Tuesday, January 10, 2012

நம்பிக்கை - சிறுகதை


பண்புடன் ஜனவரி இதழில் வெளியாகியிருக்கிற எனது சிறுகதை:

----------


ந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.

அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.

“ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”

“எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.

”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”

“ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”

“சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”

அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.

வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.

“எங்க வேலை செய்யறீங்க?”

சொன்னான்.

“உங்க பிறந்த தேதி என்ன?”

சொன்னான்.

“பிறந்த கிழமை?”

தாமதிக்காமல் உடனே சொன்னான்.

“உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”

சொன்னான்.

“உங்க அக்கா திருமண நாள்?”

சொன்னான்.

“வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் - உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”

“எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்”

“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”

அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.


-------------------

மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்: பண்புடன்


.


8 comments:

குறையொன்றுமில்லை. said...

நீங்க சொன்னபக்கம் கிளிக் பண்ணினா கதையின் தொடர்ச்சி ஓபன் ஆக மாட்டேங்குதே?

M.G.ரவிக்குமார்™..., said...

சொன்னா நம்புங்க!நீங்க கொடுத்த லிங்க் திறக்க மாட்டேங்குது!

Bala said...

// M.G.ரவிக்குமார்™..., said...
சொன்னா நம்புங்க!நீங்க கொடுத்த லிங்க் திறக்க மாட்டேங்குது!//

repeat..... please reveal the suspense....

Iyappan Krishnan said...

Site is up now. Please check it.

Inconvenience regretted


( What a formal reply.. pat pat me )

அசோகபுத்திரன் said...

அய்யா சாமி..ஒன்னு முழுசா கதைய போடுங்க.. அல்லது புது கதய படிக்கணும்னா இங்க க்ளிக்குங்கன்னு சொல்லுங்க.. ரெண்டும் இல்லாம பாதி கதைய இங்க சொல்லிட்டு மீதிய இங்க படின்னு ஒரு லின்க் குடுத்து.. அது ஓபன் ஆகாம... முடியல...

நிகழ்காலத்தில்... said...

http://www.panbudan.com/story/nambikkai

இப்ப ஆகுது., ஆனா முடிவு முன்னரே ஊகிக்க முடிந்தது. கதையின் எழுத்து நடை இயல்பாக இருக்கிறது.,

வாழ்த்துகள் பரிசல்

கொங்கு நாடோடி said...

வெற்றிகளையே பெற்றவன் சிறு தோல்வியைகூட ஏற்கமாட்டான்...

நல்ல கதை, அன்ன சட்டுனு முடிச்சிட்டிங்களே ...

KSGOA said...

நேற்றே பாதி படித்தேன்.இன்றுதான் மீதி
படிக்க முடிந்தது.கதை ரொம்ப நல்லா இருக்கு.