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.////


என்ன ஹீரோவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயப்படுறீயான்னு வில்லன் கேக்கும் போது ஹீரோ அப்பா, உனக்கு ஏதாவது ஆகிடும்னு நினைச்சு தாண்டா கவலப் படுறேன்னு சொல்வாரில்ல... அந்த ஃபீல் எனக்கு வருது :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா ரெஸ்ட் எடுங்க

வடிவேலன் ஆர். said...

"தல வரலாறு முக்கியம்" வாழ்த்துக்கள் இனி ஒன்றும் இல்லை பயப்படவேண்டாம் விரைவில் பயங்கர கடி பதிவு போட இறைவனை வேண்டுகிறேன்

Anbu said...

:-((

:-))

பூந்தளிர் said...

ப்ரதர்,
தலைக்கு வந்தது தையலோடு போய்விட்டது ; தலை எழுத்தையும் மாற்றி விடப்போகிறது...

இன்று புதிதாய்ப் பிறந்த பரிசல் கிருஷ்ணாவாக ஜொலிக்க வாழ்த்துக்கள் !

சங்கர் said...

சுஜாதா சிஷ்யன்னு ஒவ்வொரு விஷயத்திலேயும் நிரூபிக்கிறீங்க,

ஏற்கனவே நலமாதான் இருக்கீங்க, அதனால, சீக்கிரம் அடுத்த புத்தகம் வெளியிட வாழ்த்துகள்

ரவிச்சந்திரன் said...

Take Care...

வி.பாலகுமார் said...

//வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! :)

வால்பையன் said...

இப்படி தான் எப்பவுமே சந்தோசமா இருக்கனும்!

Jawahar said...

பரிசல், வாழ்க்கையில ஒவ்வொரு மைல் கல்லைத் தொடர போதும் இது மாதிரி சம்பவங்கள் நடக்கும். சமீபத்தில நூல் வெளியீடு தவிர்த்து வேறென்னென்ன சந்தோஷமான விஷயங்கள் நிகழ்ந்தது? விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

Imayavaramban said...

all izz well

புலவன் புலிகேசி said...

வாங்க பரிசல்..இனி கவனம் தேவை...

கார்க்கி said...

/எறும்பு
23 February 2010 10:12 AM
Suthi podunga saami//

எங்க சகா? தலையிலா??????

ஐ மீன் பரிசல் தலையிலா?

முகிலன் said...

எல்லாத்திலயும் விளையாட்டா இருக்காதீங்க தல.

இனிமே சீட் பெல்ட் போட்டுட்டு போங்க - டிரைவர் சீட்டுல இருந்தாலும் அதுக்கு பக்கத்து சீட்டுல இருந்தாலும்.

மங்களூர் சிவா said...

வாய்யா வாய்யா ஒன்னும் இல்லை பொழைப்பை பாப்போம்!

மங்களூர் சிவா said...

எல்லாம் நல்லதுக்கே!

அப்பாவி முரு said...

சரியாகிக்கிட்டு இருப்பதற்கு வாழ்த்துகள்...

கடந்த சில பதிவுகளில் கடி ரொம்ப அதிகமா இருக்கே...

சமீபத்தில் தானா? இல்லை நான் தான் சரியா கவனிக்கலையா?

கடிபட்டதும், பதிவு மாறி வந்துட்டோமோன்னு தோணுது. :(

Anonymous said...

//“உங்களுக்கு தலைல தையல் போடக்கூடாது.. வாய்ல போடணும். கடிக்கற கடில காதுல ரத்தம் வருது”//

:)

ஆஸ்பத்திரி அனுபவங்கள் நிறைய பதிவு வரும்னு நினைக்கிறேன்.

Anonymous said...

ஆயிலு
சென்ஷியோட ஸ்மைலிக்கு ரிப்பீட்டா
எகொ இது ஆயிலு

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

உங்களுக்குத்தான் மண்ட நிறையே மூளையாச்சே ., பின்னே எப்படி அவ்வளவு ரெத்தம்.?? ( விடாம யோசிப்போர் சங்கம் )


உங்களுக்குத்தான் மண்ட நிறையே மூளையாச்சே ., பின்னே எப்படி அவ்வளவு ரெத்தம்.?? ( விடாம யோசிப்போர் சங்கம் )

ஆக இந்த நான்கு நாட்கள் ஓய்வு காரணமாக எத்தனை சிறுகதைகள் உருவாகபோதோ?! ( யாருங்க அங்கே தலைதெறிக்க ஓடுறது., குகன் மாதிரி தெரியுது...)

வெயிலான் said...

@ valli
23 February 2010 10:07 AM
When will u come back krishna?.. we are eagarly waiting for you..

இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருங்க மேடம்! :)

விக்னேஷ்வரி said...

அன்றே சொன்னார் அறிஞர் அப்துல்லா!

