Wednesday, January 20, 2010

ஒரு கேள்வி


அந்த ஊர்ல மழை பெய்ஞ்சு தண்ணி ஊருக்குள்ள வந்தா ஊருக்கு ஆபத்துன்னு ஒரு பெரிய மதகு கட்டி வெச்சிருந்தாங்க. ரொம்ப வருஷமா ஊருக்குள்ள தண்ணி வர்ற அளவுக்கு பெரிசா மழையொண்ணும் வரல. அதனால அந்த மதகைப் பத்தி யாரும் அவ்வளவா கண்டுக்கல.

ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு நாள். மாலை மயங்கி, இரவு துவங்கும் நேரம். (லேசா இருட்டீடுச்சுங்கறத ஏண்டா இப்படி எழுதி சாவடிக்கற?) ஊர்ல லேசா மழை பெய்ய ஆரம்பிக்குது. வேகமெடுக்குது. அந்த ஏரி வேகமா நிறைஞ்சுட்டே இருக்கு. அந்த வழியா மாடு மேய்ச்சுட்டு இருந்த சிறுவன் ஒருத்தன் வீட்டுக்கு வேகமா ஓடறான். ஓடற வழில இந்த ஏரிய தடுத்துட்டு இருக்கற மதகுல ஒரு இடத்துல ஓட்டை. அதுவழியா கொஞ்சம் கொஞ்சமா நீர் கசியறதப் பார்க்கறான்.

மழையைப் பொருட்படுத்தாம நின்னு அவனோட கையால அதை அடைச்சு பிடிச்சுக்கறான். முடியல. பக்கத்துல இருந்த செடி கொடிகளைப் பிடுங்கி அதை வெச்சு ஒருமாதிரி அடைச்சு கையை வெச்சு முட்டுக் குடுத்துக்கறான். ஒரு மாதிரி தண்ணி நின்னுடுச்சு.

விடிய விடிய அங்கயே நின்னு, ஊருக்குள்ள தண்ணி போய் குடிசைகளை அழிக்காம காப்பாத்தினான். கருக்கல்ல அந்த வழியா வந்த பெரியவர் ஒருத்தர் அவனைப் பார்த்து, உடனடியா ஆளுகளைக் கூப்ட்டு அந்த துவாரத்தை சரி செஞ்சுடறாரு. ஊரே இந்தப் பையனைப் புகழுது. ‘நீதாண்டா ஹீரோ’ங்குது.

என் கேள்வி:


நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?


.

42 comments:

Unknown said...

Me the first

Unknown said...

சிமெண்ட் வைச்சு பூசி இருப்பேன்....

Unknown said...

ஏரில குதிச்சு எல்லா தண்ணியையும் குடிச்சு இருப்பேன்...

மணிஜி said...

பரிசல் விட்டிருப்பேன்..பக்கத்து ஊருக்கு அவிங்களை கூட்டி போக!

Unknown said...

பாட்டுப்பாடி ஊரையே எழுப்பி இருப்பேன்...

ILA (a) இளா said...

//‘நீதாண்டா ஹீரோ//
அப்படியே கட் பண்றோம்

Option 1. இது என் கடமை. டொன் டொன் டொண்டொய்ன்

Option 2. கோடு போட்ட சட்டை போட்டு, பரட்டைத்தலையோட பச்சை, மஞ்ச, பிங்க் கலருன்னு ஒரு குத்து பாட்டு.

Option 3. ஒரு 100 பிரஸ் மக்கள் கேமரா, மைக்கோட நின்னு கேள்வி கேக்குறாங்க. ஒபாமா தொலைபேசியில கூப்பிட்டு வாழ்த்துறாரு..

இப்படி ஒரு சீன் வெக்க முடியாது?

Unknown said...

என்னோட ஜட்டியையோ அல்லது சட்டையையோ வைத்து அடைத்து விட்டு பின்ன ஊருக்குள்
சென்று தகவல் தெரிவிப்பேன். ஏன்னா நானு எப்போதும் சட்டை ஜட்டி பேண்ட் போட்டுக்கிட்டுத்தான் வெளியிலேயே போறது. :)

மணிஜி said...

/Monks
20 January 2010 4:53 PM
என்னோட ஜட்டியையோ அல்லது சட்டையையோ வைத்து அடைத்து விட்டு பின்ன ஊருக்குள்
சென்று தகவல் தெரிவிப்பேன். ஏன்னா நானு எப்போதும் சட்டை””ஜட்டி பேண்ட் போட்டுக்கிட்டுத்தான் வெளியிலேயே போறது.”” :)//

????????????

வெண்பூ said...

