Sunday, September 30, 2012

சினிமா விமர்சனம் அல்ல

"ஏங்க.. மீராவைக் கூட்டீட்டு வந்தாச்சா?”

“ஓ.. அதுக்குதானே லீவு போட்டேன்... வந்தாச்சு..”

“படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா?”

“நேத்தே பண்ணீட்டேன். கிரி வந்திருக்கான். 5 டிக்கெட் புக் பண்ணியாச்சு”

“எத்தனை மணிக்கு ஷோ?”

“நைட் 9.45. ஸ்ரீ சக்தி.”

“என்னைக் கூட்டீட்டு போக வருவீங்கதானே? நான் பஸ் ஏறி வர்றதா இருந்தா டின்னருக்கு டைம் இருக்காது..”

“வர்றேன். வர்றப்ப கூப்டறேன்..”

“சரிங்க..”

------------

“என்னண்ணா ரொமப் நேரமா யாருக்கோ ஃபோன் ட்ரை பண்ணீட்டிருக்க?”

“இல்ல கிரி... பைக்ல அஞ்சு பேர் போக முடியாது. ஃப்ரெண்ட்கிட்ட பைக் கேட்கலாம்னு கூப்டறேன். நாட் ரீச்சபிளாவே வருது”

“நான் வேணா பஸ்ல வர்றேனே..”

“போறப்ப பஸ் இருக்கும். நைட் ஷோ முடிஞ்சு ரிட்டர்ன் வர்றப்ப என்ன பண்றது?

“ஆட்டோ?”

“15 கிலோ மீட்டர். நைட்டும்பான். 250 ரூவா கேட்பான். இரு... மேல போய் ஹவுஸ் ஓனர்கிட்ட அவரு டிவிஎஸ் கேட்டுப் பார்க்கறேன்..”

---------

“ஏங்க.. கிளம்பியாச்சா?”

“கிளம்பீட்டே இருக்கோம்.. ஹவுஸ் ஓனர் வண்டில கிரியும், மேகாவும் வர்றாங்க. நானும் மீராவும் பைக்ல வர்றோம்”

“கம்பெனி வர்றீங்கதானே என்னைக் கூட்டீட்டு போக?”

“இங்கிருந்து 32 கிலோ மீட்டர் வரணும். பஸ்ல வர்றியா..? ஆப்போசிட்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்”

“இப்ப சொல்லுங்க. மொதல்லயே சொல்லீருந்தா பர்மிஷன் போட்டு கெள்மபீருப்பேன்ல? வர்றதாதானே சொன்னீங்க?”

“சரி.. சரி.. இவங்க மூணு பேரையும் பிக் பஜார்ல வெய்ட் பண்ணச் சொல்றேன். நான் வந்து உன்னைக் கூட்டீட்டு - அப்பறமா வந்து டின்னர் சாப்பிட்டுட்டு எல்லாருமா போலாம்”

“சரி வாங்க”

“உள்ள வர டைம் இல்ல.. பத்து நிமிஷத்துல ஃபேக்டரி முன்னாடி வந்து நில்லு..”

----------

கஸின் ப்ரதர் கிரி + மேகா டிவிஎஸ்ஸிலும், நானும் மீராவும் பைக்கிலும் போனோம். பிக் பஜாரில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும், போய் உமாவைக் கூட்டிக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர். வரும் வழியில் பைக் ஆட்டம் கண்டது.

“என்னாச்சு.. ஏன் வண்டிய நிறுத்தினீங்க?”

நான் உமாவை இறங்கச் சொல்லிவிட்டு, பின் பக்க டயர் பார்த்தேன். பஞ்சர்.

“மணி 9 ஆகப்போகுது.. ஒண்ணு பண்லாம்க.. அவங்க மூணு பேரையும் பக்கத்துல சரவணபவன் போய் சாப்பிடச் சொல்லீடலாம். நாம பஞ்சர் கடை எங்கிருக்குன்னு தேடி, பஞ்சர் ஒட்டீட்டு போலாம்”

அப்படியே முடிவானது. “வண்டிய பிக் பஜார் பார்க்கிங்லயே விட்டுட்டு போகச் சொல்லு. இல்லைன்னா திரும்ப பார்க் வீதி சுத்திதான் தியேட்டர் வரணும்”

200 அடி தூரம், பைக்கை மூச்சிரைக்க தள்ளிக் கொண்டு போன பிறகு பஞ்சர் கடையைக் கண்டோம். நேரமாகிக் கொண்டிருந்தது. கடைக்காரர் நடுநடுவே வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். “ண்ணா..சாப்ட்டுட்டு படத்துக்கு போகணும். கொஞ்சம் சீக்கிரம்” என்றதற்கு, மேலும் கீழும் பார்த்தார்.

ரெடியாகி வண்டியை எடுக்கும்போது மணி ஒன்பதே காலை தாண்டியிருந்தது. வேகமாக ஹோட்டலை நோக்கி செலுத்தினேன். தம்பியும், மகள்களும் சாப்பிட்டு முடித்து அங்கே காத்திருந்தனர். நாங்கள் அவசர அவசரமாக ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.