கட்டிய வேகத்தில் கம்யூனிஸ்டாகிறது துணியும்.

வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் //

ரசித்தேன் கிருஷ்ணா.

அடிபட்டாலும் லொள்ளுக்குக் குறைச்சலில்லை. டேக் கேர் பா.

விக்னேஷ்வரி said...

வெயிலான் ஏன் இந்தப் பொறாமை கிருஷ்ணா மேல? ;)

துபாய் ராஜா said...

Take care.

அமுதா கிருஷ்ணா said...

”தல”ய நல்லா பார்த்துக்குங்க பரிசல்...

மோகன் குமார் said...

ஆஸ்பத்திரி அனுபவங்களை புன்னகையோடு எழுதியதை மிக ரசித்தேன்.

இனியாவது Seat belt போட்டு வண்டி ஓட்டவும் !!

அகநாழிகை said...

அடிபட்டதைக்கூட சுவாரசியமாக எழுதியிருக்கீங்க. நலம் பெற வாழ்த்துகள்.

காவேரி கணேஷ் said...

“ஓஓஒ! ஹலோ க்ளாட் டு மீட் யூ” என்கிறேன் நான். கூட்டம் இன்னும் பதட்டமானது.

உங்க நக்கலுக்கு அளவேயில்லையா.

வரலாறு முக்கியம் என்பதால் என் செல்பேசியிலேயே என்னை நான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன்.

ரசித்தேன்.

வாழ வாழ்த்துக்கள்.

டம்பி மேவீ said...

"பரிசல் தலையில் விரிசல்" ன்னு பெயர் வைச்சு இருக்கலாம்

பிகு - அந்த நர்ஸ் மொபைல் நம்பர் கிடைக்குமா

டம்பி மேவீ said...

ஒரு வேளை கடவுள் உங்க புத்தகத்தை படிச்சு இருப்பாரோ ??? அதான் இப்படி ஆகிருச்சோ???

சந்தோஷ் = Santhosh said...

பரிசல்,
இணையம் அது இதுன்னு உடம்பை வறுத்திக்கொள்ளாமல் நல்ல ஓய்வு எடுக்கவும்.. எங்க போகப்போறோம் நாங்க..

சுரேஷ் கண்ணன் said...

'பிரச்சினைகளை பதட்டமின்றி எதிர்கொள்வது நல்லதுதான் என்றாலும் அதீதமான தன்னம்பிக்கையும் நல்லதல்ல'என்று ஏனோ சொல்லத் தோன்றுகிறது.

சில நாட்களாக உங்களின் பதிவுகள் முன்பு போலன்றி சற்று சொதப்பலாக இருப்பதை உணர்கிறேன். இது உங்களின் தன்னம்பிக்கையை குலைப்பதற்காக சொன்னது அல்ல. :-)

ஓய்விற்கு பிறகு இதைப் பரிசீலியுங்கள்.

புதுகைத் தென்றல் said...

take care

ஈரோடு கோடீஸ் said...

கிருஷ்ணா! Take Care!

(வண்டி ஓட்டுறப்ப இதுக்குத்தான் சைடுல சைட் அடிக்கக்கூடாதுங்கறது!)

Get well soon!! கிணறு அல்ல :)

அன்புடன்

ஹுஸைனம்மா said...

//அன்றே சொன்னார் அறிஞர் அப்துல்லா! அவருக்கு ஆன அதே மாதிரியான விபத்து.//

இனி நீங்க எல்லாருக்கும் சொல்லுங்க!!

:-)))

இரா.சிவக்குமரன் said...

:)

(:

யுவகிருஷ்ணா said...

தல போல வருமா? :-)

தேவபிரபு said...

what a man you are..?
I amaze you dear..!

any how..
all for good..!

விரைவில் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்...!

அனுஜன்யா said...

இந்த போஸ்ட் விண்டேஜ் பரிசல். அவ்வளவு சுவாரஸ்யம். All izz well n take care.

அனுஜன்யா

Venki said...

Take care KK... (i was laughing when i read your post - humaru !!! )

சிங். செயகுமார். said...

take rest .take care..

mohan said...

Get Well Soon..

Ivvalavu nadandhum eppadi ippadi comedy panna manasu varudhu?

Pls take care of yourself.

-Mohan

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

:-))

//.. "பரிசல் தலையில் விரிசல்" ன்னு பெயர் வைச்சு இருக்கலாம் ..//
எப்படித்தான் யோசிக்கறாங்களோ.. :-)

க.இராமசாமி said...

இந்த நேரத்திலும் ஒங்க நகைச்சுவை உணர்வுக்கு சான்ஸே இல்லை பரிசல்.
Get well soon.

ஆதிமூலகிருஷ்ணன் said...

விரைந்து நலம்பெறுங்கள் பரிசல். சுவாரசியமான பகிர்வு.