ரொம்ப சிம்பிள், அந்த பையன் இடத்துல நான் இருந்தா, அவன்கிட்ட "அப்படியே புடிச்சிட்டு நில்லு, ஊருக்குள்ள போயி ஆளு கூட்டிட்டு வர்றேன்"ன்னு அந்த பெரியவர் பண்ணுனதையேத்தான் நானும் பண்ணியிருப்பேன். எப்பூடி....

Balakumar Vijayaraman said...

எனக்கு ஒரு கேள்வி?
(உள்குத்து எதுவும் இல்லை, பல்பு கிடைக்காது என்ற நம்பிக்கையில்.....)

//நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?//

அவனுக்கு பதிலாவா, இல்ல அவன் கூடவா?

மதார் said...

ithu nan 6th std padikkumpothu English subjectla padicha story .

விக்னேஷ்வரி said...

என்ன பிரச்சனை கிருஷ்ணா?

சின்னப் பையன் said...

நானும் புகழ்ந்ததோட மட்டுமில்லாமே பாராட்டி பரிசும் கொடுத்திருப்பேன்.

வெற்றி said...

இது ஒன்பதாவது வகுப்பில் english la lesson ஆ வந்துச்சு...

pieter was a small boy..he lived in holland..அப்படின்னு மனப்பாடம் செஞ்சது கூட இன்னும் மறக்கல..

சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்குறீங்களா? கேள்விக்கு பதில் தெரியலனா எதயாவது உலப்பும் டெக்னிக் தான்..:)))))

THE UFO said...

//நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?//

என்னுடைய குடையை எடுத்து அதன் மொத்த நீள அடிக்கூர் காம்பை கொண்டு அந்த ஓட்டையில் சொருகிவிட்டு நனஞ்சிட்டே வூட்டுக்கு போய் தலைதுவட்டி தூங்கிட்டு காலையிலே வந்து பார்த்தால்....

கருக்கல்லிலேயே சிமெண்டு போட்டு ஓட்டைய மொழுவி...

அட ...அது கெடக்கட்டும்... எங்கேயா போச்சு என் குடை? ஹலோ..எவன் என் குடையை களவாடியது? ச்சே...இதுக்குத்தான்யா சொல்றது எந்த பொதுநலன் புண்ணாக்கும் செய்யக்கூடாதுன்னு...

களவாணிகளா....இனி நான்தாண்டா உங்களுக்கு வில்லன்...

"...கொட போச்சே..."

Prabhu said...

/Monks
20 January 2010 4:53 PM
என்னோட ஜட்டியையோ அல்லது சட்டையையோ வைத்து அடைத்து விட்டு பின்ன ஊருக்குள்
சென்று தகவல் தெரிவிப்பேன். ஏன்னா நானு எப்போதும் சட்டை””ஜட்டி பேண்ட் போட்டுக்கிட்டுத்தான் வெளியிலேயே போறது.”” :)//

எங்க அண்ணன் கிருஷ்ணனப் பாத்தா எப்புடி இருக்கு?


இளாவுக்கு ரிப்பீட்டு!

ஆமா peter and the dyke ஓ என்னவோன்னு வரும் இந்த சரக்கு இப்ப எதுக்கு?

Prabhu said...

எப்பா ரெண்டாப்புல படிச்சத ஒன்பதாப்புல கூட சொல்லி குடுத்துருக்காய்ங்க!

மின்னுது மின்னல் said...

அது தான் அடைச்சாசே..!

நான் பாட்டுக்கு போயிகிட்டே இருப்பேன் :)

அத்திரி said...

நல்லா கேக்குறாங்கய்யா கேள்விய..............ஆங்

சில்க் சதிஷ் said...

pieter was a small boy..he lived in holland.. My first Bit in school days.

Aiyo 10 Mark essay

தராசு said...

நீங்க இப்படி பதில் சொன்னா, நீங்க நல்லவர், எதையும் நேருக்கு நேரே சந்திப்பவர், தீர்க்கமா முடிவெடுப்பவர்னும், அப்படி பதில் சொன்னா, நீ தொடை நடுங்கி, கோழை அப்படீன்னும் ஜோசியம் சொல்லப் போறீங்களா தலைவா?

இருந்தாலும் நானும் எதையாவது வெச்சு தண்ணிய அடைக்கத்தான் பார்த்திருப்பேன்.

சரி இப்ப சொல்லுங்க. இன்னா மேட்டரு?????

சின்னப் பையன் said...

மாலை வேளை, மழை வேற வருது, அந்த நேரத்துலே நான் ஏன் வெளியே போறேன்.. வீட்டுலேயே 'ஃபுல்லா' கலைஞர் டிவி பாத்துட்டு உக்காந்திருப்பேன்.. எப்பூடி.....