“சரி. கிரி.. நீ மீராவை கூட்டீட்டு போ. வண்டிய எம்ஜிபி பக்கத்து ரோட்ல விடு. இந்தப் பக்கம் வந்தா அப்பறம் சுத்திதான் போகணும். நானும், அண்ணியும், மேகாவும் பைக்ல வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

தியேட்டர் போய் சேரும்போது மேகா, “அச்சச்சோ” என்றாள். “பிக் பஜார்ல மாமா வண்டிய நிறுத்தின டோக்கன் எங்கிட்ட இருக்குப்பா”

அதுவரை பொறுமை காத்த எனக்கு லைட்டாக கடுப்பு எட்டிப் பார்த்தது. அவளிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பைக்கை விரட்டினேன். பிக் பஜார் செக்யூரிட்டியிடம், “தம்பி பைக் எடுக்க போயிருக்காரு. டோக்கன் எங்கிட்ட மாட்டிகிச்சு” என்று சொன்னதும் அவர் இரண்டு செகண்டுகள் பார்த்தார். பின் டக் என்று ஏதோ நினைவு வந்தவர் போல, “இப்பதான் போனாங்க.. மேனேஜர்கிட்ட கேட்டு வண்டியக் குடுத்துட்டோம் சார்” என்றார். நன்றி சொல்லிவிட்டு மறுபடி தியேட்டருக்கு போனேன்.

மணி ஒன்பதே முக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எந்தப் படமானாலும் டைட்டிலிலிருந்து பார்த்துத் தொலைய வேண்டும். அவசரம். பதட்டம். பைக் ஸ்டாண்டில் பைக் நிறுத்த இடம் இருக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு நிறுத்திவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு கவுண்டர் நோக்கி மூச்சிரைக்க ஓடினேன்.

கவுண்டரில் டிக்கெட் புக்கிங் எண்ணைச் சொன்னேன்.

“ப்ரூஃப்?”

அவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாது என்பார்கள். எனக்கு பாக்கெட்டில் கை போகவில்லை. போராடி, பர்ஸை எடுத்து பான் கார்டை காட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.

“வாங்க வாங்க டைமாச்சு” -நின்று கொண்டிருந்த குடும்பத்தாரை அவசரப்படுத்தினேன்.

“படம் போட்டாச்சாம்” - மனைவி சொன்னதும் உற்சாகம் வடிந்தது. “சரி வாங்க” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு டிக்கெட் காண்பித்து சீட் நம்பர் தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கும்போது சந்தானம் தண்ணி டம்ளரைக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.

----

இது படம் பார்க்க ஒரு மிடில் க்ளாஸ் மாரோன் படும் ஆரம்ப அவஸ்தைளின் சிறு சாம்பிள். சம்பவங்கள் முன் பின் மாறலாம். ஆனால் என்னைப் போன்றோர்க்கு படம் பார்க்கச் செல்லும்போது, இதுபோன்ற போராட்டங்கள் சற்றேறக்குறைய சமம் தான். டிக்கெட் விலை, பாப்கார்ன், காஃபி, பார்க்கிங் என்று எப்படியும் ஐநூறைத் தாண்டும் செலவு. இடைவேளையின் காஃபி டோக்கனைக் குடுத்து சிந்தாமல் காஃபி வாங்குவது ஆயகலைகளில் சேர்க்கப் படாத கலை. போலவே ஷோ முடிந்து வண்டியை எடுப்பதும்.

எல்லாம் முடிந்து வெளியே வந்து ஃபோனில் ட்விட்டரையோ, கூகுள் ப்ளஸ்ஸையோ, ஃபேஸ்புக்கையோ திறந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட்டு பார்த்த படத்தின் டோரண்ட் லிங்கை ஒரு நண்பர் கேட்க, ‘இந்தா பாரு..” என்று பலர் LINKசாமிகளாக அள்ளிவழங்கிக் கொண்டிருப்பர்.

ஆக.. இவ்வளவு சிரமப்பட்டு, லோல் பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் என்னைப் போன்றோர்க்கு, “தியேட்டருக்கு சென்று மட்டுமே சினிமா பார்க்கவும்” என்று கூப்பாடு போடும் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன?


வால்துண்டு:

‘தாண்டவம்’ நல்லா இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாத ஒரு படம். முகமூடி போட்டுட்டு வந்து மிஷ்கின் அடிச்ச அடிக்கு, விக்ரமும் விஜயும் ஆடின தாண்டவம் Far Better.

இந்தப் படத்துல ஒரே ஒரு கேள்விதான் எனக்கு இருக்கு.

படத்துல எதுக்குய்யா எமி ஜாக்சன் கேரக்டர்?


.

22 comments:

Unknown said...

ஹா ஹா... மிக மிக ரசித்தேன். இதே இன்னல்கள் பட்டு தாண்டவம் படத்திற்கு சென்று வந்ததை இங்கே நினைவு கூர்கிறேன். எமி ஜாக்சன் இல்லாட்டி ஒரு பாட்டு இல்லாம போயிருக்குமே. அவ்வ் :-))

நடராஜன் said...

http://t.co/nOhnFHSa இந்த பிரிண்ட் நல்லா இருக்கான்னு பாருங்க

Sen said...