ஆக இந்த நான்கு நாட்கள் ஓய்வு காரணமாக எத்தனை சிறுகதைகள் உருவாகபோதோ?! ( யாருங்க அங்கே தலைதெறிக்க ஓடுறது., குகன் மாதிரி தெரியுது...) //

:-))

Ragavendiran said...

இனி வண்டி ஓட்டும் போது கவனமாக ஓட்டவும், நமது நகரங்களில் எப்போது முன்னே செல்கிறவர்கள் தீடிரென்று எந்த ஒரு அறிவிப்புமின்றி நிறுத்துவார்கள் இடது / வலது பக்கம் திரும்புவர்ர்கள் என்றே தெரியாது.
உடல்நிலையை நன்கு பார்த்துக் கொள்ளவும், Take care, சகோதரா
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
http://thurvasar.blogspot.com

Ragavendiran said...

இனி வண்டி ஓட்டும் போது கவனமாக ஓட்டவும், நமது நகரங்களில் எப்போது முன்னே செல்கிறவர்கள் தீடிரென்று எந்த ஒரு அறிவிப்புமின்றி நிறுத்துவார்கள் இடது / வலது பக்கம் திரும்புவர்ர்கள் என்றே தெரியாது.
உடல்நிலையை நன்கு பார்த்துக் கொள்ளவும், Take care, சகோதரா
அன்புடன்
ராகவேந்திரன்,தம்மம்பட்டி
http://thurvasar.blogspot.com

செல்வேந்திரன் said...

ரொம்ப ஜாய்ஃபுல் ரீடிங்காக இருந்தது பரிசல். படித்ததும் தேடிப்பிடித்து முத்தமிட வேண்டும் போலிருந்தது. நீர் ஒரு தவிர்க்க முடியாத ஆள்தாம்யா...!

Sure said...

நலம் பெற என் பிரார்த்தனைகள் .
I am Back - லேபில் சூப்பர் ( கார்கியை வெறுப்படிக்கவா)
அப்புறம் அந்த டம்பி தம்பி ஏதோ கேக்குறாப்புல பாருங்க

cheena (சீனா) said...

அன்பின் பரிசல்

இடுகை அருமை - மருத்துவமனை நேரடி வர்ணனை அர்மை. ஆமா ஓய்வு எடுக்கக் கூடாதா - உடனே எழுதணுமா

ம்ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் பரிசல்

பாண்டியன் புதல்வி said...

Sorry to hear Parisal. Get well soon. Ask Uma to stay strong!!

Logan said...

Get well soon and take care

மயில்ராவணன் said...

சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறேன். எனக்கு என்னமோ திருஷ்டி கழிஞ்சிருச்சின்னு நெனைக்கிறேன்!!

பிரியமுடன்...வசந்த் said...

டாக்டர் பாவம்தான்...

புத்தக வெளியீடு திருஷ்டி கழிந்ததுன்னு நினைச்சுக்குங்கண்ணா...

ஆனாலும் ரெம்பத்தான் தைரியம்

இனி ட்ரைவரா போறவகளுக்கு எல்லாம் சீட் பெல்ட் உடம்புல தைக்க சொல்லணும்..

பத்திரம்ண்ணா...

Nandakumar said...

hi,

ungalukku ennai theriyadhu. unga web sitekku thinamum vandhu padippen. edho jokesnu ninaichu padichaa kastama irukku. get well soon!!!

Regards,
Nandakumar G.

யோ வொய்ஸ் (யோகா) said...

get well soon thala

Indian said...

get well soon.
take care.

அருமையான எருமை said...

கவனம் பரிசல்! மேற்கத்திய நாடுகள் போல் விரைவுக் கார்களும் சாலைகளும் வந்து கொண்டு இருக்கும்போது அங்கு உள்ள பாதுகாப்பு முறைகளும் நமக்கு தேவைப்படுகிறதே! சீட் பெல்ட் போடுவதின் முக்கிய பலன் தலைக் காயத்தை தவிர்ப்பது தான். கால், கை போன்ற உடல் உறுப்புகளில் அடி படுவதை விட தலை அடி என்பது எவ்வளவு அபாயமானது என்று உங்களுக்கு தெரியும். அலட்சியமோ, சோம்பேறித் தனமோ, கவனக் குறைவோ இங்கு வேண்டாம்!! உங்க எழுத்தில் உள்ள நகைச்சுவையை ரசித்தாலும் சில மாதங்களுக்கு முன் தான் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரை மதுரைக்கு அருகில் நடந்த கார் விபத்தில் பலி குடுத்த சோகத்தில் சொல்கிறேன்.

Sundar சுந்தர் said...

what a comeback!

ப்ரியமுடன் பாலா said...