அறிவிலி said...

என்னாது.... பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போய்டுச்சா?

EINSTEEN RAVI said...

காலையில வரைக்கும் அப்படியே அந்த ஓட்டைய அடைச்சுக்கிட்டு அங்கயே நிப்பேன்.காலையிலே யாரவது வர்ரங்கலன்னு பாத்துக்கிட்டு இருப்பேன்.அங்க வர்ரவருட்ட சொல்லி ஊருல இருக்குற எல்லாரையும் கூப்பிட்டு வரச் சொல்லுவேன்.எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் அவங்களை எல்லாம் காசு குடுக்கச் சொல்லி மிரட்டுவேன்.காசு கோல்லேச்டின் ஆனதுக்கு அப்புறம்.யாரயச்சு விட்டு ஓட்டைய அடிக்குறதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுவேன்.(அதுக்கும் ஒரு மிரட்டல் தான்)


பின்குறிப்பு:இந்தப் பின்னூட்டம் சிரிக்க மட்டுமே(!)

EINSTEEN.R
tirunagarmadurai@gmail.com

பின்னோக்கி said...

1. அந்த சின்ன பையனே நான் தாங்க

2. நான் தான் தூங்கிக்கிட்டு இருந்தேனே. அப்புறம் எப்படி அங்க இருந்ி்ருக்க முடியும் ? அதுனால கேள்வியே தப்பு.

க.மு.சுரேஷ் said...

ஊருக்குள்
சென்று நல்லா தூங்கிட்டு இருக்கிற ஊர் தலைவரை எழுப்பி சொல்லிட்டு நான் போய் தூங்கி இருப்பேன்.(பொறுப்பு)

sathishsangkavi.blogspot.com said...

1. உடனே 100க்கு போன் செய்து தீயணைப்பு வீரர்களை கூப்பிட்டு இருப்பேன்.
2. பத்திரிக்கை, மீடியாவிற்கு போன் செய்து எங்க ஊரை செய்தில காமிக்க வைத்து இருப்பேன்.
3. மீடியாவிற்கு நானே பேட்டி கொடுத்து இருப்பேன்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஹையா ! இப்படி எல்லாம் பதிவு போடலாமா? நல்ல idea வா இருக்கே.
எனக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லணும்.
பதிவைவிட பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சேன்.

Radhakrishnan said...

தனியொருவனாக சாதனை செய்வது என்பது மிகவும் சிரமமான காரியம். இருப்பினும் தனியொருவனாக சாதித்தல் என்பதும் சாத்தியம்.

இச்சிறுவன் ஒரு அரசனாக தெரிகிறான். நாட்டைக் காக்கும் பொறுப்பு அரசனிடம் இருக்கிறது. நாட்டிற்கு ஒரு பிரச்சினை எனில் அது மக்களை பாதிக்காவண்னம் தீர்த்துவிடுவதில்தான் இருக்கிறது ஒரு அரசனின், அரசின் செயல்பாடு. அப்படி ஒரு அரசு செயல்படும்போது மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

இரவு நேரத்தில் அனைவரது தூக்கத்தையும் கலைத்துவிடாமல் போராடிய அந்த சிறுவன் ஒரு தலைசிறந்த அரசன்.

அந்தச் சூழலில் எப்படி செயல்பட்டிருப்பேன் என யூகம் சொல்வது எனில் நான் அவனைப்போலவே செயல்பட்டிருப்பேன் என சொல்ல இயலாது. முதலில் தண்ணீர் வரத்தை குறைக்க சிறுவன் போலவே செயல்பட்டுவிட்டு உடனே அந்த ஊரின் நாட்டாமையிடமோ அல்லது முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடமோ விசயத்தைத் தெரிவித்து இருப்பேன். என்னாலான உதவிகளும் செய்து இருப்பேன்.

எனவே இங்கே நான் ஒரு மக்களாக செயல்படுகிறேன். மக்களின் கடமை என்னவெனில் ஏதேனும் பிரச்சினை எனில் அதைப்பற்றி மட்டும் புகார் தராமல் அந்த பிரச்சினை பெரிதாகவிடாமல் பார்த்துவிட்டு பிரச்சினையே எழாமல் அரசிடம் கொண்டு செல்வது முறையாகும்.

நல்லதொரு சிந்தனையை தூண்டிய கதை.

sriram said...

பரிசல்
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியின் அவசியம் என்ன இப்போ??

என் பதில்(கள்)
அந்தக் காலம்: ஊர்த்தலைவருக்கும் சிமெண்ட் பூசத்தெரிந்த ஒருவருக்கும் போய்ச் சொல்லி கசிவை அடைத்திருப்பேன்.