அண்ணா.. ஒன்று மட்டும் சொல்லுங்க... ரோஸ்ட் நல்லா இருந்ததா????

Arvind said...

படத்தின் கதையை விட உங்க கதை அமா்க்களம்

Kathiravan Rathinavel said...

எப்பா சாமி, என்ன இது படம் பார்க்க போறதுல குடும்பத்தோட போன இவ்வளவு பிரச்சனை வருமா?
நான் தனியா போய்ட்டு வரதால கஷ்டம் தெரியலை?
உங்க கேள்விக்க கண்டிப்பா பதில் கிடைக்கனும்?
எதுக்கு எமி ஜாக்ஷன்?

பட்டிகாட்டான் Jey said...

குடும்பத்தோட படத்துக்கு போறவங்க கஷ்டம்....ஷேம் ப்ளட்.

அதுவும் வாண்டுகளோட போன இன்னும் காமெடிஸ்+சிரமம்.

உங்களின் படம் பார்க்கப்போன கதை சுவாரஸ்யம் :-)))

Nat Sriram said...

விமர்சனமில்லா விமர்சனம்..U conveyed the point Parisal..

maithriim said...

ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம்/லண்டன் தொடர்ச்சிக்காகவோ? :-)

என் கணவருக்கும் டைட்டிலில் இருந்து பார்க்கவேண்டும், ஒரு நொடி தாமதித்தாலும் ரொம்ப கோபம் வந்துவிடும் :-)

கதையில் இன்னும் கொஞ்சம் கவனம்செலுத்தியிருக்கலாம். எப்பவும்போல சூப்பர் போஸ்ட்!

amas32

KARTHICK said...

எமி ஜாக்சன் மட்டுமில்லைன்னா, இந்த கேள்வி நீங்க கேப்பிங்களா! அதுக்குத்தான்.

Thamira said...

சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன?//

எமியைப் பத்தி கேட்டு இந்த முக்கியமான கேள்வியை அர்த்தமில்லாம பண்ணிட்டே!! :-((

valli said...

உங்க டென்ஷன் இண்டரஸ்டிங்கா இருக்கு:)

KSGOA said...

பதிவு வழக்கம் போல் நல்லா இருந்தது.
சுறுசுறுப்பா எழுத ஆரம்பிச்சுடீங்களே!!!!
இப்படி பரபரப்பா குடும்பத்துடன் படத்திற்கு கிளம்பி ரொம்ப நாளாச்சுங்க....

Unknown said...

interesting

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படத்து போய்ட்டு வர்றதையே ஒரு குறும்படமா எடுக்கலாம்.

KANALI said...

இதுக்குதான் தலைவா திருட்டு விசிடி பார்க்கனும் (பதிவு திர்லீங்க இருந்துச்சு)

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அவஸ்தை
குடும்பத்துடன் சினிமா பார்ப்பதே இப்போது ஒரு கதையாக வடிவு தந்த உங்களின் அந்த வேக நடை அற்புதம் சார் .இன்னும் எழுத்து ஊற்றை அதே வேகத்தில் கையாள்வது மிக அற்புதம் .கதைக்கான பெயர்கள் நம் வீட்டிலிருந்து கொண்டு வரும்போது எழுதுவதும் சுலபம், பின்னோக்கி போய் யார்பெயரை இங்கு சொல்லவேண்டும் என்ற கவன தடுமாற்றமும் இல்லாது போக ஒரு உதாரண படைப்பு .

Ganpat said...

ரொம்ப புத்திசாலித்தனமாக தவறான தர்க்கத்தை முன்வைத்துள்ளீர்கள்!
நீங்கள் பட்ட சிரமங்கள் திரையரங்கு சம்பந்தபட்டதாக இருந்தால் ஒழிய நீங்கள் திருட்டு விசிடி க்குக் நியாயம் கற்பிக்க முடியாது.மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது கூட நடந்திருக்கலாம் அல்லவா?
(ஷோ நேரம்= முகூர்த்த நேரம்)

Vadivel M said...

தாண்டவம் ஆடித்தான் தாண்டவம் பார்க்கணும்னு எழுதிருக்கு! மாத்த முடியுமா என்ன?! ;-))

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சினிமாவுக்குப் போனமா, விசிலடிச்சமா, வந்து எல்லாரையும் திட்னமான்னு இல்லாம என்னய்யா பதிவு இது?!

ரோஸ்ட் சாப்பிட்டேன், டோக்கனை தொலைச்சேன், ட்ரிபிள்ஸ் போனோம், பாப்கார்ன் சாப்பிட்டோம் ...ரொம்ப சரி!

ஆமாம், அதென்ன ‘மாரோன்’ moron ன் தமிழ்ப் ’படுத்தலா’?!

இரசிகை said...

:)

nallaa yezhuthiyirukkeenga..

Justin Vijay said...

Interesting...

மதுரை சரவணன் said...

ithu thaanda thaandavam nnu sollaama sollittengka