Get Well Soon Parisal!!!

~~~Romeo~~~ said...

All izz well - கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

gulf-tamilan said...

:)))) சீக்கிரம் திரும்பி பதிவு போட வாங்க!!!

gulf-tamilan said...

:)))) சீக்கிரம் திரும்பி பதிவு போட வாங்க!!!

அக்பர் said...

பாஸ் இவ்வளவு நடந்தும் அதே நடையில (எழுத்து நடையை சொன்னேன் அதுக்கும் கடிச்சிறாதிங்க) எழுதுறீங்கன்னா. நீங்க நல்லாத்தான் பாஸ் இருக்கிங்க.

ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்து நிதானமா வாங்க.

நசரேயன் said...

நல்வரவு

Nataraj said...

உங்கள் attitude வியக்க வைக்கிறது. பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

Nataraj said...

உங்கள் attitude வியக்க வைக்கிறது. பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

Nataraj said...

உங்கள் attitude வியக்க வைக்கிறது. பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

செந்தில் நாதன் said...

"ஒன்னுமே இல்லைனாலும்" அந்த தலை பத்திரம் தல...

நா போய் என் காதுக்கு தையல் போட்டுட்டு வரேன்..

Dr.Rudhran said...

take care

லதானந்த் said...

போனிலேயே சொன்னதுபோல் நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இனிமேல் வானம் ஓட்டும்போது ஓட்டுவதிலேயே கவனத்தைச் செலுத்துங்கள்.

நர்சிம் said...

வானத்தையுமா?

பிரபு said...

விடு விடு சூனா... பானா...
All izz well

taaru said...

நலம் விளைய என் வாழ்த்துக்கள்... பதட்டத்த கொறச்சு இருக்கலாம்...hare payya!!! all izz well...

vanila said...

@ RAMASAMY
\\இந்த நேரத்திலும் ஒங்க நகைச்சுவை உணர்வுக்கு சான்ஸே இல்லை பரிசல்.
\\

இது புகழ்ச்சியா.. இல்ல வஞ்சப்...

நிகழ்காலத்தில்... said...

\\பரிசல், வாழ்க்கையில ஒவ்வொரு மைல் கல்லைத் தொடர போதும் இது மாதிரி சம்பவங்கள் நடக்கும்\\

திருஷ்டி கழிந்தது என்பதை ஓரளவிற்கேனும் நம்ப வேண்டியதாகிறது.

டிரைவிங் எப்போதுமே ரிஸ்க்தான், அது நமக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரிதான்.

விரைவில் நலமடைய வாழ்த்துகிறேன்..

வள்ளி said...

இந்த நேரத்திலையும் இப்படி ஒரு பதிவு... சுவாரஸ்யம்!

விரைவில் ஆறட்டும் காயங்கள்.

sudha said...

Take care

வெற்றி said...

அந்த டாக்டர் பாவம் !

ம்ம்..தலையில அடிபட்டா இதுமாதிரிதான் கடிப்பாங்களாம்..எப்போ நார்மல் ஆவீங்க :)

Subha said...

Best wishes for a speedy recovery.

Karthik's Thought Applied said...

Get well sooonn parisal !!!

ICANAVENUE said...

Take care KK! We will pray for you to get well soon!

vimal said...

Get well soon dude... Take care.. May God bless you all izz well.

சூர்யா said...

seekiram gunamadaya enadhu praathanaigal...thirumbavum antha hospitalukku pogatheenga...sema kadupula iruppangannu thonadhu...neenga kadicha kadikku

MSV Muthu said...

//சி.டி. ஸ்கேன் எடுத்து வந்து “பயப்படாதீங்க.. தலைல ஒண்ணுமில்ல//

Laughed out loud. Get well soon.

Dubukku said...

நல்ல படியா உடம்பு தேறி வந்துட்டிங்கன்னு நினைக்கிறேன்
ரொம்ப்ப்ப லேட்டா கேக்குறேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இப்போ தான் இத படிக்கிறேன். (தமிழ்மண போட்டி பக்கத்கிலிருந்து)

செம காமெடியா எழுதியிருக்கீங்க..பிடிங்க பாராட்ட...ஓட்டு...ஐ.அஸ்கு புஸ்கு..எனக்கு ஒன்னாவது வேண்டாமா? :P

அபி அப்பா said...

தல! இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்குய்யா. உம்ம போன வருஷ கடைசி பதிவை பார்த்துட்டு இங்க வந்து பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு. அழகா எழுதியிருக்கேய்யா!

Ramjee Nagarajan said...

அட ராமா நீங்க பேசாம ஒரு ரேடியோ FM சேனல்ல RJ-வாக சேர்ந்து எல்லாரையும் நல்ல டைமிங்கோட கடிக்கலாம்!

mannan kkatti said...

கண்ணன் சார் சொன்னது சரிதான். சுஜாதாவ படிச்ச மாதிரி தான் இருக்கு.