இந்தக் காலம் : என் செல் போனை எடுத்து அவிங்க ரெண்டு பேருக்கும் போன் போட்டு சொல்லிட்டு அப்புறமா ஒரு ஃபாலோ அப் கால் பண்ணி விசாரித்திருப்பேன்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sri said...

அவசரமா 1-க்கு வருது - எங்க பாத்ரூம்-னு கேட்பேன் :)

Srini

Unknown said...

தல .... நீங்க எங்கேயோ,,,,,,

அகல்விளக்கு said...

அய்யோ

நான் சத்தியமா பீட்டர் கிடையாது...
ஹீரோவும் கிடையாது....

ஆனாலும் எப்பவும் வாய்ல போட்டு இருக்குற சுவிங்கம் போட்டு அடச்சிருப்பேன்...

:-)

குப்பன்.யாஹூ said...

option1- i could have done the same as that boy did (this is the employee, worker attitude)

option2- will try to do with the cows to reduce the water level or make 1 more whole and divert the water to some other place, call other people for the support & help (manager's job).

Option 3- Barathiraja technique- in Cow's skin he will write as - help required to plug the whole and send the cows to the villages. People will come and help.

Option 4- Ramanarayana techinique.
He will take veppilai and dance maariyamma marriayyaam, then rain will stop.
I think Ramanarayanan technique is great

வால்பையன் said...

//நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?//

இதை எப்படி பதிவா எழுதலாம்னு யோசிச்சிகிட்டு இருப்பேன்!

அதானே ப்ளாக்கர் புத்தி!

ஜிகர்தண்டா Karthik said...

நானிருந்தா ஊருல மழையே பெய்யாதே.... :)

தண்ணி வெளிய வராம ராப்பூரா தூங்காம இருந்ததால... தூங்கிருவேன்...

Cable சங்கர் said...

ரொம்ப சிம்பிள் அங்கே இருக்கிற சோழர்கள் கிட்ட சொல்லி பாத்துக்க சொல்லிட்டு வந்திருவேன்.:)

Unknown said...

எனக்கு தண்ணினா பயம். அதனால பக்கத்துல போயிருக்கமாட்டேன். ஊருக்குள்ள போய் ஆள் தேடி கொண்டுவந்து அடைச்சிருப்பேன்.

vanila said...

//நீங்க அவன் இடத்துல இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?//..

தம்பி.. இந்தாங்க இது உங்க இடம், அதனால நீங்க தான் இங்க நிக்கனும்னு சொல்லி, அந்த இடத்த அவருக்கே விட்டு கொடுத்துடுவேன்..

Ariv said...

நான் அந்த இடத்தில இருந்தால், பார்த்துக்கொண்டிருந்த பெரியவரை

மதியத்துக்குள் 1 கோடி தந்தி மத்திய அரசுக்கு அனுப்ப சொல்லி இருப்பேன் (சண்டே என்றாலும் பரவாஇல்லை)... என்னோடைய தந்தியை கூட அவரிடம் கொடுத்திருப்பேன்....

அந்த பெரியவரை உடனே உண்ணாவிரதம் இருக்க சொல்லுவேன்.... வேற என்ன எல்லோரையும் வர வைக்க வேண்டுமே...

அப்புறம் எனக்கு தமிழ் திரையுலகம் சார்பாக பாராட்டு விழா நடத்த சொல்லி.. நமிதாவை நடனம் ஆட வைக்கலாம், குஷ்பூவை தமிழ் பேச சொல்லலாம்.. இதை எல்லாத்தையும் வருகிற 26 ஆம் தேதி உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பலாம்....

அதிலிருந்து கேள்விகள் கேட்டு டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கொடுக்கலாம்... முடிந்தால்.. ஊர் மக்களை என் சார்பாக அழுகிற மாதிரி காட்டலாம்....

இது எல்லாம் நடப்பதற்குள் தண்ணி திரும்ப ஊருக்குள் வந்து விடும்... அப்புறம் என்ன... ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும்... எங்கும் சென்று விடாதிர்கள்....

அன்பேசிவம் said...

thala en ippadi?

kadippa eppadiyavathu antha vipaththai thadukkum muyarchiyodu, kattaayam mazaiyaiyum enjoy seithiruppeen.

bcoz 1. I LOVE RAIN
bcoz 2. romba naalaikku pirakaana mazhai nicayam unga oottu oy enga oottu joy illa enjoy thaan

Anonymous said...

Sudenly i will go to my house and VACATE my Family from the village without distrub anybody.